January 4, 2014
DMK
காவி துண்டு ஆஸ்தீகம் பேசும்
கருப்பு துண்டு நாஸ்தீகம் பேசும்
மஞ்சள் துண்டு என்ன பேசும் ?
தீபாவளி இனிப்புக்கும்
அம்மன் கூழுக்கும்
நாஸ்தீகம் பேசும் அந்த நாக்கு
கிறிஸ்மஸ் கேக்
ரமலான் நோம்பு காஞ்சி குடிக்கும் போது மட்டும்
பகுத்தறிவை மறந்து விடுகிறது
- வை .நடராஜன்
மன்னித்துவிடு
எழுதும் தமிழில் அழகு
ஏனோ நாவில் அமிலம்
பழகும் போது ரசித்தேன்
பிரிந்தால் ஏனோ பழித்தேன்
அழைக்கும் தூரம் சென்றாள்
அமைதியாய் இருந்து கொன்றாள்
எத்துனை பிழையேன் நான்
எதற்கிந்த பிழையான நா ?
மங்கை மனம் புங்கை மலர்
மன்னிக்க மலராதோ ?
கோவை இதழ் கொஞ்சும் கிளி
கோவம் தான் குறையாதோ ?
குணத்தில் கொஞ்சம்
கோவம் உண்டு
கோவத்தில் கொஞ்சம்
பாவம் உண்டு
பாவத்தில் நல் பங்கும் உண்டு
பதுமையே மன்னிக்க இடமும்
உண்டு
அழுவதிலே தோஷமில்லை
அன்பிலே வேஷமில்லை
மங்கையே பாவம் பிள்ளை
மன்னித்தால் பாவமில்லை
தவறிழைத்த நீதிபதி நீ
தண்டனை பெற்ற நிரபராதி நான்
நாவில் பிழை ஞானம் இழந்தேன்
கோவில் சிலையே கோவம் கடிந்தேன்
மன்னித்துவிடு மானம் போகாது
சூரியன் சுட்டு வானம் சாகாது
- வை . நடராஜன்
உத்தமனே
உத்தமனே போவதேனோ _ என
ஊரே அழுவ வேண்டும் _ உன்
உயர்ந்த வாழ்வை நினைத்து அவர்
உள்ளம் தொழுவ வேண்டும்
உத்தமனாய் இறந்தவரின் உடலை
மண்ணு தின்னும் _ அந்த
உயர்ந்தவரின் புகழை மட்டும்
உலகம் என்றும் எண்ணும்
எதனை நீ பெற்றாலும்
போகும் போது தனியே
எதனை நீ கொடுத்தாயோ _
கூட வரும் துணையே
பதவி பணத்தில் திளைத்த போதும்
பயணம் ஒரு நாள் முடியும்
உதவி செய்த உள்ளத்தைதான்
உலகம் நெஞ்சில் பதியும்
அரசியல் தலைவன் ஆயிரம்
உண்டு.. இங்கே
அன்பு தலைவன் போனாயே
ஆறுதல் எங்கே ..
- வை . நடராஜன்
VIP
ஐயிம்பது ருபாய் கொடுதால்-ஆண்டவனை
அருகில் சென்று பார்க்கலாம்
பத்து ருபாய் இருந்தால்
பாதி தூரதில் பார்க்கலாம்
பணம் இல்லாதவர் பார்க்க
படனம் கொஞ்சம் சிரமம்
பணத்தோடு போனால்
நின்று பார்க்கும் இடம்
நிச்சையக்கபடுகிறது ,,
பக்தியோடு போனால்
நாம் எங்கே நின்றாலும்
நம்மை அவர் பார்த்து விடுவார்
VIP என்பவன் கோயிலுக்குதான்
வந்தவர் எல்லோரும் சமம் ஆண்டவனுக்குதான்
ஐயிரை பிடித்து முன்பே போவதினால்
ஆண்டவன் அவசரம் காட்டுவதில்லை
ஓரமாய் நின்று பார்ப்பவன் பக்தியில்
ஓர வஞ்சனை காட்டுவதில்லை
- வை . நடராஜன்
.......அழகு .......
கல்லுக்கு அழகு
ஆண்டவன் தோற்றதில்
புல்லுக்கு அழகு
அரண்மனை தோட்டதில்
வில்லுக்கு அழகு
வீரனின் தோளிலே
சொல்லுக்கு அழகு
புலவரின் நாவிலே
மைல் இறகு அழகு
மாதவன் சிரத்திலே
மன்னவன் அழகு
மக்களின் அறத்திலே
கோவத்தின் அழகு
கடும்கொடுமை காண்கையிலே
கொள்கையின் அழகு
வறியவரை பேணுகையிலே
பருவத்தின் அழகு
காதலை தாண்டயிலே
பணத்தின் அழகு
பசித்தவனையும் தீண்டயில்
இல்லற அழகு
இன்புறும் மஞ்சத்தில்
பெண்ணுக்கு அழகு
பொறுமை கொள்ளும் நெஞ்சத்தில்
சொந்தத்தின் அழகு
கூடி நல் வாழ்க்கையிலே
சொர்கத்தின் அழகு
வீரனாய் வீழ்கையிலே
மலர்களின் அழகு
மங்கையின் கூந்தலில்
மங்கையின் அழகு
மானம்தான் காப்பதில்
அருவிக்கு அழகு
விரைந்து வீழ்தல்
வாழ்கைக்கு அழகு
மறைந்தும் வாழ்தல்
வள்ளுவன் அழகு
தமிழ் தந்த குறளிலே
தமிழுக்கு அழகு நிகர்
தரணியில் ஏதுமில்லை
- வை . நடராஜன்
கண்ணன்
பாற்கடல் திருமாலும்
பார் பார்க்க முடிவெடுத்தான்
ஆயர் குல இடையவனாய்
அவனியிலே உருவெடுத்தான்
வாசுதேவன் குடியிலே
வழியெல்லாம் மழை நினைந்தான்
சேஷன் அவன் குடை பிடிக்க
சேமமாய் இடம்பெயர்ந்தான்
கம்சனவன் இடர் எல்லாம்
கண்ணனவன் விசை உடைத்தான்
கை குழல் தினமெடுத்து
கானத்தில் இசை படைத்தான்
வண்டுகள் பூக்களையும்
மறந்துதான் வந்தன
கறவைகளும் புல் மறந்து
கானத்தில் உறைந்தன
செண்டுகள் மலர்ந்துதான்
செல்லும்வழி படர்ந்தன - கண்ணன்
கண்டு கன்னியர் எல்லாம்
காதலில் உள்கலந்தனர்
கோபாலன் குழல் எடுத்தான்
கோபியரின் மனம் கெடுத்தான்
பூபாளம் தான் இசைத்தான்
புல் பனியா உயிர் குடித்தான்
பார்த்திபன் வில் தளர்ந்து
பாசத்தில் கண் கசிந்தான்
பார்த்தனவன் படைநடுவே
கீதை எனும் இசை மொழிந்தான்
ராதையவள் மயங்கிடவே
ராகத்தில் குழல் எடுத்தான்
கீதை எனும் பாடத்தில்
கீர்த்திக்கு நிழல் கொடுத்தான்
மதுராவில் உயிர் எடுத்தான்
மதயானை உயிர் குடித்தான்
விதுராவின் குடில் புசித்தான்
விளையாட்டாய் தினம் ரசித்தான்
கண்ணனவன் கள்வனென
கள்ளன் அவன் பெயரெடுத்தான்
மன்னனாக அரச்சுனனுக்கு
மாதவனே தேரெடுத்தான்
காம்புதனில் விடம் அறிந்து
கள்ளியவள் உயிர் குடித்தான்
பாம்பு தலை பாதம் பட்டு
மலை பிளந்து குடை பிடித்தான்
சுடர் ஒளியே சுவை பாகே
சுனை நீராய் புத்துடுவாய்
இடர் இங்கு இனிவேண்ட
இடையவனே ஏற்றுடுவாய்
கண்ணனே காவியம்
களிநெஞ்சின் ஓவியம்
கண்ட வாழ்வு கரையும்வரை
கண்ணன்தான் யாவையும்
கண்ணனே ஊன்று கோள்
கனிவுடன் எனை ஏற்றுக்கொள்
மன்னவன் மாதவனை
மனதார போற்றிக்கொள்
- வை . நடராஜன்
ஓம் நாம சிவாய
,, ஓம் நாம சிவாய ,,
விறிசடையும் புலியுடையும்
விண்ணான அம்பலத்தான்
பரி களைந்து நரி பிறந்து
நாடகம்தான் ஆட்டுவித்தான்
செறியுணவும் சிறு உறக்கம்
மணம் மறந்து அனுதினமும்
அரிபெடுத்து ஓடும் ஆற்று
அடிமனலாய் கலந்திடவே
ஊன் நினைத்து உள்ளுருகி
உலகெல்லாம் பொய்யாக
மான் கரமும் மதிமுடியும்
மாதவன் தான் மெய்யாக
யானுணர்ந்த பொருளுமிங்கே
யாதுமில்லை யாருமில்லை
தேன்கலந்த மலர் அணிந்த
ஈசனின்றி பேறுமில்லை
விண்ணோரும் அறியாத
விந்தை தனை விளையாடும்
மண்ணோடு மாலும்வரை
மந்தையாய் அடி தேடி
பண்ணோடு புகழ் இசைந்து
பசி காத்து உயிர் கசிந்து
உன்னோடு உறைவிடமாய்
உமையவனே எற்றுகொள்வாய்
சதை பிண்டம் உடலெடுத்து
சாகும்வரை நெறிமறந்து
எதை எதையோ மனம் நினைத்து
எந்தனைதன் மனம் மறந்து
வதை பட்டு வாடும் மணம்
ஆசையுள் அடரும் வரை
சிதையுட்டு போகம் ஒழி
சிற்றம்பலம் தேடும் முறை
கழல் கொண்டு காலாட
உமையவளும் உடனாட
கருமேகம் இடர்புகுந்து
கதிரவனின் ஒழி படர்ந்து
ஊழ் வினையின் உடன் மறைந்து
உள் ஒளியின் நிலை அடைந்து
தாழ் பணிந்து நிற்குமெனை
தாயே காத்து ஏற்றுக்கொள்வாய்
கல் மிதந்து கரையடந்த
அப்பரின் அருந்தமிழின்
சொல்லுணர்ந்து உள்ளுறைந்து
திருக்கதவும் தான் திறந்து
பல்லுயிரும் எடுத்து வந்து
பரமன் புகழ் பாடி விட்டு
புல் இதழில் பனித்துளியாய்
பரமனிடம் கலந்திடவே
எமையாளும் எம்பெருமான்
எனையேற்று கொண்டிடுவாய்
இமை நாளும் நீர் நினைந்து
உன்னை நினைத்து உயிர் கசிந்து
சுமையான இவ்வாழ்வை
சுவையற்ற இல்வாழ்வை
உமையாண்ட நாதனே
அறுத்தெடுத்து ஏற்றுடவாய்
பாதத்தில் கழலாட
பார்வதிதான் உடனாட
வேதத்தின் மெய்ப்பொருளாம்
வேந்தனை மணம் தேட
பூதத்தின் ஐயுள்ளும்
அணுவுள்ளும் அவனாட
நாதத்தின் இசையுள்ளும்
நாதனின் கழலாட
ஊன் பெற்றேன்
உயிர் பெற்றேன்
உள்நெஞ்சின் ஊன் பெற்றேன்
யான்பெற்ற பிறவி முலும்
ஊன் இடரும் நோய் பெற்றேன்
காதல் ஆசை காமமென
கலி மலத்தில் நாரிற்றேன்
போதுமிந்த பிறவி பிணி
போகுமிடம் ஈசனிடம்
யாதுமின்றி யாருமில்லை
யாசிப்பது ஈசனடி
- வை . நடராஜன்
Subscribe to:
Posts (Atom)








