June 11, 2012

தந்தை


ஒவ்வொரு தந்தைக்கும்   சமர்ப்பணம்

ஈரைந்து மாதங்கள்
எனை சுமந்த அன்னைக்கு பின்
இது வரைக்கும் என் வாழ்வை
தோள் சுமந்த தோழன்

என்னை கருவாக்க  சில நேரம் 
இன்பம் கண்டார் ..
என்னை உருவாக்க  இன்று
வரை எல்லாம் துறந்தார்

இரவெல்லாம் கண்ணீர்
இதழ்  எல்லாம் உமிழ் நீர்
அன்று மாடியில் தூங்கும் போது
நிலவை ரசிதேன்  _ அவர்
மடியிலே தூங்கிய பின்
நிலவை மறந்தேன்

நான் கண்மூடி படுக்கும்
வரை தூக்கம் இழந்தார் _ நான்
கால் எடுத்து நடக்கும் வரை
தோளில் சுமந்தார்

மாலையில் கைபிடித்து
மலையோரம் நட ப்போம்
அவர் கை பிடித்து போனது
வெறும் பாதை அல்ல

நான் கால் வைத்த முதல்
பள்ளிக்கூடம்  அதுவே

நிலவிலே மனிதன் போன
கதைகள் சொன்னார்
நான் நீதியில் வாழ பல
வழிகள் சொன்னார்

அன்று கதிரவன் மறையும்
வரை கால் சென்றது
அந்த காட்சி மட்டும் இன்று
வரை கண்ணில் உள்ளது

உழவாத நித்திலே உணவு
இல்லை
உருகாத தங்கத்தில் உருவம்
இல்லை
ஊதாத குழலுக்கு இசையும்
இல்லை
உதை வாங்கா    பிள்ளைக்கு
உயர்வும் இல்லை

என்னை அடித்தவுடன்
அழுவது ஆறு கண்கள்
தாயின் கண்கள் எனை
துடைக்க ஓடி வந்தது
தந்தையின் கண்கள்
அழுவதற்கு மறைவில் சென்றது

நான் படிக்காமல் தூங்கி இருந்த 
நேரதில் கூட _ நான்
படிப்பதற்கு தூங்காமல்
வேலை பார்தார் 

என் எதிர்கால   வாழ்கையில்
பூக்கள் வளர
தன் நிகழ் கால      வாழ்வையே
பணயம் வைத்தார்

நான் வளரும் வரை
தோளில் தூக்கி வழி காட்டினார்
நான் வளர்ந்த பின்
தோளில் தட்டி வழி   அனுப்பினார்

எனை கல்லூரி சேர்க்க    டமை
இழந்தார் _ என் கல்விக்கு ஒளி
ஏத்த உடலை  வருத்தார்

என் கல்வியின் காசுக்கு தூக்கம்
இழந்தார் _ என் கண்ணீரின்
 சமயம் எல்லாம் ஊக்கம்
கொடுதார் .

தியாகிகள் எல்லாம்
தந்தையாய் ஆகிறார்கள்
பல தந்தைகள் எல்லாம்
தியாகியாய்  வாழ்கிறார்கள்

32 comments:

  1. Nice nattu!! when I was reading I went somewhere..

    ReplyDelete
  2. "உழவாத நிலத்திலே உணவு
    இல்லை
    உருகாத தங்கத்தில் உருவம்
    இல்லை
    ஊதாத குழலுக்கு இசையும்
    இல்லை
    உதை வாங்கா பிள்ளைக்கு
    உயர்வும் இல்லை"

    அருமை நடராஜ் !.

    ReplyDelete
    Replies
    1. திரு. ராதா கிருஷ்ணன்

      உங்கள் கருத்துக்கு நன்றி....

      Delete
  3. "தியாகிகள் எல்லாம்
    தந்தையாய் ஆகிறார்கள்
    பல தந்தைகள் எல்லாம்
    தியாகியாய் வாழ்கிறார்கள் "

    அருமையான சிந்தனை...

    ReplyDelete
  4. continue ur writing nice to read all the best

    ReplyDelete
  5. What can I say?... simply you are superb!!! keep going, I am sure your thoughts are beatiful. Weldone bro!!

    ReplyDelete
  6. nice da,u become matured ,keep practising we like to see this lyrics in cinemas

    ReplyDelete
  7. என் எதிர்கால வாழ்கையில்
    பூக்கள் வளர
    தன் நிகழ் கால வாழ்வையே
    பணயம் வைத்தார்

    Its real words to every father.
    I miss my father.

    sheriff
    IISR - Riyadh.

    ReplyDelete
  8. என்ன சொல்வது.....?
    வாய் சொல்வதற்கு முன்பு....
    கண்கள் சொல்லிவிட்டது....
    அல்ல அல்ல....
    சிந்திவிட்டது,
    கண்ணீர்......

    அருமை அருமை...
    இந்த படைப்பை பார்க்க பெருமையாக இருகிறது...

    ReplyDelete
  9. அருமையான வரிகள் !
    வாழ்த்துக்கள்!

    அன்னையைப் பற்றி பல கவிதை கேட்ட நான் இன்று தந்தையைப் பற்றி நீங்கள் எழுதிய வரிகளின் சிந்தனையைக் கண்டு மகிழ்தேன்....
    தொடரட்டும் உங்கள் படைப்புகள் :-)

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்துக்கு . மிகவும் நன்றி..:)

      Delete
  10. Intha "Thanthaiyar Thinathil" Thanthaiyai, manathara ninaika vaitha un kavikku en siram thalntha Valthukkal..! Valarga un kavipulamai..

    ReplyDelete
    Replies
    1. hi francis..:) thanks for ur feedback... and thanks for ur wishes..:)

      Delete
  11. தந்தை வரிகளின் சிந்தனையைக் கண்டு மகிழ்தேன்....இந்த மாமான்,
    இந்த படைப்பை பார்க்க பெருமையாக இருகிறது.
    ..............வாழ்துக்கள்.............

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாமா ... எல்லாம் அவன் செயல் ...:)

      Delete
  12. very excelent vaalthukkal

    ReplyDelete
  13. ஒவ்வொரு வரியும் சிந்திக்க வைக்கிறது.

    ReplyDelete
  14. nice..... its been fate i have not experienced these things... but nice... he changed his status to late when i was knowing the world..... but it was also a learning process for me... i have been strong enough to face situations and lead my life.....

    ReplyDelete
    Replies
    1. thanks for ur valuable feedback.... hope ur life will be good in all ways..thanks..:)

      Delete
  15. super. i believe, you understood the fatherhood completely from the lines you have written. amazing words.

    ReplyDelete