August 17, 2012

மரணம்





வெளியே நடக்கும் மரண செய்தி
செவிகள் வரைக்கும் ஒலிக்கும்
வேண்டியவரின் மரணம் மட்டும்
இதயம் சென்று வலிக்கும்

உத்தமனே போவதேனோ _ என
ஊரே அழுவ வேண்டும் _ உன்
உயர்ந்த வாழ்வை நினைத்து அவர்
உள்ளம் தொழுவ வேண்டும்

உத்தமனாய் இறந்தவரின் உடலை
மண்ணு தின்னும் _ அந்த
உயர்ந்தவரின் புகழை மட்டும்
உலகம் என்றும் என்னும்

கையில் கொஞ்சம் பணமிருந்தால்
மரணத்தை சற்று கடத்தலாம்
கருணை உண்மை நெஞ்சிருந்தால்
மறைந்த பின்பும் வாழலாம்

எதனை நீ பெற்றாலும்
போகும் போது தனியே
எதனை நீ கொடுத்தாயோ _அதுவே
கூட வரும் துணையே

பதவி பணத்தில் திளைத்த போதும்
பயணம் ஒரு நாள் முடியும்
உதவி செய்த உள்ளதைத்தான்
உலகம் நெஞ்சில் பதியும்

உதவி உதவி என்பதெல்லாம்
பணதில் மட்டுமில்லை _ ஊர்
ஓரத்திலே ஒரு மரத்தை
நடுங்கள் அதுக்கு ஈடே இல்லை

வந்தவர் பலர் சென்றவர் பலர்
உலகம் நினைக்க மறுக்கும்
சொந்தங்களையும் தாண்டி உதவும்
உத்தமனைதான் நினைக்கும்

கோடிகளை கொட்டி நீ
வள்ளலாக வேண்டாம் _ தினம்
ஒரு ஏழைக்கு நீ உணவளித்தால்
கடவுள் கூட வேண்டாம்

உன் பணத்தை பார்த்து
புழுவை போல நெளியும்
கூட்டம் வேண்டாம் _ உன்
பயணம் போது கடைசி வரை
வந்து அழுவார் போதும்

காமம் காசு பதவி எல்லாம்
இருக்கும் வரை தொடரும் _ உன்
கருணை தந்த புகழ் மட்டும்
இறந்த பின்னும் வளரும்

தினம் ஒரு உதவி
வனம் ஒன்றில் மரம்
போதும் இந்த உலகில்
போன பின்பும் வாழ்வீர்

No comments:

Post a Comment