December 15, 2012

என் கடைசி கடிதம்






வானம் காய்ந்தது
வாழ்க்கை ஓய்ந்தது
மானம் காக்கும் துணி கூட
உழைத்து தேய்ந்தது

கல்லணை கட்டியது முதல்
கஞ்சிக்கு பஞ்சமில்லை...
கர்நாடகாவை பிரித்தது முதல்
அழுதது கொஞ்சமில்லை...

மழைநீரும் தூறவில்லை
மனரணமோ ஆறவில்லை
மின்சாரத்தோட ஓசை இல்லை
மீண்டும் பிறக்க ஆசையில்லை

சீக்கிரமே சாக வேண்டும்...
அதற்குள் சென்னை சென்று
பார்க்க வேண்டும் ..

அங்கே ,
கார் தயாரிக்க கரண்ட் இருக்கு -எங்க
கஞ்சிக்கு வழியில்லை
பீர் தயாரிக்க கரண்ட் இருக்கு
நெஞ்சி பொறுக்க வில்லை

ஹுன்டாயும்  போர்டும்
உலகெல்லாம் ஏற்றுமதி...
உண்ண அரிசி பருப்பெல்லாம்
உள்ளுரில் இறக்குமதி

அமெரிக்காவுக்கு உழைக்க
ஐ டி வளர்த்தாலும்,
அடுத்த வேலை உணவுக்கு
 சாப்ட்வேரையா  சாப்பிடுவீர்  ?

அங்கே ,
PUB'm Club'm கரன்டுல
ஜொலிக்குது  - எங்க
பம்பும் செட்டும் வறண்டு  
வறண்டு .. வலிக்குது :(

எத்தொழில் செய்தினும்
காசு வரும் - ஆனால்
இத்தொழிலில் மட்டும்தானே
உணவு வரும் ?

தலைநகர் வளர்வதில்
தவறொன்ன்னும் இல்லை - ஆனால்
தலைமட்டும் வளர்வது
வளர்ச்சி இல்லை

உழைத்து களைத்து
விளைத்தவன் விவசாயி - அதை
அடித்து பிடித்து
வாங்கியவன் வியாபாரி

தண்ணீர் , மின்சாரம் ,
தரகர், நஷ்டம் ,என்னென்று நான் சொல்ல
வாழ தெரியாமல் சாகவில்லை
வாழ முடியாமல் போகிறேன்

சச்சின் சதத்தையும்
ஷாருக்கான் படத்தையும்
கொண்டாடும் நீங்கள்  - நாட்டு
உணவுக்கு உழைத்து
உணவே கிடைக்காமல்
உயிர் விடும் நாங்கள்


ஊருக்கே உழைத்தோம்
ஒரு வாய்க்கு போராட்டம்
வசதி வாய்ப்பு கூடவில்லை
நிம்மதியாக கூட வாழவில்லை

கடைசி ஆசை ..
இறைவா...  ..

புழுவாக புல்லாக
மலிவான மண்ணாக
எலியாக எறும்பாக
ஏர் பூட்டும் எருதாக
எதுவாக பிறப்பினும்
ஏற்று கொள்வேன் _ ஆயின் இந்த
இழிவான இந்தியாவில்
பிறந்திட வேண்டாம் ...

- இப்படிக்கு

உங்கள் தமிழன் , உழவன் ..

- வை .நடராஜன்

6 comments:

  1. Arumaiyana kavidhai ! aatral migundha sindhanai !! Ungalin ezhuthu payanam melum valara vaazhthugal !!

    ReplyDelete
  2. இந்த கவிதை தமிழகத்தின் தற்போதைய நிலையை மிக தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் உழவன் தற்கொலை செய்து கொள்வதை யாரும் தடுத்து நிறுத்த முடிவதில்லை. உங்கள் கவிதை சமூக அவலங்களை நேர்த்தியுடன் சுட்டிக்காட்டுகின்றன. மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. Vivasayatha alithapin Vera ethai unaporangalo,poruthathu pot hum pongavandia neram ethu.namathu adimadi vivasayathaiyum alikirarkal.pothmada.

    ReplyDelete
  4. arumai. aanal athanaium unmai.vivasaiyin nilaiai appadiye padam piditthu katti irukeergal.parattugal

    ReplyDelete