December 30, 2012

இந்த நாட்டில்





இந்த நாட்டில் ,

எத்தகைய குற்றத்தையும்
செய்து விட்டு ..
தண்டனையில் இருந்து தப்பிக்க
வேண்டுமெனில் ..
ஒன்று  ,
பைத்தியமாக இருத்தல் வேண்டும் - அன்றி
பணக்காரனாய் பிறத்தல் வேண்டும்

- வை .நடராஜன்

December 27, 2012

ஏமாற்றி வாழ்வதை விட



ஏமாற்றி வாழ்வதை விட
ஏழையாய் வாழலாம்
பாவ வழியை விட
பசியிலே சாகலாம்

உடலும் உயிரும்
பிரியும் வரை
பிழைத்து கொள்வேன் - தினம்
ஒரு வேளை உணவு என்பினும்
உழைத்து உண்பேன்

கடமை எனக்கு
கஞ்சி உற்றும் அதுபோதும் - மற்றவர்
உடமை கவர்ந்து
உண்ணமாட்டேன் ஒருபோதும்

உழவன் சிரிக்கும்




உழவன் சிரிக்கும் நாடுதான்
உண்மையில் சொர்க்கம் -
அன்னமிட்டவன் அழுவும் நிலையில்
அணுஆயித சாதணைகள் எதற்கு ???

அடுப்பு எங்களுக்கு ..அல்வா உங்களுக்கா ?







பங்கு வேண்டும் வெறிபிடித்து
கோரிக்கை கேட்ப்போம் - அங்கே
வெடித்து எதினும் நடந்து விட்டால்
வேடிக்கை பார்ப்போம்

மின்சாரம் இல்லாமல் வேதனையாய்
உள்ளது - எந்த
சோதனைகளையும் தாங்கதான்
தமிழகம் உள்ளதே


அழிவை கூட தாங்கி கொள்ளும்
எங்களினம் - வெறும்
கழிவை கூட ஏற்றுகொள்ளா
சுயநலம்

தமிழினமே ,

உணவின்றி குன்ற குன்ற
உயிர் வாழ வழியில்லை
உணர்வின்றி போனால்
உயிர் வாழ்ந்தும் பயனில்லை

மயிருக்கும் மரியாதை
உடம்போடு இருந்தால்தான்
மனிதனுக்கு மரியாதை
உணர்வோடு வாழ்ந்தால்தான்

அடுப்பு சட்டி எங்கள் மீது
அல்வா மட்டும் அடுத்தவனுக்கா ?
பாடு படும் எங்கள் தியாகம்
பங்கு மட்டும் கெடுதவனுக்கா ?

ஒத்த இந்தியனாக நாம்
வாழவேண்டும் - ஆனால்
மத்த இந்தியனுக்காக நாங்கள்
ஏன் சாகவேண்டும் ????

விஷ கடை


திராவிட மாயை




திராவிடன் என்ற
சாயம் பூசி _ எங்கள்
தமிழெனும் முகத்தை
இழந்தோம்

திராவிட தெலுங்கனை
கண்டதுண்டா _ நான்
திராவிடன் என்றவன்
சொன்னதுண்டா ?

கேரளவன் சொன்னதை
கேட்டதுண்டா _ கன்னடன்
சொன்னதை கண்டதுண்டா ?

எங்களை மட்டும்
திராவிட மாயையில்
மயக்கிய உங்களுக்கு
மதியும் உண்டா ???

திராவிடம் எனும் மாலையை
கழுத்தில் கொண்டு
பலியாடாய் கிடக்குது தமிழினம்
திராவிடம் சொல்லிக்கொண்டு
திரியும் மூடர்களை
நம்பிக்கொண்டு கிடப்பது அறிவீனம் ......

நம்மினத்தை எவனும் மதிக்கவில்லை
அது ஏன் உங்களுக்கு புரியவில்லை ?
சுற்றும் எவனும் மதிக்கவில்லை - சில
சுயனலவாதிகளுக்கு ஏன் புரியவில்லை ?

திராவிடம் ,
சிலர் ஓட்டுக்கு உதவும்
தமிழ்நாட்டுக்கு உதவாது

திராவிட கூச்சல் என்று மடியும்
தமிழின உணர்வு என்று விடியும் ?

நீ வாழ்வின் பொருளுரை





குண்டாக இருந்தேன்
உணக்காக இளைத்தேன்
மண்டாக இருந்தேன்
உணக்காக படித்தேன்

செண்டான உந்தன்
உயிர் கொள்ள துடித்தேன்
வண்டாக அலைந்து
வழியின்றி களைத்தேன்

கல்லாக இருந்தேன்
கால் பட்டு மலர்ந்தேன்
வில்லாக இருந்தேன்
விழி கண்டு உடைந்தேன்

மொழியின்றி இருந்தேன் -உன்னால்
கவி கோடி படைத்தேன்

எதற்காக பிறந்தேன்- என
நானும் அழுதேன் -
உனை கண்ட பிறகு
மரணத்தை வெறுத்தேன்

புயல் பட்ட படகாய்
பொருளின்றி அலைந்தேன்
நீ வந்த பின்தான்
பொருளோடு வாழ்ந்தேன்

சோம்பலின் பிடியால் உழைப்பை
தேடாமல் இருந்தேன்
உனக்காக வேண்டி
ஓடாக உழைத்தேன்

தனியான எனக்கு
உலகத்தில் யாருமில்லை - நீ
துணையாக பின்பு
உலகமே தேவையில்லை

தாயாக தயவாக
துணையாக வந்தாய்
நோய் தீர்க்கும் மறந்தாக
அணையாக வந்தாய்

பாறையை சிலையாக்கினாய்
பாலையை விளையக்கினாய்
வாழ்கையில் முடமாய் இருந்தேன்
வந்து நீ வளமாகினாய்

உதிர்ந்த தரைதொட்ட எனை
உயிர் கொடுத்து தலை சூடினாய்
வறண்ட என் வாழ்வை செழிக்க
நதியாக தினம் ஓடினாய்

அத்தனையும் தந்தாய் எனக்கு
அணியே நன்றி உனக்கு ..
நான் நானாக
நீ தாயாக ....

ஒருவனின் கவிதை அல்ல






ஆன்மிகம் தேட வேண்டாம்
அண்ணதானம் போட வேண்டாம்
மது கடைகளை மூடி பாருங்கள் - அந்த
மகேஸ்வரனே உங்களை வணங்குவார் ..

இருப்பதை வைத்து
சிறப்பாய் வாழ்வோம்
குடிப்பதை வைத்து
என்ன வளர்ச்சி ?
வேரிலே விசமென்றால்
ஏது மலர்ச்சி ?

ஊற்றில் விடத்தை கலந்து
ஊருக்கு அனுப்பி என்ன பயன் ?
நாற்றை எல்லாம் கருக விட்டு
வேலியை கட்டி என்ன பயன் ?

மனமும் உடலும் கெடுத்தபின்
மாநிலம் வளர்ச்சி என்ன பயன் ?
குளத்தில் நீரை கெடுத்து விட்டு
குடத்தை வாங்கி என்ன பயன் ?

சமுதாயமே சீரழிந்த பின்
சாலையும் ஆலையும் எதற்கு ?

தமிழகத்தில் எல்லா சாலைகளும்
சுடுகாடு நோக்கி போகிறது .
உடலும் மனமும் போதையிலே
நாடே வீணாய் ஆகிறது

மாநிலம் ,
வசதியாக இல்லையெனும்
பரவாயில்லை -தமிழினம்
நிம்மதியாக வாழ
வழி காட்டுங்கள் ..

ஒருவனின் கவிதை அல்ல
ஒரு இனத்தின் அழுகை

December 15, 2012

என் கடைசி கடிதம்






வானம் காய்ந்தது
வாழ்க்கை ஓய்ந்தது
மானம் காக்கும் துணி கூட
உழைத்து தேய்ந்தது

கல்லணை கட்டியது முதல்
கஞ்சிக்கு பஞ்சமில்லை...
கர்நாடகாவை பிரித்தது முதல்
அழுதது கொஞ்சமில்லை...

மழைநீரும் தூறவில்லை
மனரணமோ ஆறவில்லை
மின்சாரத்தோட ஓசை இல்லை
மீண்டும் பிறக்க ஆசையில்லை

சீக்கிரமே சாக வேண்டும்...
அதற்குள் சென்னை சென்று
பார்க்க வேண்டும் ..

அங்கே ,
கார் தயாரிக்க கரண்ட் இருக்கு -எங்க
கஞ்சிக்கு வழியில்லை
பீர் தயாரிக்க கரண்ட் இருக்கு
நெஞ்சி பொறுக்க வில்லை

ஹுன்டாயும்  போர்டும்
உலகெல்லாம் ஏற்றுமதி...
உண்ண அரிசி பருப்பெல்லாம்
உள்ளுரில் இறக்குமதி

அமெரிக்காவுக்கு உழைக்க
ஐ டி வளர்த்தாலும்,
அடுத்த வேலை உணவுக்கு
 சாப்ட்வேரையா  சாப்பிடுவீர்  ?

அங்கே ,
PUB'm Club'm கரன்டுல
ஜொலிக்குது  - எங்க
பம்பும் செட்டும் வறண்டு  
வறண்டு .. வலிக்குது :(

எத்தொழில் செய்தினும்
காசு வரும் - ஆனால்
இத்தொழிலில் மட்டும்தானே
உணவு வரும் ?

தலைநகர் வளர்வதில்
தவறொன்ன்னும் இல்லை - ஆனால்
தலைமட்டும் வளர்வது
வளர்ச்சி இல்லை

உழைத்து களைத்து
விளைத்தவன் விவசாயி - அதை
அடித்து பிடித்து
வாங்கியவன் வியாபாரி

தண்ணீர் , மின்சாரம் ,
தரகர், நஷ்டம் ,என்னென்று நான் சொல்ல
வாழ தெரியாமல் சாகவில்லை
வாழ முடியாமல் போகிறேன்

சச்சின் சதத்தையும்
ஷாருக்கான் படத்தையும்
கொண்டாடும் நீங்கள்  - நாட்டு
உணவுக்கு உழைத்து
உணவே கிடைக்காமல்
உயிர் விடும் நாங்கள்


ஊருக்கே உழைத்தோம்
ஒரு வாய்க்கு போராட்டம்
வசதி வாய்ப்பு கூடவில்லை
நிம்மதியாக கூட வாழவில்லை

கடைசி ஆசை ..
இறைவா...  ..

புழுவாக புல்லாக
மலிவான மண்ணாக
எலியாக எறும்பாக
ஏர் பூட்டும் எருதாக
எதுவாக பிறப்பினும்
ஏற்று கொள்வேன் _ ஆயின் இந்த
இழிவான இந்தியாவில்
பிறந்திட வேண்டாம் ...

- இப்படிக்கு

உங்கள் தமிழன் , உழவன் ..

- வை .நடராஜன்

December 14, 2012

அன்பான தமிழர்களே






காவிரி தீர்க்க முடியாத
பிரச்சனை அல்ல
தீர்க்க கூடாத பிரச்சனை

பிரச்சனை தீர்ந்து விட்டால்
நீங்கள் விவசாயம் பண்ணலாம் - ஆனால்
நாங்கள் அரசியல்
பண்ண முடியாது ..

நீங்கள் வாட வேண்டும்
நாங்கள் வாழ வேண்டும் - ஆனால்
மறக்காமல் எங்களுக்கு
மின்சாரம் வேண்டும்

தண்ணீர் தரமாட்டோம்
அது எங்கள் மாநில சொத்து
மின்சாரம் தாருங்கள்
அது நம் நாட்டு சொத்து .

எங்கள் அணையில் இருப்பது
வெறும் தண்ணீர் அல்ல
உங்கள் பாவம் - பரவாயில்லை

ஆடு வெட்டுபவனும்
அரசியல் பண்ணுபவனும்
பாவம் புண்ணியம் பார்த்தால்
வாழ இயலாது

இன்னும் ஆயிரம் ஆண்டானாலும்
எங்களை வீழ்த்த முடியாது ..
எங்கள் மாநிலத்தில் கன்னடர்கள்
மட்டும் வாழ்கிறார்கள் - ஆனால்

உங்கள் மாநிலத்தில் ....

தலித் , வன்னியர்
பிராமணர் , தேவர்
அ தி மு க , தி மு க
ஆளும் கட்சி ,எதிர் கட்சி
இஸ்லாம் ,ஹிந்து
எல்லோரும் இருகிறீர்கள் - ஆனால்
ஒன்றுப்பட்ட தமிழர்களை தவிர .


நீங்கள் சேர போவதில்லை
நாங்கள் மாற போவதில்லை
மின்சாரத்தை நிறுத்தி விடாதிர் - ஏனின்
நாம் இந்தியார்கள் மறந்து விடாதீர்

நாங்கள் கன்னடர்கள்
திராவிடர்கள் என கேள்விப்பட்டோம்
நீங்கள் தமிழர்கள்
திராவிடர்கள் என ஏமாற்றபட்டீர்

நாங்கள் கன்னடர்களாக வாழ்கிறோம்
நீங்கள் தமிழர்களாக வாழுங்கள்

- கன்னட அரசியல் அன்பர்கள் ####

முடிந்தவரை ..







கடலும் காமமும்
கட்டுக்குள் இல்லையென்றால்
உடலும் உள்ளமும்
உருக்குலைந்து போய்விடும்..

கட்டுப்பாடு இல்லை எனில்
காண்டம் காத்திருக்கும்
காண்டமும் இல்லை எனில்
கல்லறை காத்திருக்கும்

முடிந்தவரை ஒழுக்கமாய்
இருங்கள்
முடியவில்லை எனில்
பாதுகாப்பாய் இருங்கள்

மரணம்






வெளியே நடக்கும் மரண செய்தி
செவிகள் வரைக்கும் ஒலிக்கும்
வேண்டியவரின் மரணம் மட்டும்
இதயம் சென்று வலிக்கும்.


அடித்து துடித்து அழுபவர்களுக்கு
ஆயுள் வரை தண்டனை - அங்கே
அடக்கமாகி போனவர்களுக்கு
ஆயுள் தண்டனையில் விடுதலை .

கர்வம் காமம் கோபம்
எல்லாம் திமிறி கொண்டு திரியும்
கடைசி மூச்சை இழந்த பிணத்தை
கண்டால் உண்மை புரியும் .

பூக்காத மொட்டின் மேல்
புயல் அடித்தது - தாயை
பார்க்காத பிஞ்சிகளும்
புதைகின்றது .

சேர்க்காத பாவங்களை
செய்த ஜென்மங்களும்
தள்ளாத வயது வரை
திரிகின்றது .

வாழ்க்கை தரிசாய் போனவர்களுக்கு
மரணம் பரிசாய் தெரியும்
வாழ்க்கையை வாழாமல் போனால்
அது வலியாய் உறையும் .

காமம் இல்லையெனில்
காதலில் சுவையில்லை
மரணம் இல்லையெனில்
வாழ்க்கையில் பொருளில்லை

உடல் காமத்தில் வந்தது
உயிர் கடனாய் தந்தது
தந்தவன் எடுத்து கொள்வான்
தப்பிக்க வழியுமில்லை
கொடுத்தவன் எடுத்து கொள்வான்
அவன் மேல் பழியுமில்லை .

உனக்காக வாழ வேண்டும்







என் கவிதையின் கருவானவள்
என் காதலின் உருவானவள்
என் வாழ்கையின் பொருளானவள்
என் கண்ணிரில் அருவானவள்

பேரிலே தமிழை கொண்டாள்
பேச்சிலே மழலை கொண்டாள்
தேரிலே மலரை சுட்டி - அவள்
தேவதை பருவம் கொண்டாள்

புகைப்பதும் பிடிக்காது என்பாள்
பொய் சொன்னால் பிடிக்காது என்பாள்
பகைப்பதும் பிடிக்காது என்பாள் - என்னை
பார்த்தாலே பிடிக்காது என்றாள்

கரம் கோர்த்து பேசிய வார்த்தை
சிரம் சாய்ந்து அழுத தருணம்
மரம் நிழலில் மறைவாய் முத்தம் - எல்லாம்
கனவாக கலைந்தது

நெஞ்சம் அழுகின்றது
நினைவை தருகின்றது
கைகள் தொழுகின்றது - கண்கள்
காண விழைகின்றது

உனக்காக வாழ வேண்டும்
உன்னோடு வாழ வேண்டும்
முத்தங்கள் மோகம் வேண்டும்
சண்டைகள் கோவம் வேண்டும்
உன் கண் பார்த்து சாக வேண்டும்
உன் கல்லறையிலும் பாகம் வேண்டும்

- வை .நடராஜன்

Image from Google
thanks for that painter ..

தாஜ் மஹாலை ..




என் அக்கா கேட்டார்கள்
உன் கவிதைகளை உன்னவள்
படிப்பாளா ????


சாலையில் கோலம்
போட்டோம் சாலைகள்
ரசித்ததில்லை
காளைமேல் வண்ணம்
அடித்தோம் காளைகள்
ரசித்ததில்லை

சுரங்கத்தை தோண்டும்
உழைப்பாளி வைரத்தை
வாங்கியதில்லை
ஓய்வா இருந்தாலும்
இதயம் ஓய்வாக
தூங்கியது இல்லை


தனக்கான தாஜ் மஹாலை
மும்தாஜும் பார்ததில்லை
உனக்கான என் கவிதைகளை
நீயும் படித்ததில்லை

சாதி வெறி







மகன் : அப்பா ஓரின சேர்கை என்றால் என்ன ?

அப்பா : டாய் இதெல்லாம் தேவையா .. போய் படிடா

மகன் : நீங்கள் சொன்னால் அடுத்த நான் வேலையை பார்க்க
போவேன் , இல்லையெனில் Internet'l பார்க்க போவேன் ..

அப்பா : ஒரே இனத்தை சேர்ந்த இருபாலரும் சேர்வது டா .

மகன் : அப்ப , என் இனத்து பெண் என் இனத்து ஆணுக்குதான்
உன் ஆண் இனத்து ஆண் உன் இனத்து பெண்ணுக்குதான்
என்று சாதி வெறியில் அலையும் எல்லோரும்
''ஓர் இன சேர்கையாளர்களா'' அப்பா ?

அப்பா : நீ வார்த்தையை தப்பாய் புரிந்து கொண்டாய் .

மகன் : சிறியவர்கள் வார்த்தையைதான் தப்பாக புரிந்து கொள்வோம்
நீங்கள் வாழ்க்கையை தப்பாக புரிந்து கொண்டு வாழ்கிரிர்கள் .

பூங்கா நகர் நிலையம்







அடுக்கு மல்லி தலை சூடி நீ
அலுவகத்துக்கு செல்லும் போதும்
அந்த
அழுக்கு புகை வண்டி கூட
அழகு தங்க ரதமானது

நீ தண்டவாளத்தை
கடந்த போது
தண்டவாள கருங்கற்கள்
தாமரை பூவாக்க மலர்ந்தன


உன்னை சுமந்து
செல்லும் புகைவண்டிக்கு
ஒவ்வொரு பயணமும்
புனித யாத்திரைதான்

பயணிக்கும் போது
பார்க்கும் பொருள் எல்லாம்
பின்னோக்கி போகும் - நீ
பயணிக்கும் போதுதான்
உனை பார்க்க எல்லாம்
முன்னோக்கி வந்தன

உன்னை கண்டால்
மோகத்தில் தண்டவாளமே
தடம் மாறும்
உன்னோடு பயணித்தால்
கொடைக்கானல் இடமாறும்

உன்னோடு பயணித்தால்
காற்றுக்கும் குளிறடிக்கும் - நீ
ஒரு நாள் விடுபெடுத்தால்
புகை வண்டியும் துடிதுடிக்கும் ...

இறைவா ......






பெற்றது யாரென்று
தெரியவில்லை - இனி
எப்படி வாழ்வது
புரியவில்லை

யோசிக்காமல் என்னை
பெற்றுவிட்டாள் - அன்னை
யாசிக்கும் கும்பலிடம்
விற்று விட்டாள்

தெருவிலே கையேந்த
விட்டு விட்டாய் - என்னை
கருவிலே கொல்லாமல் ஏன்
விட்டு விட்டாய் ?

வளர்க்க முடிந்தால் மட்டும்
பிள்ளை பெறுங்கள் - அன்றி
எல்லாவற்றையும் அடக்கி கொண்டு
சும்மா இருங்கள் .

இறைவா ......

பணக்காரராய் எல்லோரும்
பிறத்தல் வேண்டும் - அன்றி
பசிக்காத வயிறாவது
இருத்தல் வேண்டும்

December 1, 2012

அப்பா




அப்பா ,

நீங்கள் சும்மா இல்லாததால் தானே
நான் பிறந்தேன் - பின்னே
நான் சும்மாவே  இருக்கமாற்றேன் என ,
ஏன் அடிக்கிறீர்கள் ? :(

- வை .நடராஜன்