August 3, 2012

பிரிதலின் புரிதல் என்ன ?





 என் வாழ்க்கை உன்னோடு
இதழ் வருடி சொன்னாய்
தோல் மீது தலை சாய்ந்து
துணை நீதான் என்றாய்
தலைக்கோதி மடி சாய்ந்து
தாய்போல என்றாய்
பிழை என்ன செய்தேன் ?
பிறிந்தின்று சென்றாய் .

உன் காதல் வார்தைகள்
காற்றோடு போச்சி
உன் கன்ன முத்தங்கள்
களவாகி போச்சி
உன் காதல் பரிசு வெறும்
பொளுளாகி போச்சி
உன் மீது என் காதல்
பொருளின்றி போச்சி

மழை சற்று நின்றாலும்
குளிர் அங்கே இருக்கும்
மரம் சற்று சாய்ந்தாலும்
நிழல் ஒன்று இருக்கும்
பிறை மூடி போனாலும்
நிலவங்கு இருக்கும்
பிரிந்தெங்கு சென்றாலும்
நினைவிங்கு இருக்கும்

மலை ஒன்று இருந்தாலே
பனி அங்கு கூடும்
மழை சற்று பொய்த்தாலும்
நதி எங்கே ஓடும் ?
இசை ஒன்றை கேட்டாலே
இதழ் கூட பாடும்
இதயத்தில் ரணம் என்றில்
இமை எங்கே மூடும் ?

கடல் ஒன்று இல்லாமல்
கரை எங்கும் இல்லை
உடல் ஒன்று இல்லாமல்
உயிர் ஒன்று இல்லை
மலர் வண்டு இல்லாமல்
மலை தேனும் இல்லை
மணமாகி போனாலும்
மனம் மறப்பதில்லை

No comments:

Post a Comment