August 14, 2012

ஏனடி இப்படி பிறந்தாய்




அங்கவையே அற்புதமே
அழகான அகல் விளக்கே
தங்க வயல் கதிரறுத்து
கட்டி வைத்த பொன் உடம்பே

உன் கண்ணை நான் பார்த்தேன்
சுவர்க்கம் தான் தெரிந்ததடி
கழுத்தோரம் பார்த்தேன் நெஞ்சம்
கற்பூரம் போல் எரிந்ததடி

உன் இமை போல் என்
இளமை வில்லாக வளைந்ததடி
உன் இதழை ருசிக்கத்தான்
தேனீக்கள் அலைந்ததடி

நீ குடையின்றி மழை நினைந்து
வரும்போது பார்த்தேனடி
அப்போது மழை இருந்தும்
உடல் எல்லாம் வேர்த்தேனடி

எண்ணங்கள் எல்லாமே
உன் நினைவில் இருக்குதடி
உன் கன்னங்கள் தீண்ட வேண்டும்
என் இதழோ துடிக்குதடி _

நீ நகம் கடித்த அழகை கண்டு
நரம்பெல்லாம் முறுகுதடி _ உன்
பல்லழகை கண்ட அந்த
நகம் கூட உருகுதடி

நீ மொருவத்தல் தின்ற
போது ஒரு சத்தம் வருகிறதடி
என் ஒரு கோடி உயிரணுவும்
அதை கேட்டு உருகிறதடி

பாராமல் எனை கடந்து
ஓர விழியில் பார்த்தாயடி _ இந்த
பாரெங்கும் கிடைகாத
பூவாக பூத்தாயடி

உன் இதழ் பட்ட தேனிர் கோப்பை
இறுமாப்பில் சிரிக்குதடி _ அவ்விடம்
பட்ட துணி கூட என்
கண்ணை பறிக்குதடி

தோழிகள் புடை சூழ _ உன்
முகமோ தெரிந்ததடி
கோழிகள் கூட்டத்தில்
கோல மயில் இருந்ததடி

கண்ணழகும் கழுதலகும்
கண் கொட்ட பார்க்குமடி
முன்னழகும் பின்னழகும்
சிலை கூட தோற்க்குமடி

ஐயோ என் எண்ணத்தை உன்
இடையோ கெடுக்குதடி _ உன் அழகோ
எனை வறுத்து
என் உயிரை எடுக்குதடி



No comments:

Post a Comment