June 28, 2012

ஒரு மரத்தின் எச்சரிக்கை





மானிடர்களே....

உங்கள் சுயநல  போக்கிலே
மாற்றம்  வேண்டும் - இந்த
சுந்தர பூமியை  கொஞ்சம்
காக்க வேண்டும்



அடுப்பிலே எரிவதற்கு உடலை தந்தோம்
அமர்ந்து நீங்கள் இருபதற்கு  உடலை தந்தோம்
துடுபாகி போவதற்கு  உடலை தந்தோம்
துண்டாகி துண்டாகி எல்லாம்   தந்தோம்

கனியாகி காயாகி பசியாற்றினோம்
தாளாகி நூலாகி  படிபேற்றினோம்

கருமேகம் குளிறுற்றி மழையாய்
செய்தோம் _ உங்களை காலமும்
காத்து பெரும்  பிழையை  செய்தோம்

எங்கள் நிகழ்கால வனதை
நீங்கள்  அழிப்பதால்
உங்கள்  எதிர்கால  இனத்துக்கு
எமனாய் முடியும்

உங்கள் சுயநல புத்திக்கு
சொல்லி கொடுங்கள்
வரும் எதிர்கால
வர்க்கத்தை வாழ விடுங்கள்


ஆற்றை எல்லாம் வற்றி விட்டு _ எங்கள்
ஆளை எல்லாம்  வெட்டி   விட்டு
காசை மட்டும் வைத்து கொண்டால்
கஞ்சிக்கும் கனிகும் வழியே இல்லை

கால் கழுவ கூடவும் தண்ணி இல்லை
இதை புத்தியில் ஏற்றினால் பாரமில்லை
அன்றி
உங்கள் அழிவிற்கு காலமும் தூரம் இல்லை

எங்களை இருக்க விட்டால்
இருக்கும் வரை எல்லாம் தருவோம்
இல்லை என்றால்
உங்களை அழித்து விட்டு
மீண்டும் வருவோம்

ஆறறிவை அழித்து விட்டு
மீண்டும் பிழைபோம் _ பின்
ஐந்தறிவை  மட்டும்  கொண்டு
அமைதியில் தழைப்போம்


கருணை அற்ற உங்கள் செயல்
அழிவில் முடியும் _ சொரணை
அற்ற உங்களுக்கு ஒரு  எச்சரிக்கை ..



    _ இப்படிக்கி
        ஒரு மரம்

*ஆறறிவை - மனிதர்கள்
*ஐந்தறிவை  - மிருகங்கள்


June 22, 2012

மங்கை





ஒரு அழகியின்  முகவுரை




கொஞ்சி பேசும் பிஞ்சி  தமிழும்
குழந்தை முகமும்
 செஞ்சி வச்ச சிற்பக்கரமும்
 சிவந்த இதழும்

சொக்க வைக்கும்  அவள் நடையும்
சுழலும் இடையும்
பற்ற  வைக்கும் அவள் விழியும்
பருவ உருவமும்

சிந்தை எல்லாம் அவள் எண்ணமும்
சிவந்த கன்னமும்
விந்தையான அவள் சிரித்தால்
 விழுமே  பள்ளமும்


செம்மையான பிஞ்சு வெள்ளரியாய்
விளைந்த விரலும்
மென்மையான வீணை இசையாய்
இனிய குரலும்


கோவை இதழ் உள்ளினிலே
பளிங்கு பற்கள்
பாவை அவள் பேசுவதே
 கவிதை சொற்கள்


கொஞ்சம் நேரம் அவள் சிரித்தால்
குவியும்   மேகங்கள்
நெஞ்சம் அவளை நினைகயிலே
உருகும் தேகங்கள்


கார் கூந்தல் இடம்
அமர பூக்கள் வாடும்
அவள்  கனியிதழ்   தேன்
சுவைக்க   வண்டுகள் தேடும்


துள்ளி அவள் ஓடும்   அழகில்
மான்கள்    தோற்கும்
கள்ளி அவள் ஆடும் அழகை  மயில்கள்
மறைந்து   பார்க்கும்


அவள் அங்கம் மேலே தங்கம்
வைத்தால் தங்கம் கருகும்
அவள் அன்ன விழியில் கண்ணீர்
பார்த்தால் உலகம் உருகும்


பிறை நிலா  பின்பம் போல
வளைந்த    புருவம்
முழு நிலா  அவளை   கண்டால்
  கொள்ளுமே   கர்வம் .

June 11, 2012

தந்தை


ஒவ்வொரு தந்தைக்கும்   சமர்ப்பணம்

ஈரைந்து மாதங்கள்
எனை சுமந்த அன்னைக்கு பின்
இது வரைக்கும் என் வாழ்வை
தோள் சுமந்த தோழன்

என்னை கருவாக்க  சில நேரம் 
இன்பம் கண்டார் ..
என்னை உருவாக்க  இன்று
வரை எல்லாம் துறந்தார்

இரவெல்லாம் கண்ணீர்
இதழ்  எல்லாம் உமிழ் நீர்
அன்று மாடியில் தூங்கும் போது
நிலவை ரசிதேன்  _ அவர்
மடியிலே தூங்கிய பின்
நிலவை மறந்தேன்

நான் கண்மூடி படுக்கும்
வரை தூக்கம் இழந்தார் _ நான்
கால் எடுத்து நடக்கும் வரை
தோளில் சுமந்தார்

மாலையில் கைபிடித்து
மலையோரம் நட ப்போம்
அவர் கை பிடித்து போனது
வெறும் பாதை அல்ல

நான் கால் வைத்த முதல்
பள்ளிக்கூடம்  அதுவே

நிலவிலே மனிதன் போன
கதைகள் சொன்னார்
நான் நீதியில் வாழ பல
வழிகள் சொன்னார்

அன்று கதிரவன் மறையும்
வரை கால் சென்றது
அந்த காட்சி மட்டும் இன்று
வரை கண்ணில் உள்ளது

உழவாத நித்திலே உணவு
இல்லை
உருகாத தங்கத்தில் உருவம்
இல்லை
ஊதாத குழலுக்கு இசையும்
இல்லை
உதை வாங்கா    பிள்ளைக்கு
உயர்வும் இல்லை

என்னை அடித்தவுடன்
அழுவது ஆறு கண்கள்
தாயின் கண்கள் எனை
துடைக்க ஓடி வந்தது
தந்தையின் கண்கள்
அழுவதற்கு மறைவில் சென்றது

நான் படிக்காமல் தூங்கி இருந்த 
நேரதில் கூட _ நான்
படிப்பதற்கு தூங்காமல்
வேலை பார்தார் 

என் எதிர்கால   வாழ்கையில்
பூக்கள் வளர
தன் நிகழ் கால      வாழ்வையே
பணயம் வைத்தார்

நான் வளரும் வரை
தோளில் தூக்கி வழி காட்டினார்
நான் வளர்ந்த பின்
தோளில் தட்டி வழி   அனுப்பினார்

எனை கல்லூரி சேர்க்க    டமை
இழந்தார் _ என் கல்விக்கு ஒளி
ஏத்த உடலை  வருத்தார்

என் கல்வியின் காசுக்கு தூக்கம்
இழந்தார் _ என் கண்ணீரின்
 சமயம் எல்லாம் ஊக்கம்
கொடுதார் .

தியாகிகள் எல்லாம்
தந்தையாய் ஆகிறார்கள்
பல தந்தைகள் எல்லாம்
தியாகியாய்  வாழ்கிறார்கள்