January 14, 2013

கொடுமை ..:(


பொங்கல்




நாலு நாள் பொங்கல் வரும்
நாலு கோடி இன்பம் தரும்
போகி வரும் புகை வரும் - பின்
பொங்கல் பொங்கி இன்பம் வரும்
காளை எல்லாம் சீறி வரும் - கடைசியா
காணும் பொங்கல் காசு வரும்

வீடு எல்லாம் பொங்கல் பொங்கும்
உழவுக்கு நன்றி சொல்ல
மாடு வெறும் மாடுஅல்ல
உழவனுக்கு செல்ல பிள்ளை

மாட்டு கொட்ட கும்பாபிசேகம்
மாமன் பொண்ணு கொஞ்சி பேசும்
காளைகள் வண்ணம் பூசும்
கரும்பு திண்ணும் பந்த பாசம்

நெல்லு தரும் மண்ணுயிருக்கு
நேர்மை கொண்ட நெஞ்சிருக்கு
சங்கத்தமிழ் தாயிருக்கா
சந்தோசமா பொங்கல் பொங்கு

போன வருஷம் கஷ்டமெல்லாம்
போகியோட போகட்டம்
ஆணை வச்சி நெல்லுடைச்ச
அந்த காலம் மீளட்டம்

வானத்துல சாமி இருக்கு
வாழ்க்கையில அன்பு இருக்கு
ஊனம் என்று எதுவுமில்லை
உழைக்க நல்ல தெம்பு இருக்கு

சாதி சனம் எதுவுமில்லை
சாமி கூட எதுவும் இல்ல
கம்பு காடும் காராம் பசுவும்
நம்பும் நமக்கு சாமி புள்ள

கஞ்சோ கூழோ எதுவோ
மனசு நிறைய வாழலாம்
நெஞ்சில் வஞ்சம் கொஞ்சமின்றி
நன்றி சொல்லி பொங்கல் போடலாம்


கழனியிலே வேர்வ சிந்தி
வயத்து பசிக்கு ஆக்குவோம்
கதிரவனை நம்பி நம்ப
கவலைகளை போக்குவோம்

பொங்கலோ பொங்கலோ பாடுவோம்
எத்தனை போராட்டம் வந்தினும் மீளுவோம் ...........

தமிழனின் பொங்கல் தை பொங்கல்
அணைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்

அன்புடன் - வை .நடராஜன்

சுவாமி விவேகானந்தரின் 150 பிறந்த தினம்






ஆன்மீக போராளி .....

எல்லாம் துறந்து
கடவுளை காண முயலும்
ஞானிகள் உலகில்
எல்லோரையும் கடவுளாய்
பார்த்த ஞானி .....
இறைவனை மட்டும் நினைக்காமல்
இளைஞர்களை நினைத்து வாழ்ந்த
சமூக சுவாமி ..சமூக சிற்பி

ஆயிரம் மந்திரங்கள்
ஆயிரம் பஜனைகள்
இறைவனுக்கு இருந்தாலும் ..
அவர் மரணம்வரை
கூறி வாழ்ந்த ஒரே மந்திரம்

'' நம்பிக்கை '' ...

மூச்சி இருக்கும் வரை
மரணமில்லை
முயற்சி இருக்கும் வரை
தோல்வியில்லை.

எதையும் தாங்கும்
மனமிருந்தால்
வதையும் வாழ்வில்
வலிகள் இல்லை.

நம்மிக்கையுடன் வாழ்வோம் ....


- வை .நடராஜன்

நான் ஏன் பொறுக்கி ஆனேன்


நான் ஏன் பொறுக்கி ஆனேன் ???

கௌதம முனிவரின் மனைவியை
ஏமாற்றி கெடுத்தவன் தேவன் ஆனான்
கண்ட பெண்களிடம் எல்லாம்
காதல் லீலை புரிந்தவன் கடவுள் ஆனான்
பத்து இருவது என மனைவிகளை
அடுக்கிவன் எல்லாம் அரசன் ஆனான்
நேசித்து பழகிய ஒரே பெண்ணிற்காக
அலையும் நான் மட்டும் பொறுக்கி ஆனேன் .

- வை .நடராஜன்

நாத்திகம்




தமிழகத்தை பொறுத்தவரை ''நாத்திகம்'' என்பது
இந்து மதத்தை இழிவு படுத்த மட்டுமே பயன்படுத்தப்படுகிறது .....:##

ஒரே நிலவுதான்




எங்கிருந்து பார்த்தாலும்
ஒரே நிலவுதான்
எந்த பெண்ணை பார்த்தாலும்
உன் ஒரே நினைவுதான்

வார்த்தை உண்மை ஆனது
வாழ்க்கை தூய்மை ஆனது
கல் கூட மென்மையானது - காரணம்
உன் பெண்மையானது ..

ஏகலைவனாய் மாறிவிட்டேன் -
உனை பார்த்து
ஏகப்பட்ட நல்லவை கற்றுக்கொண்டேன் .

அணைத்தும் ஆனாய்
ஆசாணும் ஆனாய்

நாம் ஒன்றாக வாழவில்லை எனினும்
நீ நன்றாக வாழ்தல் வேண்டும் .

- வை .நடராஜன்

ஒழுக்கம் , உடையில் அல்ல




உடலுக்கு
துணியை மாற்றுவது போல்
துணையை மாற்றாதே

ஒழுக்கம் ,
உடையில் அல்ல
உள்ளத்தில் ,
அங்கத்தில் அல்ல
அகத்தில் ......

மெய்யான என் அன்பை
ஒரு நாள் உணருவாய்
துடுப்பில்லா ஓடம் போல
துணையின்றி திணறுவாய் ..

- வை .நடராஜன்

இரண்டே ஆசை






மணக்க தடை இருந்தால்
நினைத்து வாழ்வேன்
நினைக்கவும் தடை விதித்தால்
என்ன செய்வேன் ??

நாகரீகமாக அழ
தெரியவில்லை
நாலு பேரு முன்னாலும் அழ
முடியவில்லை

காதலில் மனம் போகும் வரை
கடவுளை துதித்ததில்லை
கடவுளாய் உன்னை பார்த்தும் - நீ
கடுகளவு கூட எனை மதித்ததில்லை ...

இரண்டே ஆசை ,

ஏமாற்றிய உனை நான்
நிந்திக்க கூடாது - இனி
எக்காலமும் உனை நான்
சந்திக்க கூடாது

- வை .நடராஜன்

இந்தியா விற்பனைக்கு







என்னை முன்னேற்ற என்
நாட்டுக்கு தெரியவில்லை
பெண்ணை வளர்க்க முடியவில்லை - என்று
கூட்டிகுடுப்பது முறையல்ல ..

காந்தி அவர்களே ,

நீங்கள் சிறை பட்ட
கிளியை விடுவித்து
குணம் கெட்ட குரங்குகளிடம்
குடுத்து விட்டீர்



ஊருக்கு இரண்டு ஏக்கர்
ஒதிக்கி வைத்து விடுங்கள்
ஒரு ஏக்கர் வால் மார்ட்டுக்கு
ஒரு ஏக்கர் எங்கள் சுடுகாட்டுக்கு ..

- வை .நடராஜன்




சுபமாக முடிய வேண்டிய
என் காதல்
சுலபமாக முடிந்து விட்டது :(

- வை .நடராஜன்