மறுமணம் என்பது
மாபெரும் தவறல்ல
மாற்றான் கை பட்டதால்
பெண் ஒன்றும் இழிவல்ல
பெண்மை என்ற சொல்
உடல் சார்ந்த ஒன்றுமில்லை
உள்ளன்பு உயர் தியாகம்
இவை இன்றி வேறில்லை
அவமானம் என்றல்ல
அதில் தவறு ஒன்றுமில்லை
தன்மானம் காப்பதற்கு
தனியானால் தவறில்லை
மஞ்சள் கயறு கட்டி விட்டு
மாடு போல நடத்துபவனை
நெஞ்சை ஏறி மிதித்து
மீண்டு வந்தால் பாவமில்லை
நாங்கள்
கட்டிலினை அலங்கரிக்கும்
பொருளுமில்லை _ நீங்கள்
காமத்தில் விளையாடும்
பொம்மை இல்லை
சமுதாயம் தூற்றும் என
அஞ்சி கொண்டு _ நாங்கள்
சாகும் வரை உரிமை இழக்க
அடிமை இல்லை
உள்ளத்தின் உணர்ச்சிகளை
புரியாமல் _ வெறும்
உடல் தின்னும் மிருகத்தை
கட்டி கொண்டு
பண்பாடு கலாசாரம் என்று
சொல்லி கொண்டு _ நாங்கள்
படும்பாடை சரி செய்யும்
சமுதாயமே ..
வந்து விட்டு உண்று விட்டு
சென்று விடுவீர் _ எங்கள்
வாழ்க்கை வீணாய் போய்விட்டால்
நீயா தருவீர் ?
காமத்தில் மட்டும்தான்
ஆண்களின் பங்கு _ நாங்கள்
காலமும் செய்ய இங்கு
ஆயிரம் உண்டு
மெட்டி போட்டு
மேளம் தட்டி
மேடை மீது
தாலி கட்டி
கையை பிடித்தவன்
கயவன் என்றால்
நானா பொறுப்பு ?
முதல் வாழ்க்கை முறிவதல்
பாவமுமல்ல _ அந்த
பாவி தொட்ட உடல்
என்பதால் கேவலமல்ல
மனம் பார்த்து மணம்
கொள்பவன் ஆண்களின் கூட்டம்
மறுமணம் ஆயினும் கை பிடிப்பவன்
ஆண்டவன் தோற்றம்
திருமணம் தோற்பதால்
வாழ்க்கை ஒன்றும் இருளல்ல
மறுமணத்தை தேடும் பெண்
மட்டமான பொருளல்ல
நாங்கள் வாழ்வில்
தடுக்கி தான் போனாம்
தவறி ஒன்னும் போகவில்லை
.......................................................
Photo courtesy : Mr A.Balamurali
நல்ல கருத்துள்ள எளிமையாக எல்லாருக்கும் விளங்க்கூடிய கவிதை. நன்றி
ReplyDeleteமிக்க நன்றி :)
ReplyDeleteவந்து விட்டு உண்று விட்டு
ReplyDeleteசென்று விடுவீர் _ எங்கள்
வாழ்க்கை வீணாய் போய்விட்டால்
நீயா தருவீர்?
மெட்டி போட்டு
மேளம் தட்டி
மேடை மீது
தாலி கட்டி
கையை பிடித்தவன்
கயவன் என்றால்
நானா பொறுப்பு?
ம்ம்..நல்லா கேட்டிங்க போங்க... நச்னு..
மிக்க நன்றி Raki...:)
Deleteமுதல் வாழ்க்கை முறிவதல்
ReplyDeleteபாவமுமல்ல _ அந்த
பாவி தொட்ட உடல்
என்பதால் கேவலமல்ல
திருமணம் தோற்பதால்
வாழ்க்கை ஒன்றும் இருளல்ல
மறுமணத்தை தேடும் பெண்
மட்டமான பொருளல
பாராட்டுக்கள் நண்பரே !!!
மிக்க நன்றி :)
DeleteThank you
ReplyDelete