November 4, 2012

என் மங்கை :





இதழ் சொல்லும் மங்கை
இதயத்தில் மங்கை
இரவெல்லாம் தூங்காத
இரு விழியில் கங்கை

உணை காணா நேரம்
விழிகின்ற கண்ணீர்
உணை காண வேண்டும்
தொழுகின்ற கைகள்

காணாத நெஞ்சம்
கண்ணீரில் நிறைந்து
உனான உயிரும்
ஓடாமல் உறைந்து
என்வான வெளியில்
வெளிச்சங்கள் குறைந்து
எந்நாளும் இருளில்
என் வாழ்க்கை மறைந்து

உணை காண வேண்டும்
தினம் தோறும் எண்ணம்
உன்னை வேண்டி தானே
உயிரோடு இன்னும்

உன் தோளில் சாய்ந்து
நான் அழுவ வேண்டும்
கண்ணீரை துடைத்து நீ
தழுவ வேண்டும்


செந்தாழ செவந்தி
செந்துர பூவே
செவ்வான இதழ் கண்ட
அணியான தீவே
உணை காணா நேரம்
அனல் மேல் தவித்தேன்
இனை கண்ட நெஞ்சம்
கணை கண்ணில் துடித்தேன்

உன் நெஞ்சம் எனை வெறுத்தால்
ரத்தத்தில் கொட்டும்
உன் மஞ்சம் உன் நெஞ்சம்
எனக்காக மட்டும்

என் சொல்லாடும் கவிக்கு
தாயாக இருக்காய் - உன்
தள்ளாடும் காலத்திலும்
சேயாக நினைவேன்

மழை வந்த பின்பு
மண்ணெல்லாம் ஈரம்
மங்காத உன்னை
காணாத நேரம்
தூங்காத நானும்
துடிக்கின்ற மீனாய்
வலி தவறி விழி கசியும்
விணான கேனாய்

உன்னை உன்னல் சமயம்
எனை வலிக்கும் இன்னல்
இவன் வேண்டும் வரமே
இவன் கண்ட அறமே

வருவாய் என் வளியே வாழ்வோம்
ஒன்றாய் - வாழ்வில் நாம்
என்றும் களிவோம்
நன்றாய்

- வை . நடராஜன்

Photo courtesy : Google

களவியல் - புணர்ச்சிமகிழ்தல்




ஆசை தான் அதிகமானால்
அங்கம் தான் புனிதமாகும்
தேகங்கள் கூடலிலே
மோகத்தால் மூச்சடைக்கும்

ஆடையே பாரமாக
அச்சமோ தூரம் போக
அணைத்தவளே ஆடையாக _ அவள்
இதழ் என்னை ஈரமாக்க

எங்கள் ,

நிர்வாண கோலத்திலே
நிலவுகே மோகம் வரும்
அதிகாலை பகலவன் பார்த்தால்
அவனுகே கூச்சம் வரும்

ஐந்தடி உடல் மூலம்
அகிலத்தை ரசித்தேன் _ அவள்
அழகிய இதழிலே அமுதத்தை
ருசித்தேன்

அந்த தீண்டாத கொடி முல்லையை
நான் தின்னாத இடமில்லை
தாண்டாத எல்லை தாண்டி
பண்ணாத செயல் இல்லை
தேகத்தின் இடமெல்லாம்
இதழ் படா இடமில்லை

வறண்ட என் தேகத்திலே
திரண்ட அவள் முத்த மேகம்
புரண்டு புரண்டோம் காலை வரை
தீரவில்லை தேக மோகம்
மோகத்தில் மோதிய பின்
தேகத்திலே சூடு _ அவள்
தேகமெல்லாம் ருசித்த பின்
தேவையா தேன் கூடு ?

வானமே போர்வை ஆயின
வாசமே வேர்வை ஆயின
நக கீறல் கோலமாயின
முகமெல்லாம் ஈரமாயின

போர்வையில் நெளிந்தோம்
வேர்வையில் நினைந்தோம்
வேகத்தில் களைத்தோம்
வெற்றியில் திளைத்தோம்
மோகத்தில் பயணம்
மோட்சத்தை அடைந்தோம்
வேகத்தில் தேகம்
மோகத்தில் உடைந்தோம்

போதும் என்று சொல்லி சொல்லி
நடித்தாள்
_ என்னை
போக சொல்லி கொண்டே அணைத்து
பிடித்தாள்

எந்த ஆண்மகனும் ருசிக்காத
அழகிய தேன் கிண்ணம் _ அவளை
ஆயிரம் முறை ருசித்தாலும்
அடங்காது ஆண் சின்னம்

நீ தொடதான் நான் பிறந்தேன்
நான் தொடதான் நீ பிறந்தாய்
நாம் தொட்டோம் யார் பிறப்போ ?


- வை . நடராஜன்

வலியில் தான் வழி பிறக்கும்




வீழ்ந்து விட்டால்
கலங்காதீர் ,

வழக்கறிஞர் ஒருவர்
வீழ்ந்ததால் தான் - உலகம்
மகாத்மாவை கண்டது

ஏமாற்றத்தை கண்டு
ஏங்காதீர் ,

காசி ஏமாற்றியதால் தான்
உலகம் பெரியாரை
பெற்றது


- வை . நடராஜன்

திருநீறு





ஒரு பெரியவர் நெற்றியில் திருநீறு இட்டுக்கொண்டு
சாலையில் சென்று கொண்டு இருந்தார்
எதிரே வந்த ஒரு நாஸ்தீகர் , '' என்ன ஐயா ' நீங்கள் கடவுளை கும்பிடுபவர் என்று காட்டிக்கொள்ள .
இந்த '' வெள்ளை பட்டை விளம்பரம் தேவையா ??

பெரியவர் சொன்னார்
,
அய்யா !! இந்த விளம்பரம் விலையற்ற வெறும் சாம்பல் ஆனால் .
நீங்கள் பகுத்தறிவு என்று காட்டிக்கொள்ள , செலவு செய்து வாங்கிய '' கருப்பு சட்டை விளம்பரம் தேவையா ???


- வை . நடராஜன்

Photo courtesy : Mr Martin Don

நன்றியை வாங்க




நாய் வாங்க ஆயிரம் ஆயிரம்
ஆனாலும் .
அதனிடம் நன்றியை வாங்க
ஐந்து ருபாய் ரொட்டி போதும்

- வை . நடராஜன்

November 1, 2012

நாய்கள் கூட கேட்கிறது :







எல்லா சாதிக்கும்
உள்ள ஒரே ஒற்றுமை
'' ஜாதி வெறி மட்டுமே ''

நாய்கள் கூட கேட்கிறது ...

நாங்கள் நடு தெருவில்
ஒட்டி கொள்வது அசிங்கம் எனில்
நீங்கள் நடு தெருவில்
வெட்டி கொள்வது என்ன ?

நாங்கள் இனங்கள் வேறுபட்டதால்
உருவமும் நிறமும் மாறும்
குணமும் நன்றியும் மாறாது ..

உங்களுக்குள் இனங்கள் ஆயிரம் - ஆனால்
மனிதம் எங்கே ?

தமிழன் என்ன எலியா ?




நியூட்ரினோ ஆய்வகம் என்று
தேனி மலை குடைந்து விட்டான்
நியூகிளியர் கொண்டு வந்து
கூடங்குளம் கெடுத்து விட்டான்

தமிழகம் மட்டும் ஆய்வகமா ? உனக்கு
தமிழர்கள் எல்லோரும் சுண்டெலியா ?
கேரளவன் மலை எல்லாம் ஹனிமூனுக்கா ?
தமிழக மலை மட்டும் ஆய்வகத்துக்கா ?

உங்களுக்கு வேண்டும் என்றால்
நாடாய் எங்களை பார்க்கிறீர்கள்
நாங்கள் வேண்டியதை கேட்டால்
நாய் போல ஏய்க்கிறீர்கள்

தோண்டி சுரண்டி வெட்டி எடுத்து
எல்லா வளமும் போகுதடா
தண்ணீரை கேட்டால் மட்டும்
தகராறு ஆகுதடா

எங்கள் எதிர்கால சந்ததியை
பணயம் வைத்து இந்த
நிகழ்கால தேவைக்கு
அணு நிலையம் வைத்தீர்

துக்கம் வந்தால் எல்லாமே
எங்களுக்கு மட்டும் _ எனில்
வெட்கமின்றி கேட்கலாமோ
பங்கை மட்டும் ?

மழை நீரை தேக்கி வைக்க
அணைகட்டும் நிலை மாறி _ எங்கள்
மறத்தமிழன் உயிர் குடிக்க
ஆணை கட்டும் அரக்கனடா

இயற்கை நீரை இடை மறித்து
தடுத்துவிட்டு இல்லையேன்னு
செயற்கை வேடம் போடுபவனுக்கு
சேவை செய்யவா நாங்கள் பிறந்தோம் ?

எங்கள் அணை எங்கள் தண்ணி'
என்று நீ சொல்லும்போது _ எங்கள்
நிலக்கரியும் மின்சாரம் மட்டும்
எப்படி உனக்கு பொதுவில் வரும் ?

எங்கள் படகெல்லாம் கடலிலே
போய் _ பின் பாடையாக
வருகிறதே ..

அடித்தவனை தட்டி கேட்க
நாதி இல்லை உங்களுக்கு
அடுத்த கண்டம் தாண்டி போகும்
அக்னி தான் எதற்கு ?

கச்சத்தீவை பிரித்து கொடுத்தீர்
அண்டை நாட்டு நட்புகாக ..
ஏன் ?
கஷ்மிரையும் கொடுங்கலேன்
அதே போல நட்புகாக

நான் இந்தியாவை பிரிக்க
ஒன்றும் நினைக்க வில்லை _ ஏனெனில்
நம் இந்தியா இன்னும்
ஒன்றாய் சேரவே இல்லை .....

நிலம் மட்டும் சேர்ந்து விட்டால்
நாடாகுமா ?
மனம் எல்லாம் ஒன்று சேர
எத்தனை நாளாகுமோ ........

இந்தியன் என்று சொல்ல
பெருமை கொள்வோம் _ ஆனால்
இந்தியன் என்பதற்காக
ஏமாற மாட்டோம்

- வை . நடராஜன்

நான் இயற்கை பேசுகிறேன்





அன்னையை அடகு வைத்து
ஆடம்பரமாய் வாழ்வது போல
என்னையே அழித்து வாழும்
மதியற்ற மானிடர்களே.

பெரும் மழையும் எரிமலையும்
பூகம்பம் புயல் காற்றும்
நான் செய்யும் பெரும்நாசம்

என் வீடு என் குழந்தைகளை
சுயநலத்தில் கருவறுக்கும்
உங்களை படைத்தது
நான் செய்த பெரும் பாவம்

நான் படைத்தேன்
எனை அழித்தீர்
நீர் படைத்த மதத்தை காக்க
பெரும் செல்வம் கொடை அளித்தீர்

மூடர்களே ,

வீடே எரியும் போது
விளக்கிற்கு எண்ணெய் எதற்க்கடா ?
இயற்கையை அழித்த பின்
இறைவனும் மதமும் எதற்க்கடா ?

பூமியை காப்பாற்று
நான் , கெஞ்சவில்லை
உங்களை காப்பாற்றிகொளுங்கள்
எச்சரிக்கிறேன்

உங்களால் எனக்கு
சில கால வலி - உங்களுக்கு
நிரந்தர அழிவு .. .

- வை . நடராஜன்

Photography By : Brent Stirton , National Geographic Society .

வேலை நிறுத்தம்



மரங்கள் ஒரு நாள்
வேலை நிறுத்தம்
தொடக்கம் எனில் - பின் இங்கே
600 கோடி சடலங்களும்
அடக்கம் ..

அறிவுரை







நாம் சொல்லும் நேரத்தில்
வார்த்தை ஆறாக ஓடுகிறது
நாம் கேட்கும் நேரத்தில்
காது அணை போல மூடுகிறது

வாய் உள்ளதே என
அறிவுரை சொல்லாதே
வாழ்ந்து காட்டிய பின்
அறிவுரை சொல்

தன் கையெல்லாம்
அழுக்கு இருப்பினும்
அடுத்தவன் காலின்
அழுகை குறை சொல்லி
அறிவுரைபார் ..