அன்னையை அடகு வைத்து
ஆடம்பரமாய் வாழ்வது போல
என்னையே அழித்து வாழும்
மதியற்ற மானிடர்களே.
பெரும் மழையும் எரிமலையும்
பூகம்பம் புயல் காற்றும்
நான் செய்யும் பெரும்நாசம்
என் வீடு என் குழந்தைகளை
சுயநலத்தில் கருவறுக்கும்
உங்களை படைத்தது
நான் செய்த பெரும் பாவம்
நான் படைத்தேன்
எனை அழித்தீர்
நீர் படைத்த மதத்தை காக்க
பெரும் செல்வம் கொடை அளித்தீர்
மூடர்களே ,
வீடே எரியும் போது
விளக்கிற்கு எண்ணெய் எதற்க்கடா ?
இயற்கையை அழித்த பின்
இறைவனும் மதமும் எதற்க்கடா ?
பூமியை காப்பாற்று
நான் , கெஞ்சவில்லை
உங்களை காப்பாற்றிகொளுங்கள்
எச்சரிக்கிறேன்
உங்களால் எனக்கு
சில கால வலி - உங்களுக்கு
நிரந்தர அழிவு .. .
- வை . நடராஜன்
Photography By : Brent Stirton , National Geographic Society .
கவிதையை முடித்த விதம் அருமை.
ReplyDeleteபடம் மனதைப் பிசைந்து விட்டது .
தொடருங்கள் தொடர்கிறேன்.
நன்றி