July 30, 2012

கல்வி வியாபாரம் ! பாவம் பிள்ளைகள்




பள்ளி குழந்தைகள் பாடம் 
படிக்குது _ வாங்கும்
மதிப்பெண்ணே  வாழ்க்கை ஆனது
கல்வி தொழில்சாலை காசில்
மெதக்குது _ கண்டுக்காம அரசு
கண்ணை மூடுது

புள்ளைங்க

பெத்தவங்க பெருமைக்கு
பாவம் படிக்குது
பள்ளி வியாபாரத்துல
விளம்பரம் ஆனது
சொல்லி கொள்ள இன்னும் 
என்ன இருக்குது _ இந்த
கல்வி முறை வாழ்வை
கெடுக்குது

இந்த சமுதாயம்
இன்னும்  கொடுமைங்க
அரசாங்க வேலைக்கு  
ஈயாக மெய்குது _ ஆனா 
அரசாங்க பள்ளியை
நோயாக பாக்குது

மாலை விளையாட்டு
மலை ஏறி போயாச்சி
மாமா பாட்டி சொந்தங்கள்
புகை படத்தில் புதைந்தாச்சி

கல்யாண பத்திரிகையில
கல்வி தகுதி போட _
கை சூப்பும் காலத்திலே 
கழுதையா மாறியாச்சி

என்ன நடக்குது
ஒன்னும் புரியல
என்ன புடிச்சதோ
அதை படிக்கலை

காதல் இசை ஆட்டம்
ஒன்னும் கிடைக்கல
கணக்கு பாடம் மட்டும்
வாழ்க்கை என்றல்லை

ஓடும் குதிரையாய்
வாழ்க்கை ஓடுது
மேல உக்காந்து
பள்ளி விரட்டுது

பசங்க ஓடி
முன்னாடி வந்துட்ட
பாராட்டு எல்லாமே
பள்ளிக்கு போகுது
முன்னாடி வந்தவன்
மூஞ்சை காட்டி
அடுத்த வருஷத்துக்கு
ஆளை தேடுது

மத்தவன் முன்னாடி
பெருமை பேசிக்க
பெத்தவன் புத்திக்கு
இன்னும் உறைக்கல

என்ன புடிக்குது
என்னை கேட்கல
என்ன புடிச்சதோ
அதை கொடுக்கலை

ஆட்டு மந்தையிலே
சேத்து விட்டாச்சி
அங்கே படிச்சிதான்
வாழ்க்கை வீணாச்சி 

அரசாங்கம் நேர்மை 
தரிசாக போயாச்சி
வேடிக்கை பார்த்தே 
வேதனை தந்தாச்சி

கல்வியை மொத்தமா
வெளியேதான் வித்தாச்சி
அவன் கிட்ட போனதும்
கோமணம் தான் சொத்தாச்சி 

ஆயிரம் படிச்சாலும்
வாழ்க்கை இனிக்கல 
காசா கொட்டுது
வாழ புடிக்கல 

பள்ளி கூடத்துல
வாழ்கையை படிக்கலை 
பணமா கொட்டுது _ ஆனா
வாழ தெரியல 

July 28, 2012

காமம்




ஆசை தான் அதிகமானால்
அங்கம் தான் புனிதமாகும்
தேகங்கள் கூடளிலே
மோகத்தால் மூச்சடைக்கும்

ஆடையே பாரமாக
அச்சமோ தூரம் போக
அணைத்தவளே ஆடையாக _  அவள்
இதழ் என்னை ஈரம்மாக்க

எங்கள்

நிர்வாண கோலத்திலே
நிலவுகே மோகம் வரும்
காலை பகலவன் பார்த்தல்
அவனுகே கூச்சம் வரும்

ஐந்தடி உடல் மூலம்
அகிலத்தை ரசித்தேன் _ அவள்
அழகிய இதழிலே அமுதத்தை
ருசித்தேன்

அந்த தீண்டாத கொடி முல்லையை
நான் தின்னாத இடமில்லை
தாண்டாத எல்லை தாண்டி
பண்ணாத செயல் இல்லை
தேகத்தின் இடமெல்லாம்
இதழ் படா இடமில்லை

வறண்ட என் தேகத்திலே
திரண்ட அவள் முத்த மேகம்
புரண்டு புரண்டோம் காலை வரை
தீரவில்லை தேக மோகம்
மோகத்தில் மோதிய பின்
தேகத்திலே சூடு _ அவள்
தேகமெல்லாம் ருசித்த பின்
தேவையா தேன் கூடு ?

நீ தொடதான் நான் பிறந்தேன்
நான்  தொடதான் நீ பிறந்தாய்
நாம் தொட்டோம் யார் பிறப்போ

வானமே போர்வை ஆயின
வாசமே வேர்வை ஆயின
நக கீறல் கோலமாயின
முகமெல்லாம்  ஈரமாயின

போதும் என்று சொல்லி சொல்லி
நடித்தால் _ என்னை
போக சொல்லி கொண்டே அணைத்து
பிடித்தால்

உலகிலே உணவு தான் பலவிதம் _ மனிதன்
உணர்கின்ற பசி மட்டும் ஒன்றேதான்
கண்ணனுக்கு பெண்ணினம் பல விதம்
காமத்தில் தீண்டுகையில் ஒன்றேதான்

எந்த ஆண்மகனும் ருசிக்காத
அழகிய  தேன் கிண்ணம் _ அவளை
ஆயிரம் முறை ருசித்தாலும்
அடங்காது ஆண் சின்னம்



.....................................................................................


 * கோயில் சிலைகளில் தவறு இல்லை என்றால்
என் கவிதையும் தவறில்லை



July 24, 2012

சாராய பூமி







மதுக்கடை காசிலே மாநில
வளர்ச்சியா ?
எங்கள் கோமணத்தை உருவி தான்
நீங்கள் கோட்டை கட்ட வேண்டுமா ?

நாங்கள் மயக்கதிலே கொடுத்த
காசுதான் இம்மாநிலத்தை
வளர்க்குதாம் _ எங்களை
அம்மணமாய் ஆக்கிய பின்
வெள்ளி அரனான் கயறு எதற்கு ?

வாங்கி குடித்து முடியும் வரை
வாடிக்கையாளர் என்பீர் _ அவர்கள்
குடித்து முடித்து வெளியே வந்தால்
சமூக விரோதி என்பீர்

திருத்த வேண்டிய கடமை மறந்து
ஊத்தி கொடுத்து கெடுத்து வைத்தீர் _  வெறும்
பொழுதை போக்க குடித்தவனை _ இன்று
பொழுதோரம் குடிக்க வைத்தீர்

வருமானம் பற்றாமல்
வலுவிழுந்து போனால்
விபசாரத்தையும்  பொதுவாக
தத்தெடுத்து  _ விலைமாதை
வரி போட்டு விற்பீரா ?


அரசே ....

பலர் ஆரோக்கியத்தை கெடுத்த
பணம்  பாவம்  அதை தீண்டாதே
சந்தனக்கட்டையிலே  சாக்கடையை
நோண்டாதே


புகழோடு வாழ்ந்து வந்த
தமிழ் மகனை _ சாக்கடை
புழுவோடு புரள வைத்த
புண்ணியவான்களே

தன் மக்களை குடிக்க வைத்து
லாபம் பார்க்கும் அரசுக்கும்
தன் மகளை தாசியாக்கி வயறு
வளர்க்கும் அப்பனுக்கும்

என்ன வித்தியாசம் ?


July 19, 2012

உதவுங்கள்




அவர்களை

இல்லாதவர்கள் என நினைத்தால்
கர்வம் வரும் _ வாழ
இயலாதவர்கள் என
நினையுங்கள் கருணை
வரும்

கோயில் குருக்கள் கையிலும் தட்டுண்டு
கோயில் தெருக்கள் கையிலும் தட்டுண்டு
அதை தட்சணை  என பேசுவார் _ இதை
பிச்சை என ஏசுவார்

தேவனுக்கு பசிக்காது  தெரிந்து கொள்க _ அவன்
தேவை எல்லாம் தெருவில் தான் புரிந்து கொள்க
படைத்தவன் மேல் பால் ஊற்றல்
பக்தியின் முதல் நிலை _ இந்த
பசித்தவனின்  பசியாற்றல் ஞானத்தின்
கடை நிலை

படைக்காமல் இருப்பதினால் பாவமில்லை _ இறையை
படாமல் போனாலும் தோஷமில்லை
வாடாத மலர் சூடவும் தேவைஇல்லை  _ அந்த
வரியோர்கள் வாழ்த்துக்கு நிகருமில்லை
ஈகைக்கு நிகரான யோகமில்லை _ இட்ட
தர்மத்தின் நிகரான யாகமில்லை

நாவுக்கு மெய்யழகு
நகத்துக்கு மையழகு
பிறையாக இருந்தாலும்
கருவானில் நிலவழகு
குறைவாக இருந்தாலும்
தர்மம் தான் கையழகு

அதர்மத்துக்கு வளையாமல்
பிளந்து எடுங்கள் _ ஆனால்
தர்மத்தை மட்டும் கையில்
வளைந்து கொடுங்கள்

பிச்சையாய் போட்டால்
அவர் வயிறு  நிறையும் _ அதை
தர்மமாய் கொடுங்கள்
மனதும் நிறையும்

உண்டியலின் காணிக்கை
கோயிலை சேரும்_ நீ
உணவளித்த புண்ணியம்
கடவுளை சேரும்

ஒரு ருபாய் என்றாலும்

எரிகின்ற கற்பூரத்தை விடுங்கள் _ அங்கே
ஏங்குகின்ற கையிலே கொடுங்கள்








July 16, 2012

முதியோர் இல்லம்






மகனே ..


அலங்கார மீன்தொட்டி இருக்கின்ற
உன் வீட்டில் _ உன்னை
அலங்காரமிட்டவளுக்கு  வாழ
ஒரு இடமில்லையா

உன்னை தோளோரம்
தூக்கி சுமந்த எனக்கு
உன் வீட்டு
கதவோரம் இருக்க கூட
இடமில்லையா

நதி போல ஓடி ஓடி
உன்னை வளமாக்கினேன் _ என்னை
நாய் போல்  நடத்துவதை
கண்டு நெஞ்சை குளமாக்கிநேன்

ஒரு வேலை

உன் மடியிலே இறந்து இருந்தால்
உன் மகனாக பிறந்து இருப்பேன் _ ஆனால்
உன்னை மகனாக பெற்றதுக்கு நான்
மலடியாகவே  இருந்து இருப்பேன்

என் கடைசி ஆசை ...

இது பாவிகளை  பெற்ரேடுத்தோர்
வாழுமிடம்

உன்  பாவமும்  இனி
மேலும் கூடகூடாது
என் பேரனும் பாவியாய்
மாற கூடாது







Photo courtesy : Mr Martin Don

கவிஞர் வைரமுத்து அவர்களே





கருணாநிதி தமிழர்களின் அடையாளமாக
விளங்குகிறார்  ....

          - கவிஞர் வைரமுத்து
          (மூன்றாம் உலகப்போர் புத்தக வெளியீட்டு விழாவில் )

......................................................................................................................................

கவிஞர் வைரமுத்து அவர்களே ..


பசிகொண்ட இளம் மீன்கள்
இரை பார்த்து களிப்படையும் _ அந்த
இரை மூலம் வாய் குத்தி
இறுதி வரை துடித்துடிக்கும்

அதை போல் ..உங்கள்

தமிழ் அழகில் களிப்படைந்தோம்
தமிழ் கேட்டு விழிப்படைந்தோம்

ஆனால்

தமிழ்தாயே கேட்க கூசும்
பொய் ஒன்றை விதைத்தீரே
பாரெங்கும் படர்ந்த
எங்கள் தமிழ் நெஞ்சை
சிதைத்தீரே

கவிதைக்கு பொய் அழகு
அது உங்கள் வரிதான் _ ஆனால்
கவிஞனுக்கு பொய் எதற்கு ?
பதில் கூறுங்கள் ..?


அங்கே கைகட்டி கண்கட்டி
கொல்லும் போது _ இங்கே
கைகட்டி பார்த்தவரா
எங்கள் அடையாளம்  ?

அங்கே எல்லாம்
முடிந்த பின்
உரிமையை பத்தி பாடுகிறார்
நடுகடலில் ஊசியை போட்டு
அதை நடுஇரவில் தேடுகிறார்

மாநாட்டில் தனி ஈழம்
மீட்க சொல்வார்
சிதம்பரத்தை பார்த்தும்
மாற்றி சொல்வார்

உண்மைக்கும் இவருக்கும்
ரொம்ப தூரம் _ இதை
அறியாத உன் நிலைமை
ஐயோ பாவம்


உங்கள்  பொய் மூட்டை
கண்டு வியக்கிறாள் அந்த
தமிழ்தாயே கைக்கொட்டி
சிரிக்கிறாள்

முடிகொடுத்து பதவியில்
வைத்த எங்கள்
குடிக்கெடுத்த அவர்
உடன் பிறப்பு கூட்டம் அன்று

உழைத்து பிழைத்து
வந்த எங்கள் நிலத்தை
திருடி பிழைத்து வந்த
கதை மறந்தீரா?

அடுப்பறையில் எரிகின்ற
கரி போல நம் இனமங்கே
 எரிகின்ற  நேரம் கூட _ இங்கே
கடற்கரையில் சில நேரம்
கட்டில் போட்டு உட்கார்ந்த உன்
தலைவனின் நாடகத்தை
மறந்தீரா?

 எத்தனை வழக்குகள்
எத்தனை திருட்டுகள்
அத்தனையும் பார்த்து
கொண்டு அமர்ந்து இருந்தார்
மறந்தீரா?

வயிறுக்கு திருடியது
திருடர் கூட்டம் _ தன்
வசதிக்கு திருடியது _ உன்
தலைவன் கூட்டம்

நின்றுக்கொண்டே  தூங்குவது
குதிரை குணம்
தூங்கும் போதும் திருடுவது
உன் தலைவன் குணம்

உடலை வித்து
உயிர் வளர்த்தாள் விபச்சாரி
அவரோ தமிழை வைத்து
வயிர் வளர்த்த வியாபாரி

அவர் பேசும் தமிழ்
அழகில் அன்று விழுந்தோம்
அந்த பாவம் இன்று வரை
நாங்கள் எழவேயில்லை

தமிழிலே இருக்கும் உங்கள்
ஆண்மை .. உங்கள்
தன்மானத்தில் இல்லாமல்
போனதேனோ

உங்கள் கவி சொற்கள்
தினம் கேட்டு கண்மூடி அகம்
மகிழ்ந்தோம் _ இன்று
உங்கள் கடும் சொற்கள்
பொய் கேட்டு கண்ணீரில்
அகம் நினைத்தோம்

நல்வழியே அறியாத
உங்கள் தலைவர்
எவ்வழியில் எங்களுக்கு
அடையாளம் ஆனார் ?

உங்களுக்கு வியாபாரம்
விளம்பரம் பண்ணீர்கள்_ ஆனால்
எங்களுக்கு அடையாளம் என
எதை வைத்து சொன்னீர்கள் ?


சந்தத்தில் விளையாடும்
உன் சொற்கள் இன்று
சத்தியத்தில் தடுமாறி
விழுந்தது ஏனோ ?

காதல் சொன்னீர்
காமம் சொன்னீர்
வேதம் சொன்னீர்
வீரம் சொன்னீர்

உறுதியில் வாழ  பல
மெய் சொன்னீர் _ ஆனால்
இறுதியில் ஏன் இந்த
பொய் சொன்னீர் ??



July 15, 2012

பெருந்தலைவர் காமராஜர்




துவக்கத்துக்கு கணபதி
தொடர்ந்து வர ஈஸ்வரன்
கல்விக்கு சரஸ்வதி
காசுக்கு லட்சுமி
உணவுக்கு அன்னப்பூரணி
உண்மைக்கு அரிச்சந்திரன்
தியாகத்துக்கு இயேசு
வீரத்துக்கு அனுமன்
அகத்திற்கு பிரம்மர்
ஒழுக்கத்திற்கு ராமர்


இவை அனைத்துக்குமே
ஒருவர்  எங்கள்

  காமராஜர்

கேரளம் மட்டுமல்ல
கடவுளின் தேசம்
எங்கள் தமிழகம்
கூடத்தான்

எங்கள்
கர்ம வீரர் இருந்த வரை








July 12, 2012

தமிழ்த்தாய்







எங்கள் தாய் தந்தை கூடலில்
தரணியில்  வந்தோம் _
 எந்ததலைமுறையின்  புண்ணியமோ
தமிழனாய்  வந்தோம்

வற்றாத நதி முன்னே மழை
வந்தது _ அந்த மழை
வர மூலமாய் முன்
கடல் வந்தது

பற்றாத ஒளி முன்னே
இருள் வந்தது _ உலக
நாகரிகம் வரும் முன்னே
தமிழ் வந்தது

அங்கே காட்டினில் மொழி இன்றி
கையால் பேச _ இங்கே
கன்னித்தமிழ் புலவர்கள்
கவிதை படைத்தார்

அங்கே மலைக்குகை இருளிலே
இரவை கழித்தான் _ இங்கே
மலை குடைந்து பாறையில்
இறையை வடித்தான்

வற்றாத வளமையினால்
அள்ளி தந்தால் _ மானிட
வாழ்வியல் தர்மத்தை
சொல்லிதந்தால்


வள்ளுவன் வாயிலால்
நீதி வளர்த்தாள் _ பல
வள்ளர்கள் தனை தந்து
தர்மம் வளர்த்தாள்

மெய்ஞான வளர்வதில்
வழி காட்டினாள்
பல மெய்ஞான சித்தர்களுக்கு
வலுவேறினால்
அஞ்ஞான இருள் நீக்கி
ஒளி ஏற்றினால் இந்த
விஞ்ஞானம் வளர வளர
தன்னை மெறுகேற்றினால்


தங்கத்தின் இணைக்கு
நிகர் தகரமில்லை   எங்கள்
தமிழ் மொழியின் இனிமைக்கு
நிகருமில்லை

அவள் அங்கத்தின் அணிகளாய்
காப்பியம் கொண்டால் _
சங்கத்தின் காலத்தில்   பெரும்
மேன்மையை கண்டால்

மலர் எல்லாம் மாலையாக
மாறுவதில்லை _ மற்ற
மொழியெல்லாம் தமிழ்
தேனாய் ஊருவதில்லை

சோதனை பல தாண்டி
தீரம் காட்டினாள் பல
சோழனை பெற்றேடுத்து
வீரம் காட்டினாள்

கடவுளின் மொழிதான்
சமஸ்க்ரிதம் என ஒரு
கூட்டத்தின் கூச்சலை
கேட்டதுண்டா  ??

அவர் எம்மொழி பேசினாலும்
கவலை இல்லை _ எங்கள்
செம்மொழி  இல்லையனில்
கடவுளே இல்லை

காமத்தில் பிறந்தது
மனிதர் இனம் _ பூமி
கடைமனிதன் இருக்கும்
வரை தமிழரினம்


இப்பிறப்பு முடியும்
வரை   மெய் பேச வேண்டும் _இனி
எப்பிறப்பு எடுத்தாலும் தமிழ்
பேச வேண்டும்

July 10, 2012

ஓம் நம சிவாய










தேன் உருகும் பூமாலை தேவனின் திருகழுத்தில்
மான் எனும் மதி மயக்கம் மாதவன் திருக்கரத்தில்
வான் எனும் வளிகுடையில்  வாழும் வையகத்தை
நான் மறையுடன் ஆளும் நாம சிவாயமே

சோகம் தன்னை மனதில் அழித்து
மேகம் போலே நல்லருள் பொழிந்து
தியாகம் உருவாய் தரணியை காக்கும்
நாகம் சூடிய நம சிவாயமே

மஞ்சோலை கிளியே  மரகத குயிலே
பூஞ்சோலை மலரே புனல் அனல் நிலமே
சாஞ்சாடும் மயிலே சந்தன மணியே
நாஞ்சாடும் பாமலர் நம சிவாயமே

ஆதியாய் அந்தமாய் அருபெரும் ஜோதியாய்
பாதியாய் பார்வதியாய் பார் தொழுவும்
நீதியாய்   நீலமாய் நின் மலரடி காண
நாதியாய் அளிக்கிறேன் நமசிவாயமே

தில்லை அம்பலமாய் தித்தவ உருவாய்
எல்லை இல்லா கருணை ஏகாந்த பொருளாய்
பிள்ளையாய் பெற்ற உற்ற உறவாய்
நல்லவை அனைத்தும் நம சிவாயமே


எறிபத்தர் ஏனாதி இயற்பகை இயன்குடி
அறிபத்தர் அப்பரும் அப்புதி அடிகளும்
பெரும்பக்தி கொண்ட சுந்தரும் சம்மந்தரும் கண்ட
நமநந்தி அடிகள் போற்றும் நம சிவாயமே


ஆலம் உண்ட  அருபெரும் கடலாய்
காலம் கடந்த கனியருள் மனதாய்
சூலம் தரித்த சுகம் தரும் ஒளியாய்
ஞாலம் போற்றும் நம சிவாயமே



கண்டு கலந்து களிப்புடன் உன்னை
உண்டு உணர்ந்து உளமார நினைத்து
பூவிலே புணர்ந்து புறங்களை மறந்து
நாவிலே தொழுவோம்  நம சிவாயமே


ஆடலாய் அரசாய் அந்தமாய் அமுதாய்
பாடலாய் பாராய் பார்வதி பாடியை
நாடாய் காடாய் நாள்தோறும் பலர்
தேடலாய் விளங்கும்  நம சிவாயமே

தவமுனி உறுவாய் தலைபிறை அழகாய்
பவமணி பதியாய் பனிமலை சுடராய்
இளம்பணி இதமாய் இசை பொருள் சுரமாய்
நவமணி சுடரே நம சிவாயமே


ஞானத்தில் உன்னை வைத்து
ஞாபகத்தில் உன்னை வைத்து
பானத்தில் உன்னை வைத்து
பக்தியில்  உன்னை வைத்து
காணத்தில்  உன்னை வைத்து
கனவிலும்  உன்னை வைத்து
காலதிலும் உன்னை போற்றும் _  எனை
காப்பாய் நம சிவாயமே



July 6, 2012

மகிந்த ராசபக்ச


மலமும் உமிழ்நீரும் கூட
அழகாய்   தெரிகிறது
மகிந்தா  உன் மானங்கெட்ட
முகத்தை காணும் போது

பக்கத்துக்கு பேய்களும்
சீனத்து நாய்களும்
வக்கத்த உனக்கு வலுவேத்த
இல்லை எனில்

திக்கத்து போயிருப்பாய்
திறனி இன்றி வாடி இருப்பாய்
தமிழனின் வீரத்தில்
தறிகெட்டு ஓடி இருப்பாய்
தன்மானமற்றவனாய்
மண் மூடி போயிருப்பாய்


ஆண்மையை வித்து நீ
ஆயுதம் வாங்கினாய் எங்கள்
ஆண்மகன் நினைவிலே தினம்
அச்சத்தில் தூங்கினாய்


இருளிலே விளக்கேற்றி
இல்லத்தை மெருகேற்றி
தெருவிலே கோலமிட அவளை
சுற்றி தேனிக்கள்  ரீங்காரமிட

சிரிப்பிலே குழந்தையாய்
சிந்தையில் ஞானியாய்
நெருப்பிலே உள்ளது போல்
நெறியான தூய்மையாய்

பிறப்பிலே பேரு பெற்ற
எங்கள் மங்கையின் உடல்
தின்ற  மாமிச நாய்களே _ அவர்கள்
அங்கத்தை அறுத்த
அறமற்ற  பாவிகளே


இந்த தோல்வி கண்டு
எங்கள் உணர்வு குறையாது
தரணி அழியும் வரை
தமிழினம் மறையாது


மொத்தமாய் மண் மூடி போனாலும் நாங்கள்
சுத்தமாய்  வாழ்ந்த சுவடு மறைந்தாலும்
பித்தமாய் அலையும் உன் இனத்தின்  முகத்தை
ரத்தமாய் சதையுமாய்  அழிப்போம்  நாங்கள்


ஒரு மாவீரன் போனதில்?. வலி
உள்ளது.  ஆனால்
இன்னம் ஆயிரம் வீரன் வர
வழி உள்ளது

ஆனால்

உங்கள் ஒரு கோடி விந்துக்கள்
ஒன்று கூடி நின்றாலும்
உங்கள் சிங்கள கருவிலே
ஒரு மாவீரன் வரமாட்டான்



இன்று தமிழர்கள் அழிந்தாலும்
தமிழ்த் தாய்க்கு  அழிவில்லை

தமிழ்தாய் இருக்கும் வரை
தமிழ் இனத்துக்கு முடிவில்லை.


பல அன்னிய சாக்கடையால்
அவதரித்த வன் புழுவே  _  நீ
பண்ணிய பாவம் எல்லாம்  _ உன்
பரம்பரையை பழி வாங்கும்.

வாழும் வரை புல்லாக வளைய
மாட்டோம் _  நாங்கள்
வளைந்தாலும் வில்லாக
வீரம் காப்போம்.

எங்களை ஒடுக்கியே  விட்டதாய்
ஓலம்  வேண்டாம் _ சும்மா
தடுக்கி தான் விட்டுவிட்டாய்
மீண்டும் எழுவோம்!!


http://www.facebook.com/Anuvakal