February 4, 2013

கழுகு திண்ற பிணம்







கழுகு திண்ற பிணம் செறிக்க
கடவுளிடம்  வருகிறது  - நெஞ்சில்
கடுகளவும் ஈரமில்லா அரசு
சிகப்பு கம்பளம் தருகிறது

குளித்தால் அழுக்கு போகும்
குற்றங்கள் எங்கே போகும்
பணியால் பார்வை மறையும் -உன்
பாவங்கள் எங்கே குறையும் ?

கோவிந்த பெருமானே
கோவமில்லையா  ?  - உன்
சன்னிதிக்குள் சாக்கடை வருதே
பாவமில்லையா ?

காணிக்கைக்காக கடவுளை
வித்து விட்டீர்
குடி அழித்த கோமானுக்கு
கும்ப மரியாதை
தந்து விட்டீர் .. அவன்
ரத்த கரத்தில் காணிக்கை
வாங்கி - கோயிலை
சுத்தம் செய்ய போகிறீர் ரா ??

மனித பாவம் மறைய
மருந்தாக நீ ஆவாய் - அந்த
மலத்தை கண்ட பாவம் போக
நாராயணா நீ எங்கே போவாய்  ?

வேண்ட வருகிறானாம் ...
வேடிக்கையாக உள்ளதப்பா ..

சாக்கடையில் குளித்து  விட்டு - ஒரு
சந்தன வில்லையை
தடவிக்கொண்டால் ..
நாத்தமெல்லாம் போய்விடும் என
நம்புகிறாயா ராஜ பக்கி ..???



- வை .நடராஜன்

1 comment:

  1. நன்றாக உள்ளது தோழரே !!

    கோபக் கனல் தெறிக்கிறது - எளிய வரிகளில், வார்த்தைகளில்.

    நல்ல முயற்சி :)

    ReplyDelete