January 10, 2014




தில்லையில் ஆட செய்தாய்
தினமுன்னை பாட செய்தாய்
திங்களை சிரத்தில் வைத்தாய்
தியாகத்தை அகத்தில் வைத்தாய்

எண்ணத்தில் உன்னை வைத்தாய்
ஏட்டிலே பண்ணாய் வைத்தாய்
திண்ணமும் எண்ண வைத்தாய்
தினமுன்னை தொழுக வைத்தாய்

உண்மையை உணர  செய்தாய்
உளமார உருக  செய்தாய்
அம்மையை இடையில் வைத்தாய்
அப்பரை இணங்க வைத்தாய்

காலனை நடுங்க செய்தாய்
காலமும் உணர செய்தாய்
வாசகர் உருக செய்தாய்
திருவாசகம் பெருக செய்தாய்

நஞ்சினை அகத்தில் வைத்தாய்
நவமணி கண்ணில் வைத்தாய்
ஏந்தினை மனதில் உன்னை
ஏக்கத்தில் நினைவில் வைத்தாய்

சாம்பலை பூச  செய்தாய்
சகலமும் வாசம் செய்தாய்
சடைமுடி எழிலினுள்
கங்கையை வாழ செய்தாய்

கனிதனை அருள செய்தாய்
கண்முட இருள செய்தாய்
பனிபடர் சிகரத்திலே
பரம்பொருளே வாசம் செய்தாய்

தோடுடைய செவியானே அழகு
தேனுடைய தமிழை  வைத்தாய்
மானுடைய கரத்தில் அம்பர்
மேனடைய அருளை  வைத்தாய்

செற்றுடைய இடதில் எல்லாம்
நாற்றுடைய நெல்லை வைத்தாய்
காற்றுடைய புவியில் என்றும்
கானத்தை கமழ செய்தாய்

பித்தனும் ஆனாய்
பிரம்படி பெற்றாய்
சித்தனும் ஆனாய்
சிவனடி போற்றி
அத்தனும் அடங்கிய அரும்பெருள்
கடலே
நத்தவம் கோலமே
நம சிவாயமே

- வை , நடராஜன் 

No comments:

Post a Comment