September 9, 2012

வாழ்கையில் ...

காசை கொடுத்தேன் எழுதுகோல் வந்தது
காதலை கொடுத்தேன் கவிதை வந்தது
பொறுமையை இழந்தேன் குழந்தை வந்தது
பொறுமையாய் இருந்தேன் குழந்தை வளர்ந்தது

சிரிக்கும் போது இன்பம் தெரிந்தது
அழும் போதுதான் உண்மை புரிந்தது
சக்கரை இன்றி பால் கசந்தது
பசிக்கும் போதுதான் பாகற்க்காய் இனித்தது

அழுவதால் அழுதேன்




அன்று
கண்கள் பார்த்து
கைகள் கோர்த்து
ஒன்றாக சிரித்தோம்

இன்று
காலம் தந்த சாபம்
தனி தனியாக அழுகிறோம்

என் காதலின் தோல்வி
கண்ணீரின் விதி
அவள் கல்யாணத்தின்
தோல்வி கடவுளின் சதி

அவளை தொட முடியாத
தூரத்தில் உள்ளேன்
விட முடியாமல் பாரத்தில்
உள்ளேன்

என்னை கொய்தவள்
அழுவும் போது
என்ன செய்வது
புரியவில்லை


அல்லி மலரை
அழ வைத்த
ஆண்டவனுக்கும்
அறிவும் இல்லை

September 1, 2012

கிடைத்த வரம் இழந்த தினம்




இன்று ... .. .
மாதத்தின் முதல் நாள்
மறக்க நினைக்கும் கருநாள்
கனவெல்லாம் கலைந்து _ நான்
கதறி அழுத திருநாள்

செந்தூர பூ  ஒன்று
சேற்றிலே விழுந்த தினம்
செவ்வான அழகினை
கருமேகம் மறைத்த தினம்

வான் நிலவே நிலை தவறி
வழியோரம் விழுந்த தினம்
வலி கொடுத்து விழி கசிந்து
வழி மாறி போன தினம்

கை குழந்தை கரு விழியை
கருந்தேளாய் கொட்டி விட்டு
மெய்கலந்த என் அன்பை
பொய்புனர்ந்து போன தினம்

பால்கலந்த தேன் சுவையை
பாதையிலே கொட்டி
ஊன்கலந்த என் உணர்வை
ஊனமாக்கி போன தினம்

வெள்ளி நிலா மேனியவள்
கள்ளி செடியாய் காய்ந்ததினம்
பொங்கிவரும் பொன்னி நதி
வஞ்சம் பட்டு வறண்ட தினம்

கடவுளின் வரமாக
மெய்யுணர்வில் வந்த அவள்
காலத்தின் சாபத்தால்
கைநழுவி போன தினம்

August 27, 2012

தமிழ்காடு :()





என் முதல் கதை . படித்து தங்கள் மேலான கருத்தை சொல்லவும் :::




ஒரு காட்டில் உள்ள சிறு குளத்தில் நீர் அருந்த ஒரு நன்கு வளந்த ஒரு மான் வந்தது .
அங்கே கரையோரம் இருந்த ஒரு குள்ளநரி அதை பார்த்தது .
மிகவும் பசியாக இருந்த அந்த நரியினால் வளர்ந்த மானிடம் தனியாக வேட்டையாட முடியாது ,
ஆகையால் இதை வளர்ந்த மிருகத்திடம் புடித்து கொடுத்தல் அவை திண்ண மிச்சத்தை நாம் திண்ணலாம் என்று
மனதுக்குள் நினைத்து மானிடம் சென்று '' மானே மானே நீ நீர் அருந்திய பின் உன்னை கொல்ல ஒரு சிங்க குடும்பமே அங்கே காத்துகொண்டு இருக்கிறது ஆகையால் இந்த நீரில் குதித்து அந்த கரையில் போய் விடு
அங்கே நிறையாக புற்கள் உள்ளது நீ நிம்மதியாக வாழலாம்" என்று கூறியது . இதை கேட்ட அந்த மான் நீரில் குதிக்க அங்கே இருந்த முதலை அந்த மானை
கடித்து கொன்றது . உதவி செய்த நரிக்கு  முதலை சிறு பங்கையும் தந்தது .

இதையெல்லாம் மேலே மரத்தில் இருந்து பார்த்து கொண்டு இருந்த காகம்
பக்கத்தில் இருந்த காகத்திடம் சொன்னது ...

 '' இதை போல தான் ஒவ்வொரு ஐந்து  வருடத்திற்கு ஒரு முறை
 இதை போன்ற செழித்த மான் சிங்கத்திடமோ அல்லது முதலை இடமோ மாட்டி மடிகிறது .  ஆனால் அது சிங்கத்தாலே இறக்க வேண்டுமா அல்ல முதலையாலே இறக்க வேண்டுமா என்பதை மறைமுகமாக
 யார் அதிக பங்கை தருகிறார்களோ அந்த மிருகத்திடம் கூட்டு வைக்கும்
 அந்த குள்ள நரி தான் முடிவு பண்ணும்'' .   என்று காக்கை சொல்லி முடித்து ...


இந்த கதையின் கரு :

அந்த காடு  _ தமிழ் நாடு

அந்த சிங்க குடும்பம்  _ திராவிட முன்னேற்றக் கழகம்

அந்த முதலை _அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

அந்த குள்ள நரி _ கூட்டணி  கட்சிகள்

மேலே இருந்து வேடிக்கை பார்க்கும் காகம் _ தேர்தல் ஆணையம்

அந்த பாவப்பட்ட மான்  _ தமிழக மக்கள்

சிலரின் காதல் கதை




வான் நிலவாய்
வளர்பிறையாய்
வளந்து வரும்
காதல் எல்லாம்
தேன்நிலவை பார்த்து விட்டால்
தேய்பிறையாய் தேய்ந்துவிடும்

கொஞ்சும் போது காதல் வார்த்தை
கோடியளவு கொட்டி வரும்
கொஞ்சம் காமம் பார்த்து விட்டால்
கோழி முட்டை போல் சுருங்கும்

மல்லிகையே மரிக்கொழுந்தே
மாசற்ற மதியழகே _ என
சொல்லி வந்த வார்த்தையெல்லாம்
அள்ளி அணைத்தால்
மறைந்து விடும்

தேன் கொஞ்சும் காதல் பல
தேரோட்டம் போலதான் _ அது
ஊர் சுற்றி முடிந்து விட்டால்
உள்ளே போய் தூங்கிவிடும்

விருப்பத்தில் ஒன்றாகி
விவகாரத்தில் பிரிபவர்கள் பலர்
மனம் வேறுப்பட்டு உள்ளதால்
பிரியவில்லை
உடல் ஒன்றுப்பட்டு புளித்தல்
பிரிகின்றனர்..

காதலில் காமம்
வாழ்கையில் முடியும்
காமம் மட்டும் என்றபின்
வழக்கிலே முடியும்

August 25, 2012

ராணுவ பயிற்சி









இந்திய அரசே .....

அக்னி ஏவுகணை ஆயிரம் இருப்பினும்
ஆண்மை என்பது கொஞ்சமும் இருக்கணம்

எங்கள் படகெல்லாம் பாடையாக
திரும்புகிறது _ எங்கள்
கடலோரம் தினம் தினம்
அழுகின்றது

நீங்களோ

கொன்று குவிக்கும் பாவிகளுக்கு
கொல்ல பயிற்சி கொடுக்குறீர்கள் _ உங்கள்
மனையுள் புகுந்து மகளை கெடுக்க வருபவனுக்கு
வயகரா வாங்கி தந்து வழி அனுப்பி வைப்பிர்ரா ????

August 24, 2012

மது மயக்கம்






மருத்துவமனை சென்று பாருங்கள்
பல ஆயிரம் மனிதர்கள் மரணத்தை கண்டு
போரடிக்ககொண்டு இருக்கிறார்கள்

மதுகடையோரம் சென்று பாருங்கள்
பல ஆயிரம் மனிதர்கள் மரணத்தை காண
நீராடிக்கொண்டு இருக்கிறார்கள் ..

உண்டதை எல்லாம் உரமாக்கி
உடல் வளர்க்கும் நம்
வயிறு
கண்டதையெல்லாம் போட்டு வைக்கும்
கழிவு நீர் தொட்டி அல்ல

களியாட்ட மதுவில் இன்று
சுவர்க்கம் தெரியும் _ நாளை
வலியோடு மடியும் போதுதான்
உண்மை புரியும்


http://www.facebook.com/Anuvakal

August 23, 2012

நாகரீக கோமாளிகள் :





ஐம்பதாயிரம் சம்பளம் என்பதால்
அம்மாவை மாற்ற தேவையில்லை
ஆங்கிலம் பேச தெரிந்தவர்கள் எல்லாம்
ஆகாயத்தில் இருந்து வந்தவரில்லை.

காலை வணக்கம் வார்த்தை எல்லாம்
கடல் கடந்து சென்றது
Good Morning என்ற வார்த்தையில் தான்
பல குடும்பம் விழிக்குது .

Fu*k என்ற வார்த்தை கூட
பெருமை பொங்க சொல்வர்..
நாங்கள் ஓ... என்று ஆரம்பித்தால் மட்டும்
ஒழுக்கம் இல்லாதவர் என்பர்.

அந்நிய உணவில் தனி ருசிதான்
அதில் ஒன்றும் தவறில்லை
ஆயின் வறண்ட ரொட்டியை
திண்ணக் கூட வறட்டு கவுரவம் என்ன?

பத்து வரியை படிக்க சொன்னால்
பல்லை இளித்து காட்டுவார்
ஆயினும் ஆங்கில நாளிதழ் வாங்கி
வைத்து அறிவாளி வேடம் போடுவார்.

முறுக்கும் சீடையும் கையில் தந்தால்
அலட்சியம் செய்து போவார்.
ஒரு  Lay'sஐ வாங்கி  கொண்டு
கோமான் போல திரிவார்..

நாகரீக பெண்கள் நடக்கும் விதத்தில்
அலப்பறை அதிகமாய் மின்னும்
நாலு வரி பேச தெரிந்துவிட்டால்
மனதில்  சேக்சுபியர்  என்று எண்ணம்.

பாரதி கவிதை பைந்தமிழ் நூலை
புரியாதவர் போல படிப்பார்..
Harry Potterஐ  வாங்கி வைத்து
மேதாவி போல நடிப்பார்..

நண்பா தோழா என்பதை
பழமை சாயம் பூசுவார்
Bro Dude என்பதை எல்லாம்
புரியாமலே பேசுவார்

அன்பெனும் அம்மா
Mummy  ஆனது
அழகிய தமிழ்மொழி
Dummyஆனது
ஆங்கிலம் என்பது
பெருமையானது.
நீங்கள் அலட்டிக்கொள்வது
மடமையானது.

அரசியலில் தான் விடுதலை பெற்றோம்
நம் அடிமை தனம் இன்னும் போகவில்லை
வளர்ச்சிக்கு தான் ஆங்கிலம்
அதை கவர்ச்சியாய் காட்டத் தேவையில்லை.

பெருமைக்கு பேசுவதை
குறைத்து கொள்ளுங்கள்
நம் பெருமை எல்லாம்
தமிழ்தான் உரைத்து சொல்லுங்கள் .

_ வை . நடராஜன்


http://www.facebook.com/Anuvakal





August 22, 2012

நன்றி மணி அண்ணே




கோஷம் போட கூட்டமில்லை
கூட்டம் போட்டு உயரவில்லை
பாலும் தேனும் ஊற்றவில்லை
பதவியை பிடிக்க நடிக்கவில்லை

தமிழன், தர்மன் என்றெல்லாம்
தானே தம்பட்டம் அடிக்கவில்லை
"தமிழா, விழிப்பாய்!!! " என்றெல்லாம்
தத்துவம் எதையும் பாடவில்லை

மன்றங்கள் ஒருநாள் ஒன்றாகி
மாநாடு மேடை போடவில்லை
அழகியை பிடித்த கையினிலே
ஆட்சியை பிடிப்பேன், கூறவில்லை

அப்பாவின் வால் பிடித்து வந்தவரில்லை
தப்பான வழி ஒன்னும் சொன்னவரில்லை
சிரிப்பு நடிகன்தானே என்று _ அரசும்
சிறப்பு எதையும் செய்யவில்லை

அழகோ ஒன்றும் பெரிதல்ல
 அகமோ உனக்கு சிறிதல்ல
சிரிப்பே மருந்தாய் என்றின்
சிரிப்பை கொடுத்த மருத்துவர்

சிறப்பாய் ஒன்றை செய்தாரய்யா
சிரிப்பை ஒன்றே கொடுத்தாரய்யா
நகைச்சுவை என்னும் அமுதூட்டி
மனச்சுமை கொஞ்சம் தீர்த்தாரய்யா

பல்லாண்டு திரையில் இருந்து
பலபேர் கவலை மறந்து
பாமரனையும் சிரிக்க வைத்த
மணி அண்ணே.. உங்கள்
நடிப்பழகும் நகைச்சுவையும்
தனி அண்ணே

சிரிப்பு என்பது மருந்தாகும் _ உங்களை
சிறப்பிப்பது மகத்துவம் ஆகும் _
நாளைய தலைமுறையும் மகிழுமே
நன்றிகள் பல கோடி கவுண்டரே ..

காலமும் பிரியாத நீங்கள் _ இந்த
கவிதையிலும் பிரியக் கூடாது _ ஆகவே
ஒருவருக்கு நன்றி போதும்
இருவருக்கும் பொதுவாய் போகும்..


http://www.facebook.com/Anuvakal

August 20, 2012

கண் தானம்






உயிரற்ற சரீரம்
சடலமாகும்
உணர்வற்ற உள்ளம்
சிதலமாகும்
வறியோருக்கு கைகொடுங்கள்
மனிதம்மாகும்
எரியும் முன் கண்கொடுங்கள்
புனிதம்மாகும்

கருவிலே வந்ததை
பொதுவிலே கொடுப்போம்
இருளிலே இருப்பவனை
இறந்தும் நாம் காப்போம்

மண் தின்னும் உடலுக்கு
கண் எதற்க்கு _ நீங்கள்
கண் கொடுத்தால் _ சொர்கம்தான்
பின் எதற்க்கு ?


தகனத்திற்கு முன்
தானம் செயுங்கள்
கடவுளை காணாத  கண்கள்
உங்களை கடவுளாய் ஆக்கும்


http://www.facebook.com/Anuvakal