June 28, 2012

ஒரு மரத்தின் எச்சரிக்கை





மானிடர்களே....

உங்கள் சுயநல  போக்கிலே
மாற்றம்  வேண்டும் - இந்த
சுந்தர பூமியை  கொஞ்சம்
காக்க வேண்டும்



அடுப்பிலே எரிவதற்கு உடலை தந்தோம்
அமர்ந்து நீங்கள் இருபதற்கு  உடலை தந்தோம்
துடுபாகி போவதற்கு  உடலை தந்தோம்
துண்டாகி துண்டாகி எல்லாம்   தந்தோம்

கனியாகி காயாகி பசியாற்றினோம்
தாளாகி நூலாகி  படிபேற்றினோம்

கருமேகம் குளிறுற்றி மழையாய்
செய்தோம் _ உங்களை காலமும்
காத்து பெரும்  பிழையை  செய்தோம்

எங்கள் நிகழ்கால வனதை
நீங்கள்  அழிப்பதால்
உங்கள்  எதிர்கால  இனத்துக்கு
எமனாய் முடியும்

உங்கள் சுயநல புத்திக்கு
சொல்லி கொடுங்கள்
வரும் எதிர்கால
வர்க்கத்தை வாழ விடுங்கள்


ஆற்றை எல்லாம் வற்றி விட்டு _ எங்கள்
ஆளை எல்லாம்  வெட்டி   விட்டு
காசை மட்டும் வைத்து கொண்டால்
கஞ்சிக்கும் கனிகும் வழியே இல்லை

கால் கழுவ கூடவும் தண்ணி இல்லை
இதை புத்தியில் ஏற்றினால் பாரமில்லை
அன்றி
உங்கள் அழிவிற்கு காலமும் தூரம் இல்லை

எங்களை இருக்க விட்டால்
இருக்கும் வரை எல்லாம் தருவோம்
இல்லை என்றால்
உங்களை அழித்து விட்டு
மீண்டும் வருவோம்

ஆறறிவை அழித்து விட்டு
மீண்டும் பிழைபோம் _ பின்
ஐந்தறிவை  மட்டும்  கொண்டு
அமைதியில் தழைப்போம்


கருணை அற்ற உங்கள் செயல்
அழிவில் முடியும் _ சொரணை
அற்ற உங்களுக்கு ஒரு  எச்சரிக்கை ..



    _ இப்படிக்கி
        ஒரு மரம்

*ஆறறிவை - மனிதர்கள்
*ஐந்தறிவை  - மிருகங்கள்


4 comments:

  1. வனத்தை அழித்து வானத்தை பார்த்தால்
    மழை வருமா நமது வர்க்கம்தான் செழிக்குமா?.

    தேவையான எச்சரிக்கை..தொடரட்டும் சிந்தனை.

    "அடுப்பிலே எரிவதற்கு உடலை தந்தோம்
    அமர்ந்து நீங்கள் இருப்பதற்கு உடலை தந்தோம்
    துடுப்பாகி போவதற்கு உடலை தந்தோம்
    துண்டாகி துண்டாகி எல்லாம் தந்தோம்

    கனியாகி காயாகி பசியாற்றினோம்
    தாளாகி நூலாகி படிபேற்றினோம்

    கருமேகம் குளிறுற்றி மழையாய்
    செய்தோம்"

    மறுமுறை வாசிக்கும்போது இனித்த வரிகள்..

    ReplyDelete
  2. true lines.........

    ReplyDelete