October 12, 2012

ஒரு சிறு கதை





எழுநூறு ஆண்டுகளுக்கு முன் , தமிழகத்தை பச்சையம்மா என்ற ஒரு அரசி
ஆட்சி செய்தார்கள் , மிகவும் கண்டிப்பான அவர்களை கண்டால் அரண்மனையே
அலறும் . ஒரு நாள் அரசவையில் ''மாதம் மும்மாரி பொழிகிறதா '' ? என்று  அரசி கேட்க .
ஒரு அமைச்சரின் பேரன் '' ஜென்னலை திறந்து பார்த்தல் தெரிய போகிறது
அதை விடுத்தது சும்மா இங்கே கேட்பது என்ன பயன் என்று விளையாட்டாக
முனுமுனுத்தான்'' . இதை ஒற்றன் கேட்டு அரசியிடம் சொல்ல அன்று இரவு
அமைச்சரின் இல்லத்தில் வந்த அரண்மனை சேவகர்கள் அமைச்சரிடம் ஒரு ஓலை
கொடுத்து விட்டு  அரசு குதிரையை மீட்டு சென்றார்கள் , அன்று முதல் அவர் கிராம
தலைவராக மாற்ற பட்டார் .

ஒரு நாள் அரசி அரண்மனை மாடத்தில் உலவிக்கொண்டு இருந்தார்கள்,
கிழே அரண்மனை வாயிலில் ஒரு அமைச்சர் தன் குதிரையை தடவி கொடுத்தப்படி
நின்று கொண்டு இருந்தார் . இதை கவனித்த அரசி அமைச்சரை அழைத்து
'' குதிரையிடம் என்ன பேசிக்கொண்டு இருந்திர்கள் ?  என கேட்டார்   .அமைச்சர் , ''அரசியே
குதிரையிடம் எவ்வாறு பேச முடியும் ? அப்படி பேசினாலும் அவைகளுக்கு புரியுமா என்று
வினவினார் , அதை கேட்டு அமைதியாக சென்று விட்டார் அரசி . மறுநாள் காலை
அமைச்சர் தன் வீட்டில் இருந்து அரண்மனை கிளம்ப வந்து பார்த்தல் அவர் குதிரையும்
பறிக்க பட்டு ஒரு ஓலை இருந்தது. அமைச்சர் அந்த ஓலையை பிரித்து கூட பார்க்க வில்லை
ஏனெனில் உள்ளே என்ன இருக்கும் என் அவர் தெரிந்து கொண்டார் ,


சில மாதங்கள் கழித்து , அரசி  அமைச்சர் மற்றும் படை பரிவாரங்களுடன்
நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டார் . ஒரு இடதில் ஒரு பிரம்மாண்டமான ஒரு
கட்டத்தை பார்த்த அரசி தன் அமைச்சரிடம் , அது என்ன கட்டிடம் என்று கேட்டார்
உலகமே வியக்கும் இந்த இடத்தை நம் அரசி தெரியாதவர் போலவே கேட்கிறார்
என நினைத்த அமைச்சர் , இருந்தும் பதில் சொல்லவில்லை எனில் பதவி போய் விடும்
என்ற பயத்தில் '' அது தான் தஞ்சை பெரியகோயில் '' என கூறினார் ,
மாமனார் ராஜா ராஜா சோழனால் கட்டப்பட்டது . என்றும் அவர் மாபெரும் அரசர் என்றும்
சொன்னார் . இதை கேட்ட அரசி என்னை விடவா என கேட்க ? ''சுதாரித்து கொண்ட
அமைச்சர் இல்லை அரசியே , ஆயினும் இனி வரும் காலங்களில் இந்த கோயிலுக்கு அடுத்த படியாக உங்கள்
 பெயரும் பெருமையாக பேசப்படும் என்று கூறினார் , அந்த பயணம் முடிந்து நாடு
திரும்பும் வரை அந்த கேள்வியை இன்னும் இரு அமைச்சர்களிடம் கேட்க
அவர்களும் அதே போல புகழ்ந்தார்கள் ,
அரண்மனை திரும்பியதும் அந்த மூன்று அமைச்சர்களும் ஒரு மண்டபத்தில்
பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்பொழுது தலைமை ஒற்றன் அங்கே பதற்றமாக
ஓடி வந்து
'' அமைச்சர்களே நீங்கள் அரசியார் கோவம் அடையும் படியாக
என்ன சொன்னீர் ?
ஒரு அமைச்சர் , என்ன ஆயிற்று ஒற்றா ?

தஞ்சை கோயிலுக்கு அடுத்த படியாக உங்கள்
பெயர் இருக்கும் என நாங்கள் மூவரும் சொல்லி விட்டோம்,
அரசியை இரண்டாம் இடதில் வைத்து புகழ்ந்தது தவறுதான் . என்ன ஆயுற்று , எங்கள் அமைச்சர்
பதவி போய் விட்டதா ? என கேட்க.

இல்லை அமைச்சர்களே '' தஞ்சை பெரிய கோயிலை அப்புற படுத்த அரசி உத்தரவு
விட்டு இருகிறாராம்'' என கூறினார் ,


பின் குறிப்பு :
இந்த காலகட்டத்தில் தான் பச்சோந்தியார் என்ற அரசரும் வாழ்ந்து வந்தார்
மக்கள் புரட்சியால் ஆட்சி இழந்த அவர் ராணியாரின் ஆட்சியில் மக்கள் படும் துயரத்தை
தன் மூக்குசளி என்ற ஓலை சுவடியில் எழுதி குளிர்காய்ந்து கொண்டு இருந்தார் .

முற்றும்

No comments:

Post a Comment