January 4, 2014

மன்னித்துவிடு


எழுதும் தமிழில் அழகு
ஏனோ நாவில் அமிலம்
பழகும் போது ரசித்தேன்
பிரிந்தால் ஏனோ பழித்தேன்

அழைக்கும் தூரம் சென்றாள்
அமைதியாய் இருந்து கொன்றாள்
எத்துனை பிழையேன் நான்
எதற்கிந்த பிழையான நா ?

மங்கை மனம் புங்கை மலர்
மன்னிக்க மலராதோ ?
கோவை இதழ் கொஞ்சும் கிளி
கோவம் தான் குறையாதோ ?

குணத்தில் கொஞ்சம்
கோவம் உண்டு
கோவத்தில் கொஞ்சம்
பாவம் உண்டு
பாவத்தில் நல் பங்கும் உண்டு
பதுமையே மன்னிக்க இடமும்
உண்டு

அழுவதிலே தோஷமில்லை
அன்பிலே வேஷமில்லை
மங்கையே பாவம் பிள்ளை
மன்னித்தால் பாவமில்லை

தவறிழைத்த நீதிபதி நீ
தண்டனை பெற்ற நிரபராதி நான்
நாவில் பிழை ஞானம் இழந்தேன்
கோவில் சிலையே கோவம் கடிந்தேன்

மன்னித்துவிடு மானம் போகாது
சூரியன் சுட்டு வானம் சாகாது

- வை . நடராஜன்

No comments:

Post a Comment