August 27, 2012

தமிழ்காடு :()





என் முதல் கதை . படித்து தங்கள் மேலான கருத்தை சொல்லவும் :::




ஒரு காட்டில் உள்ள சிறு குளத்தில் நீர் அருந்த ஒரு நன்கு வளந்த ஒரு மான் வந்தது .
அங்கே கரையோரம் இருந்த ஒரு குள்ளநரி அதை பார்த்தது .
மிகவும் பசியாக இருந்த அந்த நரியினால் வளர்ந்த மானிடம் தனியாக வேட்டையாட முடியாது ,
ஆகையால் இதை வளர்ந்த மிருகத்திடம் புடித்து கொடுத்தல் அவை திண்ண மிச்சத்தை நாம் திண்ணலாம் என்று
மனதுக்குள் நினைத்து மானிடம் சென்று '' மானே மானே நீ நீர் அருந்திய பின் உன்னை கொல்ல ஒரு சிங்க குடும்பமே அங்கே காத்துகொண்டு இருக்கிறது ஆகையால் இந்த நீரில் குதித்து அந்த கரையில் போய் விடு
அங்கே நிறையாக புற்கள் உள்ளது நீ நிம்மதியாக வாழலாம்" என்று கூறியது . இதை கேட்ட அந்த மான் நீரில் குதிக்க அங்கே இருந்த முதலை அந்த மானை
கடித்து கொன்றது . உதவி செய்த நரிக்கு  முதலை சிறு பங்கையும் தந்தது .

இதையெல்லாம் மேலே மரத்தில் இருந்து பார்த்து கொண்டு இருந்த காகம்
பக்கத்தில் இருந்த காகத்திடம் சொன்னது ...

 '' இதை போல தான் ஒவ்வொரு ஐந்து  வருடத்திற்கு ஒரு முறை
 இதை போன்ற செழித்த மான் சிங்கத்திடமோ அல்லது முதலை இடமோ மாட்டி மடிகிறது .  ஆனால் அது சிங்கத்தாலே இறக்க வேண்டுமா அல்ல முதலையாலே இறக்க வேண்டுமா என்பதை மறைமுகமாக
 யார் அதிக பங்கை தருகிறார்களோ அந்த மிருகத்திடம் கூட்டு வைக்கும்
 அந்த குள்ள நரி தான் முடிவு பண்ணும்'' .   என்று காக்கை சொல்லி முடித்து ...


இந்த கதையின் கரு :

அந்த காடு  _ தமிழ் நாடு

அந்த சிங்க குடும்பம்  _ திராவிட முன்னேற்றக் கழகம்

அந்த முதலை _அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

அந்த குள்ள நரி _ கூட்டணி  கட்சிகள்

மேலே இருந்து வேடிக்கை பார்க்கும் காகம் _ தேர்தல் ஆணையம்

அந்த பாவப்பட்ட மான்  _ தமிழக மக்கள்

சிலரின் காதல் கதை




வான் நிலவாய்
வளர்பிறையாய்
வளந்து வரும்
காதல் எல்லாம்
தேன்நிலவை பார்த்து விட்டால்
தேய்பிறையாய் தேய்ந்துவிடும்

கொஞ்சும் போது காதல் வார்த்தை
கோடியளவு கொட்டி வரும்
கொஞ்சம் காமம் பார்த்து விட்டால்
கோழி முட்டை போல் சுருங்கும்

மல்லிகையே மரிக்கொழுந்தே
மாசற்ற மதியழகே _ என
சொல்லி வந்த வார்த்தையெல்லாம்
அள்ளி அணைத்தால்
மறைந்து விடும்

தேன் கொஞ்சும் காதல் பல
தேரோட்டம் போலதான் _ அது
ஊர் சுற்றி முடிந்து விட்டால்
உள்ளே போய் தூங்கிவிடும்

விருப்பத்தில் ஒன்றாகி
விவகாரத்தில் பிரிபவர்கள் பலர்
மனம் வேறுப்பட்டு உள்ளதால்
பிரியவில்லை
உடல் ஒன்றுப்பட்டு புளித்தல்
பிரிகின்றனர்..

காதலில் காமம்
வாழ்கையில் முடியும்
காமம் மட்டும் என்றபின்
வழக்கிலே முடியும்

August 25, 2012

ராணுவ பயிற்சி









இந்திய அரசே .....

அக்னி ஏவுகணை ஆயிரம் இருப்பினும்
ஆண்மை என்பது கொஞ்சமும் இருக்கணம்

எங்கள் படகெல்லாம் பாடையாக
திரும்புகிறது _ எங்கள்
கடலோரம் தினம் தினம்
அழுகின்றது

நீங்களோ

கொன்று குவிக்கும் பாவிகளுக்கு
கொல்ல பயிற்சி கொடுக்குறீர்கள் _ உங்கள்
மனையுள் புகுந்து மகளை கெடுக்க வருபவனுக்கு
வயகரா வாங்கி தந்து வழி அனுப்பி வைப்பிர்ரா ????

August 24, 2012

மது மயக்கம்






மருத்துவமனை சென்று பாருங்கள்
பல ஆயிரம் மனிதர்கள் மரணத்தை கண்டு
போரடிக்ககொண்டு இருக்கிறார்கள்

மதுகடையோரம் சென்று பாருங்கள்
பல ஆயிரம் மனிதர்கள் மரணத்தை காண
நீராடிக்கொண்டு இருக்கிறார்கள் ..

உண்டதை எல்லாம் உரமாக்கி
உடல் வளர்க்கும் நம்
வயிறு
கண்டதையெல்லாம் போட்டு வைக்கும்
கழிவு நீர் தொட்டி அல்ல

களியாட்ட மதுவில் இன்று
சுவர்க்கம் தெரியும் _ நாளை
வலியோடு மடியும் போதுதான்
உண்மை புரியும்


http://www.facebook.com/Anuvakal

August 23, 2012

நாகரீக கோமாளிகள் :





ஐம்பதாயிரம் சம்பளம் என்பதால்
அம்மாவை மாற்ற தேவையில்லை
ஆங்கிலம் பேச தெரிந்தவர்கள் எல்லாம்
ஆகாயத்தில் இருந்து வந்தவரில்லை.

காலை வணக்கம் வார்த்தை எல்லாம்
கடல் கடந்து சென்றது
Good Morning என்ற வார்த்தையில் தான்
பல குடும்பம் விழிக்குது .

Fu*k என்ற வார்த்தை கூட
பெருமை பொங்க சொல்வர்..
நாங்கள் ஓ... என்று ஆரம்பித்தால் மட்டும்
ஒழுக்கம் இல்லாதவர் என்பர்.

அந்நிய உணவில் தனி ருசிதான்
அதில் ஒன்றும் தவறில்லை
ஆயின் வறண்ட ரொட்டியை
திண்ணக் கூட வறட்டு கவுரவம் என்ன?

பத்து வரியை படிக்க சொன்னால்
பல்லை இளித்து காட்டுவார்
ஆயினும் ஆங்கில நாளிதழ் வாங்கி
வைத்து அறிவாளி வேடம் போடுவார்.

முறுக்கும் சீடையும் கையில் தந்தால்
அலட்சியம் செய்து போவார்.
ஒரு  Lay'sஐ வாங்கி  கொண்டு
கோமான் போல திரிவார்..

நாகரீக பெண்கள் நடக்கும் விதத்தில்
அலப்பறை அதிகமாய் மின்னும்
நாலு வரி பேச தெரிந்துவிட்டால்
மனதில்  சேக்சுபியர்  என்று எண்ணம்.

பாரதி கவிதை பைந்தமிழ் நூலை
புரியாதவர் போல படிப்பார்..
Harry Potterஐ  வாங்கி வைத்து
மேதாவி போல நடிப்பார்..

நண்பா தோழா என்பதை
பழமை சாயம் பூசுவார்
Bro Dude என்பதை எல்லாம்
புரியாமலே பேசுவார்

அன்பெனும் அம்மா
Mummy  ஆனது
அழகிய தமிழ்மொழி
Dummyஆனது
ஆங்கிலம் என்பது
பெருமையானது.
நீங்கள் அலட்டிக்கொள்வது
மடமையானது.

அரசியலில் தான் விடுதலை பெற்றோம்
நம் அடிமை தனம் இன்னும் போகவில்லை
வளர்ச்சிக்கு தான் ஆங்கிலம்
அதை கவர்ச்சியாய் காட்டத் தேவையில்லை.

பெருமைக்கு பேசுவதை
குறைத்து கொள்ளுங்கள்
நம் பெருமை எல்லாம்
தமிழ்தான் உரைத்து சொல்லுங்கள் .

_ வை . நடராஜன்


http://www.facebook.com/Anuvakal





August 22, 2012

நன்றி மணி அண்ணே




கோஷம் போட கூட்டமில்லை
கூட்டம் போட்டு உயரவில்லை
பாலும் தேனும் ஊற்றவில்லை
பதவியை பிடிக்க நடிக்கவில்லை

தமிழன், தர்மன் என்றெல்லாம்
தானே தம்பட்டம் அடிக்கவில்லை
"தமிழா, விழிப்பாய்!!! " என்றெல்லாம்
தத்துவம் எதையும் பாடவில்லை

மன்றங்கள் ஒருநாள் ஒன்றாகி
மாநாடு மேடை போடவில்லை
அழகியை பிடித்த கையினிலே
ஆட்சியை பிடிப்பேன், கூறவில்லை

அப்பாவின் வால் பிடித்து வந்தவரில்லை
தப்பான வழி ஒன்னும் சொன்னவரில்லை
சிரிப்பு நடிகன்தானே என்று _ அரசும்
சிறப்பு எதையும் செய்யவில்லை

அழகோ ஒன்றும் பெரிதல்ல
 அகமோ உனக்கு சிறிதல்ல
சிரிப்பே மருந்தாய் என்றின்
சிரிப்பை கொடுத்த மருத்துவர்

சிறப்பாய் ஒன்றை செய்தாரய்யா
சிரிப்பை ஒன்றே கொடுத்தாரய்யா
நகைச்சுவை என்னும் அமுதூட்டி
மனச்சுமை கொஞ்சம் தீர்த்தாரய்யா

பல்லாண்டு திரையில் இருந்து
பலபேர் கவலை மறந்து
பாமரனையும் சிரிக்க வைத்த
மணி அண்ணே.. உங்கள்
நடிப்பழகும் நகைச்சுவையும்
தனி அண்ணே

சிரிப்பு என்பது மருந்தாகும் _ உங்களை
சிறப்பிப்பது மகத்துவம் ஆகும் _
நாளைய தலைமுறையும் மகிழுமே
நன்றிகள் பல கோடி கவுண்டரே ..

காலமும் பிரியாத நீங்கள் _ இந்த
கவிதையிலும் பிரியக் கூடாது _ ஆகவே
ஒருவருக்கு நன்றி போதும்
இருவருக்கும் பொதுவாய் போகும்..


http://www.facebook.com/Anuvakal

August 20, 2012

கண் தானம்






உயிரற்ற சரீரம்
சடலமாகும்
உணர்வற்ற உள்ளம்
சிதலமாகும்
வறியோருக்கு கைகொடுங்கள்
மனிதம்மாகும்
எரியும் முன் கண்கொடுங்கள்
புனிதம்மாகும்

கருவிலே வந்ததை
பொதுவிலே கொடுப்போம்
இருளிலே இருப்பவனை
இறந்தும் நாம் காப்போம்

மண் தின்னும் உடலுக்கு
கண் எதற்க்கு _ நீங்கள்
கண் கொடுத்தால் _ சொர்கம்தான்
பின் எதற்க்கு ?


தகனத்திற்கு முன்
தானம் செயுங்கள்
கடவுளை காணாத  கண்கள்
உங்களை கடவுளாய் ஆக்கும்


http://www.facebook.com/Anuvakal

மாவீரன்





ஆண்மை என்பது
விந்துவில் இல்லை
வீரத்தில் உள்ளது _ ஆகவே தான்
உன் கோடி கோடி சிங்கள  கூட்டத்தில்
தேடி பார்த்தும்
ஒரு வீரன் இல்லை


சூரியனும் வீரனும்
ஒன்றுதானே _ இன்று
மறைந்தாலும் மீண்டு
வரும் உண்மைதானே

லட்சம் நாய்கள்
ஒன்று சேர்ந்து
வஞ்சம் திர்த்தது எங்கள்
சிங்கத்தை

அவர்
சடலம் மண்ணில் அழிந்தாலும்
சாதனை சரிதிரத்தில்  இருக்குமடா
பக்கம் இருந்தவன்
உதவாமல் இருந்திருந்தால்
துக்கம் இந்நேரம் உன் வீட்டிலடா

பிறந்தவன் எல்லாம்
வீரன் அல்ல _ அண்ணன்
இழந்தது உடலைத்தான்
புகழினை அல்ல

உங்கள் இனத்திலே ஒரு
வேலுபிள்ளை வந்து விட்டால்
நாங்கள் ஈழத்தையே
விட்டு எங்கவோ போய்விடுவோம்

ஆனால்
ஆயிரம் ஆண்டானாலும்
நாய்கள் கூட்டத்திலே
புலிகள் பிறக்காதே .


ஆண்மகன் பக்கம்
நிற்க அருகதை உனக்கில்லை
அகவேதான் புகைப்படத்திலும்
இடைவெளி வைத்தேன்..


http://www.facebook.com/Anuvakal

இணைவோம் வா இனியவளே






இனிமை இருந்த போதுதான்
இதழ்கள் சிரித்தன _ எந்தன்
இதயம் அழுதபோதுதானே
தனிமை உணர்ந்தன

மேகம் கொஞ்சும் மலையின்
மீது வேலி என்ன தேவை _ உன்
மேனி கொஞ்சும் உடைகளாக
மாற வரங்கள் தேவை

வானம் பொழியும் மழையானாலும்
உன் தோளில் சிதறனம் _ அந்த
வறண்ட நிலத்தின் மன்னனாலும்
உன் காலில் படரணம்

நெருப்பிலாமல் இரும்பில் கூட
உருவமில்லையே _ உந்தன்
நினைவில்லாத எந்தன் பருவம்
இனிமை இல்லையே

நீ தொட்ட இடமெல்லாம்
இன்று கூட சிலிர்கிறது
நீர் பட்ட பாறை போல
இதயம் கூட வழுக்கிறது

ஒளியின்றி நிழற்கூட
இல்லேயே நிலவே _ உந்தன்
உறவின்றி உயிர்கூட
வேண்டாம் மலரே


பனி கொஞ்சும் மலர் இதழிலில்
இடமுள்ளது _ உந்தன் மடி
சாய்ந்த பின் மலர் கூட
சுடுகின்றது

கடமைக்கு கல்யாணம்
செய்யாதே _ உன்
உடமைக்கு உயிர்
உண்டு மறக்காதே

பெற்றோரின் நெஞ்சத்தை
உருமாற்றுவோம் _ நாம்
பேணிவந்த காதலை
உரமாக்குவோம்

உற்றோரும் ஊர் கூட
கைகோறுவோம் _ நாம்
கண்ட அன்பினை
மெய்கூறுவோம்

வானவில்லே போனால்
கூட மீண்டும் கிட்டும் _ நம்
வாழ்கையில் வரும் வாய்ப்புகள்
ஒருமுறை மட்டும்



Photo courtesy : Mr Martin Don

August 19, 2012

இன்றைய காங்கிரஸ்








கோமணத்தையும் திருடும் _ இந்த
கேடுகெட்ட காங்கிரசுக்கு
கோகினூர் வைரம் திருடிய
அந்நியனே மேலடா


பிணத்தை திண்ணும் கழுகைப்போல
பணத்தை திண்ணும் மட்டமான
சதிகார கூட்டத்திற்கு
அதிகாரத்தை கொடுத்து
பாவம் செய்து விட்டோம்மடா
பதவி தந்து கெட்டோம்மடா


கொல்லி வைக்க வாரிசை
பெற்றெடுக்கும் நாட்டிலே
கொள்ளை அடிக்க வாரிசை
பெற்றெடுத்த குடும்பம்மடா

வல்லவரே நல்லவரே
வாங்க மாமா நேரு _ உங்கள்
வாரிசுகளின் கேவலத்தை
வந்து இங்கே பாரு

ஒருமுறையா இருமுறையா
யாதென சொல்ல _ உங்கள்
பரம்பரையே திருடுதையா
யாரிடம் சொல்ல

விவசாயிகள் பல பேரை
தூக்கில் போட்டு ரசித்தான்
வீடு வந்து கொன்றவனை
விருந்து வைத்து உபசரித்தான்

படைகள் அனுப்பி கொன்றான்
பசியால் வறுமை தந்தான்
வடகிழக்கை அடிமை படுத்தி
வயறு முட்ட திண்ணான்

கார்மேகம் வந்து விட்டால்
கடும் வெப்பம் இருக்காது
ஊரெல்லாம் கூடாமல்
தேரோட்டம் சிறக்காது

கல் எடுத்து அடிக்கும் வரை
தண்ணிர் தான் கலங்காது
காங்கிரசு தான் இருக்கும் வரை
நம் நாடு வெளங்காது

கையில் கறை
காங்கிரஸ் பிழை
இனிமேலும் நம்பாதே
இடமளித்து வெம்பாதே

சாக்கடையில் இருந்து கொண்டே
குளித்தால் அழுக்கு போகாதே
சதிகார கூட்டத்திடம்
நாட்டை கொடுத்து நோகாதே

_ வை . நடராஜன்

August 17, 2012

மரணம்





வெளியே நடக்கும் மரண செய்தி
செவிகள் வரைக்கும் ஒலிக்கும்
வேண்டியவரின் மரணம் மட்டும்
இதயம் சென்று வலிக்கும்

உத்தமனே போவதேனோ _ என
ஊரே அழுவ வேண்டும் _ உன்
உயர்ந்த வாழ்வை நினைத்து அவர்
உள்ளம் தொழுவ வேண்டும்

உத்தமனாய் இறந்தவரின் உடலை
மண்ணு தின்னும் _ அந்த
உயர்ந்தவரின் புகழை மட்டும்
உலகம் என்றும் என்னும்

கையில் கொஞ்சம் பணமிருந்தால்
மரணத்தை சற்று கடத்தலாம்
கருணை உண்மை நெஞ்சிருந்தால்
மறைந்த பின்பும் வாழலாம்

எதனை நீ பெற்றாலும்
போகும் போது தனியே
எதனை நீ கொடுத்தாயோ _அதுவே
கூட வரும் துணையே

பதவி பணத்தில் திளைத்த போதும்
பயணம் ஒரு நாள் முடியும்
உதவி செய்த உள்ளதைத்தான்
உலகம் நெஞ்சில் பதியும்

உதவி உதவி என்பதெல்லாம்
பணதில் மட்டுமில்லை _ ஊர்
ஓரத்திலே ஒரு மரத்தை
நடுங்கள் அதுக்கு ஈடே இல்லை

வந்தவர் பலர் சென்றவர் பலர்
உலகம் நினைக்க மறுக்கும்
சொந்தங்களையும் தாண்டி உதவும்
உத்தமனைதான் நினைக்கும்

கோடிகளை கொட்டி நீ
வள்ளலாக வேண்டாம் _ தினம்
ஒரு ஏழைக்கு நீ உணவளித்தால்
கடவுள் கூட வேண்டாம்

உன் பணத்தை பார்த்து
புழுவை போல நெளியும்
கூட்டம் வேண்டாம் _ உன்
பயணம் போது கடைசி வரை
வந்து அழுவார் போதும்

காமம் காசு பதவி எல்லாம்
இருக்கும் வரை தொடரும் _ உன்
கருணை தந்த புகழ் மட்டும்
இறந்த பின்னும் வளரும்

தினம் ஒரு உதவி
வனம் ஒன்றில் மரம்
போதும் இந்த உலகில்
போன பின்பும் வாழ்வீர்

August 14, 2012

ஏனடி இப்படி பிறந்தாய்




அங்கவையே அற்புதமே
அழகான அகல் விளக்கே
தங்க வயல் கதிரறுத்து
கட்டி வைத்த பொன் உடம்பே

உன் கண்ணை நான் பார்த்தேன்
சுவர்க்கம் தான் தெரிந்ததடி
கழுத்தோரம் பார்த்தேன் நெஞ்சம்
கற்பூரம் போல் எரிந்ததடி

உன் இமை போல் என்
இளமை வில்லாக வளைந்ததடி
உன் இதழை ருசிக்கத்தான்
தேனீக்கள் அலைந்ததடி

நீ குடையின்றி மழை நினைந்து
வரும்போது பார்த்தேனடி
அப்போது மழை இருந்தும்
உடல் எல்லாம் வேர்த்தேனடி

எண்ணங்கள் எல்லாமே
உன் நினைவில் இருக்குதடி
உன் கன்னங்கள் தீண்ட வேண்டும்
என் இதழோ துடிக்குதடி _

நீ நகம் கடித்த அழகை கண்டு
நரம்பெல்லாம் முறுகுதடி _ உன்
பல்லழகை கண்ட அந்த
நகம் கூட உருகுதடி

நீ மொருவத்தல் தின்ற
போது ஒரு சத்தம் வருகிறதடி
என் ஒரு கோடி உயிரணுவும்
அதை கேட்டு உருகிறதடி

பாராமல் எனை கடந்து
ஓர விழியில் பார்த்தாயடி _ இந்த
பாரெங்கும் கிடைகாத
பூவாக பூத்தாயடி

உன் இதழ் பட்ட தேனிர் கோப்பை
இறுமாப்பில் சிரிக்குதடி _ அவ்விடம்
பட்ட துணி கூட என்
கண்ணை பறிக்குதடி

தோழிகள் புடை சூழ _ உன்
முகமோ தெரிந்ததடி
கோழிகள் கூட்டத்தில்
கோல மயில் இருந்ததடி

கண்ணழகும் கழுதலகும்
கண் கொட்ட பார்க்குமடி
முன்னழகும் பின்னழகும்
சிலை கூட தோற்க்குமடி

ஐயோ என் எண்ணத்தை உன்
இடையோ கெடுக்குதடி _ உன் அழகோ
எனை வறுத்து
என் உயிரை எடுக்குதடி



August 12, 2012

இப்படியும் மனிதர்கள்








வஞ்சனை நிறைந்த உலகமடா _ நெஞ்சில்
வஞ்சனை என்றும் உலவுமடா
செய்தது ஆயிரம் நன்மைகள் -என்பினும்
சென்றபின் செருக்கிலே இகழுமடா

கண்களில் நீரோ கரையுமடா -அவர்
கனிந்த சொல் நெஞ்சில் உரையுமடா
தொடுப்பது எல்லாம் பொய்மையடா-அவர்
நடப்பது எல்லாம் நடிப்பதடா

நெஞ்சமோ நஞ்சாய் இருக்குமடா - ஆனால்
சொல்பவை மட்டும் இனிக்குமடா
வஞ்சனை ஆயிரம் பேசினும் -நீ
வந்தபின் வாயாலே புகழுமடா.

செல்வங்கள் வந்ததும் சேருவார்- அவை
செல்லும் என அறிந்ததும் மாறுவார்
உழைத்தது நீ என்று பேசுவார்- கொஞ்சம்
தாழ்ந்தால் அண்டிபிழைத்ததால் போனது
என்று ஏசுவார்

வாழ்வதை கண்டால் எரியுமடா- அவன்
வீழ்ந்ததும் நெஞ்சம் குளிருமடா
தான் கோடிகள் கொட்டி வாழ்ந்தாலும்
மற்றவன் கோவணம் வாங்கினும் பொறுக்காதடா.

போலியாய் வாழ்விலே இருப்பானடா- மற்றவர்
போற்றனும் என்று தான் நினைப்பானடா
உண்டது காஞ்சி தான் என்றாயினும்
கையில் நெய்யிட்டு காட்டுவானடா.


ஊருக்கு ஆயிரம் உபதேசம்
உண்மையில் அகத்திலே பொய்வேஷம்
தான் கரமெல்லாம் கறையாக இருப்பீனும்
மற்றவர் காலிலே கறை என்று உபதேசம்

பேருக்கு திருமணம் செல்வாரடா _ அங்கே
போய் வந்து ஆயிரம் சொல்வாரட _ பெண்ணுக்கு
மூக்கு என்று எடுபாரடா இறுதியில்
பாக்குதான் பத்தவில்லை என முடிபாரடா


பேரு வர படிப்பதை மறந்தாரடா _ சும்மா
பேருக்கு படிபாதாய் இருந்தரடா _ வியற்றிலே
வறுமை தான் வாடும்போடும் _ வாயிலே
வசதியாய் காட்டுவாரடா

பொய் சொன்னால் பிடிகாது
என்பாரடா _ அதுவே அவர்
சொல்லும் பொய் என்று
உணரதவரடா

சாதனையால் பெயர் எடுக்க
வேண்டாமடா _ இத்தனை
சாத்தானையும் சமாளித்து
வாழ்ந்தாலே போதுமடா  ..



August 8, 2012

தமிழன் எப்படி ஏமாந்தான்









வானம் போன்று
உயர்ந்த மொழி
மானம் போற்றும்
மரத்தகுடி

தேனும் பாலும்
கலந்த மொழி _ எங்கள்
தேகம் எல்லாம்
கலந்த மொழி

வீரம் ஞானம்
நிறைந்த குடி
ஈரம் நெஞ்சில்
இளகுமடி

திராவிடன் என்ற
சாயம் பூசி _ எங்கள்
தமிழெனும் முகத்தை
இழந்தோமடி

திராவிட தெலுங்கனை
கண்டதுண்டா _ நான்
திராவிடன் என்றவன்
சொன்னதுண்டா ?

கேரளவன் சொன்னதை
கேட்டதுண்டா _ கன்னடன்
சொன்னதை கண்டதுண்டா ?

எங்களை மட்டும்
திராவிட மாயையில்
மயக்கிய உங்களுக்கு
மதியும் உண்டா

சிலர் தமிழ் பேசும்
அழகில் மயங்கி
தலைவன் என்றோம்
வீடுவந்த கள்வனுக்கு
விருந்தினை வைத்தோம்

தமிழை வளர்த்த பெரியவர்களை
தெருவில் வைத்தோம்
தமிழை வைத்து வளந்தவர்களை
பதவியில் வைத்தோம்

படம் பார்த்தே பாவத்திலே
பாதியை செய்தோம் _ தன்
அகம் காட்டிய அழகிக்கெல்லாம்
ஆலயம் செய்தோம்

தம் அடிக்கும் நடிகரை எல்லாம்
தலைவனாய் வைத்தோம் _ நம்
தமிழ் காக்க உழைத்தவர்களை
தெருவிலே வைத்தோம்

பொழுதுபோக்கு திரைபடத்தை
பொதுவிலே வைத்தோம் _ அதை
போழுதோறம் பேசியே
நேரத்தை கெடுத்தோம்

கூத்தாடும் நடிகரை எல்லாம்
கோயிலில் வைத்தோம் _ சிலர்
கெடுததெல்லாம் பத்தாது என்று
கோட்டையில் வைத்தோம்

உழைத்தவர் பலர் உண்மையிலே
ஊருக்குள் இருக்க - நடித்தால் போதும்
நாட்டை ஆள வா
என அழைப்போம்


படிக்கும் நல் பழக்கதினை
பரனையில் வைத்தோம்
குடிபதையும் எடுபதையும்
பொதுவிலே வைத்தோம்

வெளுப்பு நிற சாயம்
வாங்கி விட்டிலே வைத்தோம்
கருப்பு தான் தமிழன் நிறம் _ என்ற
உண்மையை தைத்தோம்

அலுவலகத்தில் தமிழை
பேச அசிங்கம் கொள்வோம்
பேசும் ஆங்கிலத்தில் தவறு
என்பினும் ''ஆ''வேன ரசிப்போம்

தேசிய ஒருமைப்பாடு என
உரைத்து சொல்வார் _ நாம்
தேவைக்கென தண்ணி கேட்டால்
முறைத்து கொள்வார்

அடிப்பதை எல்லாம் தாங்கு
என டெல்லி சொல்லும்
நாம் அனைவருமே இந்தியன்
என காரணம் சொல்லும்

நதியெல்லாம் ஒன்றாக்கு
தேசியம் ஓட்டும் _ இல்லை
நம் தேசிய பற்று எல்லாம்
கிரிக்கெட்டில் மட்டும்



தமிழா

நடிகன் வெறும் நடிகன்தான்
தெரிந்து கொள்க _ நடிப்பு
நாடாள தகுதி அல்ல
புரிந்து கொள்க

கருப்பு வெறும் நிறம்தான்
தெரிந்து கொள்க _ அதை
அவமானம் என்பவனின்
முகத்தில் உமிழ்க

தேவை போது ஆங்கிலம்
தவறுமில்லை _ ஆனால்
தேகமெல்லாம் தமிழ் ரத்தம்
நினைவில் கொள்க

நாம் ஏமாந்த கதையெல்லாம்
ஆவணம் செய்வோம் _ நம்
தலைமுறைக்கு அறிவூட்டி _வரும்
ஆபத்தை கொய்வோம்



Photo courtesy : Mr Martin Don

August 5, 2012

மறுமணம் பாவமல்ல





மறுமணம் என்பது
மாபெரும் தவறல்ல
மாற்றான் கை பட்டதால்
பெண் ஒன்றும் இழிவல்ல

பெண்மை என்ற சொல்
உடல் சார்ந்த ஒன்றுமில்லை
உள்ளன்பு உயர் தியாகம்
இவை இன்றி வேறில்லை

அவமானம் என்றல்ல
அதில் தவறு ஒன்றுமில்லை
தன்மானம் காப்பதற்கு
தனியானால் தவறில்லை

மஞ்சள் கயறு கட்டி விட்டு
மாடு போல நடத்துபவனை
நெஞ்சை ஏறி மிதித்து
மீண்டு வந்தால் பாவமில்லை


நாங்கள்

கட்டிலினை அலங்கரிக்கும்
பொருளுமில்லை _ நீங்கள்
காமத்தில் விளையாடும்
பொம்மை இல்லை
சமுதாயம் தூற்றும் என
அஞ்சி கொண்டு _ நாங்கள்
சாகும் வரை உரிமை இழக்க
அடிமை இல்லை

உள்ளத்தின் உணர்ச்சிகளை
புரியாமல் _ வெறும்
உடல் தின்னும் மிருகத்தை
கட்டி கொண்டு

பண்பாடு கலாசாரம் என்று
சொல்லி கொண்டு _ நாங்கள்
படும்பாடை சரி செய்யும்
சமுதாயமே ..

வந்து விட்டு உண்று விட்டு
சென்று விடுவீர் _ எங்கள்
வாழ்க்கை வீணாய் போய்விட்டால்
நீயா தருவீர் ?

காமத்தில் மட்டும்தான்
ஆண்களின் பங்கு _ நாங்கள்
காலமும் செய்ய இங்கு
ஆயிரம் உண்டு

மெட்டி போட்டு
மேளம் தட்டி
மேடை மீது
தாலி கட்டி
கையை பிடித்தவன்
கயவன் என்றால்
நானா பொறுப்பு ?

முதல் வாழ்க்கை முறிவதல்
பாவமுமல்ல _ அந்த
பாவி தொட்ட உடல்
என்பதால் கேவலமல்ல

மனம் பார்த்து மணம்
கொள்பவன் ஆண்களின் கூட்டம்
மறுமணம்  ஆயினும்  கை பிடிப்பவன்
ஆண்டவன் தோற்றம்

திருமணம் தோற்பதால்
வாழ்க்கை  ஒன்றும் இருளல்ல
மறுமணத்தை தேடும் பெண்
மட்டமான பொருளல்ல


நாங்கள் வாழ்வில்
தடுக்கி தான் போனாம்
தவறி ஒன்னும் போகவில்லை


.......................................................
Photo courtesy : Mr A.Balamurali


நட்பின்றி அமையா ..





பெற்றோரே பார்க்காத
மனிதரும் பலர் உண்டு
உற்றோரும் உடன் பிறப்பும்
இல்லாதோர் பலர் இங்கு

பற்றின்றி வாழ்க்கை துணை
இல்லாதோர் கூட உண்டு
நட்றொரு நட்புதான்
இல்லாதோர்  யாரிங்கு ?

பாதையும் ஓடினால்
பயணம் தான் முடியுமா
பார் நின்று விட்டாலோ
மறு பொழுது விடியுமா

கடல் நீரை கொடுக்காமல்
கருமேகம் பிறக்குமா
நட்பொன்று இல்லாதா நம்
வாழ்க்கை சிறக்குமா ?

அழும்போது தோள்தட்டி
மனம் தேற்றுவான் _ என்னை
அனுதினமும் வழி காட்டி
திறன் ஏற்றுவான்

'சந்தோஷ தருணத்தில் எனை
மறந்தாலும் _ நான் அழும்போது
என்னை  அழைப்பாய் ..
என கூறுவான்

வென்று விட்டால் உன் கூட
நிழல் போல காதல் வரும்
தோற்று போகும் காலதிலும்
நிஜம் அங்கு நட்பாய் வரும்


கடல் சேரா நதி ஒன்று
எங்கும் இல்லை
கவி பாடா கம்பனுக்கு
பெருமை இல்லை

காதல்தனை நினைக்காத
பருவம் இல்லை
நட்பின்றி மாண்டவர்
எவரும் இல்லை

நன் பகலில் இருளுக்கு
வேலை இல்லை
நண்பர்கள் இருக்கும் வரை
சோகம் இல்லை

_ வை . நடராஜன்

August 3, 2012

பிரிதலின் புரிதல் என்ன ?





 என் வாழ்க்கை உன்னோடு
இதழ் வருடி சொன்னாய்
தோல் மீது தலை சாய்ந்து
துணை நீதான் என்றாய்
தலைக்கோதி மடி சாய்ந்து
தாய்போல என்றாய்
பிழை என்ன செய்தேன் ?
பிறிந்தின்று சென்றாய் .

உன் காதல் வார்தைகள்
காற்றோடு போச்சி
உன் கன்ன முத்தங்கள்
களவாகி போச்சி
உன் காதல் பரிசு வெறும்
பொளுளாகி போச்சி
உன் மீது என் காதல்
பொருளின்றி போச்சி

மழை சற்று நின்றாலும்
குளிர் அங்கே இருக்கும்
மரம் சற்று சாய்ந்தாலும்
நிழல் ஒன்று இருக்கும்
பிறை மூடி போனாலும்
நிலவங்கு இருக்கும்
பிரிந்தெங்கு சென்றாலும்
நினைவிங்கு இருக்கும்

மலை ஒன்று இருந்தாலே
பனி அங்கு கூடும்
மழை சற்று பொய்த்தாலும்
நதி எங்கே ஓடும் ?
இசை ஒன்றை கேட்டாலே
இதழ் கூட பாடும்
இதயத்தில் ரணம் என்றில்
இமை எங்கே மூடும் ?

கடல் ஒன்று இல்லாமல்
கரை எங்கும் இல்லை
உடல் ஒன்று இல்லாமல்
உயிர் ஒன்று இல்லை
மலர் வண்டு இல்லாமல்
மலை தேனும் இல்லை
மணமாகி போனாலும்
மனம் மறப்பதில்லை