August 5, 2012

நட்பின்றி அமையா ..





பெற்றோரே பார்க்காத
மனிதரும் பலர் உண்டு
உற்றோரும் உடன் பிறப்பும்
இல்லாதோர் பலர் இங்கு

பற்றின்றி வாழ்க்கை துணை
இல்லாதோர் கூட உண்டு
நட்றொரு நட்புதான்
இல்லாதோர்  யாரிங்கு ?

பாதையும் ஓடினால்
பயணம் தான் முடியுமா
பார் நின்று விட்டாலோ
மறு பொழுது விடியுமா

கடல் நீரை கொடுக்காமல்
கருமேகம் பிறக்குமா
நட்பொன்று இல்லாதா நம்
வாழ்க்கை சிறக்குமா ?

அழும்போது தோள்தட்டி
மனம் தேற்றுவான் _ என்னை
அனுதினமும் வழி காட்டி
திறன் ஏற்றுவான்

'சந்தோஷ தருணத்தில் எனை
மறந்தாலும் _ நான் அழும்போது
என்னை  அழைப்பாய் ..
என கூறுவான்

வென்று விட்டால் உன் கூட
நிழல் போல காதல் வரும்
தோற்று போகும் காலதிலும்
நிஜம் அங்கு நட்பாய் வரும்


கடல் சேரா நதி ஒன்று
எங்கும் இல்லை
கவி பாடா கம்பனுக்கு
பெருமை இல்லை

காதல்தனை நினைக்காத
பருவம் இல்லை
நட்பின்றி மாண்டவர்
எவரும் இல்லை

நன் பகலில் இருளுக்கு
வேலை இல்லை
நண்பர்கள் இருக்கும் வரை
சோகம் இல்லை

_ வை . நடராஜன்

2 comments:

  1. வாழ்த்துக்கள் நண்பா...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா :)

      Delete