September 9, 2012

நீ நான் நாம்




நிலவிலே வாழ வேண்டும்
உன் நினைவிலே சாக வேண்டும்
மலரினில் பணியை போல _ உன்
மடியிலே சாய வேண்டும்

இன்னொரு பூமி வேண்டும்
இருவருக்கு மட்டும் வேண்டும்
தேயாத நிலவு வேண்டும்
காயாத மலர்கள் வேண்டும்


தேன் மழை பொழிய வேண்டும்
தேகங்கள் நினைய வேண்டும்
வானத்தில் வண்ணம் எல்லாம்
வகை வகையாய் மாற வேண்டும்


நாம் மட்டும் வாழும் உலகில்
நடமாடும் வீடு வேண்டும்
மேலை வரும் பகலவன் கூட
மென்மையான குளிர் தர வேண்டும்

பட்சிகளின் ஒலிகள் கூட
பைந்தமிழில் ஒலிக்க வேண்டும்
பச்சை நிற புற்கள் எல்லாம்
தங்க நிறம் ஆக வேண்டும்

வருடமும் வசந்தம் வேண்டும்
வற்றாத நதி கரை வேண்டும்
மான் முயல் மயில்கள் மட்டும்
உலவும் நல் காடு வேண்டும்

குயில் அணில் கொஞ்சும்
பைங்கிளி கூடவே வசிக்க வேண்டும்
மாதமும் முழு நிலா வேண்டும்
மண் கூட சுவைக்க வேண்டும்


நாம் மட்டும் இருக்கும் உலகில்
நாளும் நாம் இணைய வேண்டும்
ஊன் விட்டு போகும் வரையில்
உறவிலே உண்மை வேண்டும்

மனம் தரும் மலர்கள் எல்லாம்
தினம் வந்து பேச வேண்டும்
மழை துளி மேலே பட்டு
மனம் எல்லாம்  கூச வேண்டும்


ஆசையாய் பேச மட்டும்
ஆயிரம் ஆண்டுகள் வேண்டும்
அடிகடி சண்டைகள் போட
அதில் பாதி ஆண்டுகள் வேண்டும்

முதுமையில் இருந்தால் கூட
அகத்திலே இளமை வேண்டும்
பதுமையே உன்னை வருட
நகதிலே இறகு வேண்டும்


மரணம் அதை அடையும் போது
மறு ஜென்மம் இங்கே வேண்டும்
ஒரு நொடி கூட வேண்டாம்
ஒரே நொடியில் போக வேண்டும்

2 comments:

  1. நகத்திலே இறகை கேட்டது புதுமை நடராஜ் ..அழகு.

    ReplyDelete
  2. நன்றி raki அண்ணா ..:)

    ReplyDelete