October 28, 2012

மரியதை



கல்லுக்கு மரியதை
ஆண்டவன் தோற்றதில்

புல்லுக்கு மரியதை
அரண்மனை தோட்டதில்

வில்லுக்கு மரியதை
வீரனின் தோளிலே

சொல்லுக்கு மரியதை
புலவரின் நாவிலே

அருவிக்கு அழகு விரைந்து வீழ்தல்
வாழ்கைக்கு அழகு மறைந்தும் வாழ்தல்

எங்க ஊரு நாட்டாமை குடும்பம்






ஒரு நாட்டின் நம்பிக்''கை''யான குடும்பம் #

அண்ணன் ஆள கெடுத்தான்
தம்பி தாலிய அறுத்தான்
ஒண்ணா உக்காந்து
உல வச்சி ஊர கெடுத்தான்

பிச்சகாரன் தட்ட புடிங்கி
எச்ச சோறு தின்ன
சித்தபனும் சண்டை போடான்
சித்தமாலும் பங்கு கேட்டா


உள்ளூர் கோழிய
உல வச்சி திருடி திண்ணு
வெளியூரு மருமகள்
வீங்கி நல்லா பெருத்துபுடா

மாடு மேச்ச மருமகனுக்கு
மாடி வீடு தங்க தேரு
கோமணம் கட்டி சுத்தின மாகான்
கோட்டு சூட்டுல அலையுது பாரு

அடுத்த வீட்டு ஆட்டை திருடி
அலையறா அக்காகாரி
தவிச்ச விட்டில போய்
தண்ணிய வாங்கி தறுதலையா
சுத்தறான் தம்பிகாரன்

செத்து போன தாத்தாவுக்கு
சொத்து எண்ணம் பக்கமே இல்ல
பெத்து போட்டா புள்ளைங்களுக்கு
சொத்த திருட வெக்கமே இல்ல

# இது வெறும் கற்பனையே . எந்த தனி மனிதனையோ . எந்த அரசியல்
கட்சியோ குறிப்பிடவில்லை .

போலி நீ என்பின் தோல்வியும் மகிழ்வே :




அறியாமையின் உச்சம்
உன்னிடம் நான் வந்தது
அதிலிலும் ஒரு மச்சம்
நீயே விலகி சென்றது

உயிர் போன பின்பு
எதற்காக தொழவேண்டும்
உண்மையே அறியாத - உன்னை நினைத்து
எதற்காக நான் அழவேண்டும் ?

- வை . நடராஜன்

வரதட்சனை


பல இடங்களில்
வசதிக்காக
மாப்பிளை விட்டார் கேட்கும்
பிச்சை ..
பல இடங்களில்
தன் வசதியை காட்ட
பெண் விட்டார் செய்யும்
விளம்பரம்

- வை . நடராஜன்

ஏன் இந்த நாடகம்







பருவ மழைக்கு காத்திருந்தான்
விவசாயி - நீ
பருவம் வந்த முதல் காத்திருக்கேன்
இந்த படுபாவி

ஜன்னல் ஓரம் நின்று
தினம் படிக்கிறாய் - எனை
பார்க்காதவள் போல்
ஏனடி நடிக்கிறாய் ?

வேண்டாம் என்றால்
வேண்டிய காதலை நிறுத்து கொள்வேன்
நீ வேண்டுமென்றே இப்படி
செய்தால் , நான் என்ன செய்வேன் ?

பார்க்கும் போது நடிக்கிறாய்
பார்கவில்லைஎனில் துடிக்கிறாய்
பார்க்காமல் நான் கடந்து விட்டால் - கோவத்தில்
உன் தம்பியை ஏனடி அடிக்கிறாய் ?

நான் விரும்பி பார்த்தல்
நீ பூமியை பார்ப்பாய் - நான்
திரும்பி விட்டால்
என்னை பார்ப்பாய்

காதலுக்கு கண்தான்
ஊடகம்
எத்தனை நாள் இந்த
நாடகம் ?

ஒரு ஈழத்தின் பெண்




என் வானின் மதி கூட
நெருப்பாக சுட
என் தோட்ட மலர் கூட
வாசங்கள் கெட
யான் வளர்த்த பசு
காம்பில் விடமாக வர
தேன் கலந்த கனியெல்லாம்
கைபட்டால் கெட


ஊன் கொண்ட
உயிர் கூட சுமையாக பட
யான் கண்ட உறவெல்லாம்
பகையாக வர
யாழ் இசையும் எனை
கண்டு அழுகின்றது
தோள் சாயிந்து அழ
நெஞ்சம் விழைகின்றது

அன்னத்தின் இரு
விழியும் அன்பாக
வெள்ளத்தின் தத்தளிக்கும்
கன்றாக
உள்ளத்தின் சுமையெல்லாம்
ஒன்றாக
உயிரோடு எனை வறுத்தி
கொன்றாக

வான் பார்த்த
வெளி களத்தில்
ஊர் பார்க்க
என் பெண்மையை
சேர் பட்ட மலராக
சேர்ந்து பலர் கெடுத்தார்கள்

உடல் வெந்த என்
கணவன் - துடி துடித்த
கை குழந்தை
மலர் எரிந்த
பெரும் கொடுமை
பலர் குடித்த
என் பெண்மை

ஈனத்தின் இழிவாக
வாழ்கின்றேன்
ஈழத்தில் பிறந்ததால்
வீழ்கின்றேன்

ஒரு சீதை உயிர் காக்க
ஊர் கூட்டி வந்த ராமா - இங்கே
ஓராயிரம் சீதைகளை சீரழித்தார்
எங்கே போனாய் ?

மான் மயில்கள் மா எருது
தேன் மலர்கள் பல வாழ
மீன் வாழ கூட நதி உண்டு
நான் வாழ வழி இல்லை

ஈழத்தில் நான் பிறந்தேன்
வேறென்ன பிழை செய்தேன் ?

மழை வெய்யில்
என்றென்றும் மேனியிலே
உடை அணிந்த
மிருகமாய் வேலியிலே
இன்பத்தை இது வரை
நான் காணவில்லை
எனை அழைக்க
காலனுக்கு ஏன் தோணவில்லை

எங்களுக்கு
மரணம் விடுதலை
பிழைத்தோம் பெரும்
பிழை ..

October 23, 2012

என்று விடியும்






சாப்பிட்ட இலையை
எடுத்த சிறுவனுக்கு
சரஸ்வதி பூஜை கிடையாது

உயிருள்ள சக்கரமாக
உணவுக்காக சுற்றுகிறான்
அயித பூஜைக்கு
அவனையும் படைத்தார்கள்

அவன் குப்பை தொட்டில்
போட்டது , நம் எச்சில் இலை
மட்டுமல்ல -
அவன் எதிர்காலத்தையும் தான்



October 22, 2012

உலக உண்மை




பலர்
எப்படி செலவு செய்வது
என்று தெரியாமல் அலைகின்றனர்
பலர்
செலவுக்கு என்ன செய்வது
என்று புரியாமல் அழுகின்றனர்

பணம் ,
மழையாக கொட்ட மறுக்கின்றது
அருவியாக கொட்டி தொலைக்கின்றது
மழை எங்கும் பொழியும்
அருவி ஒரே இடத்தில் தான் கொட்டும்

அழுவது அவமானம்




அந்த நன்றிகெட்ட நெஞ்சத்தை
நினைத்து அழுவும் போது
என் கண்ணீரில் கூட உப்பு இல்லை

கண்ணீர் கவலையின் வெகுமானம் - ஆயின்
உண்மையற்ற மனிதர்க்காக
அழுவது அவமானம் .

- வை . நடராஜன்

இன்றைய இந்தியாவில்




தேர்தல் என்பது யாதெனில் ....
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை
அணைத்து கத்திகளும் பட்டை
தீட்டி வைக்கப்படும்
விரும்பிய கத்தியை எடுத்து - மக்கள் தன்
வயிற்றில் குத்திகொள்ளும் சடங்கு .

- வை . நடராஜன்