March 29, 2012

வறுமை கொடுத்த வழி...


விலைமாந்தர்


அவளை பழிக்கதே...

நீ பணத்துக்காக 
பலவற்றை விற்கிறாய்
அவள் உடலை மட்டும்தான்
விற்கிறாள்

உன் ருசிக்கி உணவலிதால்தான்
அவள் பசிக்கு
உணவு

வறுமை கோடாக இருந்தால்
தாண்டிவிடலாம் அவளுக்கோ
வறுமை  காடாக உள்ளது

தன்னை தந்த தந்தையய்
 தவழும் வயதிலே 
இழந்துவிட்டால்


கண்ணை இழந்து
கட்டினிலே கிடந்து
பெண்ணையே நம்பி
வாழும் அவள் அன்னை

குடும்ப சுமைய குறைக்க
மூட்டை  சுமையய் தூக்க கூட
வாட்டம் இல்லா வளைந்த
கால்களுடன் தம்பி

காசை கொடுகாத கடவுள்
காச நோயை கொடுத்துவிட்டார்
இரவெல்லாம் இரும்பி இம்சை
தரும் அவள் தாத்தாவுக்கு

கூலி  வேலை
செய்தால்  கூழை குடித்து
வாழ்ந்து விடலாம்
ஆளுக்கு ஒரு குறையான
நாளுக்கு ஒரு  மருந்து வாங்க வேண்டுமே

பழி பல வரட்டம் பரவா இல்லை
வழி அதுவெ
சென்று விட்டால்

காமத்தை அடக்காமல்
அலைகின்ற ஆணுக்கு
கஷ்டத்தை பொறுகாமல்
தவறிகின்ற பெண்ணே மேல்

அவளை

சரியென்று கூறவும் நான் வரவில்லை
தவறு என்று கூறவும் மனம் இங்கு இல்லை

பழிபப்வர்களே........

அவள் வாழ்கையில்
சிறக்க வழி இருந்தால்
செய்யுங்கள்.... இல்லை என்றால்
வந்த வழி செல்லுங்கள்....

March 26, 2012

இன்றைய விவசாயத்தின் நிலைமை ::


நிலங்கள் வீடு ஆயின
களங்கள் காடு  ஆயின
விவசாயி விண்ணோடு போறான்
விவசாயம் மண்ணோடு போகிறது.....

உரிமைக்காக பிச்சை எடுத்தோம்
இருநூறு ஆண்டு _ இனி
உணவுகாக பிச்சை எடுபோம்
எத்தனை ஆண்டோ ?.....

பல கிராமத்தில் பலரை காணோம்
பல இடதில் கிராமத்தை காணோம்_ பூமி
யாரையும் கைவிடாத தாயானவள்_ இன்று
யாராலும் கைவிடப்பட்ட சேயானாள்.....

சிற்பங்கள் அழிந்துவிட்டால்
 கோயிலுக்கு சிறப்பில்லை
சிற்பிகளே அழிந்துவிட்டால்
கோயிலுகே பிறப்பில்லை.....

விவசாயி அழிந்துவிட்டால்
உன்னகூட வழியில்லை
விவசாயம் அழிந்துவிட்டால்
வருந்தி பின் பயனில்லை.....

நிதிநிலை அறிக்கையில்             
அரசின் அறிவின்மை
எதிரி அழிய எண்பதாயிரம் கோடி
நாம் வாழ நாலாயிரம் கோடி.....

கரும் மேகங்கள் காணவில்லை
கால் நடைகள் பேனவ்வில்லை
நாளை வரும் பசி போக்க
நாகரிகம் உதவவில்லை.....

ஏறு போன நிலங்கள் _ இன்று
கூறு போன மனைகள்
பருப்பு கொடுத்த சோலைகள்_இன்று
செருப்பு தொழில்சாலைகள்.....

நிலத்தை வித்து பணத்தை போட்டால்
வங்கி பணம் வட்டி தரும் _ வாய்
பசிக்கு ரொட்டி தருமா ?.....

பணத்தை மட்டும் அறுவடை
பண்ண முடிந்தால்_ அம்பானியும்
அரசில்யல் வாதியும் ஆடு மாடு
மேயித்து விவசாயி ஆகி இருப்பான்.....

iPodடை'யும் Androidடை'யும் தின்னமுடியாது
Windowsஐ'யும் Vistaவை'யும் உன்ன முடியாது
மதுவை மட்டும் தாகதிற்கு குடிக்க முடியாது
பசிக்காத போல் பல நாட்கள் நடிக்க முடியாது.....

விஞ்ஞான வளர்ச்சியில் வசதிகள் வரும்
வயிறு நிரம்புமா.....?

விவசாயத்தை துறந்த நாடும்
விவசயை மறந்த நாடும்
உருபிட முடியாது_ உண்மை
இன்று புரியாது.

ஆசை ஆறடிக்குள்..


ஓடு  ஓடு  என

ஓட்டம் தொடங்கு என
கண்கள் பட்டவரை
கால்கள் தொட்டவரை
உனக்கு உரிமை என
அரசன் அறிக்கை வர

நாளை காலைக்குள்
கால்கள் தொட்டவரை
உனக்கு உரிமை என
உரத்த சத்தம்வர

ஆசை பிறந்துவிட
அனைத்தும் மறந்துவிட
தூக்கம் பறந்துவிட
வயிறு காய்ந்துவிட

ஓட்டம் யடுதவன்
உடல் நலிந்துவிட
சக்தி குறைந்துவிட
அனைத்தும் அடைந்துவிட
ஆசை ஆணையிட
அதிகம் அதிகம் என
ஆசை பிறந்துவிட
வாடிபோன அவன்
வயிறு காய்ந்துவிட

காடு கழனி என
மேடு பள்ளம் என
நாடு முழுவதும்
கால்கள் கடந்துவிட

நாட்டு எல்லையும்
தாண்டி போய்விட
மூச்சி மறுத்துவிட
இதயம் நின்றுவிட

ஊரை கடந்த
அவன் உண்மை
கதையெல்லாம் ஆறு
அடிக்குள்ளே அடைந்து
போயின

கதம்பம்



கல்யாணம்..

கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்...
ஆண்களின் ஆண்மை உரமாயிட்டு
பெண்களின் தாயிமை அறுவடை  செய்ய ப்படுகிறது ...
 ..............................................


இட்லிக்கு கூட தொட்டுக்க
உள்ளது _ எனக்கு தொட்டுக்க
யாருமில்லையே  


................................................................

 காதல் எனும் தோட்டதில் மட்டும்தான்
ரோஜாக்கள் குத்திய வலியினை உணர்ந்தேன்

...............................................................


கூண்டுகள் இரண்டில்
சாட்சிக்கு ஒன்று
காதலும் நட்பும்
காட்சிக்கு  ஒன்று...


............................................................

.தெருவிலே Follow  பண்ணேன் நாய் என்று ஏசினால் _ அனால்

Twitter'இல்  follow பண்ணால்  Hi என்று பேசினால்
 ..............................................................................................


கடலும் காமமும் கட்டுக்குள் இல்லையென்றால்
உடலும் உள்ளமும் உருக்குலைந்து போய்விடும்..


....................................................................................
.





மருத்துவமனை சென்றுப்பார்

பல  ஆயிரம் மனிதர்கள் மரணத்தை கண்டு
போரடிக்ககொண்டு இருக்கிறார்கள்

TASMAC சென்றுப்பார்

பல  ஆயிரம் மனிதர்கள் மரணத்தை காண
நீராடிக்கொண்டு இருக்கிறார்கள்  ..




தமிழுகுப்பின் நீ என் தாயாக வேண்டும்...



வாழ்க்கைக்கு துணைக்கால் வேண்டும்_ உன்
வாழ்க்கைக்கு துணை நானாக வேண்டும்..

தோகைமயில் உன் துணையாட வேண்டும்_ நான்
வாகை சூடும் உன் மலராக வேண்டும்..

நீ பேசும் வார்த்தைகள் கலையாக வேண்டும்_ நீ
போகும் பாதையில் கற்கள் சிலையாக வேண்டும்..

காலமும் உன் சொற்கள் மெய்யியாக வேண்டும்
வானமும் உன் கால் நக மையாக வேண்டும்..

கடல் அழகை ரசிக்க கரை ஒன்று வேண்டும்_ உன்
கார்க்கூந்தல் நடுவிலே மலராக வேண்டும்..

இல்லத்தில் இன்பம் தினம் இணையாக வேண்டும்_ உன்
உள்ளத்தில் உறைவிடத்தில் நான்  இனைந்தாக வேண்டும்..

கார்மேகம் மறைந்தாலும் மழையாக பொழியும்_ அந்த
கருங்குயில் கூட்டம் உன் இமைக்கான விழையும்..

தியாகதின் அரசனுக்கு நீ  சேயாக வேண்டும்
தமிழுகுபின் நீ என்  தாயாக  வேண்டும்..

துணியாக இருந்தாலும் உன் தோல் பட வேண்டும்
எறும்பாக இறந்தாலும் உன் கால் பட வேண்டும்..

வானத்தின் நிலா உன் முகம் காண வேண்டும்_ பின்
நாணத்தில் தேயிண்டு கறைந்தாக வேண்டும்..

ஐநூறு காப்பியங்கள் அரங்கேற்ற வேண்டும்_ உன்
இருவிழிகளை  மட்டும் சொல்ல இன்னம் இருநூறு வேண்டும்..

சிலகாலம் வாழ்து நான் இறந்தாலும் போதும்
விளகே ற்றும் உன் விரலில்நகமாக வேண்டும்..

விழுந்தாலும் நீ அழகில் அருவியாய் வீழ்வாய்
பார் போற்றும் பகலவன் போல் பரிசுதாமாய் வாழ்வாய்..

சிறக்கும் பல செயல்களால் நீ புகழ் காண வேண்டும்_ நான்
இறக்கும் வேளையிலும் உன் முகம் காண வேண்டும்..

பிறந்தநாள் வாழ்த்துக்கள்


''பெற்றோர் பேரன்பும் உற்றோர் உறுதுணையும்
பற்றோர் இல்லா பரந்த மனமும்
கற்றோர் கவரும் கரையா மதியும்
நற்றோர் வழியும் நல்லோர் புகழும்
கூடாத ஆசையும் குறைய அன்பும்
வாடாத மனமும் வசையாத நாவும்
அளவற்ற அன்பும் குறைவற்ற செல்வமும்
பிளவற்ற  மனமும்  பிரியாத குணமும்
அன்பான துணையும் அழகான செல்வமும்
பண்பான வாழ்க்கையும், பார் போற்ற அமையட்டும்''...

மின்வெட்டு:


* சங்க தமிழகம் கல்வெட்டில்
எங்க தமிழகம் மின்வெட்டில்
தூக்கி எறிந்த விசிறியை தேடுகிறோம்
தூங்க துலைத்த திண்ணை தேடுகிறோம்
அறைத்த அம்மி அகில் விளக்கை தேடுகிறோம்
மூடிவிட்ட கிணற்றை தேடுகிறோம்
ஆடிபாட ஆலமரத்தை தேடுகிறோம்
எங்கள் முன்னோர் வாழ்ந்த
முறைக்கு மீண்டும் ஓடுகிறோம்.

மரியாதை




கல்லுக்கு மரியாதை
ஆண்டவன் தோற்றதில்

புல்லுக்கு மரியாதை
அரண்மனை தோட்டதில்

வில்லுக்கு மரியாதை
வீரனின் தோளிலே

சொல்லுக்கு மரியாதை
புலவரின் நாவிலே

வாழ்கையில்


காமமும் நெருப்பும்
தொடாமல் புரியது
காதலும் கடவளும்
அழாமல் கிடைகாது

ஆலமோ அமுதமோ
அருந்தாமல் தெரியாது
அப்பனும் ஆசானும்
அடிக்காமல் விளங்காது

மலரோ மணியோ
சூடாமல் சிறக்காது
மாடோ மனிதனோ
கூடாமல் பிறக்காது

நதியோ நாளோ
ஓடாமல் இருக்காது
அறிவோ பொறுளோ
தேடாமல் கிடைக்காது.

காதல் ஒரு போதிமரம்


காதல்

காதல் ஒரு போதிமரம்

வெற்றி பெற்றவர்கள்
நிழலை அனுபவிக்கிறார்கள்.......
தோல்வி அடைந்தவர்கள்
ஞானத்தை அடைகிறார்கள்......