June 22, 2012

மங்கை





ஒரு அழகியின்  முகவுரை




கொஞ்சி பேசும் பிஞ்சி  தமிழும்
குழந்தை முகமும்
 செஞ்சி வச்ச சிற்பக்கரமும்
 சிவந்த இதழும்

சொக்க வைக்கும்  அவள் நடையும்
சுழலும் இடையும்
பற்ற  வைக்கும் அவள் விழியும்
பருவ உருவமும்

சிந்தை எல்லாம் அவள் எண்ணமும்
சிவந்த கன்னமும்
விந்தையான அவள் சிரித்தால்
 விழுமே  பள்ளமும்


செம்மையான பிஞ்சு வெள்ளரியாய்
விளைந்த விரலும்
மென்மையான வீணை இசையாய்
இனிய குரலும்


கோவை இதழ் உள்ளினிலே
பளிங்கு பற்கள்
பாவை அவள் பேசுவதே
 கவிதை சொற்கள்


கொஞ்சம் நேரம் அவள் சிரித்தால்
குவியும்   மேகங்கள்
நெஞ்சம் அவளை நினைகயிலே
உருகும் தேகங்கள்


கார் கூந்தல் இடம்
அமர பூக்கள் வாடும்
அவள்  கனியிதழ்   தேன்
சுவைக்க   வண்டுகள் தேடும்


துள்ளி அவள் ஓடும்   அழகில்
மான்கள்    தோற்கும்
கள்ளி அவள் ஆடும் அழகை  மயில்கள்
மறைந்து   பார்க்கும்


அவள் அங்கம் மேலே தங்கம்
வைத்தால் தங்கம் கருகும்
அவள் அன்ன விழியில் கண்ணீர்
பார்த்தால் உலகம் உருகும்


பிறை நிலா  பின்பம் போல
வளைந்த    புருவம்
முழு நிலா  அவளை   கண்டால்
  கொள்ளுமே   கர்வம் .

2 comments:

  1. கொஞ்சம் நேரம் அவள் சிரித்தால்
    குவியும் மேகங்கள்
    நெஞ்சம் அவளை நினைக்கையிலே
    உருகும் தேகங்கள்'

    ரசித்த வரிகள் பிரமாதம் நட்ராஜ்.

    'அவள் அங்கம் மேலே தங்கம்
    வைத்தால் தங்கம் கருகும்
    அவள் அன்ன விழியில் கண்ணீர்
    பார்த்தால் உலகம் உருகும் '

    இதுதான் சரியாய் இருக்கும்னு நெனைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. thanks raki....:) ur correction looks too cool..:)

      Delete