July 19, 2012

உதவுங்கள்




அவர்களை

இல்லாதவர்கள் என நினைத்தால்
கர்வம் வரும் _ வாழ
இயலாதவர்கள் என
நினையுங்கள் கருணை
வரும்

கோயில் குருக்கள் கையிலும் தட்டுண்டு
கோயில் தெருக்கள் கையிலும் தட்டுண்டு
அதை தட்சணை  என பேசுவார் _ இதை
பிச்சை என ஏசுவார்

தேவனுக்கு பசிக்காது  தெரிந்து கொள்க _ அவன்
தேவை எல்லாம் தெருவில் தான் புரிந்து கொள்க
படைத்தவன் மேல் பால் ஊற்றல்
பக்தியின் முதல் நிலை _ இந்த
பசித்தவனின்  பசியாற்றல் ஞானத்தின்
கடை நிலை

படைக்காமல் இருப்பதினால் பாவமில்லை _ இறையை
படாமல் போனாலும் தோஷமில்லை
வாடாத மலர் சூடவும் தேவைஇல்லை  _ அந்த
வரியோர்கள் வாழ்த்துக்கு நிகருமில்லை
ஈகைக்கு நிகரான யோகமில்லை _ இட்ட
தர்மத்தின் நிகரான யாகமில்லை

நாவுக்கு மெய்யழகு
நகத்துக்கு மையழகு
பிறையாக இருந்தாலும்
கருவானில் நிலவழகு
குறைவாக இருந்தாலும்
தர்மம் தான் கையழகு

அதர்மத்துக்கு வளையாமல்
பிளந்து எடுங்கள் _ ஆனால்
தர்மத்தை மட்டும் கையில்
வளைந்து கொடுங்கள்

பிச்சையாய் போட்டால்
அவர் வயிறு  நிறையும் _ அதை
தர்மமாய் கொடுங்கள்
மனதும் நிறையும்

உண்டியலின் காணிக்கை
கோயிலை சேரும்_ நீ
உணவளித்த புண்ணியம்
கடவுளை சேரும்

ஒரு ருபாய் என்றாலும்

எரிகின்ற கற்பூரத்தை விடுங்கள் _ அங்கே
ஏங்குகின்ற கையிலே கொடுங்கள்








2 comments:

  1. paditthor manadhil - mirugam madiyum... manidham pirakkum..

    ReplyDelete
    Replies
    1. உன் கருத்துக்கு மிக்க நன்றி பாலா
      என் ஆசையும் இதுதான் இதை படித்து
      ஒருவர் மனம் மாறினால் கூட .. எனக்கு
      மகிழ்ச்சி .... நன்றி நண்பா

      Delete