வாடாத பூமாலை ஒன்று _ எவரும்
சூடாமல் கிடக்கின்றது
வாழாமல் என் வாலிபம் _ சிறகொடிந்த
கிளியாக துடிக்கின்றது
என் மஞ்சம் துணையின்றி தனியாக இருக்க
வருடாத தேகங்கள் வலிகின்றதே
நெஞ்சத்தின் கனவெல்லாம் கரியாகி போக
மரிக்காமல் மரணத்தை தருகின்றதே
ஆசைகள் ஆவல்கள் எல்லாமே - அன்று
அவரோடு சேர்ந்து எரிகின்றது
அவமானம் அவப்பெயரும் என் வாழ்வின்
அடையாளமாய் இருக்கின்றது
நான் கண்ட கனவெல்லாம் கரியாகி
நினைவெல்லாம் நெருப்பாக சுடுகின்றது
தேன் கொண்ட மலர் தேர்காலில்
வலியோடு தானே மடிகின்றது
அதிர்ஷ்டம் இல்லாத அவமான சின்னத்தை
சமுதாயம் என் மீது கோர்க்கின்றது
அடுத்தவன் தொட்ட உடல்தானே என்று
ஆண் வர்க்கம் மட்டமாய் பார்க்கின்றது
வான் இழந்த நட்சத்திரம்
வழி சேற்றில் கிடக்கின்றது
வழி இழந்த பச்சை கிளி
சிறு கூட்டில் துடிக்கின்றது
வெறுமையில் வாழ்க்கை
தனிமையில் கொடுமை
நீர் படா நிலமாய் வெடிகின்றது
அதிர்ஷ்டம் தான் இல்லாதவள்1
என பட்டம் கட்டி
அடி நெஞ்சின் ஆசையை
மறுக்கின்றது
இனிமையற்ற இளமை
எதற்கு இந்த கொடுமை
தனிமை வருத்தும் வாழ்வில்
எதற்கு இந்த இளமை
கொடிய இந்த வாழ்வில்
இனிமை தான் எங்கே ?
மடிய வேண்டும் நான்
மரணம் தான் எங்கே ......
- வை . நடராஜன்
வாழ்த்துக்கள் நண்பா , கவிதைகள் மிக நன்றாக உள்ளது ...
ReplyDeletemikavum nandri nanbarey...:)
Delete