January 4, 2014

கடவுள் மறுப்பு




கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட நாத்திகர்கள் இந்து கோயில்களின் நிலங்களையோ, மண்டபங்களையோ பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது’ என இந்து சமய அறநிலையத் துறை, அரசு கட்டுப்பாட்டின் கீழ் வரும் அத்தனை கோயில்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

இது ஒரு பெரும் தவறான முன் உதாரணமான செயல், தரம் தாழ்ந்த செயல் என நினைக்கிறேன், கடவுள் மறுப்பவர்கள் கோயில் நிலங்களை பயன்படுத்தக்கூடாது என்பது .. கடவுளை மறுப்பவரை விட கடவுளை அதிகம் காயம் படுத்தி இருக்கும் ...

சரவணபவனில் சாப்பிட வருபவர்கள் முருகன் பக்தர்களாய் தான் இருத்தல் வேண்டுமா ?
இஸ்லாமியர்களை தவிர வேறு யாருக்கும் பெட்ரோல் இல்லை என அரபு சொன்னால் என்ன செய்விர்கள் ? கிறிஸ்தவர்களை தவிர வேறு யாருக்கும் பேஸ்புக் கூகுள் பயன்பட தடை என அமெரிக்க அரசாங்கம் சொன்னால் .. பகுத்தறிவாளர் அண்ணா பெயரில் உள்ளதால் அண்ணா பல்கலைகழகத்தில் கடவுளை கும்பிடும் பிள்ளைகள் படிக்க கூடாது என்று நாளை வேறு ஒரு அரசாங்கம் சொன்னால் என்ன செய்வது ....
நாஸ்திகர்கள் கருப்பு நிறம் அணிவதால் கடவுள் சிலைகளுக்கு வெள்ளை அடித்து விடுவார்களா ?
மனதில் இப்படி எல்லாம் எண்ணம் ஓடுகிறது...

பெரியார் பகுத்தறிவு பெற்றினும் இறுதி வரை "ராமசாமி'' என்ற தன் பெயரை மாற்றிக்கொள்ள வில்லை ...

பூம்புகார் படத்தில் சமண துறவியாக கே பி சுந்தரம்மாள் நடித்தார்கள் .. அவர்கள் பெரும் முருக பக்தர் , அது நாஸ்திகரான கருணாநிதியின் படம்..

கடவுளின் பெயரால் பிரிவினை வேண்டாம், எல்லோரும் இந்நாட்டு உறவுகள் எல்லோருக்கும் எல்லா உரிமையும் உள்ளது

- வை . நடராஜன்

ஒரு தலைவர்

ஒரு தலைவர் இளமையில் கல்வி
அறியாமல் இருந்தார் .. ஆனால்
இறுதி வரை கல்விக்காகவே
வாழ்ந்தார்

ஒரு தலைவர் இளமையில் பகுத்தறிவு
அறியாமல் இருந்தார் .. ஆனால்
இறுதி வரை பகுத்தறிவுக்காகவே
வாழ்ந்தார் ..

ஒரு தலைவர் இளமையில்
பணம் இல்லாமல் இருந்தார் .. ஆனால்
இறுதி வரை பணதிர்க்காகவே
வாழ்ந்தார்

எல்லோரும் தலைவனாய்
ஆவதுமில்லை - ஆனா
எல்லோரும் நல்லவராய்
இருப்பதில்லை..வரும் போது
நல்லவராய் வந்தவரெல்லாம்
இறக்கும் போது நல்லவராய்
இறப்பதில்லை ..

- வை . நடராஜன்

சிரித்துவிடாதீர்கள்



இதற்க்கெல்லாம் சிரித்துவிடாதீர்கள் !

சில நாட்களுக்கு முன்னர் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கையில் , திரைக்கு வர இருக்கும் ஒரு தமிழ் படத்தின் விளம்பரத்தை பார்க்க நேர்ந்தது . படத்தின் பெயர் " ஆல் இன் ஆல் அழகு ராஜா " . அதில் ஒரு நகைச்சுவை நடிகரும் , கதாநாயகனும் பேசிக்கொண்டிருப்பது போன்ற காட்சியில் வரும் நகைச்சுவை வசனத்தைக் கேட்டு அனைவரும் சிரித்தார்கள். மனதில் சிறு கவலையுடன் நான் சென்று விட்டேன் . இரண்டு நாட்களுக்கு முன் ஒரு பிரபல திரையரங்கத்திற்கு நண்பர்களுடன் படம் பார்க்க சென்ற பொழுது மீண்டும் அதே திரைப்படத்தின் விளம்பரத்தினை திரையிட்டார்கள் . அந்த வசனங்களைக் கேட்டு அன்றும் அரங்கில் இருந்த அனைவரும் வாய்விட்டு சிரித்தார்கள் ! கைத்தட்டல்கள் விண்ணைக் கிழித்தது ! சக மனிதனின் சிரிப்பைக் கண்டு முதல் முறையாக நான் வருந்தினேன் . காரணம் ! அந்த சிரிப்பு நம் பண்புகளை கொன்ற சிரிப்பு , கலை வியாபாரிகளின் மானங்கெட்ட வார்த்தையை கண்டு நாம் மதிகெட்டு சிரிக்கிறோம் .

திரையரங்கிற்குச் செல்லும் நாம் அனைவரும் இந்த புகையிலை, புகைப்பிடித்தல் ஒழிப்பு விளம்பிரத்தினை பார்த்திருப்போம். வாழவேண்டிய அந்த " முகேஷ் " இனி யாரும் சாகக் கூடாது என்று கண்மூடும் முன் நமக்கு வழிகாட்டுவது போல் இருக்கும்.
அதில் வரும் நாயகன் " மதுமட்டுமில்லாமல் சிகரெட்டும் இருந்தா நல்லா இருக்கும் "" என்று சொல்ல , அந்த நகைச்சுவை நடிகர் - அந்த விளம்பரத்தில் வரும் அந்த முகேஷ் என்ற இளைஞரைப் போல் கரகரவென கிண்டலாய் பேச , யாரது என்று நாயகன் கேட்க , நம்ம முகேஷ் என்று இவர் சொல்ல , யார் நம்ம முகேஷ் அம்பானியா என்று கேட்பார். அதற்கு, இல்லப்பா , நம்ம குட்கா முகேஷ் னு சொல்லுவார் - பின்னர் பொதுநலம் கருதி வெளியுடுவோர் என்ற ஏமாற்று வார்த்தைகளுடன் முடிகிறது அந்த ட்ரைலர்!

இறந்த ஒரு மனிதனை சிரிக்க வைக்க பணயமாக உபயோகிப்பது நாகரீக மனிதனின் வழக்கமோ ? வெறும் வியாபாரத்திற்காக விளம்பரத்துக்காக எதை சொன்னாலும் சிரித்து விடுவார்கள் மக்கள் என நினைக்கும் அந்த கலை வியாபாரிகள் மனித நேயத்தை மறக்கிறார்கள் . ஆனால் அதையும் கூட நகைச்சுவை என நினைத்து வரவேற்கும் நம் இனம் உண்மையில் ' கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடியா ???? '
நான் அதில் நடித்தவர்களையோ , இயக்குனரையோ , அந்த நிறுவனத்தையோ குறை கூற விரும்பவில்லை . காரணம் , அவர்கள் வெறும் வியாபாரிகள் ! பணத்திற்காக கலையை எப்படியேனும் விற்பார்கள். நாம் கொஞ்சம் பண்பட்டு தொட வேண்டும் . காய்கறி கடைகளில் வியாபாரி பழைய புதிய காய்கள் அனைத்தையும் சேர்த்துதான் வைத்திருப்பார் . நாம்தான் நல்லது எது ? தீயது எது ? என்று இனம் காண வேண்டும் .

இந்த கொடூர நிகழ்வை அந்த முகேஷ் என்பவரின் பெற்றோர் பார்த்திருந்தால் , அவர்களுக்குள் என்ன கேள்வி எழுந்திருக்கும் !? ஊரெல்லாம் பார்த்து மகிழவா என் மகன் நோயுற்று இறந்தான் !
2011 ஆம் அண்டு உலக கோப்பை இலங்கையில் நடந்த போது அரங்கில் இலங்கை மக்கள் மகிழ்ச்சியாக ஆட்டத்தை ரசித்தார்கள் .. மனதில் வருந்தினேன் தன் சக நாட்டில் பல லட்சம் மனிதர்கள் இறந்தும் இன்னும் பலர் உண்ண உறங்க இடமெல்லா தவிக்கும்போது எப்படி இவர்களால் விளையாட்டை ரசிக்க முடிகிறது ? மனிதம் எங்கே ?

வட நாட்டு ஊடகம் எல்லாம் கூட மனித துயரை கண்டுக்காமல் இருந்ததை நினைத்து வருந்தினேன் ... இன்றோ என் சக தமிழன் நகைசுவை என்ற பெயரில் துயருற்று இறந்த ஒருவனை எவ்வாறு நக்கல் அடித்து பேச முடிகிறது .. அவர்கள் வியாபாரிகள் பணம் போதும் நல்லது கெட்டது பார்க்காதவர்கள் .. அதை ரசிக்கும் நம் மன நிலை என்னவாயுற்று ?
கலை மட்டும் அறிவார்ந்தது அல்ல கலையை ரசிப்பதும் அறிவார்ந்தது ஆகும் .

மன்னர் ராஜ ராஜ சோழன் வெறும் மன்னராக மட்டும் இருந்து இருந்தால் நாட்டில் இருக்கும் ஆயிரக்கணக்கான சிவன் கோயில்களைப் போல் தஞ்சையிலும் ஒரு சிவன் கோயில் இருந்து இருக்கும் . ஆனால் அவரின் கலை ரசிப்பு நாணத்தின் பலன்தான் இன்று உலகமே வியக்கும் அளவிற்கு தஞ்சை பெரியகோயில் அழகியலுடன் இன்று நிமிர்ந்து நிற்கிறது .. நாமும் ரசனையை வளர்ப்போம் . பணத்திற்காக எதை காட்டினாலும் ரசிப்பார்கள் எதை பேசினாலும் சிரிப்பார்கள் என்ற மனித பொறுப்பற்ற கலந்கைர்களை நிரகற்றிப்போம்.இது அந்த படத்தின் எதிர்ப்பு அல்ல . அதை தொடர்ந்து இதை போல் பொறுப்பற்ற தரமற்ற விசயத்தை இன்னும் எல்லாம் சொல்ல வருவார்களோ என்ற பயம் . திரை துறையினரே மாறுங்கள் இந்த இனத்தை மாற்றாதீர்கள் ஒருவர் இறப்பை நகைத்து சொல்லி அதை ரசிக்கும் அளவுக்கு இந்த இனம் தரமற்று போய் விட்டதா ..

நாங்கள் யார் இழவையும் சிரித்து ரசிக்கும் இனம் அல்ல..
இது வரை அந்த பட டிலோரை பார்காதவர்கள் கூட இந்த பதிவை கண்டதும் பார்க்க முயல்வார்கள் .. இது மனித இயல்பு ,, ஆனால் அதில் வரும் வசனங்கள் நகைசுவை என்று ரசிப்பது மனித தன்மையற்ற செயல்.

மனிதர் நோக மனிதர் பார்ப்பது
பாவம் என்றான் பாரதி .. நாமோ
ஒரு நொந்த மனிதரை ஒரு மனிதர்
கிண்டல் செய்கிறார்கள்
அதை ரசிக்கின்றோம்....
நல்லவை வளரட்டும்

- வை . நடராஜன்...

கடவுள் உருவம் என்ன ?





பக்தியில் திளைக்கும் வரை
பற்பல உருவில் இருப்பார்
பசித்தவன் கண்ணுக்கு
உணவின் உருவில் இருப்பார்

படிப்பவன் மனதிலே
நூலின் உருவில் இருப்பார்
பார்வையே இல்லாதவர்க்கு
எந்த உருவில் இருப்பார் ?

காமத்தின் ஆட்சி வந்தால்
காதலின் உருவில் இருப்பார்
கடன் பட்ட கைகளுக்கு
காசின் உருவில் இருப்பார்

உடல் கெட்டு போனவர்களுக்கு
மருத்துவர் உருவில் இருப்பார்
மனம் கெட்ட பித்தர்களுக்கு
எந்த உருவில் இருப்பார் ?

கடும் வெயில் நேரத்திலே
காலனி உருவில் இருப்பார்
கருகிய பயிருக்கு
வான் மழை உருவில் இருப்பார்

இருட்டிலே இருக்கையிலே
ஒளியின் வடிவில் இருப்பார்
இறந்து நாம் செல்கையிலே
எந்த வடிவில் இருப்பார் ?

தடிக்கி நாம் விழுகையிலே
தாங்கும் கையில் இருப்பார்
தண்ணீரில் முழுகும் போது
காற்றின் உருவில் இருப்பார்


மெய் உணர்ந்த ஞானிகளுக்கு
அன்பின் உருவில் இருப்பார்
கை குழந்தை கண்களுக்கு
எந்த உருவில் இருப்பார் ?

- வை . நடராஜன்

உண்ணாவிரதம்

காந்தி உண்ணாவிரதம் இருந்தே பல கோரிக்கையில் வெற்றி பெற்றார் .. பல விஷயங்களை சாதித்தார்.
இதை இன்று இருந்தால் அவரால் சாதித்து இருக்க முடியுமா என்பது சந்தேகம் தான் ... உண்ணாவிரதம் இருப்பதை விட இருப்பவர்களை உணர்வுகளை மதிப்பதும் ஒரு மாண்புதான் ...அந்த மாண்பு அன்றைய ஆங்கிலரிடம் இருந்தது . இன்றைய பல ஆட்சியர்களிடம் இல்லை ...

இன்று சாகும் வரை உண்ணாவிரதம் என்று சொல்லி உண்ணாவிரதம் இருந்த எவரும் செததில்லை .
எல்லா சாகும்வரை உண்ணாவிரதமும் பாதி வழியில்
முடிந்து விடும் .. இரண்டே காரணம்
ஒன்று அரசின் அடக்குமுறை , இரண்டு அவர்களுக்கு
அவர்கள் எதிர்பார்த்த விளம்பரம் கிடைத்து இருக்கும்

இன்றைய உண்ணாவிரதங்கள் வெற்றி பெறா போராகவும் , வேடிக்கை நாடகங்கள் ஆகவும் முடிகின்றன ...

திலீபன் , பொட்டி ஸ்ரீ ராமுலு போன்றவர்களின் உண்மையான உண்ணாவிரதங்கள் இனி இல்லை..

என் செய்ய ......



தங்கத்தின் மதிப்பு உயர உயர
மனித உயிரின் மதிப்பு
குறைந்து கொண்டே வருகிறது

அக்ஷய திரிதியை நகை வாங்கினால்
அதிர்ஷ்டம் என்றார் .. எங்கே அவர்
வாங்கிய நகைகள் வாழ்க்கையை
அழிகின்றன .. எங்கே பதில் ?

தங்கத்தை தோண்டி எடுத்து நாம் -
மனிதனை புதைத்து கொண்டு இருக்கிறோம்

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னே
அறத்தை சொன்னவன் வள்ளுவன் என்று
பெருமை பட்டு கொள்கிறோம்
கை காசுக்காக கழுத்தை அறுக்கும்
சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டு

பெண்களை காமத்துக்காகவும்
களவுக்காகவும் அழிக்க துவங்கிவிட்டது
சமுதாயம் ...

என் செய்ய ......

பால் ஊட்டும் தாய்மார்களும்
பெரிய பெரிய படிப்புகளை சொல்லி
பணத்தை கற்க சொல்லி தருகிறார்கள்
நல்ல நல்ல புத்தகங்களை காட்டி
பண்பை வளர்க்க சொல்வதில்லை .

- வை . நடராஜன்

பங்கு


சோத்தையும் பங்கு போடும் காக்கைகள்
சொத்துக்காக அடித்து கொள்ளும் சொந்தங்கள்
கூரை வீட்டையும் பகிர்ந்து கொள்ளும் சேவல்கள்
கோடி இருந்தாலும் அடித்து கொள்ளும் ஜென்மங்கள்
கேடு கெட்ட மனிதனுக்கு ஆறறிவை தந்த
எங்கே அந்த தெய்வங்கள் ?

- வை .நடராஜன்

மானம்


DMK


காவி துண்டு ஆஸ்தீகம் பேசும்
கருப்பு துண்டு நாஸ்தீகம் பேசும்
மஞ்சள் துண்டு என்ன பேசும் ?

தீபாவளி இனிப்புக்கும்
அம்மன் கூழுக்கும்
நாஸ்தீகம் பேசும் அந்த நாக்கு
கிறிஸ்மஸ் கேக்
ரமலான் நோம்பு காஞ்சி குடிக்கும் போது மட்டும்
பகுத்தறிவை மறந்து விடுகிறது

- வை .நடராஜன்

பிறமனை நோக்கா ...





வாலிக்கு ராமனை தெரியவில்லை
ராமனுக்கு வாலி குறைவுமில்லை
வாலிக்குள் ராமன் இருந்து இருந்தால்
ராமனுக்கு வில்லில் வேலையில்லை

- வை . நடராஜன்