October 16, 2012

கருப்பு சட்டை கறையாகி விட்டது




போலி மதவாதிகள்
எல்லா மதங்களிலும் உள்ளனர் - ஆனால்
போலி நாத்திகவாதிகள் இந்து
மதத்தை மட்டுமே பேசுவார்கள்

செவிகள் குறை என்றால்
இசையில் பிழை இல்லை
செய்தவன் பாவத்திற்கு - எந்த
இறைவனும் பொறுப்பில்லை

பகுத்தறிவு கடவுளை மறுக்கவே
மனிதனை இழிவு படுத்த அல்ல

அன்று தாழ்த்தப்பட்டோர்
நிலத்திலே ஆரியர்கள் களையாகி
வளச்சியை கெடுத்தனர்

பெரியார் .. களையெடுக்க சொன்னார் ,
ஆனால் இன்று களை எடுப்பதே
கலையாக்கி விட்டனர்
விவசாயம் பண்ணாமல்

அவர் மீண்டும் வந்தால் ..
கருப்பு சட்டை போலிகளை கண்டு
காவி சட்டைகளை கூட மன்னித்துவிடுவார் .

மாநிறம்தான் என்பினும் அவள் , ஒழுக்கத்தில் பேரழகி





மெட்டி போடும்
காலம் வரை
கட்டி வையடா காமத்தை
எட்டி பார்த்த இச்சையை
தட்டி அடக்கி சென்றுவிட்டால் .

தேகமும் உனக்கடா - இந்த
தேனின் சுவையும் உனக்கடா - ஆயினும்
மாலை இடும் நேரம் வரை
மஞ்சம் என்பது பிசக்கட

உள்ளதை கொஞ்சம்
சோதித்தாள் _ஆயினும்
ஒழுக்கத்தை நன்கு
போதித்தாள் .

October 13, 2012

பேய் அரசாண்டால்




மகளுக்கு அணிய
தங்கம் வேண்டி
மனையாளை விற்றுவிட்டனர்
முன்னேற வழிவேண்டி
முதலைகளை உள்ளே விட்டனர்

உள்நாட்டு வணிகனை
கல்லறையில் புதைத்து
வெளிநாட்டு பொருகளை
கொண்டு வந்தனர்

நாட்டை உயர்த்துமாம்
சொல்லி விட்டார் _ ஆயின்
எந்த நாடு என்பதை
மறந்து விட்டார் ..

வால்மார்ட் பொருள் எல்லாம்
வகை வகையாய் போகுதையா _ இங்கே
கடை வைத்துருந்த உடல் எல்லாம்
கட்டையிலே வேகுதையா .

மாட்டுக்கு புல் வேண்டி
மடியை நீர் விற்றுவிட்டால் ...
வீட்டுக்கு பால் வேண்டி
எங்கே போய் பிச்சை கேட்பீர் ?




கேலிசித்திரம் - நன்றி : திரு .பாலா

October 12, 2012

ஒரு சிறு கதை





எழுநூறு ஆண்டுகளுக்கு முன் , தமிழகத்தை பச்சையம்மா என்ற ஒரு அரசி
ஆட்சி செய்தார்கள் , மிகவும் கண்டிப்பான அவர்களை கண்டால் அரண்மனையே
அலறும் . ஒரு நாள் அரசவையில் ''மாதம் மும்மாரி பொழிகிறதா '' ? என்று  அரசி கேட்க .
ஒரு அமைச்சரின் பேரன் '' ஜென்னலை திறந்து பார்த்தல் தெரிய போகிறது
அதை விடுத்தது சும்மா இங்கே கேட்பது என்ன பயன் என்று விளையாட்டாக
முனுமுனுத்தான்'' . இதை ஒற்றன் கேட்டு அரசியிடம் சொல்ல அன்று இரவு
அமைச்சரின் இல்லத்தில் வந்த அரண்மனை சேவகர்கள் அமைச்சரிடம் ஒரு ஓலை
கொடுத்து விட்டு  அரசு குதிரையை மீட்டு சென்றார்கள் , அன்று முதல் அவர் கிராம
தலைவராக மாற்ற பட்டார் .

ஒரு நாள் அரசி அரண்மனை மாடத்தில் உலவிக்கொண்டு இருந்தார்கள்,
கிழே அரண்மனை வாயிலில் ஒரு அமைச்சர் தன் குதிரையை தடவி கொடுத்தப்படி
நின்று கொண்டு இருந்தார் . இதை கவனித்த அரசி அமைச்சரை அழைத்து
'' குதிரையிடம் என்ன பேசிக்கொண்டு இருந்திர்கள் ?  என கேட்டார்   .அமைச்சர் , ''அரசியே
குதிரையிடம் எவ்வாறு பேச முடியும் ? அப்படி பேசினாலும் அவைகளுக்கு புரியுமா என்று
வினவினார் , அதை கேட்டு அமைதியாக சென்று விட்டார் அரசி . மறுநாள் காலை
அமைச்சர் தன் வீட்டில் இருந்து அரண்மனை கிளம்ப வந்து பார்த்தல் அவர் குதிரையும்
பறிக்க பட்டு ஒரு ஓலை இருந்தது. அமைச்சர் அந்த ஓலையை பிரித்து கூட பார்க்க வில்லை
ஏனெனில் உள்ளே என்ன இருக்கும் என் அவர் தெரிந்து கொண்டார் ,


சில மாதங்கள் கழித்து , அரசி  அமைச்சர் மற்றும் படை பரிவாரங்களுடன்
நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டார் . ஒரு இடதில் ஒரு பிரம்மாண்டமான ஒரு
கட்டத்தை பார்த்த அரசி தன் அமைச்சரிடம் , அது என்ன கட்டிடம் என்று கேட்டார்
உலகமே வியக்கும் இந்த இடத்தை நம் அரசி தெரியாதவர் போலவே கேட்கிறார்
என நினைத்த அமைச்சர் , இருந்தும் பதில் சொல்லவில்லை எனில் பதவி போய் விடும்
என்ற பயத்தில் '' அது தான் தஞ்சை பெரியகோயில் '' என கூறினார் ,
மாமனார் ராஜா ராஜா சோழனால் கட்டப்பட்டது . என்றும் அவர் மாபெரும் அரசர் என்றும்
சொன்னார் . இதை கேட்ட அரசி என்னை விடவா என கேட்க ? ''சுதாரித்து கொண்ட
அமைச்சர் இல்லை அரசியே , ஆயினும் இனி வரும் காலங்களில் இந்த கோயிலுக்கு அடுத்த படியாக உங்கள்
 பெயரும் பெருமையாக பேசப்படும் என்று கூறினார் , அந்த பயணம் முடிந்து நாடு
திரும்பும் வரை அந்த கேள்வியை இன்னும் இரு அமைச்சர்களிடம் கேட்க
அவர்களும் அதே போல புகழ்ந்தார்கள் ,
அரண்மனை திரும்பியதும் அந்த மூன்று அமைச்சர்களும் ஒரு மண்டபத்தில்
பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்பொழுது தலைமை ஒற்றன் அங்கே பதற்றமாக
ஓடி வந்து
'' அமைச்சர்களே நீங்கள் அரசியார் கோவம் அடையும் படியாக
என்ன சொன்னீர் ?
ஒரு அமைச்சர் , என்ன ஆயிற்று ஒற்றா ?

தஞ்சை கோயிலுக்கு அடுத்த படியாக உங்கள்
பெயர் இருக்கும் என நாங்கள் மூவரும் சொல்லி விட்டோம்,
அரசியை இரண்டாம் இடதில் வைத்து புகழ்ந்தது தவறுதான் . என்ன ஆயுற்று , எங்கள் அமைச்சர்
பதவி போய் விட்டதா ? என கேட்க.

இல்லை அமைச்சர்களே '' தஞ்சை பெரிய கோயிலை அப்புற படுத்த அரசி உத்தரவு
விட்டு இருகிறாராம்'' என கூறினார் ,


பின் குறிப்பு :
இந்த காலகட்டத்தில் தான் பச்சோந்தியார் என்ற அரசரும் வாழ்ந்து வந்தார்
மக்கள் புரட்சியால் ஆட்சி இழந்த அவர் ராணியாரின் ஆட்சியில் மக்கள் படும் துயரத்தை
தன் மூக்குசளி என்ற ஓலை சுவடியில் எழுதி குளிர்காய்ந்து கொண்டு இருந்தார் .

முற்றும்

October 11, 2012

காமம்





கட்டிலிலே உள்ளம் மிருகமாகும்
கட்டி அணைத்த உடல் தெய்வமாகும்
தாகமும் வேகமும் தீர்ந்த பின்
தனி தனியே பிரிந்து மனிதன் ஆவோம்

பேராசை




பேராசை என்பது ...

தங்கவாத்தில் ஆரம்பித்து
ஈமு கோழி வரை தொடர்கிறது ,

பேராசை தூண்டி விட
அறியாமை துளிர்கிறது
ஆயிரம் முறை ஏமாந்தும்
அறிவு இன்னும் தூங்குகிறது .

அறியாமையும் பேராசையும்
அநியாயத்தின் பெற்றோர்கள்

- வை . நடராஜன்

October 10, 2012

அன்றும் !! இன்றும் !! தமிழகம் .




2006'ல் கருணாநிதி திருடமாட்டார்
என நம்பினோம்
2011'ல் ஜெயலலிதா திருத்தம் செய்வார்
என நம்பினோம்

ஆனால் ...

பாம்புக்கு பயந்து ஓடி
பாழும் கிணத்தில் விழுந்த கதையாக
திருட்டுக்கு பயந்து
இருட்டில் மாட்டிக்கொண்டோம் .




Photo courtesy : Google

October 9, 2012

அன்றொரு நாள் , நானும் !! நீயும் !!!




தனிமையில் நாமிருந்தோம்
தழுவத்தான் நீ இருந்தாய்
தாழிட்ட வீட்டினிலே
தாகத்தில் நாமிருந்தோம்

விளக்கு தான் அணைந்து விட
விதரதாபம் பிணைந்து வர
அருகினிலே நெருங்க நெருங்க
ஆசைகளோ பெருகி வர

அரை அடி தூரத்தில்
அச்சம் தான் அணை போட
வாய்ப்புதனை வீணாக்கி
வந்த வழி திரும்பிவிட்டேன்

இல்லம் போய் சேர்ந்தவுடன்
செல்லமாய் நீ சொன்னாய் .....

'' சுவர் தாண்டி வீடு வந்த
 திருட்டு பூனையே
 சுவையான பால் இருந்தும்
 பயந்து போனியே .. ''

நாணத்துடன் நான் சொன்னேன் ,

'' நீ வயதுக்கு வந்த வீணையடி - நானோ
வாசிக்க தெரியாத கேனையடி ...

October 8, 2012

உலக சர்வாதிகாரிகளும் !! இந்தியஅரசியல்வாதிகளும் ..




எந்த சர்வதிகார வரலாற்றிலும்
மக்கள் மடிவார்கள் இறுதியில்
சர்வதிகாரியும் மடிவான் .

ஆனால் இந்திய
ஜனநாயகத்தில் மட்டும் தான்
மக்கள் மட்டுமே மடிகிறார்கள்

ஒழுக்கமற்ற ஜனநாயகம்
இரக்கமற்ற சர்வதிகாரத்தை விட
கொடியது

- வை . நடராஜன்

இறைவா.

இறைவா...

புழுவாக புல்லாக
மலிவான மண்ணாக
எலியாக எறும்பாக
ஏர் பூட்டும் எருதாக
எதுவாக பிறப்பினும்
ஏற்று கொள்வேன் _ ஆயின் இந்த
இழிவான இந்தியாவில்
பிறந்திட வேண்டாம் ...