July 12, 2012

தமிழ்த்தாய்







எங்கள் தாய் தந்தை கூடலில்
தரணியில்  வந்தோம் _
 எந்ததலைமுறையின்  புண்ணியமோ
தமிழனாய்  வந்தோம்

வற்றாத நதி முன்னே மழை
வந்தது _ அந்த மழை
வர மூலமாய் முன்
கடல் வந்தது

பற்றாத ஒளி முன்னே
இருள் வந்தது _ உலக
நாகரிகம் வரும் முன்னே
தமிழ் வந்தது

அங்கே காட்டினில் மொழி இன்றி
கையால் பேச _ இங்கே
கன்னித்தமிழ் புலவர்கள்
கவிதை படைத்தார்

அங்கே மலைக்குகை இருளிலே
இரவை கழித்தான் _ இங்கே
மலை குடைந்து பாறையில்
இறையை வடித்தான்

வற்றாத வளமையினால்
அள்ளி தந்தால் _ மானிட
வாழ்வியல் தர்மத்தை
சொல்லிதந்தால்


வள்ளுவன் வாயிலால்
நீதி வளர்த்தாள் _ பல
வள்ளர்கள் தனை தந்து
தர்மம் வளர்த்தாள்

மெய்ஞான வளர்வதில்
வழி காட்டினாள்
பல மெய்ஞான சித்தர்களுக்கு
வலுவேறினால்
அஞ்ஞான இருள் நீக்கி
ஒளி ஏற்றினால் இந்த
விஞ்ஞானம் வளர வளர
தன்னை மெறுகேற்றினால்


தங்கத்தின் இணைக்கு
நிகர் தகரமில்லை   எங்கள்
தமிழ் மொழியின் இனிமைக்கு
நிகருமில்லை

அவள் அங்கத்தின் அணிகளாய்
காப்பியம் கொண்டால் _
சங்கத்தின் காலத்தில்   பெரும்
மேன்மையை கண்டால்

மலர் எல்லாம் மாலையாக
மாறுவதில்லை _ மற்ற
மொழியெல்லாம் தமிழ்
தேனாய் ஊருவதில்லை

சோதனை பல தாண்டி
தீரம் காட்டினாள் பல
சோழனை பெற்றேடுத்து
வீரம் காட்டினாள்

கடவுளின் மொழிதான்
சமஸ்க்ரிதம் என ஒரு
கூட்டத்தின் கூச்சலை
கேட்டதுண்டா  ??

அவர் எம்மொழி பேசினாலும்
கவலை இல்லை _ எங்கள்
செம்மொழி  இல்லையனில்
கடவுளே இல்லை

காமத்தில் பிறந்தது
மனிதர் இனம் _ பூமி
கடைமனிதன் இருக்கும்
வரை தமிழரினம்


இப்பிறப்பு முடியும்
வரை   மெய் பேச வேண்டும் _இனி
எப்பிறப்பு எடுத்தாலும் தமிழ்
பேச வேண்டும்

8 comments:

  1. super sir but romba gavanithu padithal than konjam artham purivathu pole ullathu elimayana tamilil sonnal ennai ponrorukku innum nanraga puriyum

    ReplyDelete
  2. தங்கள் கருத்துக்கு நன்றி
    கண்டிப்பாக கவனம் செலுத்துவேன்

    ReplyDelete
  3. Karuthu Azhalam !!!! Kavithai nadai sirappu , vaazhthukkal!!!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு நன்றி Bossu. :)

      Delete
  4. arumai arumai.....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு நன்றி

      Delete
  5. நடராஜன் பெயர் மருவி கவி நடைராஜன் என்றில் தவறில்லை
    புடமேற்றி தங்கத்தமிழில் மெருகேற்றி நிதம் படைத்தலில் குறையில்லை!!!

    வடம்பிடித்த தேர்போலே நின்தன் கவிநடை வளம் பெருமை
    குடம்நிறை நீர்போல் தளும்பாத வரிகளே இனிமை!!!

    தொடரட்டும் உங்கள் பணி நாங்கள் ரசித்து சுவைக்க
    படரட்டும் தமிழ் வேட்கை வெறி இந்த வையகம் மலைக்க!!!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க
      நன்றி ...:) இன்னம் அழகாக எழுத தங்கள் வாழ்த்து
      ஒரு வரமாக அமையும்

      Delete