நாலு நாள் பொங்கல் வரும்
நாலு கோடி இன்பம் தரும்
போகி வரும் புகை வரும் - பின்
பொங்கல் பொங்கி இன்பம் வரும்
காளை எல்லாம் சீறி வரும் - கடைசியா
காணும் பொங்கல் காசு வரும்
வீடு எல்லாம் பொங்கல் பொங்கும்
உழவுக்கு நன்றி சொல்ல
மாடு வெறும் மாடுஅல்ல
உழவனுக்கு செல்ல பிள்ளை
மாட்டு கொட்ட கும்பாபிசேகம்
மாமன் பொண்ணு கொஞ்சி பேசும்
காளைகள் வண்ணம் பூசும்
கரும்பு திண்ணும் பந்த பாசம்
நெல்லு தரும் மண்ணுயிருக்கு
நேர்மை கொண்ட நெஞ்சிருக்கு
சங்கத்தமிழ் தாயிருக்கா
சந்தோசமா பொங்கல் பொங்கு
போன வருஷம் கஷ்டமெல்லாம்
போகியோட போகட்டம்
ஆணை வச்சி நெல்லுடைச்ச
அந்த காலம் மீளட்டம்
வானத்துல சாமி இருக்கு
வாழ்க்கையில அன்பு இருக்கு
ஊனம் என்று எதுவுமில்லை
உழைக்க நல்ல தெம்பு இருக்கு
சாதி சனம் எதுவுமில்லை
சாமி கூட எதுவும் இல்ல
கம்பு காடும் காராம் பசுவும்
நம்பும் நமக்கு சாமி புள்ள
கஞ்சோ கூழோ எதுவோ
மனசு நிறைய வாழலாம்
நெஞ்சில் வஞ்சம் கொஞ்சமின்றி
நன்றி சொல்லி பொங்கல் போடலாம்
கழனியிலே வேர்வ சிந்தி
வயத்து பசிக்கு ஆக்குவோம்
கதிரவனை நம்பி நம்ப
கவலைகளை போக்குவோம்
பொங்கலோ பொங்கலோ பாடுவோம்
எத்தனை போராட்டம் வந்தினும் மீளுவோம் ...........
தமிழனின் பொங்கல் தை பொங்கல்
அணைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்
அன்புடன் - வை .நடராஜன்
No comments:
Post a Comment