May 17, 2012

இன்றைய தமிழகம்



கடவுளின் அருள் பெற்று பயன் அடைந்த
கூட்டத்தை  விட
கடவுளின் பெயர் சொல்லி பயன் அடைந்த
கூட்டம் அதிகம்

தியானமும் யோகாவும் விற்பனைக்கு
ஞானமும் கடவுளும் கற்பனைக்கு

பாதி நேரம் அருளுரை
மீதி நேரம் ஆணுறை
கட்டினிலே கன்னி
கையிலே கமண்டலம்

ஆசையை துறந்தவர்கள் இருந்த
பதவியிலே இன்று
ஆடையை துறந்தவன் அமர்கிறான்

திரை போட்டு காட்டியும்
திருந்தாத மக்கள் _ சிலர்
கறை பட்ட பின்பும்
வருந்தாத மாக்கள்


இயற்கையின் விதி இணை சேற
வேண்டும்
இருபாலும் அதற்கு துணை
சேற வேண்டும்
அதற்கு முறையாக முன்னோர்கள்
வைத்த  பெயர் திருமணம்

ஆனால்
அன்று கடல் கடந்து வியாபாரம்
இன்று கல்யாணத்தில்  வியாபாரம்

சில பவுன் நகைக்கு ஆண்மையை
விக்கிறான்
தங்கத்தை  கொடுத்தால்
அவன் தாய்மையை கொடுக்கிறான்

அன்று குளத்தடி நீரிலே
குளித்த என் தமிழினம் _ இன்று
நிலத்தடி நீரைகூட  காணாமல்
தவிகிறது

நேர்மையை  மறந்து விட்டோம்
நிம்மதி இழந்து விட்டோம்
நீதியை துறந்து விட்டோம் - அட
நீரை கூட  இழந்து விட்டோம்

ஒரு படி அரிசிக்கி உரிமையய்
விற்றோம் - பிச்சைக்கார
வேடத்தை பெருமையாக
பெற்றோம் 

ஒரு வேளை காமதில்
சுகம் இல்லை என்றல்
கூடகுட மாட்டோம்
குழந்தையை  free'ya கேட்ப்போம்



அன்று சொந்தங்கள் கூட  சொர்கத்தை
கண்டோம்
இன்று  சொத்துக்காக  சொந்ததை
மறந்தோம்

அன்று வழிபோக்கன் வாழ கூட
திண்ணையை வைத்தோம் - இன்று
வயதான பெற்றோரையே 
தெருவிலே  விட்டோம்


அன்று கோ உயர குடி உயர்ந்தது
இன்று குடி உயர கோ உயர்கிறது
அரசாங்கம் ஊத்தி  தரும்
அநியாயம் போத்தி வரும்

கல்வியெல்லாம் தனியாரிடம்
காலமும் மதுக்கடை அரசிடம்
குடிக்க  Beer இருக்க
படிக்க Book  எதற்கு  ?


நீதியில் நிலைத்து
நித்தமும் உழைத்து
நிம்மதியில் வாழ்ந்த
எம் தமிழனின்
வாழ்கை இனி
காணவும்  கிடைகாது
அந்த காலமும் திரும்பாது


இன்னும்...

சோழனும் கம்பனும் வாழ்ந்த
எங்கள் பூமி என
பெருமை பட்டு கொள்வதால்
பயன் ஒன்றும் இல்லை
நம்   இனதின்  பெருமை மறைய
  காலம் தூரம்  இல்லை





10 comments:

  1. உன் படைப்புகளை எல்லாம் ஆவணமாக்கு!
    அதை பட்டி தொட்டிக்கெல்லாம் பாசனமாக்கு!!
    படிப்பவர்கள் சிந்திக்கட்டும்!
    படித்தவர்கள் சாதிக்கட்டும்!!
    பழமை தமிழகம் விதைப்போம்!
    புதிய தமிழகம் படைபோம்!!

    ReplyDelete
  2. உன் கருத்துகள் சமூகத்திற்கு சாட்டையடி, இன்னும் நிறைய எழுதவும் :) ஆங்காங்கே சில எழுத்துப்பிழைகள் சரி பார்க்கவும்.

    ReplyDelete
  3. சாட்டையடி கவிதை, மிகவும் அற்புதமான சிந்தனை, மேலும் மேலும் மிளிர என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  4. உங்கள் அனைவர்க்கும் நன்றி

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  5. இளைய தலைமுறை சிந்திக்க வேண்டிய கருத்துக்கள் நட்ராஜ் ..
    ஆனால் தமிழும் தமிழனின் பெருமையும் என்றும் நிலைக்கும் !!.

    ReplyDelete
  6. அருமையான வரிகள் தொடர்ந்து எழுத வாழ்த்துகிறேன்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்துக்கு மிகவும் நன்றி
      கண்டிப்பாக தொடரும்

      Delete
  7. vethanaiyana unmai thevaiyana karuthukal anna

    ReplyDelete