September 23, 2012

வறுமை





தரையில் விழுந்த பழம் என
தொலைவில் தூக்கி போட்டேன் _ அப்பொழுது
பழையது ஏதும் உண்டா ? என்ற
பசித்த குரலை கேட்டேன்

தேநீர் சுவை குன்ற
ஜென்னல் ஓரம் ஊற்றினேன் _ நல்ல
குடிநீர் கூட இல்லாத மனிதர்களை
கண்டு மனதை தேற்றினேன்

கோவம் வந்தால் உணவை கொட்டும்
மோசமான பழக்கம் _ தினம்
கோடிக்கணக்கில் பசித்த வயிறு
கோர பசியில் உறங்கும்


பசித்த உடன் உன்பவனுக்கு
பசியின் கொடுமை தெரியாது
பசித்து காய்ந்த வயித்துக்கு
பழைய உணவு புளிக்காது

உரிமை அற்ற வாழ்வு அடிமை
உணர்வற்ற வாழ்வு மடமை
கனவற்ற வாழ்வு வெறுமை
உணவற்ற வாழ்வு கொடுமை

இறைவா .....

பணக்காரர்களாய் எல்லோரும்
பிறத்தல் வேண்டும் _ அன்றி
பசிக்காத வயிறு மட்டும்
இருத்தல் வேண்டும்.

No comments:

Post a Comment