வானம் போன்று
உயர்ந்த மொழி
மானம் போற்றும்
மரத்தகுடி
தேனும் பாலும்
கலந்த மொழி _ எங்கள்
தேகம் எல்லாம்
கலந்த மொழி
வீரம் ஞானம்
நிறைந்த குடி
ஈரம் நெஞ்சில்
இளகுமடி
திராவிடன் என்ற
சாயம் பூசி _ எங்கள்
தமிழெனும் முகத்தை
இழந்தோமடி
திராவிட தெலுங்கனை
கண்டதுண்டா _ நான்
திராவிடன் என்றவன்
சொன்னதுண்டா ?
கேரளவன் சொன்னதை
கேட்டதுண்டா _ கன்னடன்
சொன்னதை கண்டதுண்டா ?
எங்களை மட்டும்
திராவிட மாயையில்
மயக்கிய உங்களுக்கு
மதியும் உண்டா
சிலர் தமிழ் பேசும்
அழகில் மயங்கி
தலைவன் என்றோம்
வீடுவந்த கள்வனுக்கு
விருந்தினை வைத்தோம்
தமிழை வளர்த்த பெரியவர்களை
தெருவில் வைத்தோம்
தமிழை வைத்து வளந்தவர்களை
பதவியில் வைத்தோம்
படம் பார்த்தே பாவத்திலே
பாதியை செய்தோம் _ தன்
அகம் காட்டிய அழகிக்கெல்லாம்
ஆலயம் செய்தோம்
தம் அடிக்கும் நடிகரை எல்லாம்
தலைவனாய் வைத்தோம் _ நம்
தமிழ் காக்க உழைத்தவர்களை
தெருவிலே வைத்தோம்
பொழுதுபோக்கு திரைபடத்தை
பொதுவிலே வைத்தோம் _ அதை
போழுதோறம் பேசியே
நேரத்தை கெடுத்தோம்
கூத்தாடும் நடிகரை எல்லாம்
கோயிலில் வைத்தோம் _ சிலர்
கெடுததெல்லாம் பத்தாது என்று
கோட்டையில் வைத்தோம்
உழைத்தவர் பலர் உண்மையிலே
ஊருக்குள் இருக்க - நடித்தால் போதும்
நாட்டை ஆள வா
என அழைப்போம்
படிக்கும் நல் பழக்கதினை
பரனையில் வைத்தோம்
குடிபதையும் எடுபதையும்
பொதுவிலே வைத்தோம்
வெளுப்பு நிற சாயம்
வாங்கி விட்டிலே வைத்தோம்
கருப்பு தான் தமிழன் நிறம் _ என்ற
உண்மையை தைத்தோம்
அலுவலகத்தில் தமிழை
பேச அசிங்கம் கொள்வோம்
பேசும் ஆங்கிலத்தில் தவறு
என்பினும் ''ஆ''வேன ரசிப்போம்
தேசிய ஒருமைப்பாடு என
உரைத்து சொல்வார் _ நாம்
தேவைக்கென தண்ணி கேட்டால்
முறைத்து கொள்வார்
அடிப்பதை எல்லாம் தாங்கு
என டெல்லி சொல்லும்
நாம் அனைவருமே இந்தியன்
என காரணம் சொல்லும்
நதியெல்லாம் ஒன்றாக்கு
தேசியம் ஓட்டும் _ இல்லை
நம் தேசிய பற்று எல்லாம்
கிரிக்கெட்டில் மட்டும்
தமிழா
நடிகன் வெறும் நடிகன்தான்
தெரிந்து கொள்க _ நடிப்பு
நாடாள தகுதி அல்ல
புரிந்து கொள்க
கருப்பு வெறும் நிறம்தான்
தெரிந்து கொள்க _ அதை
அவமானம் என்பவனின்
முகத்தில் உமிழ்க
தேவை போது ஆங்கிலம்
தவறுமில்லை _ ஆனால்
தேகமெல்லாம் தமிழ் ரத்தம்
நினைவில் கொள்க
நாம் ஏமாந்த கதையெல்லாம்
ஆவணம் செய்வோம் _ நம்
தலைமுறைக்கு அறிவூட்டி _வரும்
ஆபத்தை கொய்வோம்
Photo courtesy : Mr Martin Don
good one da machi,,,
ReplyDeletethanks da...:)
Deleteஎன் சிந்தனை கோவத்தின் சில வார்த்தைகள்
ReplyDeleteஉன் வாக்கியத்தில் உள்ளது.........
நன்றி நன்றி !!!!!!!!!!!