January 4, 2014

சிரித்துவிடாதீர்கள்



இதற்க்கெல்லாம் சிரித்துவிடாதீர்கள் !

சில நாட்களுக்கு முன்னர் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கையில் , திரைக்கு வர இருக்கும் ஒரு தமிழ் படத்தின் விளம்பரத்தை பார்க்க நேர்ந்தது . படத்தின் பெயர் " ஆல் இன் ஆல் அழகு ராஜா " . அதில் ஒரு நகைச்சுவை நடிகரும் , கதாநாயகனும் பேசிக்கொண்டிருப்பது போன்ற காட்சியில் வரும் நகைச்சுவை வசனத்தைக் கேட்டு அனைவரும் சிரித்தார்கள். மனதில் சிறு கவலையுடன் நான் சென்று விட்டேன் . இரண்டு நாட்களுக்கு முன் ஒரு பிரபல திரையரங்கத்திற்கு நண்பர்களுடன் படம் பார்க்க சென்ற பொழுது மீண்டும் அதே திரைப்படத்தின் விளம்பரத்தினை திரையிட்டார்கள் . அந்த வசனங்களைக் கேட்டு அன்றும் அரங்கில் இருந்த அனைவரும் வாய்விட்டு சிரித்தார்கள் ! கைத்தட்டல்கள் விண்ணைக் கிழித்தது ! சக மனிதனின் சிரிப்பைக் கண்டு முதல் முறையாக நான் வருந்தினேன் . காரணம் ! அந்த சிரிப்பு நம் பண்புகளை கொன்ற சிரிப்பு , கலை வியாபாரிகளின் மானங்கெட்ட வார்த்தையை கண்டு நாம் மதிகெட்டு சிரிக்கிறோம் .

திரையரங்கிற்குச் செல்லும் நாம் அனைவரும் இந்த புகையிலை, புகைப்பிடித்தல் ஒழிப்பு விளம்பிரத்தினை பார்த்திருப்போம். வாழவேண்டிய அந்த " முகேஷ் " இனி யாரும் சாகக் கூடாது என்று கண்மூடும் முன் நமக்கு வழிகாட்டுவது போல் இருக்கும்.
அதில் வரும் நாயகன் " மதுமட்டுமில்லாமல் சிகரெட்டும் இருந்தா நல்லா இருக்கும் "" என்று சொல்ல , அந்த நகைச்சுவை நடிகர் - அந்த விளம்பரத்தில் வரும் அந்த முகேஷ் என்ற இளைஞரைப் போல் கரகரவென கிண்டலாய் பேச , யாரது என்று நாயகன் கேட்க , நம்ம முகேஷ் என்று இவர் சொல்ல , யார் நம்ம முகேஷ் அம்பானியா என்று கேட்பார். அதற்கு, இல்லப்பா , நம்ம குட்கா முகேஷ் னு சொல்லுவார் - பின்னர் பொதுநலம் கருதி வெளியுடுவோர் என்ற ஏமாற்று வார்த்தைகளுடன் முடிகிறது அந்த ட்ரைலர்!

இறந்த ஒரு மனிதனை சிரிக்க வைக்க பணயமாக உபயோகிப்பது நாகரீக மனிதனின் வழக்கமோ ? வெறும் வியாபாரத்திற்காக விளம்பரத்துக்காக எதை சொன்னாலும் சிரித்து விடுவார்கள் மக்கள் என நினைக்கும் அந்த கலை வியாபாரிகள் மனித நேயத்தை மறக்கிறார்கள் . ஆனால் அதையும் கூட நகைச்சுவை என நினைத்து வரவேற்கும் நம் இனம் உண்மையில் ' கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடியா ???? '
நான் அதில் நடித்தவர்களையோ , இயக்குனரையோ , அந்த நிறுவனத்தையோ குறை கூற விரும்பவில்லை . காரணம் , அவர்கள் வெறும் வியாபாரிகள் ! பணத்திற்காக கலையை எப்படியேனும் விற்பார்கள். நாம் கொஞ்சம் பண்பட்டு தொட வேண்டும் . காய்கறி கடைகளில் வியாபாரி பழைய புதிய காய்கள் அனைத்தையும் சேர்த்துதான் வைத்திருப்பார் . நாம்தான் நல்லது எது ? தீயது எது ? என்று இனம் காண வேண்டும் .

இந்த கொடூர நிகழ்வை அந்த முகேஷ் என்பவரின் பெற்றோர் பார்த்திருந்தால் , அவர்களுக்குள் என்ன கேள்வி எழுந்திருக்கும் !? ஊரெல்லாம் பார்த்து மகிழவா என் மகன் நோயுற்று இறந்தான் !
2011 ஆம் அண்டு உலக கோப்பை இலங்கையில் நடந்த போது அரங்கில் இலங்கை மக்கள் மகிழ்ச்சியாக ஆட்டத்தை ரசித்தார்கள் .. மனதில் வருந்தினேன் தன் சக நாட்டில் பல லட்சம் மனிதர்கள் இறந்தும் இன்னும் பலர் உண்ண உறங்க இடமெல்லா தவிக்கும்போது எப்படி இவர்களால் விளையாட்டை ரசிக்க முடிகிறது ? மனிதம் எங்கே ?

வட நாட்டு ஊடகம் எல்லாம் கூட மனித துயரை கண்டுக்காமல் இருந்ததை நினைத்து வருந்தினேன் ... இன்றோ என் சக தமிழன் நகைசுவை என்ற பெயரில் துயருற்று இறந்த ஒருவனை எவ்வாறு நக்கல் அடித்து பேச முடிகிறது .. அவர்கள் வியாபாரிகள் பணம் போதும் நல்லது கெட்டது பார்க்காதவர்கள் .. அதை ரசிக்கும் நம் மன நிலை என்னவாயுற்று ?
கலை மட்டும் அறிவார்ந்தது அல்ல கலையை ரசிப்பதும் அறிவார்ந்தது ஆகும் .

மன்னர் ராஜ ராஜ சோழன் வெறும் மன்னராக மட்டும் இருந்து இருந்தால் நாட்டில் இருக்கும் ஆயிரக்கணக்கான சிவன் கோயில்களைப் போல் தஞ்சையிலும் ஒரு சிவன் கோயில் இருந்து இருக்கும் . ஆனால் அவரின் கலை ரசிப்பு நாணத்தின் பலன்தான் இன்று உலகமே வியக்கும் அளவிற்கு தஞ்சை பெரியகோயில் அழகியலுடன் இன்று நிமிர்ந்து நிற்கிறது .. நாமும் ரசனையை வளர்ப்போம் . பணத்திற்காக எதை காட்டினாலும் ரசிப்பார்கள் எதை பேசினாலும் சிரிப்பார்கள் என்ற மனித பொறுப்பற்ற கலந்கைர்களை நிரகற்றிப்போம்.இது அந்த படத்தின் எதிர்ப்பு அல்ல . அதை தொடர்ந்து இதை போல் பொறுப்பற்ற தரமற்ற விசயத்தை இன்னும் எல்லாம் சொல்ல வருவார்களோ என்ற பயம் . திரை துறையினரே மாறுங்கள் இந்த இனத்தை மாற்றாதீர்கள் ஒருவர் இறப்பை நகைத்து சொல்லி அதை ரசிக்கும் அளவுக்கு இந்த இனம் தரமற்று போய் விட்டதா ..

நாங்கள் யார் இழவையும் சிரித்து ரசிக்கும் இனம் அல்ல..
இது வரை அந்த பட டிலோரை பார்காதவர்கள் கூட இந்த பதிவை கண்டதும் பார்க்க முயல்வார்கள் .. இது மனித இயல்பு ,, ஆனால் அதில் வரும் வசனங்கள் நகைசுவை என்று ரசிப்பது மனித தன்மையற்ற செயல்.

மனிதர் நோக மனிதர் பார்ப்பது
பாவம் என்றான் பாரதி .. நாமோ
ஒரு நொந்த மனிதரை ஒரு மனிதர்
கிண்டல் செய்கிறார்கள்
அதை ரசிக்கின்றோம்....
நல்லவை வளரட்டும்

- வை . நடராஜன்...

No comments:

Post a Comment