November 27, 2012

திருச்சிற்றம்பலம்






கூறிய வேலில் நெஞ்சை குத்திலும்
சீரிய பாம்பின் நஞ்சை அருந்திலும்
சாவின் பிடியில் மாட்டிகொண்டிலும்-என்
நாவில் வந்திடும் நமசிவாயமே

அஞ்சி ஓடிய மக்களை காக்க
நஞ்சு உண்ட என் நாத வாழ்க!
பஞ்சு போன்ற உன் மென்மையான
பிஞ்சி உள்ளம் என்றும் வாழ்க!!

உன்னை மறவேனோ உயர் நலம் அடைவேனோ
உன்னை மறந்தினும் உயிருடன் வாழ்வேனோ
கண்ணை இழந்தினும் காற்றை இழந்தினும்
என்னை படைத்த உன்னை மறப்பேனோ

பித்தனே பெருமானே என்றழைத்த சுந்தரருக்கு
அத்தனை அருள் தந்து அவர் பாவால் அகமகிழ்ந்து
இத்தனை காலமும் இருள் இல்லா உன் முகத்தை காண
எத்தனை காலம் நான் ஏக்கத்தில் தவிப்பேன் நமசிவயாவே ...

- வை . நடராஜன்

வீரர்களை இழந்தோம் !! வீரத்தை அல்ல ...





முன்னம் பறிகொடுத்தோம்
முள்ளிவாயில்  பரிதவித்தோம்
திண்ணம் தீ சூழ
திசை எங்கும்
உயிர் கொடுத்தோம்

எண்ணம் ஈடேறும்
எதிர்காலம் சூடேறும்
வண்ணம் தமிழ் ஆட்சி
வலியோடு பீடேறும் .


சிங்கள பாவிகள்
சிதையும் நாள் தூரமில்லை

நான்கு திசையெங்கும்
ஆர்ப்பரிக்கும் கடல் நீரும்
நாளும் சூடேறும் -அழும்
எங்கள் கண்ணீரும் - ஒருநாள்
பொங்கி வரும்
பொதுவுடைமை சொல்லி தரும்
பொங்குவது தமிழனா ? கடலா ?
காலம்தான் தீர்ப்பு தரும்

கருமேகம் மறைப்பதினால்
கதிரவன் அழிவதில்லை
காற்று மோதிவிட்டால்
கருமேகம் பிழைப்பதில்லை

எங்கள் பக்கம் எதிர்கால
காற்றடிக்கும்
எங்கள் இனத்தை  தர்மமே
மீட்டெக்கும்

ஆயிரம் ராஜபக்சே
அரியணை ஏறினாலும்
ஆயிரம் ஆண்டுகள்
அடக்குமுறையில் ஊறினாலும்

தன்னை காத்து கொள்ள
தமிழுக்கு தெரியுமடா - அன்று
தமிழன் யார் என்று
தரணிக்கு புரியுமடா

அந்நியனின் கால் நக்கி
ஆயுதங்களை மேல் தூக்கி
என்னினத்தை அழித்தவர்களே
எதிர்காலம் பதில் சொல்லும்  .


இன்னும் ஆயிரம்
அண்ணனை பெற்றேடுக்க
அன்னை தமிழுக்கு
கருவிலே இடமுண்டு - ஆனால்
இந்த ஒருவரை சமாளிக்கவே
உலகமே உங்களுக்கு உதவியது .

எச்சை பதவி பெற்று
எட்டப்பன் தொழிலை கற்று
பிச்சை பணத்திற்காக
பெற்றவளை தெருவில் விற்ற

பச்சை துரோகிகளே
பாவத்தின் மூட்டைகளே
இனத்தின் அழிவுகளே
வரலாற்று கழிவுகளே

ஆண்டுகள் பல ஆனாலும்
ஆயிரம் உயிர் போனாலும்
ஈழம் அடைவோமடா
எதிர்காலம் விடியுமடா .

நாளை வெல்லும்போது
நானும் நீயும் இருக்க மாட்டோம் - ஆனால்
எதிர்கால தமிழினம்
வெற்றி முரசு கொட்டும் - அன்று
நிகழ்கால ஒரே சாட்சி
சூரியன்  கை தட்டும் ......

தமிழர்களே ..

எதற்காகவும் அழாதீர்
எவரிடமும்  தொழாதீர்

நம்பிக்கை வீரத்தை
இரு விழியில் பொறித்திருப்போம்
தர்மம் காக்க வரும்
அது வரை பொறுத்திருப்போம் .

November 26, 2012

மட்டமான பொருள்


உனக்காக பலவற்றை
இழந்தேன் - ஆனால்
உன்னை இழந்த பின்தான்
தெரிந்தது ,
நான் இழந்ததிலையிலே
மட்டமான பொருள்
நீ தான் என்று ..

- வை . நடராஜன்

மரணம்




மரணம் அழுபவர்களுக்குதான்
தண்டனை
அடைந்தவர்களுக்கு
விடுதலை

- வை . நடராஜன்

November 21, 2012

ஒரு பைந்தமிழ் கிராமத்தின் பருவ காதல்








வாடி புள்ள வாழலாம் :

வானத்துல சாமி இருக்கு
வாழ்க்கையில அன்பு இருக்கு
ஊனம் என்று எதுவுமில்லை
உழைக்க நல்ல தெம்பு இருக்கு

சாதி சனம் எதுவுமில்லை
சாமி கூட இல்ல புள்ள
கம்பு காடும் காராம் பசுவும்
நம்பும் நமக்கு சாமி புள்ள

சோசியம் சாதகம் எல்லாம்
சோம்பேறி சொன்ன வேதம் புள்ள
சோடி கிளி நீ கூட இருந்தா
எமகண்டம் ராகுகாலம் ஒண்ணுமில்ல

கஞ்சி ஒ கூழோ எதுவோ பெண்ணே
மனசு நிறைய வாழலாம்
நெஞ்சில் வஞ்சம் கொஞ்சமும் இன்றி
குழந்தை போல வாழலாம்

வஞ்சி கொடி வாடி புள்ள
வச்சி இருக்கன் நெஞ்சிக்குள்ள
ரெண்டு பெரும் சேந்து கொஞ்சி
பெத்துகுவோம் பத்து புள்ள

கூர வீட்ல இருந்தாலும்
குணத்துல நானும் அரசனடி
அழகோ பணமோ தேவ இல்ல - உன்
ஆயுசுக்கும் நான்தான் புருசனடி


தங்கம் வையரம் தேவையில்லை
ஒரு தென்னங்கன்னு போதுமடி
புள்ள போல வளப்போம் - நாம்ப
போனாலும் ஊருக்கு உதவுமடி


நூறு ரூபா சீல தாண்டி
வாங்கி தர வசதி இருக்கு - ஆனா
நூறு வருசம் போனா கூட
உன்ன சுமக்க நெஞ்சிருக்கு

வேப்ப மர காத்திருக்கு
வெள்ளி நிலா விளக்கிருக்கு
தோப்பு குயில் கூடுயிருக்கு
தொணைக்கு ரெண்டு ஆடுருக்கு

கட்டிலிலே வேர்வை சிந்தி
வயசு பசியை போக்குவோம்
கழனியிலே வேர்வ சிந்தி
வயத்து பசிக்கு ஆக்குவோம்

மாடி ஊடு இல்லையடி
மனசில் கள்ளம் இல்லையடி
ஓடி ஆடி ஒழச்சி உன்ன
உசிர பாத்துக முடியுமடி

தரிசு நிலம் காடு இருக்கு
குடிசை வீடு மாடு இருக்கு
வெரசா வாடி வாழ்க்கையில
பெருசா வாழ்ந்து காட்டுவோம்

விவாகரத்து





விதிபயனோ
வினைபயனோ
விண் கோள்களின்
சதி பயனோ

கோடி ஆசையில்
துவங்கிய வாழ்க்கை
கோர்டில் போய்தான்
முடிகின்றன ..

மலர்ந்த பூவை முகர்ந்து விட்டால்
சேற்றில் கிடக்கும் ஆரணம்
புரிந்து கொள்ள மறுபதே
பிரிந்து செல்ல காரணம்

நவக்கிரக தோசமெல்லாம்
நலிந்த மூட காரணம்
நலன்பு உயர் தியாகம்
களிந்த வாழ்வின் ஆரணம்

தொட்டு மகிழ்ந்த துணைக்காக
விட்டு கொடுப்பது தோல்வி அல்ல
கர்வம் கொண்டு எரித்து கொள்ள
வாழ்க்கை ஒன்னும் வேள்வவி அல்ல

தர்க்கம் கர்வம்
வாழ்க்கையிலே கொண்டு
தனிமையில் தான்
மடியனுமா ?

நாள் பார்த்து
நல் நாழிகை பார்த்து
நல்லோர்கள் வாழ்த்துகையில்
கைகோர்ந்த இதயம்
கசந்து பிரிந்து
வெதும்பணுமா??

கர்வம் கோவம்
சந்தேகம் சச்சரவு
ஆயிரம் சொன்னாலும் -அடிப்படை
வாழ தெரியவில்லை
யாரேனும் ஒருவருக்கு
அல்லது இருவருக்கும்

வாழ்க்கை வழக்காகிறது
சட்டம் வழி காட்டுகிறது
வாழ இயலவில்லை என
வாழ தெரியாதவர்கள்
பொய்யுரைத்து
வழக்கை நடத்தி
வாழ்க்கையை கெடுகின்றன ..

ஐ நா என்ன மைத்துக்கு ?






ஆண்டவனை காணவில்லை 
ஐ நாவோ பேணவில்லை 
கஷ்டப்படும் இனத்திற்கு 
கை கொடுக்க யாருமில்லை

எரிவது எமினம் என்றால்
நெருப்பிலே நெய்யை ஊற்றும்
அதிகார வர்க்கம் விரைவில்
அடியோடு அழிந்து போகும்

புத்த பகவான் சொன்ன
புத்த தர்மம் எங்கே ?
பச்சை குழந்தைகள்
மீது பாஸ்பரஸ் குண்டு
யுத்த தர்மம் எங்கே ?

புத்ததை கொன்றது
இலங்கை
அதை பொழுதுபோக்காய்
ரசித்தது உலகம்

கையளவு கஞ்சுமில்லை
கதறும் தமிழன் வயதுக்கு
எதையுமே தடுக்காத
ஐ நா என்ன மைத்துக்கு ???

செருப்பால் அடிப்பேன் என்றான் ...



செருப்பால் அடிப்பேன் என்றான் ...


உழைக்காமல் உண்ணும்
உன் கையை விட
உழைத்து தேய்ந்த அந்த செருப்பால்
அடி வாங்குவது பெருமைதான் .

November 10, 2012

உனக்காக அழுதல் பெருமை









தொழுதாலும் ஊறுக்கு
தொழுதல் பெருமை
பழித்தாலும் நீதிக்கு

பழித்தல் பெருமை
விழுதாலும் அருவியாய்
விழுதல் பெருமை
அழுதாலும் உனக்காக
அழுதல் பெருமை .


மனமெல்லாம் வலித்தாலும்
மகிழ கண்டேன்
தினதோறும் அழுதாலும்
திவ்யம் கண்டேன்
கணம் நெஞ்சில்
களிவில்லை - இருந்தும் பெண்ணே
குணவத்திகாக அழுவதில்
பெருமை கொண்டேன் .

அள்ளிக்கொள்ள நீயுமில்லை
சொல்லிக்கொள்ள வார்த்தையில்லை
சாய்ந்து அழ தோளுமில்லை
அழுதாலும் ஈரமில்லை .

வாசலில் கோலமில்லை
வாழ்க்கையில் ஆரமில்லை
வார்த்தையில் சாரமில்லை
வழிதுணை யாருமில்லை .

மனதிலே காயம் கண்டேன்
மழைத்துளி கானல் கண்டேன்
மலர்விழி மங்கையவள்
மனம் கொள்ள மோகம் கொண்டேன் .

நீறுக்கு காத்திருக்கும்
வெடித்த நிலத்தை போல
சோறுக்கு காத்திருக்கும்
பசித்த மழலை போல
வானம் பாத்திருக்கும்
அடைபட்ட கிளியை போல
வசந்தமே உனக்காக
காத்திருப்பேன் காதலுடன் .

துணையே வருவாய்
வாழ்வோம் நிறைவாய்

இந்தியாவில் பல சாதிகள்





இட ஒதிக்கிடு வேண்டுமென்றால் தங்களை
தாழ்ந்த சாதியாக அறிவிக்க போராட்டம் செய்கின்றனர் - ஆனால் ,
இன வெறி என வந்து விட்டால் தாங்கள் தான்
உயர்ந்த சாதி என அடித்துக்கொண்டு போராட்டம் செய்கின்றனர் ..

- வை . நடராஜன்

November 4, 2012

என் மங்கை :





இதழ் சொல்லும் மங்கை
இதயத்தில் மங்கை
இரவெல்லாம் தூங்காத
இரு விழியில் கங்கை

உணை காணா நேரம்
விழிகின்ற கண்ணீர்
உணை காண வேண்டும்
தொழுகின்ற கைகள்

காணாத நெஞ்சம்
கண்ணீரில் நிறைந்து
உனான உயிரும்
ஓடாமல் உறைந்து
என்வான வெளியில்
வெளிச்சங்கள் குறைந்து
எந்நாளும் இருளில்
என் வாழ்க்கை மறைந்து

உணை காண வேண்டும்
தினம் தோறும் எண்ணம்
உன்னை வேண்டி தானே
உயிரோடு இன்னும்

உன் தோளில் சாய்ந்து
நான் அழுவ வேண்டும்
கண்ணீரை துடைத்து நீ
தழுவ வேண்டும்


செந்தாழ செவந்தி
செந்துர பூவே
செவ்வான இதழ் கண்ட
அணியான தீவே
உணை காணா நேரம்
அனல் மேல் தவித்தேன்
இனை கண்ட நெஞ்சம்
கணை கண்ணில் துடித்தேன்

உன் நெஞ்சம் எனை வெறுத்தால்
ரத்தத்தில் கொட்டும்
உன் மஞ்சம் உன் நெஞ்சம்
எனக்காக மட்டும்

என் சொல்லாடும் கவிக்கு
தாயாக இருக்காய் - உன்
தள்ளாடும் காலத்திலும்
சேயாக நினைவேன்

மழை வந்த பின்பு
மண்ணெல்லாம் ஈரம்
மங்காத உன்னை
காணாத நேரம்
தூங்காத நானும்
துடிக்கின்ற மீனாய்
வலி தவறி விழி கசியும்
விணான கேனாய்

உன்னை உன்னல் சமயம்
எனை வலிக்கும் இன்னல்
இவன் வேண்டும் வரமே
இவன் கண்ட அறமே

வருவாய் என் வளியே வாழ்வோம்
ஒன்றாய் - வாழ்வில் நாம்
என்றும் களிவோம்
நன்றாய்

- வை . நடராஜன்

Photo courtesy : Google

களவியல் - புணர்ச்சிமகிழ்தல்




ஆசை தான் அதிகமானால்
அங்கம் தான் புனிதமாகும்
தேகங்கள் கூடலிலே
மோகத்தால் மூச்சடைக்கும்

ஆடையே பாரமாக
அச்சமோ தூரம் போக
அணைத்தவளே ஆடையாக _ அவள்
இதழ் என்னை ஈரமாக்க

எங்கள் ,

நிர்வாண கோலத்திலே
நிலவுகே மோகம் வரும்
அதிகாலை பகலவன் பார்த்தால்
அவனுகே கூச்சம் வரும்

ஐந்தடி உடல் மூலம்
அகிலத்தை ரசித்தேன் _ அவள்
அழகிய இதழிலே அமுதத்தை
ருசித்தேன்

அந்த தீண்டாத கொடி முல்லையை
நான் தின்னாத இடமில்லை
தாண்டாத எல்லை தாண்டி
பண்ணாத செயல் இல்லை
தேகத்தின் இடமெல்லாம்
இதழ் படா இடமில்லை

வறண்ட என் தேகத்திலே
திரண்ட அவள் முத்த மேகம்
புரண்டு புரண்டோம் காலை வரை
தீரவில்லை தேக மோகம்
மோகத்தில் மோதிய பின்
தேகத்திலே சூடு _ அவள்
தேகமெல்லாம் ருசித்த பின்
தேவையா தேன் கூடு ?

வானமே போர்வை ஆயின
வாசமே வேர்வை ஆயின
நக கீறல் கோலமாயின
முகமெல்லாம் ஈரமாயின

போர்வையில் நெளிந்தோம்
வேர்வையில் நினைந்தோம்
வேகத்தில் களைத்தோம்
வெற்றியில் திளைத்தோம்
மோகத்தில் பயணம்
மோட்சத்தை அடைந்தோம்
வேகத்தில் தேகம்
மோகத்தில் உடைந்தோம்

போதும் என்று சொல்லி சொல்லி
நடித்தாள்
_ என்னை
போக சொல்லி கொண்டே அணைத்து
பிடித்தாள்

எந்த ஆண்மகனும் ருசிக்காத
அழகிய தேன் கிண்ணம் _ அவளை
ஆயிரம் முறை ருசித்தாலும்
அடங்காது ஆண் சின்னம்

நீ தொடதான் நான் பிறந்தேன்
நான் தொடதான் நீ பிறந்தாய்
நாம் தொட்டோம் யார் பிறப்போ ?


- வை . நடராஜன்

வலியில் தான் வழி பிறக்கும்




வீழ்ந்து விட்டால்
கலங்காதீர் ,

வழக்கறிஞர் ஒருவர்
வீழ்ந்ததால் தான் - உலகம்
மகாத்மாவை கண்டது

ஏமாற்றத்தை கண்டு
ஏங்காதீர் ,

காசி ஏமாற்றியதால் தான்
உலகம் பெரியாரை
பெற்றது


- வை . நடராஜன்

திருநீறு





ஒரு பெரியவர் நெற்றியில் திருநீறு இட்டுக்கொண்டு
சாலையில் சென்று கொண்டு இருந்தார்
எதிரே வந்த ஒரு நாஸ்தீகர் , '' என்ன ஐயா ' நீங்கள் கடவுளை கும்பிடுபவர் என்று காட்டிக்கொள்ள .
இந்த '' வெள்ளை பட்டை விளம்பரம் தேவையா ??

பெரியவர் சொன்னார்
,
அய்யா !! இந்த விளம்பரம் விலையற்ற வெறும் சாம்பல் ஆனால் .
நீங்கள் பகுத்தறிவு என்று காட்டிக்கொள்ள , செலவு செய்து வாங்கிய '' கருப்பு சட்டை விளம்பரம் தேவையா ???


- வை . நடராஜன்

Photo courtesy : Mr Martin Don

நன்றியை வாங்க




நாய் வாங்க ஆயிரம் ஆயிரம்
ஆனாலும் .
அதனிடம் நன்றியை வாங்க
ஐந்து ருபாய் ரொட்டி போதும்

- வை . நடராஜன்

November 1, 2012

நாய்கள் கூட கேட்கிறது :







எல்லா சாதிக்கும்
உள்ள ஒரே ஒற்றுமை
'' ஜாதி வெறி மட்டுமே ''

நாய்கள் கூட கேட்கிறது ...

நாங்கள் நடு தெருவில்
ஒட்டி கொள்வது அசிங்கம் எனில்
நீங்கள் நடு தெருவில்
வெட்டி கொள்வது என்ன ?

நாங்கள் இனங்கள் வேறுபட்டதால்
உருவமும் நிறமும் மாறும்
குணமும் நன்றியும் மாறாது ..

உங்களுக்குள் இனங்கள் ஆயிரம் - ஆனால்
மனிதம் எங்கே ?

தமிழன் என்ன எலியா ?




நியூட்ரினோ ஆய்வகம் என்று
தேனி மலை குடைந்து விட்டான்
நியூகிளியர் கொண்டு வந்து
கூடங்குளம் கெடுத்து விட்டான்

தமிழகம் மட்டும் ஆய்வகமா ? உனக்கு
தமிழர்கள் எல்லோரும் சுண்டெலியா ?
கேரளவன் மலை எல்லாம் ஹனிமூனுக்கா ?
தமிழக மலை மட்டும் ஆய்வகத்துக்கா ?

உங்களுக்கு வேண்டும் என்றால்
நாடாய் எங்களை பார்க்கிறீர்கள்
நாங்கள் வேண்டியதை கேட்டால்
நாய் போல ஏய்க்கிறீர்கள்

தோண்டி சுரண்டி வெட்டி எடுத்து
எல்லா வளமும் போகுதடா
தண்ணீரை கேட்டால் மட்டும்
தகராறு ஆகுதடா

எங்கள் எதிர்கால சந்ததியை
பணயம் வைத்து இந்த
நிகழ்கால தேவைக்கு
அணு நிலையம் வைத்தீர்

துக்கம் வந்தால் எல்லாமே
எங்களுக்கு மட்டும் _ எனில்
வெட்கமின்றி கேட்கலாமோ
பங்கை மட்டும் ?

மழை நீரை தேக்கி வைக்க
அணைகட்டும் நிலை மாறி _ எங்கள்
மறத்தமிழன் உயிர் குடிக்க
ஆணை கட்டும் அரக்கனடா

இயற்கை நீரை இடை மறித்து
தடுத்துவிட்டு இல்லையேன்னு
செயற்கை வேடம் போடுபவனுக்கு
சேவை செய்யவா நாங்கள் பிறந்தோம் ?

எங்கள் அணை எங்கள் தண்ணி'
என்று நீ சொல்லும்போது _ எங்கள்
நிலக்கரியும் மின்சாரம் மட்டும்
எப்படி உனக்கு பொதுவில் வரும் ?

எங்கள் படகெல்லாம் கடலிலே
போய் _ பின் பாடையாக
வருகிறதே ..

அடித்தவனை தட்டி கேட்க
நாதி இல்லை உங்களுக்கு
அடுத்த கண்டம் தாண்டி போகும்
அக்னி தான் எதற்கு ?

கச்சத்தீவை பிரித்து கொடுத்தீர்
அண்டை நாட்டு நட்புகாக ..
ஏன் ?
கஷ்மிரையும் கொடுங்கலேன்
அதே போல நட்புகாக

நான் இந்தியாவை பிரிக்க
ஒன்றும் நினைக்க வில்லை _ ஏனெனில்
நம் இந்தியா இன்னும்
ஒன்றாய் சேரவே இல்லை .....

நிலம் மட்டும் சேர்ந்து விட்டால்
நாடாகுமா ?
மனம் எல்லாம் ஒன்று சேர
எத்தனை நாளாகுமோ ........

இந்தியன் என்று சொல்ல
பெருமை கொள்வோம் _ ஆனால்
இந்தியன் என்பதற்காக
ஏமாற மாட்டோம்

- வை . நடராஜன்

நான் இயற்கை பேசுகிறேன்





அன்னையை அடகு வைத்து
ஆடம்பரமாய் வாழ்வது போல
என்னையே அழித்து வாழும்
மதியற்ற மானிடர்களே.

பெரும் மழையும் எரிமலையும்
பூகம்பம் புயல் காற்றும்
நான் செய்யும் பெரும்நாசம்

என் வீடு என் குழந்தைகளை
சுயநலத்தில் கருவறுக்கும்
உங்களை படைத்தது
நான் செய்த பெரும் பாவம்

நான் படைத்தேன்
எனை அழித்தீர்
நீர் படைத்த மதத்தை காக்க
பெரும் செல்வம் கொடை அளித்தீர்

மூடர்களே ,

வீடே எரியும் போது
விளக்கிற்கு எண்ணெய் எதற்க்கடா ?
இயற்கையை அழித்த பின்
இறைவனும் மதமும் எதற்க்கடா ?

பூமியை காப்பாற்று
நான் , கெஞ்சவில்லை
உங்களை காப்பாற்றிகொளுங்கள்
எச்சரிக்கிறேன்

உங்களால் எனக்கு
சில கால வலி - உங்களுக்கு
நிரந்தர அழிவு .. .

- வை . நடராஜன்

Photography By : Brent Stirton , National Geographic Society .

வேலை நிறுத்தம்



மரங்கள் ஒரு நாள்
வேலை நிறுத்தம்
தொடக்கம் எனில் - பின் இங்கே
600 கோடி சடலங்களும்
அடக்கம் ..

அறிவுரை







நாம் சொல்லும் நேரத்தில்
வார்த்தை ஆறாக ஓடுகிறது
நாம் கேட்கும் நேரத்தில்
காது அணை போல மூடுகிறது

வாய் உள்ளதே என
அறிவுரை சொல்லாதே
வாழ்ந்து காட்டிய பின்
அறிவுரை சொல்

தன் கையெல்லாம்
அழுக்கு இருப்பினும்
அடுத்தவன் காலின்
அழுகை குறை சொல்லி
அறிவுரைபார் ..