November 1, 2012

தமிழன் என்ன எலியா ?




நியூட்ரினோ ஆய்வகம் என்று
தேனி மலை குடைந்து விட்டான்
நியூகிளியர் கொண்டு வந்து
கூடங்குளம் கெடுத்து விட்டான்

தமிழகம் மட்டும் ஆய்வகமா ? உனக்கு
தமிழர்கள் எல்லோரும் சுண்டெலியா ?
கேரளவன் மலை எல்லாம் ஹனிமூனுக்கா ?
தமிழக மலை மட்டும் ஆய்வகத்துக்கா ?

உங்களுக்கு வேண்டும் என்றால்
நாடாய் எங்களை பார்க்கிறீர்கள்
நாங்கள் வேண்டியதை கேட்டால்
நாய் போல ஏய்க்கிறீர்கள்

தோண்டி சுரண்டி வெட்டி எடுத்து
எல்லா வளமும் போகுதடா
தண்ணீரை கேட்டால் மட்டும்
தகராறு ஆகுதடா

எங்கள் எதிர்கால சந்ததியை
பணயம் வைத்து இந்த
நிகழ்கால தேவைக்கு
அணு நிலையம் வைத்தீர்

துக்கம் வந்தால் எல்லாமே
எங்களுக்கு மட்டும் _ எனில்
வெட்கமின்றி கேட்கலாமோ
பங்கை மட்டும் ?

மழை நீரை தேக்கி வைக்க
அணைகட்டும் நிலை மாறி _ எங்கள்
மறத்தமிழன் உயிர் குடிக்க
ஆணை கட்டும் அரக்கனடா

இயற்கை நீரை இடை மறித்து
தடுத்துவிட்டு இல்லையேன்னு
செயற்கை வேடம் போடுபவனுக்கு
சேவை செய்யவா நாங்கள் பிறந்தோம் ?

எங்கள் அணை எங்கள் தண்ணி'
என்று நீ சொல்லும்போது _ எங்கள்
நிலக்கரியும் மின்சாரம் மட்டும்
எப்படி உனக்கு பொதுவில் வரும் ?

எங்கள் படகெல்லாம் கடலிலே
போய் _ பின் பாடையாக
வருகிறதே ..

அடித்தவனை தட்டி கேட்க
நாதி இல்லை உங்களுக்கு
அடுத்த கண்டம் தாண்டி போகும்
அக்னி தான் எதற்கு ?

கச்சத்தீவை பிரித்து கொடுத்தீர்
அண்டை நாட்டு நட்புகாக ..
ஏன் ?
கஷ்மிரையும் கொடுங்கலேன்
அதே போல நட்புகாக

நான் இந்தியாவை பிரிக்க
ஒன்றும் நினைக்க வில்லை _ ஏனெனில்
நம் இந்தியா இன்னும்
ஒன்றாய் சேரவே இல்லை .....

நிலம் மட்டும் சேர்ந்து விட்டால்
நாடாகுமா ?
மனம் எல்லாம் ஒன்று சேர
எத்தனை நாளாகுமோ ........

இந்தியன் என்று சொல்ல
பெருமை கொள்வோம் _ ஆனால்
இந்தியன் என்பதற்காக
ஏமாற மாட்டோம்

- வை . நடராஜன்

1 comment:

  1. அருமை நண்பரே !! ஆழமான கருத்துக்கள்

    ReplyDelete