கருணாநிதி தமிழர்களின் அடையாளமாக
விளங்குகிறார் ....
- கவிஞர் வைரமுத்து
(மூன்றாம் உலகப்போர் புத்தக வெளியீட்டு விழாவில் )
......................................................................................................................................
கவிஞர் வைரமுத்து அவர்களே ..
பசிகொண்ட இளம் மீன்கள்
இரை பார்த்து களிப்படையும் _ அந்த
இரை மூலம் வாய் குத்தி
இறுதி வரை துடித்துடிக்கும்
அதை போல் ..உங்கள்
தமிழ் அழகில் களிப்படைந்தோம்
தமிழ் கேட்டு விழிப்படைந்தோம்
ஆனால்
தமிழ்தாயே கேட்க கூசும்
பொய் ஒன்றை விதைத்தீரே
பாரெங்கும் படர்ந்த
எங்கள் தமிழ் நெஞ்சை
சிதைத்தீரே
கவிதைக்கு பொய் அழகு
அது உங்கள் வரிதான் _ ஆனால்
கவிஞனுக்கு பொய் எதற்கு ?
பதில் கூறுங்கள் ..?
அங்கே கைகட்டி கண்கட்டி
கொல்லும் போது _ இங்கே
கைகட்டி பார்த்தவரா
எங்கள் அடையாளம் ?
அங்கே எல்லாம்
முடிந்த பின்
உரிமையை பத்தி பாடுகிறார்
நடுகடலில் ஊசியை போட்டு
அதை நடுஇரவில் தேடுகிறார்
மாநாட்டில் தனி ஈழம்
மீட்க சொல்வார்
சிதம்பரத்தை பார்த்தும்
மாற்றி சொல்வார்
உண்மைக்கும் இவருக்கும்
ரொம்ப தூரம் _ இதை
அறியாத உன் நிலைமை
ஐயோ பாவம்
உங்கள் பொய் மூட்டை
கண்டு வியக்கிறாள் அந்த
தமிழ்தாயே கைக்கொட்டி
சிரிக்கிறாள்
முடிகொடுத்து பதவியில்
வைத்த எங்கள்
குடிக்கெடுத்த அவர்
உடன் பிறப்பு கூட்டம் அன்று
உழைத்து பிழைத்து
வந்த எங்கள் நிலத்தை
திருடி பிழைத்து வந்த
கதை மறந்தீரா?
அடுப்பறையில் எரிகின்ற
கரி போல நம் இனமங்கே
எரிகின்ற நேரம் கூட _ இங்கே
கடற்கரையில் சில நேரம்
கட்டில் போட்டு உட்கார்ந்த உன்
தலைவனின் நாடகத்தை
மறந்தீரா?
எத்தனை வழக்குகள்
எத்தனை திருட்டுகள்
அத்தனையும் பார்த்து
கொண்டு அமர்ந்து இருந்தார்
மறந்தீரா?
வயிறுக்கு திருடியது
திருடர் கூட்டம் _ தன்
வசதிக்கு திருடியது _ உன்
தலைவன் கூட்டம்
நின்றுக்கொண்டே தூங்குவது
குதிரை குணம்
தூங்கும் போதும் திருடுவது
உன் தலைவன் குணம்
உடலை வித்து
உயிர் வளர்த்தாள் விபச்சாரி
அவரோ தமிழை வைத்து
வயிர் வளர்த்த வியாபாரி
அவர் பேசும் தமிழ்
அழகில் அன்று விழுந்தோம்
அந்த பாவம் இன்று வரை
நாங்கள் எழவேயில்லை
தமிழிலே இருக்கும் உங்கள்
ஆண்மை .. உங்கள்
தன்மானத்தில் இல்லாமல்
போனதேனோ
உங்கள் கவி சொற்கள்
தினம் கேட்டு கண்மூடி அகம்
மகிழ்ந்தோம் _ இன்று
உங்கள் கடும் சொற்கள்
பொய் கேட்டு கண்ணீரில்
அகம் நினைத்தோம்
நல்வழியே அறியாத
உங்கள் தலைவர்
எவ்வழியில் எங்களுக்கு
அடையாளம் ஆனார் ?
உங்களுக்கு வியாபாரம்
விளம்பரம் பண்ணீர்கள்_ ஆனால்
எங்களுக்கு அடையாளம் என
எதை வைத்து சொன்னீர்கள் ?
சந்தத்தில் விளையாடும்
உன் சொற்கள் இன்று
சத்தியத்தில் தடுமாறி
விழுந்தது ஏனோ ?
காதல் சொன்னீர்
காமம் சொன்னீர்
வேதம் சொன்னீர்
வீரம் சொன்னீர்
உறுதியில் வாழ பல
மெய் சொன்னீர் _ ஆனால்
இறுதியில் ஏன் இந்த
பொய் சொன்னீர் ??
பசுந்தோல் போர்த்திய வெள்ளாடு!.. நாணப்பட வேண்டியது!
ReplyDeleteபணங்காசக் கண்டுபுட்டா புலி கூட புல்லத்தின்னும்
Deleteகலிகாலம் ஆச்சுதடி கண்மணி என் கண்மணி
wow super super super
Delete