October 8, 2012

இறைவா.

இறைவா...

புழுவாக புல்லாக
மலிவான மண்ணாக
எலியாக எறும்பாக
ஏர் பூட்டும் எருதாக
எதுவாக பிறப்பினும்
ஏற்று கொள்வேன் _ ஆயின் இந்த
இழிவான இந்தியாவில்
பிறந்திட வேண்டாம் ...


அறிவுரை

அறிவுரை :

நாம் சொல்லும் நேரத்தில்
வார்த்தை ஆறாக ஓடுகிறது
நாம் கேட்கும் நேரத்தில்
காது அணை போல மூடுகிறது

- வை . நடராஜன்

உண்மை


உண்மை :

-------------

கிடைக்கும் வரை

சிற்பமாய் தெரிந்தவள்

கிடைத்து விட்டால்

அற்பமாய் தோன்றுவாள்

அன்று புரியும்

கண்டது காதலா _ அல்ல

காமத்தின் தேடலா .... என்று .

- வை . நடராஜன்

அறிவற்ற தொண்டர்களும் !! அற்ப தலைவர்களும் !




காட்டுத்தேன் கசக்குமாம் தலைவர் சொன்னார்
கருந்தேள் கடிக்காதாம் தலைவர் சொன்னார்
பாட்டிசைக்கும் பன்றி இருக்காம் தலைவர் சொன்னார்
மாட்டுமடியில் மாங்காய் காய்க்கும்  தலைவர் சொன்னார்

இவை அனைத்தும் கண் பொத்தி கேட்குகொண்டோம் __எங்கள்
இனத்தலைவன் சொல்லியதால் ஏற்றுகொண்டோம்
தண்ணிரில் கலந்த பால் பிரியாது - என்
தலைவனுக்கு பொய் சொல்ல தெரியாது .

தலைவன் தலைமயிர் இழந்தவுடன் _ அவர்
தலைமுறையின் வால் பிடிப்போம்
விலையற்ற அடிமைபோல
விடியும் வரை கால் பிடிப்போம்

அறிவை வளர்க மறந்துவிட்டோம்
அடிமையாய் வாழ பிறந்துவிட்டோம்
அழகாக பேசுவார் உத்தமனாய்
அதை நம்பிதானே நாங்கள் கெட்டோம்

October 5, 2012

என்று தணியும் ! என்று விடியும் ?





படிக்காத திருடன்
பணத்தை கடத்துகிறான்
படிச்ச திருடன்
பள்ளிகூடம் நடத்துகிறான்.

அவன் கத்தியை வைத்து
மிரட்டுகிறான் பயந்தோம்
இவன் கல்வியை வைத்து
மிரட்டுகிறான் பணிந்தோம்
சுடுநீரில் புழுவாக நெளிந்தோம்
கேட்க கேட்க கொடுத்தே அழிந்தோம் .

கல்வியிலும் கலப்படம் நீதி இல்லை _ அந்த
கயவர்களை தட்டிகேட்க நாதி இல்லை
மாற்ற முடியும் என்பது வீண் பேச்சி
மாற வேண்டியது அரசின் மனசாட்சி.

என்று மடியும் கல்வியின் ஊனம்
என்று விடியும் பிள்ளைகளின் வானம் ?

- written & photo Designed
by
வை . நடராஜன்

October 4, 2012

ஓர் இளம் விதவையின் இதயரணம்




வாடாத பூமாலை ஒன்று _ எவரும்
சூடாமல் கிடக்கின்றது
வாழாமல் என் வாலிபம் _ சிறகொடிந்த
கிளியாக துடிக்கின்றது

என் மஞ்சம் துணையின்றி தனியாக இருக்க
வருடாத தேகங்கள் வலிகின்றதே
நெஞ்சத்தின் கனவெல்லாம் கரியாகி போக
மரிக்காமல் மரணத்தை தருகின்றதே


ஆசைகள் ஆவல்கள் எல்லாமே - அன்று
அவரோடு சேர்ந்து எரிகின்றது
அவமானம் அவப்பெயரும் என் வாழ்வின்
அடையாளமாய் இருக்கின்றது

நான் கண்ட கனவெல்லாம் கரியாகி
நினைவெல்லாம் நெருப்பாக சுடுகின்றது
தேன் கொண்ட மலர் தேர்காலில்
வலியோடு தானே மடிகின்றது

அதிர்ஷ்டம் இல்லாத அவமான சின்னத்தை
சமுதாயம் என் மீது கோர்க்கின்றது
அடுத்தவன் தொட்ட உடல்தானே என்று
ஆண் வர்க்கம் மட்டமாய் பார்க்கின்றது

வான் இழந்த நட்சத்திரம் 
வழி சேற்றில் கிடக்கின்றது
வழி இழந்த பச்சை கிளி
சிறு கூட்டில் துடிக்கின்றது


வெறுமையில் வாழ்க்கை
தனிமையில் கொடுமை
நீர் படா நிலமாய் வெடிகின்றது

அதிர்ஷ்டம் தான் இல்லாதவள்1
என பட்டம் கட்டி
அடி நெஞ்சின் ஆசையை
மறுக்கின்றது

இனிமையற்ற இளமை
எதற்கு இந்த கொடுமை
தனிமை வருத்தும் வாழ்வில்
எதற்கு இந்த இளமை

கொடிய இந்த வாழ்வில்
இனிமை தான் எங்கே ?
மடிய வேண்டும் நான்
மரணம் தான் எங்கே ......


- வை . நடராஜன்

October 2, 2012

மரம் வளர்வதே .. நாம் வாழத்தான்



பணம் காய்க்கும்
மரம் இங்கு ஏதுமில்லை _ ஆகவே
அதையெல்லாம் வேரறுத்து
பணம் பெற்றோம்.

பணம் காசு
மணி வைரம் என
அலைந்தோம் _ நாளை
பசி வந்து உணவின்றி
நாம் அழிவோம்.

ஆறறிவு வளர்ச்சி தான்
நிலவை தொட்டோம் _ அது
அளவுற்கு மீறி போய்தான்
நிலத்தை கெடுத்தோம்.

நீர் காற்று உணவின்றி
காலம் வரும் _ அன்று
நாம் பண்ண பாவமெல்லாம்
கண்ணில் வரும் .

- வை . நடராஜன்

அலுவலக அரசியல்வாதிகள்






உயர்ந்த பதவியில்
இருப்பவர் எல்லாம்
தெரிந்த ஞானி அல்ல

உயர பறக்கும்
குப்பைக்கு தான்
சிறகு தேவை இல்லை

கழுகை போல
காயிதமும் மேலே
பறக்கும் நன்று
காற்று நின்று
விட்டால் உண்மை
புரியும் அன்று .

அதிகாரம் இருப்பதினால்
ஆண்டவனும் இல்லை
அடியாட்கள் வேலை செய்ய
அலுவலகம் தேவை அல்ல .

மழையில் நனைந்த
ஆடையில் தான்
அழுத்தம் அதிகம் இருக்கும்
மனதில் கர்வம்
வந்து விடின் _ அழிவு
அன்று பிறக்கும்

உன் கிழே பணிபுரிவோர்
ஏளனமும் அல்ல _ அவர்
ஏறி வர திறமை உண்டு
வாய்ப்பு வரவில்லை

அடுத்தவரின் கால்
பிடித்தால் அடிமை போல
உழைப்பாய்_ நீங்கள்
அறிவை மட்டும்
நம்பிருந்தால் எங்கேயும்
பிழைப்பாய்

அடுத்தவரின் குடி கெடுத்து
வாழவதெல்லாம் வாழ்வா ? நீ
அடித்த பந்து போல் திரும்பும்
அன்று நீ வீழ்வாய் !

மேலே வளர வேண்டுமெனில்
அறிவை வளர்த்து கொள்க _ நீங்கள்
மேலே உயர்ந்து வளர்ந்து விட்டால்
அன்பை வளர்த்து கொள்க !

- வை . நடராஜன்

நேசியுங்கள் .. யாசிகாதீர்கள்





விரும்பினால் விருப்பம்
கேளுங்கள்
விலகினால் பிச்சை

கேட்காதீர்கள்

ஆயிரம் தான்
அழகு இருப்பினும்
ஆண்மையை அடகு
வைக்காதீர்

மரியாதையில் தொடங்கும்
காதல்
காமத்தில் முடியும்
மரியாதை அற்ற வாழ்க்கை
என்னத்தை கொடுக்கும் ?

நேசித்து வருவதன்றோ
காதல்
அதை யாசித்து கெஞ்சுவதில்
என்ன வாழ்க்கை ?


அன்பற்ற நெஞ்சிற்க்காக
நோகாதீர்
ஆசையினால் அடிபணிந்து
போகாதீர்


- வை . நடராஜன்

Stop cry .. Keep Try :






-----------------------
No moon at noon
no pain if blind
no man is true
no true will die
no lie will win
no win will stay
no stay in waves
no waves in well

no loss if faith
no faith will fail
no fail is shame
no shame if try
pain and loss will
make you cry
one day will win
until Keep try

- V.Natarajan