January 4, 2014

ஹிட்லரின் நாய்



ஹிட்லரின் நாய் அறியாது - அவன்
இத்தனை பாவம் செய்தவன் என்று
வயித்துக்கு ரொட்டி போட்டான்
வாழ்ந்தவரை அன்பு காட்டியது .

ரொட்டி போட்ட கரங்களில் - பலரை
சுட்டுபோட்ட ரத்த கறைக
இருந்து அதற்கு கவலை இல்லை
எதிர்க்க அதற்கு தெரியவில்லை

நன்றி மட்டும் அறிந்த நாய்க்கு
நல்லவன் கெட்டவன் அறியாது
அறிந்து புரிந்து வாழ்வதற்க்கு
ஆறாம் அறிவு கிடையாது

இத்தனை வருடம் கடந்த பின்
எதற்கு இந்த கவிதை ?
எத்தனை மனிதர்கள் இன்றும் அந்த
ஹிட்லரின் நாய்போல் வாழகண்டேன்

துரோகமும் வஞ்சமும் கொண்டவனையும்
தோரணை கட்டி புகழ்கின்றனர்
ஊழலில் மிதக்கும் தலைவனை கூட
உலகத்தின் உத்தமன் என்கின்றனர்

திருடுபவனுக்கு துணை காத்த நாயாய்
திருந்தாத தொண்டனாய் அலைகின்றனர்
ஊருக்கே தெரியும் அயோக்கியன் என்று
ஊரெல்லாம் கட்அவுட் வைக்க விழைகின்றனர்

எங்கினும் ஒழுக்கமற்ற தலைவன் நாட்டில்
நாளை வருங்கால பிள்ளைகள் பாவ காட்டில்
காமத்தில் பிள்ளைகளை பெற்றெடுத்து - இந்த
கயவர்களின் கையிலே விட்டு விட்டால்

கழுத்தளவு நீரில் தள்ளி விட்டு -பிள்ளைக்கு
கால் காக்க ஷு வாங்கி என்ன பயன் ?

எவன் துரோகி எவன் திருடன் என
குணம் பார்த்து முடிவெடுங்கள் ..
பாவி அவன் என அறிந்தால்
விட்டு விடுங்கள் ..

நல்ல தலைவனை
தேர்ந்தேடுத்து நம் பிள்ளைகளை
வாழ விடுங்கள்

வை . நடராஜன்

No comments:

Post a Comment