September 29, 2012

பெண்மையின் உண்மையே ....




என்னிடம் சிரித்து பழகி
உன் தந்தையை ஏமாற்றினாய் _ உன்
தந்தையின் சினத்தை கண்டு
என்னை ஏமாற்றினாய் _ இவை

அனைத்தையும் மறைத்து
உன் கணவனை ஏமாற்றினாய் _ இன்றோ
உண்மையாக வாழவேண்டுமென
உன் குழந்தைக்கு உபதேசம் செய்கிறாய்

அன்னம் போல் அழகிருந்தாலும்
ஆயிரம்தான் பணமிருந்தாலும்
எண்ணம் உண்மை இல்லை இனி
எதற்கு பெண்ணே இந்த வாழ்க்கை ? ? ?

- வை . நடராஜன்

September 28, 2012

அன்பு மகள் அனுப்பும் மடல் ....



''ஒவ்வொரு
பெண் பிள்ளைக்கும் அவர்கள் தந்தைக்கும் சமர்ப்பணம்'' !!!!!!
---------------------------------------------------------------------------

உறவில் தந்தையாய்
உணர்வில் அன்னையாய்
உயிரில் கலந்தாய் அப்பா _ நான்
இரவில் தனியாக
தெருவில் வரும் போது
மழையில் நினைந்தாய் அப்பா..

குடையில் இடமிருந்தும்
நடுவில் எனை நிறுத்தி
மழையில் நினைந்தாய் அப்பா
தினம் மனதில் எனை
நிறுத்தி உடலில் தளர்ந்தாலும்
உழைத்து களைத்தாய் அப்பா..


தஞ்சை பெருங்கோயில்
தலைய சிற்பி போல்
என்னை வளர்த்தாய் அப்பா _ தினம்
கொஞ்சம் கொஞ்சமாய்
என்னை செதுக்க நீ
உன்னை வருத்தாய் அப்பா..

பணியில் இருந்து நீ
திரும்பி வரும் வரையில்
பசியில் இருப்பேன் அப்பா _ உன்
மடியில் அமர்த்தி என்
இதழில் உட்டியதை
நினைத்து அழுதேன் அப்பா..

கல்வி கற்க நான்
பள்ளி சென்ற தினம்
இன்றும் நினைப்பேன் அப்பா
உன் கையை இழந்து
நான் உள்ளே போகும் போது
கண்கள் நினைத்தேன் அப்பா..

என்னை கரை சேர்க்க
உன்னை அலையக்கி
அலைந்து உழைத்தாய் அப்பா
விண்ணை அழகாக்கும்
வெள்ளி மலர் போல
என்னை வளர்த்தாய் அப்பா..

உடலில் நலமின்றி
உறைந்த பனி போல
படுத்து சாய்ந்தேன் அப்பா _ என்
தலையில் வருடி நீ
உணவு ஏதுமின்றி
இரவை கழித்தாய் அப்பா..

கழுத்தில் மணி வைரம்
காலில் புது வெள்ளி
போட்டு ரசித்தாய் அப்பா _ கோயில்
குளத்தில் மீன் உண்ணும்
அழகை பொறி போட்டு
படியில் ரசிப்போம் அப்பா..

நிலத்தில் விளைந்த அந்த
நெடிய கரும்பை
கடித்து ருசித்தோம் அப்பா
படிக்க உன்னை பிரிந்து
வசிக்க நேர்ந்தும்
அகத்தில் வசித்தோம் அப்பா..

கொடுத்த வாழ்விற்கு
கோடி நன்றிகள்
கொடுத்த இறைவா அப்பா _ நீ
இருக்கும் இடத்தில தான்
இறைவன் இருக்கிறான்
கோயில் வேண்டாம் அப்பா..

அடுத்த பிறவியில்
அன்னையாக நான்
இருக்க நேர்ந்தால் அப்பா
எடுத்த பிறவியெல்லாம்
உன்னை குழந்தையாய்
சுமக்க வேண்டும் அப்பா  ..

September 26, 2012

திலீபன்




தமிழ் ஈழம் ஒளிர்வேண்டி
தன் உயிரை விளக்காக்கி
தன்மானம் வாழ்விற்கு
தன் உயிரை பொருளாக்கி

பலர் அறியா விடை பெற்ற
பைந்தமிழ் தியாகி இவர்
பசி துறந்து தன் வாழ்வை
பணயம் வைத்த யோகி இவர்

உண்ணாமல் நோம்பிருந்து
உயிர் துறந்த உத்தமரை
எண்ணாமல் நாமிருந்தால்
எதற்காக நாம் பிறந்தோம் ?

ஆயுதங்களை எடுக்காத
ஆற்றல் மிகு தீரனாய்
அடுத்தவர்களை வருத்தாத
போரிட்ட வீரனாய்

தனி ஈழம் கனவுக்கு
தன் உடலை உணவளித்தார்
தமிழ் இனத்தின் வளர்சிக்கு
தன் உயிரை கடனளித்தார்

அவர் கொடுத்த உயிர் கடனை
என்று நாம் அடைப்போமோ
அவர் கண்ட தமிழ் ஈழம்
என்று நாம் படைப்போமோ ?

புலிகளில் பிறந்தாலும்
புத்தராய் வாழ்ந்தவர்
வலிகளை ஏற்று
வரலாற்றில் விழ்ந்தவர்

ஒரு தாயின் கருவறையில்
உருவான புலி இவரோ
தமிழ் தாயின் திருமடியில்
தலை சாய்ந்து உயிர் துறந்தார்

பலர் நடித்த உண்ணாவிரதம்
பழ சாறில் முடிந்தது
இவர் கொண்ட தீரம் மட்டும்
தியாகத்திலே முடிந்தது

September 25, 2012

வாழ்த்துவோம்




இஷ்ட பட்டவள் விட்டு
போவதால் _ அவள்
கஷ்ட பட்டு தான்
வாழ நினைக்கணும்மா ?

மனதுக்கு பிடித்தவள்
ஒன்றாக வாழ இயலா
விட்டாலும் _ அவள்
நன்றாக வாழ நினைப்போம்

கல்யாணம் என்பது
காமத்தை கொடுக்கும் _ நீங்கள்
கண்ட காதல் உண்மை எனின்
காலமும் இருக்கும்

வருந்தினால் திருந்தலாம் ..



தப்பு செய்யா வாழ்வதற்கு
கற்று கொள்ளுங்கள் _ இல்லையெனில்
தப்பு செய்தல் ... அதையாவது
ஒத்து கொள்ளுங்கள்

மூடி மூடி நடிப்பதால்
பழி பிறக்கும் _ வருந்தி
நினைத்து பாருங்கள்
வழி பிறக்கும்

நடந்த தப்பு எல்லாமே
கோணலாகும் _ நீங்கள்
மாற நினைத்தால் எல்லாமே
காணலாகும்

தவறு செய்யா மனிதன் என்று
யாருமில்லை _ அதை
உணர மறுக்கும் மனம் கொண்டோர்
மனிதன் இல்லை

September 24, 2012

உதிரும் வரை உடனிருப்பேன்




கவலையிலே அழுவும் போது
கண் துடைக்க நான் இல்லை _ ஆயின்
நீ காலம் முழுதும் சிரிப்பதற்கு
கண் போல நானிருப்பேன்

உன் இளமை ருசிப்பதற்கு
ஆசையிலே நானிருந்தேன்
நீ முதுமை கண்டபோதும்
அன்னையாக நான் சுமப்பேன்

பிறை கொண்ட நிலவாக
இருக்கின்ற என் இனியா _ நீ
நரை கண்ட காலம் கூட
உன்னழகை நான் ரசிப்பேன்

நடமாடும் சிற்பமே
நானிருக்கேன் கலங்காதே
தள்ளாடும் பருவம் வரை
துணையிருப்பேன் மறவாதே

காலமும் நீ சிரிக்க
நானிருப்பேன் _ கண்கள்
கலங்கிய நேரமெல்லாம்
துணையிருப்பேன்


வாழும் வரை என் நெஞ்சில்
உன்னை சுமப்பேன் _ நீ
மரணம் கண்டு போகும் போது
மடி சுமப்பேன்

நாள் சுருங்கும் இவ்வாழ்க்கை
ஓடி விடும் _ நாளை
தோல் சுருங்கும் காலம்
நம்மை தேடி வரும்

முதிர்ந்தாலும் என் குழந்தை
நீ தானே .. நாட்கள் முடியும்
வரை உன் உலகம்
நான் தானே..

மெய் கோர்த்த நம் நேசம்
மெய் அன்பில் வாழ வேண்டும்
கை கோர்த்த படியாக
ஒன்றாக போக வேண்டும்


நான் கண்ட தேன் மலரே
நான் இருக்கேன் கலங்காதே
ஊன் விட்டு போடும் வரை
உன்னை சுமப்பேன் வருந்தாதே

September 23, 2012

வறுமை





தரையில் விழுந்த பழம் என
தொலைவில் தூக்கி போட்டேன் _ அப்பொழுது
பழையது ஏதும் உண்டா ? என்ற
பசித்த குரலை கேட்டேன்

தேநீர் சுவை குன்ற
ஜென்னல் ஓரம் ஊற்றினேன் _ நல்ல
குடிநீர் கூட இல்லாத மனிதர்களை
கண்டு மனதை தேற்றினேன்

கோவம் வந்தால் உணவை கொட்டும்
மோசமான பழக்கம் _ தினம்
கோடிக்கணக்கில் பசித்த வயிறு
கோர பசியில் உறங்கும்


பசித்த உடன் உன்பவனுக்கு
பசியின் கொடுமை தெரியாது
பசித்து காய்ந்த வயித்துக்கு
பழைய உணவு புளிக்காது

உரிமை அற்ற வாழ்வு அடிமை
உணர்வற்ற வாழ்வு மடமை
கனவற்ற வாழ்வு வெறுமை
உணவற்ற வாழ்வு கொடுமை

இறைவா .....

பணக்காரர்களாய் எல்லோரும்
பிறத்தல் வேண்டும் _ அன்றி
பசிக்காத வயிறு மட்டும்
இருத்தல் வேண்டும்.

வருகிறேன் ...







மறு ஜென்மம் இருந்தாலும்
உன் கூட வாழ வேண்டும் _ இந்த
ஒரு ஜென்மம் முடியும் பொது
உன் மடிமேல் போக வேண்டும்

கடைசி நொடியில் நான்
கண்ணை மூடும் போதும்
விழிகள் உன்னை தான்
தேடும்

அன்னை போன்ற உன்னை
எங்கே காண்பேனோ
இதயம் கண்ணீரில்
வாடும்

மரணம் பற்றி நான்
வருந்த வில்லை _ அதை
மலரை தூவி வரவேற்ப்பேன்

மரணம் கண்ட பின்பு
மங்கை உன்னை நான்
எந்த உலகில் மீண்டும் பார்ப்பேன் ??


September 22, 2012

நிலை கொஞ்சம் தாழ்ந்தால்




நிமிர்ந்து பார்த்து மதித்தவரோ
குனிந்து பார்த்து பகைத்தார்
நாம் நிலையில் கொஞ்சம்
இறங்கி விட்டால்
ஏளனம் செய்து நகைப்பார்

பாச வார்த்தை ஆயிரம்தான்
பணத்தை கண்டால் சுரக்கும் _ நாம்
பணமும் பதவி இழந்து விட்டால்
பறவை போல பறக்கும்

கொடுக்கும் நிலையில்
இருக்கும் போது
கோயில் போல துதிப்பார் _ நீ
வாங்கும் நிலைக்கு
வந்து விட்டால்
வாசற்படியாய் மிதிப்பார்

இருக்கும் வரை இறக்கை
போல ஒட்டி கொண்டு பறப்பார் _ நாம்
இழந்து விட்டு தவிக்கும் போது
கோடி தூரம் இருப்பார்

காதல் பாசம் நட்பு என
சுத்தி சுத்தி திரிவார்
கையில் காசு இல்லை எனில்
சத்தமின்றி மறைவார்

இருக்கும் வரை சுற்றி பார்த்தால்
சுத்தி சுத்தி உறவு _ அனைத்தும்
இழந்து திரும்பி பார்த்தால்
ஞானம் ஒன்றே வரவு

கோயில் குளத்தில் பொழிந்த
மழை கழிவு நீரிலும் பொழியும்
அது விழுந்த இடத்தை பொருத்துதானே
உலகம் அதனை மதிக்கும்

நல்ல உள்ளம் இருந்தாலும்
கடுகை போல இருப்பாய் _ நீ
நாலு காசு இருந்தால் தான்
கடலை போல தெரிவாய்

September 19, 2012

மனிதன்




மனிதன் .....:

இறைவா ஒரு அணுவை கொடு
நான் ஆயிரம் படைத்தது
காட்டுகிறேன்

இறைவன் ....."

ஆயிரம் இருகட்டம் முதலில்
நீ ஒரு அணுவை படைத்தது காட்டு

_ வை . நடராஜன்

September 13, 2012

நம்பிக்கை உரமானால் ! வாழ்க்கை வரமாகும் !





மூச்சி இருக்கும் வரை
மரணமில்லை
முயற்சி இருக்கும் வரை
தோல்வியில்லை

எதையும் தாங்கும்
மனமிருந்தால்
வதையும் வாழ்வில்
வலிகள் இல்லை

நீரில் மிதக்கும் படகு கூட  _ அன்று
நீரை தந்த  மரமாகும்
அடித்த வலித்த தோல்வி எல்லாம்
நாம் திருப்பி அடிக்க நல் உரமாகும்

பள்ளமான இடத்தில்தான்
வெள்ளம் வந்தால் குளமாகும்
பள்ளம் ஒன்று தாழ்வு இல்லை
உள்ளம் இருந்தால் உயர்வாகும்

விதியோ ? சதியோ ? ஆகட்டம்
வழிகள் எல்லாம் மூடட்டும்
மதியும் மனமும் தீரமாகி
புதிய வழியை படைக்கட்டும்

எதுவுமின்றி ஆனாலும்
எவருமின்றி போனாலும்
துணிவு மட்டும் துணையானால்
வலிகள் கூட வரமாகும்

அற்ப்பமான நூல் கூட
ஒன்று சேர்ந்தால் ஆடையாகும்
அச்சமில்லா இதயம் தானே
கவலை தாங்கும் கவசமாகும்

சூட்டை தாங்கும் அரிசிதான்
சுவைக்கும் நல் சோறாகும்
சோதனைகளை தாங்கிவிட்டால் _ வாழ்க்கை
சுலபமான போராகும்

தோல்வி எல்லாம் மலைபோல
கடக்க நினைத்தால் கால் கிழே
மனதில் உறுதி இருந்து விட்டால்
மரணம் கூட தோள் மேலே

கவலை வரட்டும் பார்த்து கொள்வோம்
காயங்களை ஏற்றுக்கொள்வோம்
வலிகள் தாங்கும் நெஞ்சினை
வாழ்க்கையிலே ஏற்று கொள்வோம்

September 10, 2012

உரிமை




நரிகள் கூட்டதிலே நலிந்த
முயல் என்ன செய்யும் ?
நாயிகளின் ஆட்சியில் நியாயம்
கேட்டால் என்ன கிடைக்கும் ?

பிணம் திண்ணும் கழுகுக்கு
மானின் வலி தெரியுமா ?
பணம் திண்ணும் உங்களுக்கு
மானிட வலி புரியுமா ?

பாவிகளின் அடியாட்கள் காக்கி
உடையில் இருக்கும்
பாவப்பட்டவன் நீதி கேட்டால்
சட்டத்தை வைத்து அடக்கும்

மானம் அற்றவர் திருந்தமாட்டான்
தெரிந்து கொண்டோம் _ இந்த
ஈன நாட்டில் பிறந்தது பாவம்
புரிந்து கொண்டோம் ..

_ வை . நடராஜன்

Helpless heart hanging in sleepless night





Helpless heart hanging in sleepless night
Falling in love is sweeter but
Feeling the love is harder
Being lonely does not hurt but
Feeling lonely is more than death
Half the world is on their sleep
Half the world is on their job
Full of my world is in sleepless job...
Dogs barking in my ears
Stars sparking in my eyes
Your rocking thoughts in my heart
that  I drag out through my hand
I need a time to wet my eyes
Which falls disappointed when i search my mails..
My box is empty with hundreds of mails..
My paining thoughts hide my ways...
I need your lovely rays of love..
My arms are waiting for u..
I started my life without you but
It should end definitely with you....

September 9, 2012

நீ நான் நாம்




நிலவிலே வாழ வேண்டும்
உன் நினைவிலே சாக வேண்டும்
மலரினில் பணியை போல _ உன்
மடியிலே சாய வேண்டும்

இன்னொரு பூமி வேண்டும்
இருவருக்கு மட்டும் வேண்டும்
தேயாத நிலவு வேண்டும்
காயாத மலர்கள் வேண்டும்


தேன் மழை பொழிய வேண்டும்
தேகங்கள் நினைய வேண்டும்
வானத்தில் வண்ணம் எல்லாம்
வகை வகையாய் மாற வேண்டும்


நாம் மட்டும் வாழும் உலகில்
நடமாடும் வீடு வேண்டும்
மேலை வரும் பகலவன் கூட
மென்மையான குளிர் தர வேண்டும்

பட்சிகளின் ஒலிகள் கூட
பைந்தமிழில் ஒலிக்க வேண்டும்
பச்சை நிற புற்கள் எல்லாம்
தங்க நிறம் ஆக வேண்டும்

வருடமும் வசந்தம் வேண்டும்
வற்றாத நதி கரை வேண்டும்
மான் முயல் மயில்கள் மட்டும்
உலவும் நல் காடு வேண்டும்

குயில் அணில் கொஞ்சும்
பைங்கிளி கூடவே வசிக்க வேண்டும்
மாதமும் முழு நிலா வேண்டும்
மண் கூட சுவைக்க வேண்டும்


நாம் மட்டும் இருக்கும் உலகில்
நாளும் நாம் இணைய வேண்டும்
ஊன் விட்டு போகும் வரையில்
உறவிலே உண்மை வேண்டும்

மனம் தரும் மலர்கள் எல்லாம்
தினம் வந்து பேச வேண்டும்
மழை துளி மேலே பட்டு
மனம் எல்லாம்  கூச வேண்டும்


ஆசையாய் பேச மட்டும்
ஆயிரம் ஆண்டுகள் வேண்டும்
அடிகடி சண்டைகள் போட
அதில் பாதி ஆண்டுகள் வேண்டும்

முதுமையில் இருந்தால் கூட
அகத்திலே இளமை வேண்டும்
பதுமையே உன்னை வருட
நகதிலே இறகு வேண்டும்


மரணம் அதை அடையும் போது
மறு ஜென்மம் இங்கே வேண்டும்
ஒரு நொடி கூட வேண்டாம்
ஒரே நொடியில் போக வேண்டும்

நடிகர்கள்



சாப்பாட்டுக்கு உப்பை போன்று தான்
சமுதாயத்துக்கு நடிகர்கள் _ தேவையான
அளவிற்கு சேர்த்து கொள்ளுங்கள்
தேவதூதர்கள் போல தூக்கி வைக்காதீர்கள்...

திருடர்களையும் மன்னித்து
விடலாம் _ இந்த
திருந்தாதவர்களை என்ன
செய்வது ?


இந்த  கட் அவுட் உயர உயர
உங்கள் அறியாமை தாழ்கிறது
பாலினை ஊற்ற ஊற்ற
பகுத்தறிவு வீழ்கிறது

குடித்து கூத்தடித்தவர் _ எல்லாம்
கும்பிடும் தெய்வம் ஆனால்
வெடித்து அழியட்டும் இந்த
வேதனை சமுதாயம்

உண்மை



அனாதைக்கு தான் புரியும்

உறவினர்களின் அருமை _ அனால்

சில உறவினர்களை பார்க்கும் போது

தெரியும் அனாதையாய் இருப்பதே பெருமை .

வாழ்கையில் ...

காசை கொடுத்தேன் எழுதுகோல் வந்தது
காதலை கொடுத்தேன் கவிதை வந்தது
பொறுமையை இழந்தேன் குழந்தை வந்தது
பொறுமையாய் இருந்தேன் குழந்தை வளர்ந்தது

சிரிக்கும் போது இன்பம் தெரிந்தது
அழும் போதுதான் உண்மை புரிந்தது
சக்கரை இன்றி பால் கசந்தது
பசிக்கும் போதுதான் பாகற்க்காய் இனித்தது

அழுவதால் அழுதேன்




அன்று
கண்கள் பார்த்து
கைகள் கோர்த்து
ஒன்றாக சிரித்தோம்

இன்று
காலம் தந்த சாபம்
தனி தனியாக அழுகிறோம்

என் காதலின் தோல்வி
கண்ணீரின் விதி
அவள் கல்யாணத்தின்
தோல்வி கடவுளின் சதி

அவளை தொட முடியாத
தூரத்தில் உள்ளேன்
விட முடியாமல் பாரத்தில்
உள்ளேன்

என்னை கொய்தவள்
அழுவும் போது
என்ன செய்வது
புரியவில்லை


அல்லி மலரை
அழ வைத்த
ஆண்டவனுக்கும்
அறிவும் இல்லை

September 1, 2012

கிடைத்த வரம் இழந்த தினம்




இன்று ... .. .
மாதத்தின் முதல் நாள்
மறக்க நினைக்கும் கருநாள்
கனவெல்லாம் கலைந்து _ நான்
கதறி அழுத திருநாள்

செந்தூர பூ  ஒன்று
சேற்றிலே விழுந்த தினம்
செவ்வான அழகினை
கருமேகம் மறைத்த தினம்

வான் நிலவே நிலை தவறி
வழியோரம் விழுந்த தினம்
வலி கொடுத்து விழி கசிந்து
வழி மாறி போன தினம்

கை குழந்தை கரு விழியை
கருந்தேளாய் கொட்டி விட்டு
மெய்கலந்த என் அன்பை
பொய்புனர்ந்து போன தினம்

பால்கலந்த தேன் சுவையை
பாதையிலே கொட்டி
ஊன்கலந்த என் உணர்வை
ஊனமாக்கி போன தினம்

வெள்ளி நிலா மேனியவள்
கள்ளி செடியாய் காய்ந்ததினம்
பொங்கிவரும் பொன்னி நதி
வஞ்சம் பட்டு வறண்ட தினம்

கடவுளின் வரமாக
மெய்யுணர்வில் வந்த அவள்
காலத்தின் சாபத்தால்
கைநழுவி போன தினம்