January 14, 2013

இந்தியா விற்பனைக்கு







என்னை முன்னேற்ற என்
நாட்டுக்கு தெரியவில்லை
பெண்ணை வளர்க்க முடியவில்லை - என்று
கூட்டிகுடுப்பது முறையல்ல ..

காந்தி அவர்களே ,

நீங்கள் சிறை பட்ட
கிளியை விடுவித்து
குணம் கெட்ட குரங்குகளிடம்
குடுத்து விட்டீர்



ஊருக்கு இரண்டு ஏக்கர்
ஒதிக்கி வைத்து விடுங்கள்
ஒரு ஏக்கர் வால் மார்ட்டுக்கு
ஒரு ஏக்கர் எங்கள் சுடுகாட்டுக்கு ..

- வை .நடராஜன்




சுபமாக முடிய வேண்டிய
என் காதல்
சுலபமாக முடிந்து விட்டது :(

- வை .நடராஜன்

December 30, 2012

இந்த நாட்டில்





இந்த நாட்டில் ,

எத்தகைய குற்றத்தையும்
செய்து விட்டு ..
தண்டனையில் இருந்து தப்பிக்க
வேண்டுமெனில் ..
ஒன்று  ,
பைத்தியமாக இருத்தல் வேண்டும் - அன்றி
பணக்காரனாய் பிறத்தல் வேண்டும்

- வை .நடராஜன்

December 27, 2012

ஏமாற்றி வாழ்வதை விட



ஏமாற்றி வாழ்வதை விட
ஏழையாய் வாழலாம்
பாவ வழியை விட
பசியிலே சாகலாம்

உடலும் உயிரும்
பிரியும் வரை
பிழைத்து கொள்வேன் - தினம்
ஒரு வேளை உணவு என்பினும்
உழைத்து உண்பேன்

கடமை எனக்கு
கஞ்சி உற்றும் அதுபோதும் - மற்றவர்
உடமை கவர்ந்து
உண்ணமாட்டேன் ஒருபோதும்

உழவன் சிரிக்கும்




உழவன் சிரிக்கும் நாடுதான்
உண்மையில் சொர்க்கம் -
அன்னமிட்டவன் அழுவும் நிலையில்
அணுஆயித சாதணைகள் எதற்கு ???

அடுப்பு எங்களுக்கு ..அல்வா உங்களுக்கா ?







பங்கு வேண்டும் வெறிபிடித்து
கோரிக்கை கேட்ப்போம் - அங்கே
வெடித்து எதினும் நடந்து விட்டால்
வேடிக்கை பார்ப்போம்

மின்சாரம் இல்லாமல் வேதனையாய்
உள்ளது - எந்த
சோதனைகளையும் தாங்கதான்
தமிழகம் உள்ளதே


அழிவை கூட தாங்கி கொள்ளும்
எங்களினம் - வெறும்
கழிவை கூட ஏற்றுகொள்ளா
சுயநலம்

தமிழினமே ,

உணவின்றி குன்ற குன்ற
உயிர் வாழ வழியில்லை
உணர்வின்றி போனால்
உயிர் வாழ்ந்தும் பயனில்லை

மயிருக்கும் மரியாதை
உடம்போடு இருந்தால்தான்
மனிதனுக்கு மரியாதை
உணர்வோடு வாழ்ந்தால்தான்

அடுப்பு சட்டி எங்கள் மீது
அல்வா மட்டும் அடுத்தவனுக்கா ?
பாடு படும் எங்கள் தியாகம்
பங்கு மட்டும் கெடுதவனுக்கா ?

ஒத்த இந்தியனாக நாம்
வாழவேண்டும் - ஆனால்
மத்த இந்தியனுக்காக நாங்கள்
ஏன் சாகவேண்டும் ????

விஷ கடை


திராவிட மாயை




திராவிடன் என்ற
சாயம் பூசி _ எங்கள்
தமிழெனும் முகத்தை
இழந்தோம்

திராவிட தெலுங்கனை
கண்டதுண்டா _ நான்
திராவிடன் என்றவன்
சொன்னதுண்டா ?

கேரளவன் சொன்னதை
கேட்டதுண்டா _ கன்னடன்
சொன்னதை கண்டதுண்டா ?

எங்களை மட்டும்
திராவிட மாயையில்
மயக்கிய உங்களுக்கு
மதியும் உண்டா ???

திராவிடம் எனும் மாலையை
கழுத்தில் கொண்டு
பலியாடாய் கிடக்குது தமிழினம்
திராவிடம் சொல்லிக்கொண்டு
திரியும் மூடர்களை
நம்பிக்கொண்டு கிடப்பது அறிவீனம் ......

நம்மினத்தை எவனும் மதிக்கவில்லை
அது ஏன் உங்களுக்கு புரியவில்லை ?
சுற்றும் எவனும் மதிக்கவில்லை - சில
சுயனலவாதிகளுக்கு ஏன் புரியவில்லை ?

திராவிடம் ,
சிலர் ஓட்டுக்கு உதவும்
தமிழ்நாட்டுக்கு உதவாது

திராவிட கூச்சல் என்று மடியும்
தமிழின உணர்வு என்று விடியும் ?

நீ வாழ்வின் பொருளுரை





குண்டாக இருந்தேன்
உணக்காக இளைத்தேன்
மண்டாக இருந்தேன்
உணக்காக படித்தேன்

செண்டான உந்தன்
உயிர் கொள்ள துடித்தேன்
வண்டாக அலைந்து
வழியின்றி களைத்தேன்

கல்லாக இருந்தேன்
கால் பட்டு மலர்ந்தேன்
வில்லாக இருந்தேன்
விழி கண்டு உடைந்தேன்

மொழியின்றி இருந்தேன் -உன்னால்
கவி கோடி படைத்தேன்

எதற்காக பிறந்தேன்- என
நானும் அழுதேன் -
உனை கண்ட பிறகு
மரணத்தை வெறுத்தேன்

புயல் பட்ட படகாய்
பொருளின்றி அலைந்தேன்
நீ வந்த பின்தான்
பொருளோடு வாழ்ந்தேன்

சோம்பலின் பிடியால் உழைப்பை
தேடாமல் இருந்தேன்
உனக்காக வேண்டி
ஓடாக உழைத்தேன்

தனியான எனக்கு
உலகத்தில் யாருமில்லை - நீ
துணையாக பின்பு
உலகமே தேவையில்லை

தாயாக தயவாக
துணையாக வந்தாய்
நோய் தீர்க்கும் மறந்தாக
அணையாக வந்தாய்

பாறையை சிலையாக்கினாய்
பாலையை விளையக்கினாய்
வாழ்கையில் முடமாய் இருந்தேன்
வந்து நீ வளமாகினாய்

உதிர்ந்த தரைதொட்ட எனை
உயிர் கொடுத்து தலை சூடினாய்
வறண்ட என் வாழ்வை செழிக்க
நதியாக தினம் ஓடினாய்

அத்தனையும் தந்தாய் எனக்கு
அணியே நன்றி உனக்கு ..
நான் நானாக
நீ தாயாக ....

ஒருவனின் கவிதை அல்ல






ஆன்மிகம் தேட வேண்டாம்
அண்ணதானம் போட வேண்டாம்
மது கடைகளை மூடி பாருங்கள் - அந்த
மகேஸ்வரனே உங்களை வணங்குவார் ..

இருப்பதை வைத்து
சிறப்பாய் வாழ்வோம்
குடிப்பதை வைத்து
என்ன வளர்ச்சி ?
வேரிலே விசமென்றால்
ஏது மலர்ச்சி ?

ஊற்றில் விடத்தை கலந்து
ஊருக்கு அனுப்பி என்ன பயன் ?
நாற்றை எல்லாம் கருக விட்டு
வேலியை கட்டி என்ன பயன் ?

மனமும் உடலும் கெடுத்தபின்
மாநிலம் வளர்ச்சி என்ன பயன் ?
குளத்தில் நீரை கெடுத்து விட்டு
குடத்தை வாங்கி என்ன பயன் ?

சமுதாயமே சீரழிந்த பின்
சாலையும் ஆலையும் எதற்கு ?

தமிழகத்தில் எல்லா சாலைகளும்
சுடுகாடு நோக்கி போகிறது .
உடலும் மனமும் போதையிலே
நாடே வீணாய் ஆகிறது

மாநிலம் ,
வசதியாக இல்லையெனும்
பரவாயில்லை -தமிழினம்
நிம்மதியாக வாழ
வழி காட்டுங்கள் ..

ஒருவனின் கவிதை அல்ல
ஒரு இனத்தின் அழுகை