July 28, 2012

காமம்




ஆசை தான் அதிகமானால்
அங்கம் தான் புனிதமாகும்
தேகங்கள் கூடளிலே
மோகத்தால் மூச்சடைக்கும்

ஆடையே பாரமாக
அச்சமோ தூரம் போக
அணைத்தவளே ஆடையாக _  அவள்
இதழ் என்னை ஈரம்மாக்க

எங்கள்

நிர்வாண கோலத்திலே
நிலவுகே மோகம் வரும்
காலை பகலவன் பார்த்தல்
அவனுகே கூச்சம் வரும்

ஐந்தடி உடல் மூலம்
அகிலத்தை ரசித்தேன் _ அவள்
அழகிய இதழிலே அமுதத்தை
ருசித்தேன்

அந்த தீண்டாத கொடி முல்லையை
நான் தின்னாத இடமில்லை
தாண்டாத எல்லை தாண்டி
பண்ணாத செயல் இல்லை
தேகத்தின் இடமெல்லாம்
இதழ் படா இடமில்லை

வறண்ட என் தேகத்திலே
திரண்ட அவள் முத்த மேகம்
புரண்டு புரண்டோம் காலை வரை
தீரவில்லை தேக மோகம்
மோகத்தில் மோதிய பின்
தேகத்திலே சூடு _ அவள்
தேகமெல்லாம் ருசித்த பின்
தேவையா தேன் கூடு ?

நீ தொடதான் நான் பிறந்தேன்
நான்  தொடதான் நீ பிறந்தாய்
நாம் தொட்டோம் யார் பிறப்போ

வானமே போர்வை ஆயின
வாசமே வேர்வை ஆயின
நக கீறல் கோலமாயின
முகமெல்லாம்  ஈரமாயின

போதும் என்று சொல்லி சொல்லி
நடித்தால் _ என்னை
போக சொல்லி கொண்டே அணைத்து
பிடித்தால்

உலகிலே உணவு தான் பலவிதம் _ மனிதன்
உணர்கின்ற பசி மட்டும் ஒன்றேதான்
கண்ணனுக்கு பெண்ணினம் பல விதம்
காமத்தில் தீண்டுகையில் ஒன்றேதான்

எந்த ஆண்மகனும் ருசிக்காத
அழகிய  தேன் கிண்ணம் _ அவளை
ஆயிரம் முறை ருசித்தாலும்
அடங்காது ஆண் சின்னம்



.....................................................................................


 * கோயில் சிலைகளில் தவறு இல்லை என்றால்
என் கவிதையும் தவறில்லை



4 comments:

  1. ஆண்கள் யோசிக்கும் மிகச்சிறந்த கவிதை,, நல்ல கவிஞராக உங்கள் பயணம் தொடரவும்

    எல்லாம் சிறப்பாக .... என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமை! ஆண்மை இல்லாதவர்க்கும் ஆண்மை வரக்கூடிய கவிதை !!

    ReplyDelete