March 29, 2012

வறுமை கொடுத்த வழி...


விலைமாந்தர்


அவளை பழிக்கதே...

நீ பணத்துக்காக 
பலவற்றை விற்கிறாய்
அவள் உடலை மட்டும்தான்
விற்கிறாள்

உன் ருசிக்கி உணவலிதால்தான்
அவள் பசிக்கு
உணவு

வறுமை கோடாக இருந்தால்
தாண்டிவிடலாம் அவளுக்கோ
வறுமை  காடாக உள்ளது

தன்னை தந்த தந்தையய்
 தவழும் வயதிலே 
இழந்துவிட்டால்


கண்ணை இழந்து
கட்டினிலே கிடந்து
பெண்ணையே நம்பி
வாழும் அவள் அன்னை

குடும்ப சுமைய குறைக்க
மூட்டை  சுமையய் தூக்க கூட
வாட்டம் இல்லா வளைந்த
கால்களுடன் தம்பி

காசை கொடுகாத கடவுள்
காச நோயை கொடுத்துவிட்டார்
இரவெல்லாம் இரும்பி இம்சை
தரும் அவள் தாத்தாவுக்கு

கூலி  வேலை
செய்தால்  கூழை குடித்து
வாழ்ந்து விடலாம்
ஆளுக்கு ஒரு குறையான
நாளுக்கு ஒரு  மருந்து வாங்க வேண்டுமே

பழி பல வரட்டம் பரவா இல்லை
வழி அதுவெ
சென்று விட்டால்

காமத்தை அடக்காமல்
அலைகின்ற ஆணுக்கு
கஷ்டத்தை பொறுகாமல்
தவறிகின்ற பெண்ணே மேல்

அவளை

சரியென்று கூறவும் நான் வரவில்லை
தவறு என்று கூறவும் மனம் இங்கு இல்லை

பழிபப்வர்களே........

அவள் வாழ்கையில்
சிறக்க வழி இருந்தால்
செய்யுங்கள்.... இல்லை என்றால்
வந்த வழி செல்லுங்கள்....

6 comments:

  1. நான் படித்த உங்களின் முதல் கவி இது, நல்ல முயற்சி, எழுத்து பிழை சில உள்ளன, மேலும் படித்தபின் மேலும் கருத்துக்கள் தொடரும்.

    ReplyDelete
  2. நன்றி..:)


    தமிழ் அழகாக எழுதா வருகிறது
    அனால் சரியாக வரவில்லை..:)
    திருதிகொள்கிறேன் ..

    ReplyDelete
  3. megavum unmaiyan avrgal vaalkaiya solleeirukeendeergal avrgal vaalu serakka naam anivarum kandeepaga muyarche cheia veandum

    ReplyDelete
  4. megavum unmaiyan avrgal vaalkaiya solleeirukeendeergal avrgal vaalu serakka naam anivarum kandeepaga muyarche cheia veandum

    ReplyDelete