July 24, 2012

சாராய பூமி







மதுக்கடை காசிலே மாநில
வளர்ச்சியா ?
எங்கள் கோமணத்தை உருவி தான்
நீங்கள் கோட்டை கட்ட வேண்டுமா ?

நாங்கள் மயக்கதிலே கொடுத்த
காசுதான் இம்மாநிலத்தை
வளர்க்குதாம் _ எங்களை
அம்மணமாய் ஆக்கிய பின்
வெள்ளி அரனான் கயறு எதற்கு ?

வாங்கி குடித்து முடியும் வரை
வாடிக்கையாளர் என்பீர் _ அவர்கள்
குடித்து முடித்து வெளியே வந்தால்
சமூக விரோதி என்பீர்

திருத்த வேண்டிய கடமை மறந்து
ஊத்தி கொடுத்து கெடுத்து வைத்தீர் _  வெறும்
பொழுதை போக்க குடித்தவனை _ இன்று
பொழுதோரம் குடிக்க வைத்தீர்

வருமானம் பற்றாமல்
வலுவிழுந்து போனால்
விபசாரத்தையும்  பொதுவாக
தத்தெடுத்து  _ விலைமாதை
வரி போட்டு விற்பீரா ?


அரசே ....

பலர் ஆரோக்கியத்தை கெடுத்த
பணம்  பாவம்  அதை தீண்டாதே
சந்தனக்கட்டையிலே  சாக்கடையை
நோண்டாதே


புகழோடு வாழ்ந்து வந்த
தமிழ் மகனை _ சாக்கடை
புழுவோடு புரள வைத்த
புண்ணியவான்களே

தன் மக்களை குடிக்க வைத்து
லாபம் பார்க்கும் அரசுக்கும்
தன் மகளை தாசியாக்கி வயறு
வளர்க்கும் அப்பனுக்கும்

என்ன வித்தியாசம் ?


8 comments:

  1. சாட்டையடி!..

    ReplyDelete
  2. "தன் மக்களை குடிக்க வைத்து
    லாபம் பார்க்கும் அரசுக்கும்
    தன் மகளை தாசியாக்கி வயறு
    வளர்க்கும் அப்பனுக்கும்

    என்ன வித்தியாசம் ?" - ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்!!..

    ReplyDelete
  3. மிக்க நன்றி அண்ணா ..:)

    ReplyDelete
  4. கவிதைகள் அனைத்தும் கருத்துக்கள்.. கரு முத்துக்கள்.. முகப்புத்தகத்தில் பகிர்ந்து இருக்கிறேன்... உங்கள் முகப்புத்தக கணக்கை சொல்லுங்கள்.. நண்பாராக விருப்பம்...
    இப்படிக்கு
    முருகன்

    ReplyDelete
    Replies

    1. மிக்க நன்றி நண்பரே :

      http://www.facebook.com/natraj.steven

      Delete