July 10, 2012

ஓம் நம சிவாய










தேன் உருகும் பூமாலை தேவனின் திருகழுத்தில்
மான் எனும் மதி மயக்கம் மாதவன் திருக்கரத்தில்
வான் எனும் வளிகுடையில்  வாழும் வையகத்தை
நான் மறையுடன் ஆளும் நாம சிவாயமே

சோகம் தன்னை மனதில் அழித்து
மேகம் போலே நல்லருள் பொழிந்து
தியாகம் உருவாய் தரணியை காக்கும்
நாகம் சூடிய நம சிவாயமே

மஞ்சோலை கிளியே  மரகத குயிலே
பூஞ்சோலை மலரே புனல் அனல் நிலமே
சாஞ்சாடும் மயிலே சந்தன மணியே
நாஞ்சாடும் பாமலர் நம சிவாயமே

ஆதியாய் அந்தமாய் அருபெரும் ஜோதியாய்
பாதியாய் பார்வதியாய் பார் தொழுவும்
நீதியாய்   நீலமாய் நின் மலரடி காண
நாதியாய் அளிக்கிறேன் நமசிவாயமே

தில்லை அம்பலமாய் தித்தவ உருவாய்
எல்லை இல்லா கருணை ஏகாந்த பொருளாய்
பிள்ளையாய் பெற்ற உற்ற உறவாய்
நல்லவை அனைத்தும் நம சிவாயமே


எறிபத்தர் ஏனாதி இயற்பகை இயன்குடி
அறிபத்தர் அப்பரும் அப்புதி அடிகளும்
பெரும்பக்தி கொண்ட சுந்தரும் சம்மந்தரும் கண்ட
நமநந்தி அடிகள் போற்றும் நம சிவாயமே


ஆலம் உண்ட  அருபெரும் கடலாய்
காலம் கடந்த கனியருள் மனதாய்
சூலம் தரித்த சுகம் தரும் ஒளியாய்
ஞாலம் போற்றும் நம சிவாயமே



கண்டு கலந்து களிப்புடன் உன்னை
உண்டு உணர்ந்து உளமார நினைத்து
பூவிலே புணர்ந்து புறங்களை மறந்து
நாவிலே தொழுவோம்  நம சிவாயமே


ஆடலாய் அரசாய் அந்தமாய் அமுதாய்
பாடலாய் பாராய் பார்வதி பாடியை
நாடாய் காடாய் நாள்தோறும் பலர்
தேடலாய் விளங்கும்  நம சிவாயமே

தவமுனி உறுவாய் தலைபிறை அழகாய்
பவமணி பதியாய் பனிமலை சுடராய்
இளம்பணி இதமாய் இசை பொருள் சுரமாய்
நவமணி சுடரே நம சிவாயமே


ஞானத்தில் உன்னை வைத்து
ஞாபகத்தில் உன்னை வைத்து
பானத்தில் உன்னை வைத்து
பக்தியில்  உன்னை வைத்து
காணத்தில்  உன்னை வைத்து
கனவிலும்  உன்னை வைத்து
காலதிலும் உன்னை போற்றும் _  எனை
காப்பாய் நம சிவாயமே



2 comments: