January 11, 2014

முதல்வர்


Transfers

 :

வயித்துக்காக திருடுபவர்களை
துறத்தும் அதிகாரிகள்
வசதிக்காக திருடும் அரசியல்வாதிகளை
தொட்டால் ...
துறத்தப்படுகிறார்கள் .

- வை . நடராஜன் ..

சுதந்திரம்

கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கிய
நாடு - இன்னும் கஷ்டப்பட்டுக்கொண்டு தான்
இருக்கிறது ....

அன்று கைகளை கட்டிவிட்டு
திருடினார்கள்
இன்று நம் கண்களை கட்டி விட்டு
திருடுகிறார்கள் ..

அன்று திருடியவன் யார் என்று
தெரிந்தது அடிக்க வீரம் இல்லை
இன்று திருடுபவர்களை
எண்ண கூட நேரமில்லை .

இந்தியா சுதந்திரம் பெற உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!!!

- வை . நடராஜன்

ரோட்டுக்கடை


உனக்காக அழுதல் பெருமை .



தொழுதினும் ஊறுக்கு
தொழுதல் பெருமை
பழித்தினும் நீதிக்கு
பழித்தல் பெருமை
விழுதினும் அருவியாய்
விழுதல் பெருமை
அழுதினும் உனக்காக
அழுதல் பெருமை .

மனமெல்லாம் வலித்தாலும்
மகிழ கண்டேன்
தினதோறும் அழுதாலும்
திவ்யம் கண்டேன்
கணம் நெஞ்சில்
களிவில்லை - இருந்தும்
குணவத்திகாக அழுவதில்
பெருமை கொண்டேன் .

அள்ளிக்கொள்ள நீயுமில்லை
சொல்லிக்கொள்ள வார்த்தையில்லை
சாய்ந்து அழ தோளுமில்லை
அழுதாலும் ஈரமில்லை .
வாசலில் கோலமில்லை
வாழ்க்கையில் ஆரமில்லை
வார்த்தையில் சாரமில்லை
வழிதுணை யாருமில்லை .

மனதிலே காயம் கண்டேன்
மழைத்துளியில் கானல் கண்டேன்
மலர்விழி மங்கையவள்
மனம் கொள்ள மோகம் கொண்டேன் .

நீறுக்கு காத்திருக்கும்
வெடித்த நிலத்தை போல
சோறுக்கு காத்திருக்கும்
பசித்த மழலை போல
வானம் பாத்திருக்கும்
அடைபட்ட கிளியை போல
வசந்தமே உனக்காக
காத்திருப்பேன் காதலுடன் .

- வை . நடராஜன்

வீரர்களை இழந்தோம் !! வீரத்தை அல்ல



***...***
----------------------------------------------------------------------

முன்னம் பறிகொடுத்தோம்
முள்ளிவாயில் பரிதவித்தோம்
திண்ணம் தீ சூழ
திசை எங்கும்
உயிர் கொடுத்தோம்

எண்ணம் ஈடேறும்
எதிர்காலம் சூடேறும்
வண்ணம் தமிழ் ஆட்சி
வலியோடு பீடேறும் .

சிங்கள பாவிகள்
சிதையும் நாள் தூரமில்லை

நான்கு திசையெங்கும்
ஆர்ப்பரிக்கும் கடல் நீரும்
நாளும் சூடேறும் -அழும்
எங்கள் கண்ணீரும் - ஒருநாள்
பொங்கி வரும்
பொதுவுடைமை சொல்லி தரும்
பொங்குவது தமிழனா ? கடலா ?
காலம்தான் தீர்ப்பு தரும்

கருமேகம் மறைப்பதினால்
கதிரவன் அழிவதில்லை
காற்று மோதிவிட்டால்
கருமேகம் பிழைப்பதில்லை

எங்கள் பக்கம் எதிர்கால
காற்றடிக்கும்
எங்கள் இனத்தை தர்மமே
மீட்டெக்கும்

ஆயிரம் ராஜபக்சே
அரியணை ஏறினாலும்
ஆயிரம் ஆண்டுகள்
அடக்குமுறையில் ஊறினாலும்

தன்னை காத்து கொள்ள
தமிழுக்கு தெரியுமடா - அன்று
தமிழன் யார் என்று
தரணிக்கு புரியுமடா

அந்நியனின் கால் நக்கி
ஆயுதங்களை மேல் தூக்கி
என்னினத்தை அழித்தவர்களே
எதிர்காலம் பதில் சொல்லும் .

இன்னும் ஆயிரம்
அண்ணனை பெற்றடுக்க
அன்னை தமிழுக்கு
கருவிலே இடமுண்டு - ஆனால்
இந்த ஒருவரை சமாளிக்கவே
உலகமே உங்களுக்கு உதவியது .

எச்சை பதவி பெற்று
எட்டப்பன் தொழிலை கற்று
பிச்சை பணத்திற்காக
பெற்றவளை தெருவில் விற்ற

பச்சை துரோகிகளே
பாவத்தின் மூட்டைகளே
இனத்தின் அழிவுகளே
வரலாற்று கழிவுகளே

ஆண்டுகள் பல ஆனாலும்
ஆயிரம் உயிர் போனாலும்
ஈழம் அடைவோமடா
எதிர்காலம் விடியுமடா .

நாளை வெல்லும்போது
நானும் நீயும் இருக்க மாட்டோம் - ஆனால்
எதிர்கால தமிழினம்
வெற்றி முரசு கொட்டும் - அன்று
நிகழ்கால ஒரே சாட்சி
சூரியன் கை தட்டும் ......

தமிழர்களே ..

எதற்காகவும் அழாதீர்
எவரிடமும் தொழாதீர்

நம்பிக்கை வீரத்தை
இரு விழியில் பொறித்திருப்போம்
தர்மம் காக்க வரும்
அது வரை பொறுத்திருப்போம் .

- வை . நடராஜன்

எங்கே போனாய்


January 10, 2014

மொழி காப்போம்



இனிதான மொழிக்காப்போம் !!
இறக்கும்வரை தமிழ் காப்போம் .............


பொதிகை மலை தலை கலைத்து 
புறப்படும் தென்றல் - அருகே 
அடிவார வயல் வெளியில் 
வாசத்தை தெளிக்கும் 

வயல் நடுவே வரப்பினிலே
வரிசையில் பெண்கள்
கயல் தமிழில் கானம் பாட
காற்றினில் கமழும்

தேன்கலந்த கனிக்கூட
தமிழிடம் தோற்க்கும் - அந்த
தேவ பாஷை சமஸ்கிரதம்
தேகமும் வேர்க்கும்

ஊன் கலந்த உயிரெல்லாம்
தமிழ் மொழியாக்கும் - இந்த
உடல் விட்டு போகும் வரை
தமிழ் மொழி காக்கும்

கரை நின்றும் கால் தேடி
கடல் நீர் நினைக்கும்
சிறை பட்டினும் குயிலிசை
காதினில் மணக்கும்

இடர்ப்பட்ட நெஞ்சம்
இன்னல்கள் காணும்
சுடர் விட்டு ஒளி வந்தால் - இருள்
சூனியம் ஆகும்

அறியாதவனை அப்பன் என்று
சொல்வது மடமை - பிள்ளைக்கு
புரியாத பெயர் வைப்பது
அதனினும் கொடுமை

தள்ளாத வயதினிலே
வறுமை கொடுமை - தாய்
தமிழ் மொழியை மறப்பது
அதனினும் இழிமை


விழியிழந்து போனவன்
ஒளியை இழந்தான் - அன்னை
மொழி மறந்து போனவன்
மானத்தை இழந்தான்

அன்னம்தான் எல்லோர்க்கும்
அளந்திட வேண்டும் - பாரில்
பசியின்றி வாழும் - நல்
நிலை வர வேண்டும்

எண்ணம்தான் மேன்மையில்
சிறந்திட வேண்டும் - இனி
எப்பிறவியும் தமிழனாய்
பிறந்திட வேண்டும்

மொழிமறந்து வாழ்வதினில்
யோக்கியமென்ன - தமிழ்
மொழிகாக்க இறப்பவதை விட
பாக்கியமென்ன ...

உணவிட்டு உயிர் காப்போம்
உயிர் கொடுத்தினும் மொழி காப்போம்

- வை நடராஜன்

எத்தகைய வாழ்க்கையை

நாம் அழும் போது ஆறுதல் சொல்பவர்களும்
நாம் அழுவதை பார்த்து ஆறுதல் அடைபவர்களும்
எத்தனை பேர் உள்ளனர் என்பதை பார்த்து
அதில் வரும் எண்ணிகையை வைத்து புரிந்து கொள்ளலாம் .................

நாம் எத்தகைய வாழ்க்கையை வாழ்கிறோம் என்று.



தில்லையில் ஆட செய்தாய்
தினமுன்னை பாட செய்தாய்
திங்களை சிரத்தில் வைத்தாய்
தியாகத்தை அகத்தில் வைத்தாய்

எண்ணத்தில் உன்னை வைத்தாய்
ஏட்டிலே பண்ணாய் வைத்தாய்
திண்ணமும் எண்ண வைத்தாய்
தினமுன்னை தொழுக வைத்தாய்

உண்மையை உணர  செய்தாய்
உளமார உருக  செய்தாய்
அம்மையை இடையில் வைத்தாய்
அப்பரை இணங்க வைத்தாய்

காலனை நடுங்க செய்தாய்
காலமும் உணர செய்தாய்
வாசகர் உருக செய்தாய்
திருவாசகம் பெருக செய்தாய்

நஞ்சினை அகத்தில் வைத்தாய்
நவமணி கண்ணில் வைத்தாய்
ஏந்தினை மனதில் உன்னை
ஏக்கத்தில் நினைவில் வைத்தாய்

சாம்பலை பூச  செய்தாய்
சகலமும் வாசம் செய்தாய்
சடைமுடி எழிலினுள்
கங்கையை வாழ செய்தாய்

கனிதனை அருள செய்தாய்
கண்முட இருள செய்தாய்
பனிபடர் சிகரத்திலே
பரம்பொருளே வாசம் செய்தாய்

தோடுடைய செவியானே அழகு
தேனுடைய தமிழை  வைத்தாய்
மானுடைய கரத்தில் அம்பர்
மேனடைய அருளை  வைத்தாய்

செற்றுடைய இடதில் எல்லாம்
நாற்றுடைய நெல்லை வைத்தாய்
காற்றுடைய புவியில் என்றும்
கானத்தை கமழ செய்தாய்

பித்தனும் ஆனாய்
பிரம்படி பெற்றாய்
சித்தனும் ஆனாய்
சிவனடி போற்றி
அத்தனும் அடங்கிய அரும்பெருள்
கடலே
நத்தவம் கோலமே
நம சிவாயமே

- வை , நடராஜன் 

January 4, 2014

எம் இனத்தின் நிலைமை :


எம் இனத்தின் நிலைமை :

எங்கே ஈழம் ?
இழவு இலங்கை ,
கொதிக்கும் கூடங்குளம்,
குமுறும் மீனவன்

குளிர் காய எதுவுமில்லை எனில்
கூப்பிடுடா தமிழனை
கட்டி வைத்து எரிய வைத்து
கண் கொட்ட ரசிப்போம்
கரிக்கட்டை ஆன பின்பு
பங்கு போட்டு ருசிப்போம் -என

சுற்றமும் பகைவர்கள் _மனித
சுவை கண்ட மிருகங்கள்
குற்றமும் கொடுமையும் கண்டோம்
எங்கே அந்த தெய்வங்கள் ???

- வை . நடராஜன்

எங்கள் நாட்டில்

எங்கள் நாட்டில் பொருளாதார மேதைகள்
வெள்ளையும் சொள்ளையுமாக திரிகின்றனர்
நாடு மட்டும் அம்மணமாக ஆகிறது

ஆனந்த விகடன் - இதழ் - 4.9.2013





ஆனந்த விகடன் - இதழ் - 4.9.2013

சமீபத்தில் பெண்களுக்கு எதிராக நாட்டில் நடக்கும் மோசமான நிலையைப் பற்றி இந்த வார ஆனந்த விகடனில் "ஆண் திமிர் அடக்கு" என்ற தலைப்பில் கட்டுரை வந்துள்ளது . பக்கம் ( 93 )

ஆண் ஆதிக்கம் , காம கண்ணோட்டம், என்று பல பார்வைகளில் அலசும் தவிர்க்க முடியாத கட்டுரை , மறுக்க முடியாத உண்மை . அதில் " செய்ய வேண்டியவை " என்ற பெட்டிச் செய்தியில் ,

1) கட்டற்று பெண்களின் உடலை போக பொருளாக மாற்றும் சினிமா , தொலைக்காட்சிகளுக்கு தணிக்கை முறை உருவாக்க வேண்டும் .

2) இந்த மாற்றங்களை நமது வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும். பெண்கள் மீது அன்பும் மரியாதையும் ஏற்படும் விஷயங்களை ஆண் பிள்ளைகளுக்கு பெற்றோர் கற்றுத் தரவேண்டும்.

இந்த இரண்டு கருத்தையும் ஆனந்த விகடனில் படித்தேன். பெண்கள் வாழவும் , ஆண்கள் மாறவும் தேவையான கருத்து .

பெண்களை போகப் பொருளாகக் காட்டும் சினிமா , தொலைக்காட்சி கட்டுப்பாடு வேண்டுமென்று எழுதிய ஆனந்த விகடனின் உண்மை நிலை என்ன ?

ஒவ்வொரு வாரமும் ஏதேனும் ஒரு நடிகையின் மார்பும் , இடுப்பும் விகடனின் விருந்து , டைம் பாஸ் என்ற அவர்கள் குழுமத்தின் பிரத்யேக புத்தகத்தில் பக்கங்களில் எல்லாம் பெண்களின் அங்கங்கள். டீக்கடைகளிலும் , பேப்பர் கடைகளிலும் , தொங்க விடும் விளம்பர ஆபாசப் படங்கள் வளரும் மாணவர்களுக்கும் , வளர்ந்த ஆண்களுக்கும் , நல்ல சிந்தனையைத் தரும் என்று விகடன் நினைக்கிறதா ???

திரைப்படங்களின் கட்டுப்பாடு வேண்டும் என்று எழுதிய கருத்தினை நான் ஏற்கிறேன் . ஆனால் அந்த நடிகைகளின் அங்கங்களை அச்சிட்டு வியாபாரம் செய்யும் உங்களுக்கு வேண்டாமா கட்டுப்பாடு??

" இன்பாக்ஸ் " நடிகைகளின் பேட்டி , அட்டைப்படம் என ஒவ்வொரு பக்கத்திலும் , நடிகைகளின் ஆபாசப் படங்கள் .

இது பல வருடங்களாக நடக்கின்றது . அப்படியொரு கீழ்த்தரமான படங்களைக் காட்டி அந்த ஆண்களின் மனதில் நீங்களும்தானே விஷம் ஏற்றி உள்ளீர்கள் ... மாற வேண்டியது சமூகம் என்றால் நீங்கள் முதலில் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.ஆண்களின் டைம் பாஸ் எல்லாம் பெண்களின் அங்கம் தான் என்று சொல்லாமல் செயல்படும் உங்கள் வழக்கத்தை மாற்றுங்கள்.

உங்கள் இதழின் உள்ளே அறிவுள்ள பகுதிகள் இருக்கின்றது . அதை நான் மறுக்கவில்லை . ஆனால் வியாபாரத்திற்கு அழகுப் பெண்களின் அழகைத்தான் நம்புகிறீர்கள்.இதுதான் நீங்கள் பெண்மைக்குத்தரும் மரியாதையா ? விகடன் மட்டும்தான் இந்த செயலைச் செய்கிறது என்று கூறவில்லை . இன்று பெரும்பாலான பத்திரிக்கைகள் இதே பாணியில் தான் சந்தைகளில் விற்கப்படுகின்றன.

இத்தனை நாள் இப்படி பெண்களை வைத்து பிழைப்பு நடத்திய விகடன் இன்று ஆண்களுக்கு அறிவுரை செய்ததால் இந்த கேள்வியை எழுப்புகிறேன்...

இப்படி நீங்கள் உங்கள் இதழை விற்பதை மதிப்பிற்குரிய ஐயா, S.S.வாசன் அவர்களின் ஆன்மா பார்த்தால் மிகவும் மனம் வெதும்பி ரத்தக் கண்ணீர் வடிக்கும் .

ஆண்களிடம் மாற்றம் விரும்பும் உங்களிடம் உடனடியாக வேண்டும் ஒரு மிகப்பெரிய மாற்றம்.

திரைப்படம் , நாடகம் , பத்திரிக்கை என அனைத்து ஊடகங்களிலும் பெண்மையை போகப் பொருளாகக் காட்டும் நிலையை மாற்ற நீங்கள் ஒரு முன்னோடியாக திகழ வாழ்த்துகள்..

- வை.நடராஜன்

இலங்கைக்கு 2 போர்க் கப்பல்கள்

இலங்கைக்கு 2 போர்க் கப்பல்கள்: இந்தியா திட்டம்

அக்னி ஏவுகணை ஆயிரம் இருப்பினும்
ஆண்மை என்பது கொஞ்சமும் இருக்கணம்

எங்கள் படகெல்லாம் பாடையாக
திரும்புகிறது _ எங்கள்
கடலோரம் தினம் தினம்
அழுகின்றது

நீங்களோ

கொன்று குவிக்கும் பாவிகளுக்கு
கொல்ல பயிற்சி கொடுக்குறீர்கள் _ உங்கள்
மனையுள் புகுந்து மகளை கெடுக்க வருபவனுக்கு
வயகரா வாங்கி தந்து வழி அனுப்பி வைப்பிர்ரா ????

- வை.நடராஜன்
பிச்சகாரன் சாப்பிடும் வரை பிச்ச எடுப்பான் ..
அரசியவாதி சாகும் வரை பிச்சை எடுப்பான் ..

பழகி கொள்ளுங்கள்

பால் குடித்து பழகி கொள்ளுங்கள்
பசி போகும்
பால் கறக்க கற்று கொள்ளுங்கள்
வறுமை போகும்
கை ஏந்த கற்றுக்கொண்டால்
வயறு நிறையும்
கை வலிக்க உழைக்க போனால்
வாழ்க்கை நிறையும்

உனக்காக வாழ வேண்டும்



உனக்காக வாழ வேண்டும் :::
-------------------------------------------

என் கவிதையின் கருவானவள்
என் காதலின் உருவானவள்
என் வாழ்கையின் பொருளானவள்
என் கண்ணிரில் அருவானவள்

பேரிலே தமிழை கொண்டாள்
பேச்சிலே மழலை கொண்டாள்
தேரிலே மலரை சுட்டி - அவள்
தேவதை பருவம் கொண்டாள்

புகைப்பதும் பிடிக்காது என்பாள்
பொய் சொன்னால் பிடிக்காது என்பாள்
பகைப்பதும் பிடிக்காது என்பாள் - என்னை
பார்த்தாலே பிடிக்காது என்றாள்

கரம் கோர்த்து பேசிய வார்த்தை
சிரம் சாய்ந்து அழுத தருணம்
மரம் நிழலில் மறைவாய் முத்தம் - எல்லாம்
கனவாக கலைந்தது

நெஞ்சம் அழுகின்றது
நினைவை தருகின்றது
கைகள் தொழுகின்றது
கண்கள் விழைகின்றது

உனக்காக வாழ வேண்டும்
உன்னோடு வாழ வேண்டும்
முத்தங்கள் மோகம் வேண்டும்
சண்டைகள் கோவம் வேண்டும்
உன் கண் பார்த்து சாக வேண்டும்
உன் கல்லறையிலும் பாகம் வேண்டும்

- வை .நடராஜன்
அற்ப்பனுக்கு வாழ்வு வந்தா மொட்ட மாடில AC வைப்பானாம் .

ஹிட்லரின் நாய்



ஹிட்லரின் நாய் அறியாது - அவன்
இத்தனை பாவம் செய்தவன் என்று
வயித்துக்கு ரொட்டி போட்டான்
வாழ்ந்தவரை அன்பு காட்டியது .

ரொட்டி போட்ட கரங்களில் - பலரை
சுட்டுபோட்ட ரத்த கறைக
இருந்து அதற்கு கவலை இல்லை
எதிர்க்க அதற்கு தெரியவில்லை

நன்றி மட்டும் அறிந்த நாய்க்கு
நல்லவன் கெட்டவன் அறியாது
அறிந்து புரிந்து வாழ்வதற்க்கு
ஆறாம் அறிவு கிடையாது

இத்தனை வருடம் கடந்த பின்
எதற்கு இந்த கவிதை ?
எத்தனை மனிதர்கள் இன்றும் அந்த
ஹிட்லரின் நாய்போல் வாழகண்டேன்

துரோகமும் வஞ்சமும் கொண்டவனையும்
தோரணை கட்டி புகழ்கின்றனர்
ஊழலில் மிதக்கும் தலைவனை கூட
உலகத்தின் உத்தமன் என்கின்றனர்

திருடுபவனுக்கு துணை காத்த நாயாய்
திருந்தாத தொண்டனாய் அலைகின்றனர்
ஊருக்கே தெரியும் அயோக்கியன் என்று
ஊரெல்லாம் கட்அவுட் வைக்க விழைகின்றனர்

எங்கினும் ஒழுக்கமற்ற தலைவன் நாட்டில்
நாளை வருங்கால பிள்ளைகள் பாவ காட்டில்
காமத்தில் பிள்ளைகளை பெற்றெடுத்து - இந்த
கயவர்களின் கையிலே விட்டு விட்டால்

கழுத்தளவு நீரில் தள்ளி விட்டு -பிள்ளைக்கு
கால் காக்க ஷு வாங்கி என்ன பயன் ?

எவன் துரோகி எவன் திருடன் என
குணம் பார்த்து முடிவெடுங்கள் ..
பாவி அவன் என அறிந்தால்
விட்டு விடுங்கள் ..

நல்ல தலைவனை
தேர்ந்தேடுத்து நம் பிள்ளைகளை
வாழ விடுங்கள்

வை . நடராஜன்

இன்றைய தமிழகத்தில் ...



சாலை ஓரம் சாக்கடை இருந்தால்
நாய்களும் ஆடுகளும் கூட தாண்டி போய் விடுகின்றன
ஆனால் ,
தமிழன் போதையில் புரள்கிறான்
சாக்கடை சேற்றை சந்தனமாய் நினைத்து ,

உடல் உறுப்புகளை ஊரே பார்கிறது -
நம் இனத்தின் பெருமை சில மில்லியிடம் தோற்கிறது..

'' புகழோடு வாழ்ந்து வந்த
தமிழ் மகனை _ சாக்கடை
புழுவோடு புரள வைத்த
புண்ணியவான்களே ''

இன்றைய தமிழகத்தில் ...

கோட்டைக்கு குறுக்கு வழி
கோடம்பாக்கம்
கல்லறைக்கு குறுக்கு வழி
கள்ளுக்கடை

வை . நடராஜன்