October 28, 2012

மரியதை



கல்லுக்கு மரியதை
ஆண்டவன் தோற்றதில்

புல்லுக்கு மரியதை
அரண்மனை தோட்டதில்

வில்லுக்கு மரியதை
வீரனின் தோளிலே

சொல்லுக்கு மரியதை
புலவரின் நாவிலே

அருவிக்கு அழகு விரைந்து வீழ்தல்
வாழ்கைக்கு அழகு மறைந்தும் வாழ்தல்

எங்க ஊரு நாட்டாமை குடும்பம்






ஒரு நாட்டின் நம்பிக்''கை''யான குடும்பம் #

அண்ணன் ஆள கெடுத்தான்
தம்பி தாலிய அறுத்தான்
ஒண்ணா உக்காந்து
உல வச்சி ஊர கெடுத்தான்

பிச்சகாரன் தட்ட புடிங்கி
எச்ச சோறு தின்ன
சித்தபனும் சண்டை போடான்
சித்தமாலும் பங்கு கேட்டா


உள்ளூர் கோழிய
உல வச்சி திருடி திண்ணு
வெளியூரு மருமகள்
வீங்கி நல்லா பெருத்துபுடா

மாடு மேச்ச மருமகனுக்கு
மாடி வீடு தங்க தேரு
கோமணம் கட்டி சுத்தின மாகான்
கோட்டு சூட்டுல அலையுது பாரு

அடுத்த வீட்டு ஆட்டை திருடி
அலையறா அக்காகாரி
தவிச்ச விட்டில போய்
தண்ணிய வாங்கி தறுதலையா
சுத்தறான் தம்பிகாரன்

செத்து போன தாத்தாவுக்கு
சொத்து எண்ணம் பக்கமே இல்ல
பெத்து போட்டா புள்ளைங்களுக்கு
சொத்த திருட வெக்கமே இல்ல

# இது வெறும் கற்பனையே . எந்த தனி மனிதனையோ . எந்த அரசியல்
கட்சியோ குறிப்பிடவில்லை .

போலி நீ என்பின் தோல்வியும் மகிழ்வே :




அறியாமையின் உச்சம்
உன்னிடம் நான் வந்தது
அதிலிலும் ஒரு மச்சம்
நீயே விலகி சென்றது

உயிர் போன பின்பு
எதற்காக தொழவேண்டும்
உண்மையே அறியாத - உன்னை நினைத்து
எதற்காக நான் அழவேண்டும் ?

- வை . நடராஜன்

வரதட்சனை


பல இடங்களில்
வசதிக்காக
மாப்பிளை விட்டார் கேட்கும்
பிச்சை ..
பல இடங்களில்
தன் வசதியை காட்ட
பெண் விட்டார் செய்யும்
விளம்பரம்

- வை . நடராஜன்

ஏன் இந்த நாடகம்







பருவ மழைக்கு காத்திருந்தான்
விவசாயி - நீ
பருவம் வந்த முதல் காத்திருக்கேன்
இந்த படுபாவி

ஜன்னல் ஓரம் நின்று
தினம் படிக்கிறாய் - எனை
பார்க்காதவள் போல்
ஏனடி நடிக்கிறாய் ?

வேண்டாம் என்றால்
வேண்டிய காதலை நிறுத்து கொள்வேன்
நீ வேண்டுமென்றே இப்படி
செய்தால் , நான் என்ன செய்வேன் ?

பார்க்கும் போது நடிக்கிறாய்
பார்கவில்லைஎனில் துடிக்கிறாய்
பார்க்காமல் நான் கடந்து விட்டால் - கோவத்தில்
உன் தம்பியை ஏனடி அடிக்கிறாய் ?

நான் விரும்பி பார்த்தல்
நீ பூமியை பார்ப்பாய் - நான்
திரும்பி விட்டால்
என்னை பார்ப்பாய்

காதலுக்கு கண்தான்
ஊடகம்
எத்தனை நாள் இந்த
நாடகம் ?

ஒரு ஈழத்தின் பெண்




என் வானின் மதி கூட
நெருப்பாக சுட
என் தோட்ட மலர் கூட
வாசங்கள் கெட
யான் வளர்த்த பசு
காம்பில் விடமாக வர
தேன் கலந்த கனியெல்லாம்
கைபட்டால் கெட


ஊன் கொண்ட
உயிர் கூட சுமையாக பட
யான் கண்ட உறவெல்லாம்
பகையாக வர
யாழ் இசையும் எனை
கண்டு அழுகின்றது
தோள் சாயிந்து அழ
நெஞ்சம் விழைகின்றது

அன்னத்தின் இரு
விழியும் அன்பாக
வெள்ளத்தின் தத்தளிக்கும்
கன்றாக
உள்ளத்தின் சுமையெல்லாம்
ஒன்றாக
உயிரோடு எனை வறுத்தி
கொன்றாக

வான் பார்த்த
வெளி களத்தில்
ஊர் பார்க்க
என் பெண்மையை
சேர் பட்ட மலராக
சேர்ந்து பலர் கெடுத்தார்கள்

உடல் வெந்த என்
கணவன் - துடி துடித்த
கை குழந்தை
மலர் எரிந்த
பெரும் கொடுமை
பலர் குடித்த
என் பெண்மை

ஈனத்தின் இழிவாக
வாழ்கின்றேன்
ஈழத்தில் பிறந்ததால்
வீழ்கின்றேன்

ஒரு சீதை உயிர் காக்க
ஊர் கூட்டி வந்த ராமா - இங்கே
ஓராயிரம் சீதைகளை சீரழித்தார்
எங்கே போனாய் ?

மான் மயில்கள் மா எருது
தேன் மலர்கள் பல வாழ
மீன் வாழ கூட நதி உண்டு
நான் வாழ வழி இல்லை

ஈழத்தில் நான் பிறந்தேன்
வேறென்ன பிழை செய்தேன் ?

மழை வெய்யில்
என்றென்றும் மேனியிலே
உடை அணிந்த
மிருகமாய் வேலியிலே
இன்பத்தை இது வரை
நான் காணவில்லை
எனை அழைக்க
காலனுக்கு ஏன் தோணவில்லை

எங்களுக்கு
மரணம் விடுதலை
பிழைத்தோம் பெரும்
பிழை ..

October 23, 2012

என்று விடியும்






சாப்பிட்ட இலையை
எடுத்த சிறுவனுக்கு
சரஸ்வதி பூஜை கிடையாது

உயிருள்ள சக்கரமாக
உணவுக்காக சுற்றுகிறான்
அயித பூஜைக்கு
அவனையும் படைத்தார்கள்

அவன் குப்பை தொட்டில்
போட்டது , நம் எச்சில் இலை
மட்டுமல்ல -
அவன் எதிர்காலத்தையும் தான்



October 22, 2012

உலக உண்மை




பலர்
எப்படி செலவு செய்வது
என்று தெரியாமல் அலைகின்றனர்
பலர்
செலவுக்கு என்ன செய்வது
என்று புரியாமல் அழுகின்றனர்

பணம் ,
மழையாக கொட்ட மறுக்கின்றது
அருவியாக கொட்டி தொலைக்கின்றது
மழை எங்கும் பொழியும்
அருவி ஒரே இடத்தில் தான் கொட்டும்

அழுவது அவமானம்




அந்த நன்றிகெட்ட நெஞ்சத்தை
நினைத்து அழுவும் போது
என் கண்ணீரில் கூட உப்பு இல்லை

கண்ணீர் கவலையின் வெகுமானம் - ஆயின்
உண்மையற்ற மனிதர்க்காக
அழுவது அவமானம் .

- வை . நடராஜன்

இன்றைய இந்தியாவில்




தேர்தல் என்பது யாதெனில் ....
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை
அணைத்து கத்திகளும் பட்டை
தீட்டி வைக்கப்படும்
விரும்பிய கத்தியை எடுத்து - மக்கள் தன்
வயிற்றில் குத்திகொள்ளும் சடங்கு .

- வை . நடராஜன்

ஒரு முட்டாள்





மரத்தை வெட்டி
மழைக்கு ஏங்கினான்

மனையை விற்று
மாட்டை வாங்கினான்

பாலுக்காக மாட்டை
விற்றான்

பாம்பின் சிலைக்கு
படையல் வைத்தான்

நேரில் வந்ததும்
அடித்தே கொன்றான்

காகிதம் வாங்க
கையை இழந்தான்

கழுதையை ஓட்ட
காகிதம் எறிந்தான்

கப்பலை கவிழ்க்க
கல்லை எடுத்தான்

கட்டிலை வாங்க
தூக்கத்தை தொலைத்தான்

காதலுக்காக
தற்கொலை செய்தான் .


- வை . நடராஜன்

October 19, 2012

இருக்கும் வரை

இருக்கும் வரை ஆயிரம் சண்டை
இறுமாப்பில் பேசாமல் உதறுவார்
இறந்த பின் காலை பிடித்து
பேசு பேசு என கதறுவார் .

- வை . நடராஜன்

எந்த மனிதனையும்





புலியும் மானும்
முயலும் மயிலும்
இதுவரை எந்த மனிதனையும்
நின்று ரசித்தது இல்லை - ஆனால்
நாம்தான் பெருமை பட்டு கொள்கிறோம்
உலகிலயே உயந்த இனம் என்று !!!

Written & photography

_ வை . நடராஜன்

தவறி விழுந்த தாரிகை :






தார் மேல் விழுந்த
தங்க சிலையே

தரைமேல் தவறிய
வெள்ளி நிலவே

பைக்கில் போன
பச்சை கிளியே

பாதையில் விழுந்த
பவள கொடியே

உன் மேனியிலே
ரத்தத்துளி

அந்த மேகத்திலே
கண்ணீர்த்துளி

வலியில் நீ துடித்த போது
ஆயிரம் அணுக்கள் வெடிதத்தடி

நீ விழுந்த இடத்திலே
நீர் தேக்கம் இருந்ததடி

உன் மேனியை கீறியதால் - சாலை
ஓயாமல் அழுததோ ?

October 17, 2012

புல் திண்ற புலி





ஒரு அடர்ந்த காடு ,  அன்று அழகிய காலை பனியில் நினைந்த புல்களை
அந்த புலி ரசித்து தின்று கொண்டு இருந்தது , அப்பொழுது அங்கே வந்த மற்றொரு புலி அதை
பார்த்து பெரும் அதிர்ச்சியும் கோவமும் அடைந்து அந்த புலியிடம் சென்று , ''அட பாவி என்ன செய்கிறாய் ? !!!
நம் இனத்தின் மானத்தையே வாங்கி விட்டாயே ...
மானிடர்கள் நம் குணத்தை வைத்து பெருமையாக பழமொழி கூட சொல்லுவார்கள் .
நீயோ இப்படி செய்கிறாய் .. இதை யாரேனும் பார்த்தல் நம் இனத்துக்கு பெரும்
அவமானம் .இதை பொறுமையாக கேட்டுகொண்டு இருந்த அந்த புலி ''
நண்பா என சொல்லிக்கொண்டு எழுந்து நின்றது அதின் முன்னங்கால் வலது பாதம் முற்றிலும் சிதைந்து இருந்தது .
என் பாதங்களை பார் ஒரு வேட்டையின் போது விபத்தில் இழந்து விட்டேன் .
சிலவாரங்களாக உணவு கிடைக்காமல் நடக்க இயலாமல் பெரும் துன்பத்தில்
இருந்தேன் . பசியின் கொடுமையில் வேட்டையாட முடியாத நிலையில் இருந்த சமயத்தில்
ஒரு துறவி என்னை பார்த்தார் .என் நிலையில் இறக்க பட்ட அவர் நான் புல்
இலைதழைகளை சாப்பிடும் குணத்தை தருகிறேன் நீ வருந்தாமல் இங்கேயே வாழு என்றார் .

நான் சொன்னேன் '' சுவாமி என்ன இது  ? என்னை போய் புல் உண்ண சொல்கிறிர்கள் ,
இது இழுக்கு அல்லவா ? அவர் சொன்னார் '' உணவில் இழுக்கு என்ன ? எல்லாம்
கிடைக்கும் என்பதால் தானே .. சைவம், அசைவம், பழையது, தாழ்ந்தது, என்றெல்லாம்
பாகு பாடு .. ஒரே பசிக்கு ஒரே உணவு என்ற நிலை அமைந்தால் கவுரவம் பார்த்து மடிந்து விடுவார்களா.. ?

தன்மானம் வேறு தலைகனம் வேறு .உங்களுக்கு புல் உண்ணும் வகையில் பல் இல்லை . அப்படியே உண்டாலும்
புல்லின் சக்தியால் உங்களால் வாழ இயலாது . மற்ற படி அதில் அவமானம் இல்லை
அகவே இந்த மலை அடிவாரத்தில் வாழும் எல்லா புலிகளும் புல் உண்டு வாழ
நான் வரம் தருகிறேன் '' என்று சொல்லிவிட்டு சென்று விட்டார் .
இதை கேட்ட இந்த புலியும் மிகவும் மகிழ்ச்சியில் இனி நானும்
வேட்டையாடி உடலை வருத்த போவதில்லை .என இரண்டும்
பல காலங்களாக அங்கேயே வாழ்ந்தன .இவைகளின் அகோர பசியினால் பெரும்பாலான
புல்களை புலிகள்மட்டும் திண்ண . அங்கே வாழ்ந்த ஒரு மான்கள் கூட்டம் மிகவும் கலக்கம் அடைந்தன ,
தன இனதிற்கு உனக்கு கிடைக்காமல் போக புலிகளை எதிர்க்கவும் சக்தி
இன்றி கவலையில் வாழ்ந்தன .அப்பொழுது அங்கே வந்த ஒரு மந்திரவாதி இவைகளில்
கவலைகளை அறிந்து  ''இனி அந்த புலிகளுக்கு புல் தின்னும் ஆற்றலும் மறையட்டும்
என சொல்லி சென்று விட்டார்'' .பின் அந்த காலிழந்த புலி வேட்டையாட முடியாமல்
புல்லும் செறிகாமல் பசியில் சில நாளில் மாண்டு போனது .


கதையின் கரு :

இந்த  சமுதாயம் இந்த  புலி , மந்திரவாதி என இருவரையும் கொண்டதாகும் .
உண்மையில் இயலாத இருந்த புலியை கண்டு சோம்பேறி ஆனா புலியை போன்ற மனிதர்களும் ,
சோம்பேறித்தனம் இயலாமைக்கும் வித்யாசம் பார்க்க தெரியாத மந்திரவாதி போல
சில மனிதர்கள் உணவு பதிலாக '' உழைத்து உன் '' என்ற வீண் உபதேசம்
பண்ணியும் காலம் கழிக்க .
இறுதியில் மடிவது என்னவோ அடி பட்ட புலி போல இயலாதவர்களே ..


- வை . நடராஜன் .

October 16, 2012

கடவுள் அழுகிறார்



புலியை படைத்தது மானை இழக்கிறேன்
புயலை படைத்தது மரத்தை இழக்கிறேன்
பாம்பை படைத்தது எலியை இழக்கிறேன்
பருந்தை படைத்தது பாம்பை இழக்கிறேன்
மட்டை படைத்தது புல்லை இழக்கிறேன்
மனிதனை படைத்தது எல்லாவற்றையும் இழக்கிறேன் .


written & photo Designed
by
- வை . நடராஜன்

கருப்பு சட்டை கறையாகி விட்டது




போலி மதவாதிகள்
எல்லா மதங்களிலும் உள்ளனர் - ஆனால்
போலி நாத்திகவாதிகள் இந்து
மதத்தை மட்டுமே பேசுவார்கள்

செவிகள் குறை என்றால்
இசையில் பிழை இல்லை
செய்தவன் பாவத்திற்கு - எந்த
இறைவனும் பொறுப்பில்லை

பகுத்தறிவு கடவுளை மறுக்கவே
மனிதனை இழிவு படுத்த அல்ல

அன்று தாழ்த்தப்பட்டோர்
நிலத்திலே ஆரியர்கள் களையாகி
வளச்சியை கெடுத்தனர்

பெரியார் .. களையெடுக்க சொன்னார் ,
ஆனால் இன்று களை எடுப்பதே
கலையாக்கி விட்டனர்
விவசாயம் பண்ணாமல்

அவர் மீண்டும் வந்தால் ..
கருப்பு சட்டை போலிகளை கண்டு
காவி சட்டைகளை கூட மன்னித்துவிடுவார் .

மாநிறம்தான் என்பினும் அவள் , ஒழுக்கத்தில் பேரழகி





மெட்டி போடும்
காலம் வரை
கட்டி வையடா காமத்தை
எட்டி பார்த்த இச்சையை
தட்டி அடக்கி சென்றுவிட்டால் .

தேகமும் உனக்கடா - இந்த
தேனின் சுவையும் உனக்கடா - ஆயினும்
மாலை இடும் நேரம் வரை
மஞ்சம் என்பது பிசக்கட

உள்ளதை கொஞ்சம்
சோதித்தாள் _ஆயினும்
ஒழுக்கத்தை நன்கு
போதித்தாள் .

October 13, 2012

பேய் அரசாண்டால்




மகளுக்கு அணிய
தங்கம் வேண்டி
மனையாளை விற்றுவிட்டனர்
முன்னேற வழிவேண்டி
முதலைகளை உள்ளே விட்டனர்

உள்நாட்டு வணிகனை
கல்லறையில் புதைத்து
வெளிநாட்டு பொருகளை
கொண்டு வந்தனர்

நாட்டை உயர்த்துமாம்
சொல்லி விட்டார் _ ஆயின்
எந்த நாடு என்பதை
மறந்து விட்டார் ..

வால்மார்ட் பொருள் எல்லாம்
வகை வகையாய் போகுதையா _ இங்கே
கடை வைத்துருந்த உடல் எல்லாம்
கட்டையிலே வேகுதையா .

மாட்டுக்கு புல் வேண்டி
மடியை நீர் விற்றுவிட்டால் ...
வீட்டுக்கு பால் வேண்டி
எங்கே போய் பிச்சை கேட்பீர் ?




கேலிசித்திரம் - நன்றி : திரு .பாலா

October 12, 2012

ஒரு சிறு கதை





எழுநூறு ஆண்டுகளுக்கு முன் , தமிழகத்தை பச்சையம்மா என்ற ஒரு அரசி
ஆட்சி செய்தார்கள் , மிகவும் கண்டிப்பான அவர்களை கண்டால் அரண்மனையே
அலறும் . ஒரு நாள் அரசவையில் ''மாதம் மும்மாரி பொழிகிறதா '' ? என்று  அரசி கேட்க .
ஒரு அமைச்சரின் பேரன் '' ஜென்னலை திறந்து பார்த்தல் தெரிய போகிறது
அதை விடுத்தது சும்மா இங்கே கேட்பது என்ன பயன் என்று விளையாட்டாக
முனுமுனுத்தான்'' . இதை ஒற்றன் கேட்டு அரசியிடம் சொல்ல அன்று இரவு
அமைச்சரின் இல்லத்தில் வந்த அரண்மனை சேவகர்கள் அமைச்சரிடம் ஒரு ஓலை
கொடுத்து விட்டு  அரசு குதிரையை மீட்டு சென்றார்கள் , அன்று முதல் அவர் கிராம
தலைவராக மாற்ற பட்டார் .

ஒரு நாள் அரசி அரண்மனை மாடத்தில் உலவிக்கொண்டு இருந்தார்கள்,
கிழே அரண்மனை வாயிலில் ஒரு அமைச்சர் தன் குதிரையை தடவி கொடுத்தப்படி
நின்று கொண்டு இருந்தார் . இதை கவனித்த அரசி அமைச்சரை அழைத்து
'' குதிரையிடம் என்ன பேசிக்கொண்டு இருந்திர்கள் ?  என கேட்டார்   .அமைச்சர் , ''அரசியே
குதிரையிடம் எவ்வாறு பேச முடியும் ? அப்படி பேசினாலும் அவைகளுக்கு புரியுமா என்று
வினவினார் , அதை கேட்டு அமைதியாக சென்று விட்டார் அரசி . மறுநாள் காலை
அமைச்சர் தன் வீட்டில் இருந்து அரண்மனை கிளம்ப வந்து பார்த்தல் அவர் குதிரையும்
பறிக்க பட்டு ஒரு ஓலை இருந்தது. அமைச்சர் அந்த ஓலையை பிரித்து கூட பார்க்க வில்லை
ஏனெனில் உள்ளே என்ன இருக்கும் என் அவர் தெரிந்து கொண்டார் ,


சில மாதங்கள் கழித்து , அரசி  அமைச்சர் மற்றும் படை பரிவாரங்களுடன்
நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டார் . ஒரு இடதில் ஒரு பிரம்மாண்டமான ஒரு
கட்டத்தை பார்த்த அரசி தன் அமைச்சரிடம் , அது என்ன கட்டிடம் என்று கேட்டார்
உலகமே வியக்கும் இந்த இடத்தை நம் அரசி தெரியாதவர் போலவே கேட்கிறார்
என நினைத்த அமைச்சர் , இருந்தும் பதில் சொல்லவில்லை எனில் பதவி போய் விடும்
என்ற பயத்தில் '' அது தான் தஞ்சை பெரியகோயில் '' என கூறினார் ,
மாமனார் ராஜா ராஜா சோழனால் கட்டப்பட்டது . என்றும் அவர் மாபெரும் அரசர் என்றும்
சொன்னார் . இதை கேட்ட அரசி என்னை விடவா என கேட்க ? ''சுதாரித்து கொண்ட
அமைச்சர் இல்லை அரசியே , ஆயினும் இனி வரும் காலங்களில் இந்த கோயிலுக்கு அடுத்த படியாக உங்கள்
 பெயரும் பெருமையாக பேசப்படும் என்று கூறினார் , அந்த பயணம் முடிந்து நாடு
திரும்பும் வரை அந்த கேள்வியை இன்னும் இரு அமைச்சர்களிடம் கேட்க
அவர்களும் அதே போல புகழ்ந்தார்கள் ,
அரண்மனை திரும்பியதும் அந்த மூன்று அமைச்சர்களும் ஒரு மண்டபத்தில்
பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்பொழுது தலைமை ஒற்றன் அங்கே பதற்றமாக
ஓடி வந்து
'' அமைச்சர்களே நீங்கள் அரசியார் கோவம் அடையும் படியாக
என்ன சொன்னீர் ?
ஒரு அமைச்சர் , என்ன ஆயிற்று ஒற்றா ?

தஞ்சை கோயிலுக்கு அடுத்த படியாக உங்கள்
பெயர் இருக்கும் என நாங்கள் மூவரும் சொல்லி விட்டோம்,
அரசியை இரண்டாம் இடதில் வைத்து புகழ்ந்தது தவறுதான் . என்ன ஆயுற்று , எங்கள் அமைச்சர்
பதவி போய் விட்டதா ? என கேட்க.

இல்லை அமைச்சர்களே '' தஞ்சை பெரிய கோயிலை அப்புற படுத்த அரசி உத்தரவு
விட்டு இருகிறாராம்'' என கூறினார் ,


பின் குறிப்பு :
இந்த காலகட்டத்தில் தான் பச்சோந்தியார் என்ற அரசரும் வாழ்ந்து வந்தார்
மக்கள் புரட்சியால் ஆட்சி இழந்த அவர் ராணியாரின் ஆட்சியில் மக்கள் படும் துயரத்தை
தன் மூக்குசளி என்ற ஓலை சுவடியில் எழுதி குளிர்காய்ந்து கொண்டு இருந்தார் .

முற்றும்

October 11, 2012

காமம்





கட்டிலிலே உள்ளம் மிருகமாகும்
கட்டி அணைத்த உடல் தெய்வமாகும்
தாகமும் வேகமும் தீர்ந்த பின்
தனி தனியே பிரிந்து மனிதன் ஆவோம்

பேராசை




பேராசை என்பது ...

தங்கவாத்தில் ஆரம்பித்து
ஈமு கோழி வரை தொடர்கிறது ,

பேராசை தூண்டி விட
அறியாமை துளிர்கிறது
ஆயிரம் முறை ஏமாந்தும்
அறிவு இன்னும் தூங்குகிறது .

அறியாமையும் பேராசையும்
அநியாயத்தின் பெற்றோர்கள்

- வை . நடராஜன்

October 10, 2012

அன்றும் !! இன்றும் !! தமிழகம் .




2006'ல் கருணாநிதி திருடமாட்டார்
என நம்பினோம்
2011'ல் ஜெயலலிதா திருத்தம் செய்வார்
என நம்பினோம்

ஆனால் ...

பாம்புக்கு பயந்து ஓடி
பாழும் கிணத்தில் விழுந்த கதையாக
திருட்டுக்கு பயந்து
இருட்டில் மாட்டிக்கொண்டோம் .




Photo courtesy : Google

October 9, 2012

அன்றொரு நாள் , நானும் !! நீயும் !!!




தனிமையில் நாமிருந்தோம்
தழுவத்தான் நீ இருந்தாய்
தாழிட்ட வீட்டினிலே
தாகத்தில் நாமிருந்தோம்

விளக்கு தான் அணைந்து விட
விதரதாபம் பிணைந்து வர
அருகினிலே நெருங்க நெருங்க
ஆசைகளோ பெருகி வர

அரை அடி தூரத்தில்
அச்சம் தான் அணை போட
வாய்ப்புதனை வீணாக்கி
வந்த வழி திரும்பிவிட்டேன்

இல்லம் போய் சேர்ந்தவுடன்
செல்லமாய் நீ சொன்னாய் .....

'' சுவர் தாண்டி வீடு வந்த
 திருட்டு பூனையே
 சுவையான பால் இருந்தும்
 பயந்து போனியே .. ''

நாணத்துடன் நான் சொன்னேன் ,

'' நீ வயதுக்கு வந்த வீணையடி - நானோ
வாசிக்க தெரியாத கேனையடி ...

October 8, 2012

உலக சர்வாதிகாரிகளும் !! இந்தியஅரசியல்வாதிகளும் ..




எந்த சர்வதிகார வரலாற்றிலும்
மக்கள் மடிவார்கள் இறுதியில்
சர்வதிகாரியும் மடிவான் .

ஆனால் இந்திய
ஜனநாயகத்தில் மட்டும் தான்
மக்கள் மட்டுமே மடிகிறார்கள்

ஒழுக்கமற்ற ஜனநாயகம்
இரக்கமற்ற சர்வதிகாரத்தை விட
கொடியது

- வை . நடராஜன்

இறைவா.

இறைவா...

புழுவாக புல்லாக
மலிவான மண்ணாக
எலியாக எறும்பாக
ஏர் பூட்டும் எருதாக
எதுவாக பிறப்பினும்
ஏற்று கொள்வேன் _ ஆயின் இந்த
இழிவான இந்தியாவில்
பிறந்திட வேண்டாம் ...


அறிவுரை

அறிவுரை :

நாம் சொல்லும் நேரத்தில்
வார்த்தை ஆறாக ஓடுகிறது
நாம் கேட்கும் நேரத்தில்
காது அணை போல மூடுகிறது

- வை . நடராஜன்

உண்மை


உண்மை :

-------------

கிடைக்கும் வரை

சிற்பமாய் தெரிந்தவள்

கிடைத்து விட்டால்

அற்பமாய் தோன்றுவாள்

அன்று புரியும்

கண்டது காதலா _ அல்ல

காமத்தின் தேடலா .... என்று .

- வை . நடராஜன்

அறிவற்ற தொண்டர்களும் !! அற்ப தலைவர்களும் !




காட்டுத்தேன் கசக்குமாம் தலைவர் சொன்னார்
கருந்தேள் கடிக்காதாம் தலைவர் சொன்னார்
பாட்டிசைக்கும் பன்றி இருக்காம் தலைவர் சொன்னார்
மாட்டுமடியில் மாங்காய் காய்க்கும்  தலைவர் சொன்னார்

இவை அனைத்தும் கண் பொத்தி கேட்குகொண்டோம் __எங்கள்
இனத்தலைவன் சொல்லியதால் ஏற்றுகொண்டோம்
தண்ணிரில் கலந்த பால் பிரியாது - என்
தலைவனுக்கு பொய் சொல்ல தெரியாது .

தலைவன் தலைமயிர் இழந்தவுடன் _ அவர்
தலைமுறையின் வால் பிடிப்போம்
விலையற்ற அடிமைபோல
விடியும் வரை கால் பிடிப்போம்

அறிவை வளர்க மறந்துவிட்டோம்
அடிமையாய் வாழ பிறந்துவிட்டோம்
அழகாக பேசுவார் உத்தமனாய்
அதை நம்பிதானே நாங்கள் கெட்டோம்

October 5, 2012

என்று தணியும் ! என்று விடியும் ?





படிக்காத திருடன்
பணத்தை கடத்துகிறான்
படிச்ச திருடன்
பள்ளிகூடம் நடத்துகிறான்.

அவன் கத்தியை வைத்து
மிரட்டுகிறான் பயந்தோம்
இவன் கல்வியை வைத்து
மிரட்டுகிறான் பணிந்தோம்
சுடுநீரில் புழுவாக நெளிந்தோம்
கேட்க கேட்க கொடுத்தே அழிந்தோம் .

கல்வியிலும் கலப்படம் நீதி இல்லை _ அந்த
கயவர்களை தட்டிகேட்க நாதி இல்லை
மாற்ற முடியும் என்பது வீண் பேச்சி
மாற வேண்டியது அரசின் மனசாட்சி.

என்று மடியும் கல்வியின் ஊனம்
என்று விடியும் பிள்ளைகளின் வானம் ?

- written & photo Designed
by
வை . நடராஜன்

October 4, 2012

ஓர் இளம் விதவையின் இதயரணம்




வாடாத பூமாலை ஒன்று _ எவரும்
சூடாமல் கிடக்கின்றது
வாழாமல் என் வாலிபம் _ சிறகொடிந்த
கிளியாக துடிக்கின்றது

என் மஞ்சம் துணையின்றி தனியாக இருக்க
வருடாத தேகங்கள் வலிகின்றதே
நெஞ்சத்தின் கனவெல்லாம் கரியாகி போக
மரிக்காமல் மரணத்தை தருகின்றதே


ஆசைகள் ஆவல்கள் எல்லாமே - அன்று
அவரோடு சேர்ந்து எரிகின்றது
அவமானம் அவப்பெயரும் என் வாழ்வின்
அடையாளமாய் இருக்கின்றது

நான் கண்ட கனவெல்லாம் கரியாகி
நினைவெல்லாம் நெருப்பாக சுடுகின்றது
தேன் கொண்ட மலர் தேர்காலில்
வலியோடு தானே மடிகின்றது

அதிர்ஷ்டம் இல்லாத அவமான சின்னத்தை
சமுதாயம் என் மீது கோர்க்கின்றது
அடுத்தவன் தொட்ட உடல்தானே என்று
ஆண் வர்க்கம் மட்டமாய் பார்க்கின்றது

வான் இழந்த நட்சத்திரம் 
வழி சேற்றில் கிடக்கின்றது
வழி இழந்த பச்சை கிளி
சிறு கூட்டில் துடிக்கின்றது


வெறுமையில் வாழ்க்கை
தனிமையில் கொடுமை
நீர் படா நிலமாய் வெடிகின்றது

அதிர்ஷ்டம் தான் இல்லாதவள்1
என பட்டம் கட்டி
அடி நெஞ்சின் ஆசையை
மறுக்கின்றது

இனிமையற்ற இளமை
எதற்கு இந்த கொடுமை
தனிமை வருத்தும் வாழ்வில்
எதற்கு இந்த இளமை

கொடிய இந்த வாழ்வில்
இனிமை தான் எங்கே ?
மடிய வேண்டும் நான்
மரணம் தான் எங்கே ......


- வை . நடராஜன்

October 2, 2012

மரம் வளர்வதே .. நாம் வாழத்தான்



பணம் காய்க்கும்
மரம் இங்கு ஏதுமில்லை _ ஆகவே
அதையெல்லாம் வேரறுத்து
பணம் பெற்றோம்.

பணம் காசு
மணி வைரம் என
அலைந்தோம் _ நாளை
பசி வந்து உணவின்றி
நாம் அழிவோம்.

ஆறறிவு வளர்ச்சி தான்
நிலவை தொட்டோம் _ அது
அளவுற்கு மீறி போய்தான்
நிலத்தை கெடுத்தோம்.

நீர் காற்று உணவின்றி
காலம் வரும் _ அன்று
நாம் பண்ண பாவமெல்லாம்
கண்ணில் வரும் .

- வை . நடராஜன்

அலுவலக அரசியல்வாதிகள்






உயர்ந்த பதவியில்
இருப்பவர் எல்லாம்
தெரிந்த ஞானி அல்ல

உயர பறக்கும்
குப்பைக்கு தான்
சிறகு தேவை இல்லை

கழுகை போல
காயிதமும் மேலே
பறக்கும் நன்று
காற்று நின்று
விட்டால் உண்மை
புரியும் அன்று .

அதிகாரம் இருப்பதினால்
ஆண்டவனும் இல்லை
அடியாட்கள் வேலை செய்ய
அலுவலகம் தேவை அல்ல .

மழையில் நனைந்த
ஆடையில் தான்
அழுத்தம் அதிகம் இருக்கும்
மனதில் கர்வம்
வந்து விடின் _ அழிவு
அன்று பிறக்கும்

உன் கிழே பணிபுரிவோர்
ஏளனமும் அல்ல _ அவர்
ஏறி வர திறமை உண்டு
வாய்ப்பு வரவில்லை

அடுத்தவரின் கால்
பிடித்தால் அடிமை போல
உழைப்பாய்_ நீங்கள்
அறிவை மட்டும்
நம்பிருந்தால் எங்கேயும்
பிழைப்பாய்

அடுத்தவரின் குடி கெடுத்து
வாழவதெல்லாம் வாழ்வா ? நீ
அடித்த பந்து போல் திரும்பும்
அன்று நீ வீழ்வாய் !

மேலே வளர வேண்டுமெனில்
அறிவை வளர்த்து கொள்க _ நீங்கள்
மேலே உயர்ந்து வளர்ந்து விட்டால்
அன்பை வளர்த்து கொள்க !

- வை . நடராஜன்

நேசியுங்கள் .. யாசிகாதீர்கள்





விரும்பினால் விருப்பம்
கேளுங்கள்
விலகினால் பிச்சை

கேட்காதீர்கள்

ஆயிரம் தான்
அழகு இருப்பினும்
ஆண்மையை அடகு
வைக்காதீர்

மரியாதையில் தொடங்கும்
காதல்
காமத்தில் முடியும்
மரியாதை அற்ற வாழ்க்கை
என்னத்தை கொடுக்கும் ?

நேசித்து வருவதன்றோ
காதல்
அதை யாசித்து கெஞ்சுவதில்
என்ன வாழ்க்கை ?


அன்பற்ற நெஞ்சிற்க்காக
நோகாதீர்
ஆசையினால் அடிபணிந்து
போகாதீர்


- வை . நடராஜன்

Stop cry .. Keep Try :






-----------------------
No moon at noon
no pain if blind
no man is true
no true will die
no lie will win
no win will stay
no stay in waves
no waves in well

no loss if faith
no faith will fail
no fail is shame
no shame if try
pain and loss will
make you cry
one day will win
until Keep try

- V.Natarajan