January 11, 2014

முதல்வர்


Transfers

 :

வயித்துக்காக திருடுபவர்களை
துறத்தும் அதிகாரிகள்
வசதிக்காக திருடும் அரசியல்வாதிகளை
தொட்டால் ...
துறத்தப்படுகிறார்கள் .

- வை . நடராஜன் ..

சுதந்திரம்

கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கிய
நாடு - இன்னும் கஷ்டப்பட்டுக்கொண்டு தான்
இருக்கிறது ....

அன்று கைகளை கட்டிவிட்டு
திருடினார்கள்
இன்று நம் கண்களை கட்டி விட்டு
திருடுகிறார்கள் ..

அன்று திருடியவன் யார் என்று
தெரிந்தது அடிக்க வீரம் இல்லை
இன்று திருடுபவர்களை
எண்ண கூட நேரமில்லை .

இந்தியா சுதந்திரம் பெற உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!!!

- வை . நடராஜன்

ரோட்டுக்கடை


உனக்காக அழுதல் பெருமை .



தொழுதினும் ஊறுக்கு
தொழுதல் பெருமை
பழித்தினும் நீதிக்கு
பழித்தல் பெருமை
விழுதினும் அருவியாய்
விழுதல் பெருமை
அழுதினும் உனக்காக
அழுதல் பெருமை .

மனமெல்லாம் வலித்தாலும்
மகிழ கண்டேன்
தினதோறும் அழுதாலும்
திவ்யம் கண்டேன்
கணம் நெஞ்சில்
களிவில்லை - இருந்தும்
குணவத்திகாக அழுவதில்
பெருமை கொண்டேன் .

அள்ளிக்கொள்ள நீயுமில்லை
சொல்லிக்கொள்ள வார்த்தையில்லை
சாய்ந்து அழ தோளுமில்லை
அழுதாலும் ஈரமில்லை .
வாசலில் கோலமில்லை
வாழ்க்கையில் ஆரமில்லை
வார்த்தையில் சாரமில்லை
வழிதுணை யாருமில்லை .

மனதிலே காயம் கண்டேன்
மழைத்துளியில் கானல் கண்டேன்
மலர்விழி மங்கையவள்
மனம் கொள்ள மோகம் கொண்டேன் .

நீறுக்கு காத்திருக்கும்
வெடித்த நிலத்தை போல
சோறுக்கு காத்திருக்கும்
பசித்த மழலை போல
வானம் பாத்திருக்கும்
அடைபட்ட கிளியை போல
வசந்தமே உனக்காக
காத்திருப்பேன் காதலுடன் .

- வை . நடராஜன்

வீரர்களை இழந்தோம் !! வீரத்தை அல்ல



***...***
----------------------------------------------------------------------

முன்னம் பறிகொடுத்தோம்
முள்ளிவாயில் பரிதவித்தோம்
திண்ணம் தீ சூழ
திசை எங்கும்
உயிர் கொடுத்தோம்

எண்ணம் ஈடேறும்
எதிர்காலம் சூடேறும்
வண்ணம் தமிழ் ஆட்சி
வலியோடு பீடேறும் .

சிங்கள பாவிகள்
சிதையும் நாள் தூரமில்லை

நான்கு திசையெங்கும்
ஆர்ப்பரிக்கும் கடல் நீரும்
நாளும் சூடேறும் -அழும்
எங்கள் கண்ணீரும் - ஒருநாள்
பொங்கி வரும்
பொதுவுடைமை சொல்லி தரும்
பொங்குவது தமிழனா ? கடலா ?
காலம்தான் தீர்ப்பு தரும்

கருமேகம் மறைப்பதினால்
கதிரவன் அழிவதில்லை
காற்று மோதிவிட்டால்
கருமேகம் பிழைப்பதில்லை

எங்கள் பக்கம் எதிர்கால
காற்றடிக்கும்
எங்கள் இனத்தை தர்மமே
மீட்டெக்கும்

ஆயிரம் ராஜபக்சே
அரியணை ஏறினாலும்
ஆயிரம் ஆண்டுகள்
அடக்குமுறையில் ஊறினாலும்

தன்னை காத்து கொள்ள
தமிழுக்கு தெரியுமடா - அன்று
தமிழன் யார் என்று
தரணிக்கு புரியுமடா

அந்நியனின் கால் நக்கி
ஆயுதங்களை மேல் தூக்கி
என்னினத்தை அழித்தவர்களே
எதிர்காலம் பதில் சொல்லும் .

இன்னும் ஆயிரம்
அண்ணனை பெற்றடுக்க
அன்னை தமிழுக்கு
கருவிலே இடமுண்டு - ஆனால்
இந்த ஒருவரை சமாளிக்கவே
உலகமே உங்களுக்கு உதவியது .

எச்சை பதவி பெற்று
எட்டப்பன் தொழிலை கற்று
பிச்சை பணத்திற்காக
பெற்றவளை தெருவில் விற்ற

பச்சை துரோகிகளே
பாவத்தின் மூட்டைகளே
இனத்தின் அழிவுகளே
வரலாற்று கழிவுகளே

ஆண்டுகள் பல ஆனாலும்
ஆயிரம் உயிர் போனாலும்
ஈழம் அடைவோமடா
எதிர்காலம் விடியுமடா .

நாளை வெல்லும்போது
நானும் நீயும் இருக்க மாட்டோம் - ஆனால்
எதிர்கால தமிழினம்
வெற்றி முரசு கொட்டும் - அன்று
நிகழ்கால ஒரே சாட்சி
சூரியன் கை தட்டும் ......

தமிழர்களே ..

எதற்காகவும் அழாதீர்
எவரிடமும் தொழாதீர்

நம்பிக்கை வீரத்தை
இரு விழியில் பொறித்திருப்போம்
தர்மம் காக்க வரும்
அது வரை பொறுத்திருப்போம் .

- வை . நடராஜன்

எங்கே போனாய்


January 10, 2014

மொழி காப்போம்



இனிதான மொழிக்காப்போம் !!
இறக்கும்வரை தமிழ் காப்போம் .............


பொதிகை மலை தலை கலைத்து 
புறப்படும் தென்றல் - அருகே 
அடிவார வயல் வெளியில் 
வாசத்தை தெளிக்கும் 

வயல் நடுவே வரப்பினிலே
வரிசையில் பெண்கள்
கயல் தமிழில் கானம் பாட
காற்றினில் கமழும்

தேன்கலந்த கனிக்கூட
தமிழிடம் தோற்க்கும் - அந்த
தேவ பாஷை சமஸ்கிரதம்
தேகமும் வேர்க்கும்

ஊன் கலந்த உயிரெல்லாம்
தமிழ் மொழியாக்கும் - இந்த
உடல் விட்டு போகும் வரை
தமிழ் மொழி காக்கும்

கரை நின்றும் கால் தேடி
கடல் நீர் நினைக்கும்
சிறை பட்டினும் குயிலிசை
காதினில் மணக்கும்

இடர்ப்பட்ட நெஞ்சம்
இன்னல்கள் காணும்
சுடர் விட்டு ஒளி வந்தால் - இருள்
சூனியம் ஆகும்

அறியாதவனை அப்பன் என்று
சொல்வது மடமை - பிள்ளைக்கு
புரியாத பெயர் வைப்பது
அதனினும் கொடுமை

தள்ளாத வயதினிலே
வறுமை கொடுமை - தாய்
தமிழ் மொழியை மறப்பது
அதனினும் இழிமை


விழியிழந்து போனவன்
ஒளியை இழந்தான் - அன்னை
மொழி மறந்து போனவன்
மானத்தை இழந்தான்

அன்னம்தான் எல்லோர்க்கும்
அளந்திட வேண்டும் - பாரில்
பசியின்றி வாழும் - நல்
நிலை வர வேண்டும்

எண்ணம்தான் மேன்மையில்
சிறந்திட வேண்டும் - இனி
எப்பிறவியும் தமிழனாய்
பிறந்திட வேண்டும்

மொழிமறந்து வாழ்வதினில்
யோக்கியமென்ன - தமிழ்
மொழிகாக்க இறப்பவதை விட
பாக்கியமென்ன ...

உணவிட்டு உயிர் காப்போம்
உயிர் கொடுத்தினும் மொழி காப்போம்

- வை நடராஜன்

எத்தகைய வாழ்க்கையை

நாம் அழும் போது ஆறுதல் சொல்பவர்களும்
நாம் அழுவதை பார்த்து ஆறுதல் அடைபவர்களும்
எத்தனை பேர் உள்ளனர் என்பதை பார்த்து
அதில் வரும் எண்ணிகையை வைத்து புரிந்து கொள்ளலாம் .................

நாம் எத்தகைய வாழ்க்கையை வாழ்கிறோம் என்று.



தில்லையில் ஆட செய்தாய்
தினமுன்னை பாட செய்தாய்
திங்களை சிரத்தில் வைத்தாய்
தியாகத்தை அகத்தில் வைத்தாய்

எண்ணத்தில் உன்னை வைத்தாய்
ஏட்டிலே பண்ணாய் வைத்தாய்
திண்ணமும் எண்ண வைத்தாய்
தினமுன்னை தொழுக வைத்தாய்

உண்மையை உணர  செய்தாய்
உளமார உருக  செய்தாய்
அம்மையை இடையில் வைத்தாய்
அப்பரை இணங்க வைத்தாய்

காலனை நடுங்க செய்தாய்
காலமும் உணர செய்தாய்
வாசகர் உருக செய்தாய்
திருவாசகம் பெருக செய்தாய்

நஞ்சினை அகத்தில் வைத்தாய்
நவமணி கண்ணில் வைத்தாய்
ஏந்தினை மனதில் உன்னை
ஏக்கத்தில் நினைவில் வைத்தாய்

சாம்பலை பூச  செய்தாய்
சகலமும் வாசம் செய்தாய்
சடைமுடி எழிலினுள்
கங்கையை வாழ செய்தாய்

கனிதனை அருள செய்தாய்
கண்முட இருள செய்தாய்
பனிபடர் சிகரத்திலே
பரம்பொருளே வாசம் செய்தாய்

தோடுடைய செவியானே அழகு
தேனுடைய தமிழை  வைத்தாய்
மானுடைய கரத்தில் அம்பர்
மேனடைய அருளை  வைத்தாய்

செற்றுடைய இடதில் எல்லாம்
நாற்றுடைய நெல்லை வைத்தாய்
காற்றுடைய புவியில் என்றும்
கானத்தை கமழ செய்தாய்

பித்தனும் ஆனாய்
பிரம்படி பெற்றாய்
சித்தனும் ஆனாய்
சிவனடி போற்றி
அத்தனும் அடங்கிய அரும்பெருள்
கடலே
நத்தவம் கோலமே
நம சிவாயமே

- வை , நடராஜன்